Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர்.

‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர்த்தினியாகி பார் முழுதும் தன் அருளை பரப்பினாள். பிரபஞ்ச சக்தியான துர்க்கையின் அம்சமாக அவளிலிருந்தே பல்வேறு சக்திகள் வெளிப்பட்டு பல்வேறு துர்க்கை ரூபங்களாயின. ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு மந்திரம், உப தேவதைகள், வாகனம், தனித்த உருவம் ஆகியவற்றுடன் திகழ்ந்தன. அவர்களில் காலராத்ரி துர்க்கை என்பவள் தனித்துவம் மிக்கவளாக பொலிந்தாள். அவளையே அழகுத் தமிழில் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர்.

கருக்கினில் என்றால் கிராமிய வழக்கு மொழியில் கருக்கல் வேளை என்பது பொருள். அதாவது இருள் சூழ்ந்திருக்கும் நேரம் என்பதாகும். ஆகமங்கள் இவளை இருட்டில் வழிபாட்டிற்குரியவளாக சொல்கின்றன. மாலையும் இருளும் சந்திக்கும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்லலாம். முற்காலத்தில் இரவு பூஜைகள் இங்கு சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. மரங்களில் தெய்வங்கள் உறைவதாக வேத நூல்கள் உரைக்கின்றன. உதாரணமாக வாழைத்தண்டின் உட்புற மத்திய பாகத்தில் காளி உறைவதாகவும், அவளே ‘கதலீ கர்ப்ப மத்யஸ்தா காளி’ என்றும் சொல்வார்கள். வாழைத் தோப்பு காளியின் ஆட்சிக்குட்பட்டது. வேம்பில் அம்மன் குடி கொண்டிருப்பதை நம் அன்றாட வழிபாடுகளில் உணர்கிறோம். அதேபோல பனை மரத்திலுள்ள கருக்குகளில் தன் கூர்மையான சக்தியோடு இவள் உறைவதால் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர். பனை மரக்காட்டில் நிலைகொண்டவள் என இவளை சில நூல்கள் குறிப்பிட்டுப் பேசுகின்றன. அதற்கு ஆதாரமாக இந்த கருக்கினில் அமர்ந்தாள் ஆலயத்தைச் சுற்றி நிறைய பனை மரங்கள் இருந்ததாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

காண்பதற்கு அபூர்வமானவளும், அருள் செய்வதில் இணையில்லாதவளுமான கருக்கினில் அமர்ந்தாள் கோயிலுக்குள் செல்வோமா?

கோயில் வளாகத்திலேயே மேற்கில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ‘‘கருக்கமர்ந்த பட்டாரியார் கோயில்’’ என்று காஞ்சி கல்வெட்டுக்கள் இக்கோயில் பற்றி பேசுகின்றன. கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியவை பாங்குற அமைந்துள்ளன. கோயிலுக்கு வெளியே, வாயிலருகில், கருவறைக்கு நேராக பத்மாசனத்தில் புத்தர் தியானத்தில் ஆழ்ந்துள்ள சிலை வடிவங்களும், கத்தி, கேடயத்துடன் வீரன் சிற்பமும், நாகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் சுதையில் செய்யப்பட்ட துவாரபாலகர் நின்றிருக்கின்றனர். பக்கத்திலேயே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. கோயிலின் அர்த்த மண்டபம் நீள் சதுர வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறை யில் ஐந்தடி உயர முடைய துர்க்கையின் சிற்பத்தைப் பார்க்க உடல் சிலிர்க்கிறது.

