Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருவாகிவரும் புதிய உலக ஒழுங்கும் மூலோபாயப் போக்குகளும்: இந்தோ பசுபிக் பிராந்திய பூகோள அரசியலில் தமிழ் மக்களின் நலன்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உருவாகிவரும் புதிய உலக ஒழுங்கும் மூலோபாயப் போக்குகளும்: இந்தோ பசுபிக்  பிராந்திய  பூகோள அரசியலில்  தமிழ்  மக்களின்  நலன்கள்

 
World-Flag-map-Nell-696x274.jpg
 119 Views

இன்று  தமிழ்  மக்கள்  உருவாகி வரும்  புதியதோர்  பல்துருவ  உலக  ஒழுங்கில்  (multipolar world order)  அரசற்ற  தேச  மக்களாக  (nation without state)  தமது  வகிபாகத்தை  கொண்டுள்ளார்கள்.

காலனித்துவ  காலம்  தொடக்கம்  இன்று வரை  தமது  இழந்துவிட்ட  இறைமையை  வேண்டி நிற்கும் மக்களாகவும்,  இனஅழிப்புக்கான  நீதியைக்  கோரி நிற்கும்  மக்களாகவும்  தமது  அரசியற் செயற்பாடுகளை  தாயகத்திலும்  புலம்பெயர்  தேசங்களிலும்  முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஆயுதப்போராட்டம்  முடிவுற்ற  2009ஆம்  ஆண்டு  தொடக்கம்  இன்று  வரைக்கும்  அவர்களது  அரசியற் செயற்பாடுகள்  பெரிதும்  மேற்குலகையும்,  அல்லது  இந்தியாவையும்,  ஐக்கிய  நாடுகளையும் மையப்படுத்தியதாக  அமைந்துள்ளன.  சர்வதேச   உறவுகளில்  நிரந்தரமான  நட்பு  சக்திகளோ  அல்லது எதிர்ப்புசக்திகளோ  இன்றி  தனியே  தேச  அரசுகளின்  (nation states)  நலன்களே  நிரந்தரமாகவுள்ள ஓர்  ஒழுங்கமைப்பில்  வாழ்கிறோம்.  இங்கு  தமிழ்  மக்கள்  ஓர்  அரசற்ற  தேசமாக  எவ்வாறு  தமது அடிப்படை அரசியல்  நலன்களான  சுயநிர்ணய  உரிமை,  தாயகம்,  தேசியம்  ஆகிய  உறுதியான தொடர்ச்சியான  நலன்களை  முன்னெடுக்கும்  மொழியாலும்  பண்பாட்டாலும் இன  அடையாளத்தாலும் (linguistic, cultural, ethnic and political identity)  ஒன்றுபட்டு  நிற்கும்  அரசுகளைக்  கடந்து உலகெங்கும்  வாழும்  ஓர்  தேச  மக்களாக  (trans state nation)  சர்வதேச  உறவுகளில்  தமது காத்திரமான  வகிபாகத்தை  வரையறுத்துக்  கொள்ளப் போகின்றார்கள்  என்பது  முக்கியமானது.

அரசுகள்  தொடக்கம்  அவர்களுடைய  நலன்களை  மையமாகக்  கொண்டியங்கும்  ஐ.நா  மற்றும் ஐரோப்பிய  ஒன்றியம்  வரை  பல்வேறு  வகையான  சர்வதேச  அமைப்புகளுடனும்  தமது  அரசியல் நலன்களை  மையமாகக்  கொண்டு  அரசியற்  செயற்பாடுகளை  எவ்வாறு  மேற்கொள்வது  என்ற தெளிவான  நிலைப்பாடும்  இன்றியமையாதது.  ஓர் தேச  மக்களாக  ஒன்றுபட்டு  நின்று  தெளிவான அரசியல்  நலன்கள்  சார்ந்த  நிலைப்பாடுகளும்,  உறுதியான  வகிபாகமும்  மூலோபாயச் சிந்தனையும்  இன்றி  செயற்படுவதானது,  அரசுகளாலும்  அவர்கள்  சார்ந்த  அமைப்புகளாலும் அவர்களுடைய  நலன்களுக்காகப்  பயன்படுத்தப்படும்  வெறும்  சதுரங்கக்  காய்களாக  அகப்பட்டு தொடர்ச்சியாக  தமது  இறைமையையும்  அடையாளத்தையும்  இழக்கும்  மக்களாக  இருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்படுவோம்.

