Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினமும் ஒரு `பெக்' மது... ஆரோக்கியத்திற்கு நண்பனா, கல்லீரலுக்கு வில்லனா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று நாமே மருத்துவராகி அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வோம். அதே சமயம் கல்லீரல் நம் உடலில் என்ன வேலைகளைச் செய்கிறது என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. சமூகத்தில் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இருக்கும் அளவுக்குக்கூட கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் கிடையாது.

கல்லீரல்
 
கல்லீரல் pixabay

``இதயத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் அறிகுறிகள் வெளியே தெரிந்துவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தில் 10 சதவிகிதம் தடைபட்டால்கூட நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். ஆனால் கல்லீரலில் மிகுதியான பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்" என்கிறார் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் கே. இளங்குமரன். கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, கல்லீரல் மாற்றம் செய்யும் அளவுக்குச் செல்லும் சூழல்கள் என்ன என்று விளக்குகிறார் டாக்டர்.

 

லிவர் சிரோசிஸ் (Cirrhosis), கல்லீரல் புற்றுநோய், மெட்டபாலிக் லிவர் நோய்கள் ஆகிய பிரச்னைகள் தீவிரமடையும்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். இந்தியாவில் 10 லட்சம் பேர் லிவர் சிரோசிஸ் என்ற கல்லீரல் பாதிப்புடன் உள்ளனர். ஆனால் இந்தப் பிரச்னையுடைய அனைவருக்கும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதில்லை. அதீத அசதி, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோப்பது, ரத்த வாந்தி போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.

பிரச்னையின் அடுத்தகட்டமாக சிறுநீரகம், மூளை பாதிக்கப்படும். பாதிப்பு நிலை தீவிரமாகும்போது நுரையீரல், இதயத்தையும் பாதிக்கும். இன்றைய தேதியில் சராசரியாக, கல்லீரல் சேதமடைந்து அதனை மாற்ற வேண்டிய கட்டத்திலிருப்பவர்கள் தோராயமாக 20,000 பேர். ஆனால் இந்தியாவில் மொத்தமாகவே ஓராண்டுக்கு 2,000 - 2,500 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்தான் நடைபெறுகின்றன. இது கவலைக்குரிய விஷயம்.

 

உடலின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான என்சைம்ஸ் கல்லீரலில் உற்பத்தியாகும். அவற்றில் ஒரு என்சைம் உற்பத்தி பாதிக்கப்பட்டால்கூட மெட்டபாலிக் லிவர் நோய்கள் ஏற்படும். மெட்டபாலிக் லிவர் நோய்கள் ஏற்படுபவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு இல்லாவிட்டாலும் கல்லீரல் மாற்றம் செய்ய வேண்டும்.

சிரோசிஸ், மதுப்பழக்கம், நாள்பட்ட ஹெபடைட்டிஸ் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டு கல்லீரல் மாற்றம் தேவைப்படலாம். எலி மருந்து உள்ளிட்ட விஷத்தால் திடீரென தீவிர கல்லீரல் செயலிழப்பு (Acute Liver Failure) ஏற்பட்டு கல்லீரல் மாற்றம் தேவைப்படலாம்.

தென் தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அதிக அளவில் நடக்கின்றன. இதுதவிர, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் நடைபெறுகின்றன. பிற மாநிலங்களில் வழக்கமாக இந்த சிகிச்சையை செய்வதில்லை.

ஒருபக்கம் இந்த வசதி பல மாநிலங்களில் இல்லை. சிகிச்சை இருந்தாலும் அதற்கு செலவழிக்கும் திறன் பலருக்கு இருப்பதில்லை. தமிழகத்தில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

 

மதுப்பழக்கம்!

இளவயதினர் தொடங்கி பெரியவர்கள் வரை மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது. மது நேரடியாகக் கல்லீரலை பாதிக்கும். தினமும் குறைவான அளவு குடிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது, இத்தனை அளவு எடுத்தால் பாதுகாப்பானது என்பது போன்ற கருத்தாக்கம் எல்லாம் இந்திய மக்கள் தொகைக்குப் பொருந்தாத விஷயம்.

ஒவ்வொருத்தரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்துதான் பாதிப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்று தெரியும். மருத்துவ அறிவியலில் மதுவில் பாதுகாப்பான அளவு என்ற ஒன்று கிடையாது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் கே. இளங்குமரன்
 

குடிப்பழக்கம் உடையவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது கல்லீரல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எளிய ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது ஃபைப்ரோ ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். பரிசோதனையில் கல்லீரலில் கொழுப்பு படிவது, சிரோசிஸ், அசாதாரண கல்லீரல் செயல்பாடு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

 

மதுப்பழக்கம் தொடரும்போது ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு கல்லீரல் பிரச்னை ஏற்படும். அதனை தொடர்ந்து கல்லீரல் வீக்கம் (Nonalcoholic steatohepatitis) ஏற்படும். இந்த நிலையில் இருந்தால் மதுப்பழக்கத்தை நிறுத்திவிட்டு பிரச்னைக்கு சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.

ஆனால் வீக்கத்திருந்து லிவர் சிரோசிஸ் நிலைக்குச் சென்றுவிட்டால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதற்குப் பிறகு மதுப்பழக்கத்தை நிறுத்தினால்கூட அந்த நோய் தீவிரமாகிக்கொண்டே போகும்.

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு கார்போ ஹைட்ரேட், கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடும்போது கல்லீரலில் கொழுப்பு படியும். புரதச்சத்து அதிகமுள்ள உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கல்லீரலில் நச்சு சேர்வதைத் தடுக்க மதுப்பழக்கம், மருத்துவர் பரிந்துரையின்றி அடிக்கடி மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். கிரீன் டீ மற்றும் பிளாக் காபி இரண்டும் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிரெஷ் காய்கறிகள், பழங்களும் கல்லீரலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்" என்கிறார்.

World Liver Day: தினமும் ஒரு `பெக்' மது... ஆரோக்கியத்திற்கு நண்பனா, கல்லீரலுக்கு வில்லனா? | doctor explains about importance of liver health and major diseases which affects it - Vikatan

பகிர்வுக்கு மிக்க நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.