இவ்வாறானதோர்  புறச்சூழலில்  வேறுபாடுகளைக்  கடந்து  ஒன்றுபட்டு  நிற்கும்  ஓர்  தேச மக்களாக தமக்கான  ஓர்  உறுதியான  வலுவான  வகிபாகத்தையும்  மூலோபாயச்  சிந்தனைப்  பாரம்பரியத்தையும் (Strategic culture and thinking)  உருவாக்கிக்  கொள்வதும்,  பேணி வளர்ப்பதும்  தம்மைத் தனித்துவமான  வலுவான  தேச மக்களாக  (strategic actor)  சர்வதேச  உறவுகளில்  தக்கவைத்துக் கொள்வதற்கு  அவசியமானவை.

இவ்வாறு  ஓர்  வலுவான  சக்தியாக  தமது  நலன்களின்  அடிப்படையில்  அரசுகளுடனான  உறவுகளை வகுத்துக்  கொள்வதற்கும்,  அவர்களின்  செயற்பாடுகளை  விளங்கிக்  கொள்வதற்கும்,  தெளிவாக தமக்கானதோர்  நிலைப்பாட்டை  எடுப்பதற்கும்  பின்வரும்  காரணிகள்  முக்கியமானவை:

இன்றைய  சர்வதேச  மூலோபாயப்  போக்குகள்  (strategic trends),

உருவாகி  வரும்  புதிய  பல்துருவ  உலக  ஒழுங்கு  (multi polar world order),

இந்தோ  பசுபிக்  பிராந்தியத்தின்  பூகோள  அரசியற்  போக்குகள்  (Indo Pacific geopolitical competition),

அவற்றை  சரியான  முறையில்  விளங்கிக்  கொள்வதற்கான  சர்வதேச  உறவுகளின்  சிந்தனைக் கோட்பாடுகள்  (International Relations theories).

சர்வதேச  உறவுகள்  குறித்து  மேற்கூறிய  சர்வதேசச்  சூழலை  விளங்கிக்  கொள்வதற்கான  ஓர் முயற்சியாக  இக்கட்டுரைத்  தொடர்கள் அமைகின்றன.

 புதிய  சர்வதேச  அரசியற்  சூழல்

இன்றைய  சர்வதேச  அரசியற்  சூழலைப்  பற்றி  ஆராய  முன்னர்  கீழ்வரும்  கேள்விகளை  நாம் முதலில்  எமது  ஆய்வின்  மையமாகக்  கொண்டிருப்பது  பயனுள்ளது.

  • சர்வதேச உறவுகளில் தேசிய  அரசுகள்  (nation states)  மற்றும்  பிற  முக்கியமான  வலுவான செயற்பாட்டாளர்களும்  (actors)  ஏன்  வெவ்வேறு  சூழ்நிலைகளில்  அவ்வாறு நடந்து  கொள்கிறார்கள்?
  • அவர்களுடைய இந்த நடத்தையை  நாம்  எவ்வாறு  விளக்கி,  எதிர்கால  நடத்தைகளை  எதிர்வு கூறுவதற்கு  அவற்றைப்  பயன்படுத்த  முடியும்?
  • சர்வதேச அமைப்பின் சமகாலப்  பண்புகள் எவை?,
  • அவை அந்த அமைப்பில்  உள்ள  செயற்பாட்டாளர்களை  எவ்வாறு  பாதிக்கின்றன?
  • சர்வதேச அமைப்பில் நடந்து வரும்  புவிசார்  அரசியல்,  பொருளாதார,  இராணுவ  மற்றும்  தொழில்நுட்ப போக்குகள்  யாவை?
  • அந்த போக்குகள் அந்த  செயற்பாட்டாளர்களிடையேயான  தொடர்புகளை எவ்வாறு  பாதிக்கின்றன?

ஒரு  மூலோபாயச்  சிந்தனைப்  போக்குடைய  தேசமாக  சர்வதேச உறவுகளையும்  அதன்  கட்டமைப்பையும்  புரிந்துகொள்ள  நாம்  கேட்க  வேண்டிய கேள்விகளாக  இவை  உள்ளன.

இக்கேள்விகளை  மனதிலிருத்தி  தற்போதுள்ள  சர்வதேச  சூழலில்  ஆசியாவை  மையப்படுத்தி உருவாகிவரும்  சர்வதேச  போக்கினையும்,  அதன்  தொடர்ச்சியாக  இந்தோ  பசுபிக்  பிராந்திய  பூகோள அரசியற்  போட்டிகளையும்  அவதானிக்க  முற்படுவோம்.

இன்று  நாம்  உலகளாவிய  ரீதியில்  ஆசியாவின்  எழுச்சி  என்ற  ஒர்  பாரிய  மாற்றத்தை  (tectonic shift)  அவதானிக்க  முடிகிறது.  19  ஆம்  நூற்றாண்டு  ஐரோப்பாவும்,  20  ஆம்  நூற்றாண்டு அமெரிக்காவும்  ஆதிக்கம்  செலுத்தியிருக்க  21  ஆம்  நூற்றாண்டு  இப்போது  ஆசியாவிற்கானதாக மாறியுள்ளது  என  பூகோள  மூலோபாயச்  சிந்தனையாளர்  பராக்  கண்ணா  (Parag Khanna) அவர்கள் தனது  The Future is Asianஎன்ற  தனது  நூலில்  குறிப்பிடுகின்றார்.

ஆசியா  மேற்கத்திய  மேலாதிக்கத்தின்  சகாப்தத்திற்கு  முன்பு,  ஆசியா  ஐரோப்பிய காலனித்து வத்திற்கும்  அமெரிக்க  ஆதிக்கத்திற்கும்  நீண்ட  காலத்திற்கு  முன்பே  செழித்து  வளர்ந்த தனது  வணிக  மற்றும்  கலாச்சார  பரிமாற்ற  முறைகளுக்குத்  திரும்புகிறது  என  அவர்  குறிப்பிடுகிறார். உலகமயமாக்கலின்  இந்த  புதிய  கட்டத்தில்  அமெரிக்கா  ஓரங்கட்டப்பட்டாலும்,  ஆசியாவின் வளர்ச்சிப்  போக்கானது  உலகப்  பொருளாதாரத்தை  மாற்றியமைத்துள்ளது.

சீனா  தனது  Belt and Road (BRI)என்ற  பெரும்  வணிக  போக்குவரத்துகளுக்கான  தரை  மற்றும்       கடல்  ஊடாக  பெரும்  கட்டுமான  முன்முயற்சி  மூலம்  ஆசியா,  ஆபிரிக்கா  மற்றும்  இலத்தீன் அமெரிக்க  நாடுகள்  மத்தியில்  இராணுவ,  தொழிநுட்ப  மற்றும்  பொருளாதார  முனைகளில்  முன்னிலை வகிக்க  தொடங்கியுள்ளது. ஒரு  பரந்த  ஆசிய  அமைப்பில்  சீனா  ஒரு  முக்கிய  சக்தியாக  ஆசிய கண்டத்தின்  ஒரு  எழுச்சியாக  உலக  அரங்கில்  தோற்றம்  பெற்றுள்ளது.

சுமார்  500  ஆண்டுகளாக,  காலனித்துவமும்  பனிப்போரும்  ஆசியாவை  பிளவுபடுத்தி  அதனை வலுவிழக்கச்  செய்திருந்தன.  ஆனால்  இப்போது  இந்த  ஆசியக்  கண்ட  அமைப்பு  (Asian System) மீண்டும்  வலுவான  சக்தியாக  உருவாகியுள்ளது.  இந்த  மாபெரும்  ஆசிய  அமைப்பின்  மறு பிறப்பானது சீனாவைச்  சுற்றி  மட்டும்  மையம்  கொள்ளாது  முழுமையான  ஆசியா  எனும்  பிராந்தியத்தின் எழுச்சியாகவே  ஆய்வாளர்கள்  கருதுகின்றார்கள்.  எனினும்  சீனா  நிச்சயமாக  இந்த  அமைப்பின்  மிக முக்கியமான  சக்திகளில் ஒன்றாகவுள்ளதுடன்  முன்னிலையிலுக்கும்  ஐக்கிய  அமெரிக்காவுடன்  வலுச் சமநிலையை  பாதிக்குமளவிற்கு  வளர்ந்துவிட்டது.  ஐக்கிய  அமெரிக்கா  சீனாவை  வெளிப்படையாகவே தனது  சமநிலை  போட்டியாளராக  (peer competitor)  குறிப்பிட்டுள்ளது.

மக்கள்தொகை  அடிப்படையில்  பார்க்கும்  போது.  உலக  மக்கள் தொகையில்  பாதிக்கும் மேற்பட்டவர்கள்  ஆசியாவில்  வாழ்கின்றனர்.  பொருளாதாரத்தின்  அடிப்படையில்  சக்தியை அளவிட்டால்,  ஆசியாவின்  பொருளாதார  அமைப்பு  ஏற்கனவே  ஐரோப்பிய  அல்லது  வட  அமெரிக்க அமைப்புகளை  விட  பெரியதாக  மாற்றம்  பெற்றுள்ளது.  எனினும்  இது  எழுச்சி  மற்றும்  வீழ்ச்சி  அன்றி ஐக்கிய  அமெரிக்காவின்  தலமையிலான  ஒரு  துருவ  தாராளவாத  உலக  ஒழுங்கு  மாற்றம்  பெற்று பல துருவ  ஒழுங்காக  மாற்றம் பெற்றுள்ளது.  இதில்  சீனா  மற்றும்  இந்தியா  முக்கிய  சக்திகளாக உள்ளன.

இவ்வாறானதோர்  சூழலில்  அமெரிக்கா  ஆசியாவில்  குறிப்பாக  இந்தோ பசுபிக்  பிராந்தியத்தில் பொருளாதார  ரீதியாக,  இராஜதந்திர  மற்றும்  இராணுவ  ரீதியாக  தனது  செல்வாக்கை  மீள நிலைநிறுத்தும்  பொருட்டு  மூலோபாய  ஆசிய மையக்  கொள்கையை  (Asia Pivot)  2014இல் அறிவித்திருந்தது.  இம்  மூலோபாய  வகுப்பின்  முன்னோடியாகவிருந்த Kurt Campbell இன்று மீளவும்  புதிய  அமெரிக்க  பைடன்  அரசில்  ஆசியாவிற்கான  தலமை  கொள்கை  வகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  2016  இல்  The Pivot: The Future of American Statecraft in Asia எனும் தன்னுடைய  நூலில்  அமெரிக்காவின்  மூலோபாய  ஆசிய  மையக்  கொள்கையை வெளிப்படுத்தியிருந்தார்.  இதனையொட்டியே  அமெரிக்காவின்  தற்போதுள்ள  இந்தோபசுபிக்  பிராந்திய மூலோபாயம்  (US Indo Pacific Strategy)  அமைந்துள்ளது.

அடுத்துவரும்  பகுதியில்  கொரோனா  தொற்று  எவ்வாறு  மேற்கிலிருந்து  ஆசியாவை நோக்கிய  இவ்வலுப்  பெயர்ச்சியை  (power shift)  வேகப்படுத்தியது  என்பது தொடர்பாகவும்  இவ் வலுப்பெயர்ச்சியின்  முக்கிய  அம்சங்களையும்  இந்தோ  பசுபிக்  பிராந்தியத்தின் பூகோளப்  போட்டிகளையும்  ஆராய்வோம்.

ஆக்கம்: கணநாதன்

Master of International Relaitons,

Geneva School of Diplomacy and International Rleations

தொடரும்…..

 

https://www.ilakku.org/?p=46267

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.