தேவி மகாத்மியம், காலராத்ரி துர்க்கை எனும் கருக்கினில் அமர்ந்தாளை அழகாக வர்ணிக்கிறது. இருளைப்போல கருத்த மேனியை உடையவளாக பயங்கர ரூபத்தோடு விளங்குகிறாள். போர்க்களத்தின் மையத்தில் நெடிய உருவத்தோடு பலத்த காற்றினில் அலைந்தபடி இருக்கும் ஈட்டிகளைப் போன்ற கேசங்கள் இவளுக்கு. கழுத்தில் மின்னலைப் போன்று ஒளிவீசும் மாலை. கண்கள் நெருப்புப் பந்துகள் போல சுழன்று கொண்டிருக்கின்றன. மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை தெறிக்கிறது. துஷ்டர்களுக்கும் பகைவர்களுக்கும் பயத்தை உண்டாக்குகிறாள். அதேசமயம், பக்தர்களுக்கு அபய ஹஸ்தம் காட்டி இன்னருள் புரிகிறாள். இந்த வர்ணனைக்குட்பட்ட அதே உருவத்தை இங்கு மூல தேவியாக வடித்திருக்கிறார்கள். எண்கரத்தவளான இவளுக்கு மெல்லிய தேகம்தான்; ஆனால் உறுதியோடிருக்கிறாள். கண்களில் கோபம் தெரிந்தாலும், அதன் மையத்தே கருணை ஊற்றும் கொப்பளிக்கிறது. காலடியில் வீழ்ந்திருக்கும் மகிஷாசுரன் மீது அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தொன்மையும் காலராத்ரி தேவியின் சாந்நித்தியமும் மனதை நிறைக்கின்றன.

துர்க்கையின் அம்சங்களில் சற்று உக்கிரமான தேவி இவள். அனுக்கிரகம் செய்வதில் தாயுள்ளம் படைத்தவளும் இவள்தான். காலம் கடந்த சக்தியான கருக்கினில் அமர்ந்தாளை காலம் தாழ்த்தாது வணங்கினால், அன்னையின் அருட்சக்தி, நம் உடலிலும் வாழ்விலும் மென்மையாக ஊடுருவுவதை சுகமாக உணர முடிகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் வீதி வழியாக வள்ளல் பச்சையம்மன் சாலை, மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே இக்கோயில் உள்ளது.https://eegarai.darkbb.com/t4079-topic

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 தமிழில் ஸ்ரீ அனுமன் புகழ்மாலை

இந்த பதினோறு பாசுரங்களும் கிட்கிந்தா காண்டத்தில் சாம்பவான் அனுமனைப் புகழ்ந்து கூறுவதாக அமைந்துள்ளது. அவ்வாறு சாம்பவான் புகழ்ந்து கூறியதை அடுத்து அனுமன் செயற்கரியக் காரியம் செய்ய துணிந்தார். ஆஞ்சநேயர் சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு இலங்கைக்கு, பல கஷ்டங்களைத் தாண்டிக் கடலைக் கடந்தார். சம்சாரமாகிய பெருங்கடலை மிகவும் எளிதில் தாண்ட இப்பாசுரங்களை பாராயணம் செய்வோம்.

மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர்
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்
ஆலம் நுகர்ந்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்

வெப்புறு செந் தீ நீர் வளியாலும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்
ஒப்புறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே
குப்புறின் அண்டத்தப் புறமேயும் குதிகொள்வீர்

நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே
கொல்லவும் வல்லீர் தோள் வலிஎன்றும் குறையாதீர்

மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்
சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்

அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறழியாமை
மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க
எறிந்துழி இற்றோர் புன் மயிரேனும் இழவாதீர்

போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா
ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்
பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
மாதர் தவம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்
ஓதி யுணர்ந்தீர் ஊழி கடந்தீர் உல கீனும்
ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்

அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே
கண்ணி உணர்ந்தீர் கமுமம் நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்

அடங்கபும் வல்லீர்காலமது அன்றேல் அமர்வந்தால்
மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர் மதி நாடித்
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடங்கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடை யாதீர்

ஈண்டிய கொற்றத் திந்திரன் என்பான் முதல் யாரும்
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்
பண்டிதர் நீரே பார்த்தினிது உய்க்கும்படி வல்லீர்
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்

ஏகுமின் ஏகி எம்முயிர் நல்கிஇசைகொள்ளீர்
ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னம் குறைவு இல்லாச்
சாகரம் முற்றும் தாவிமும் நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

தமிழில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு உகந்த இந்த புகழ்மாலையை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும். https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/07/20122158/1715001/Hanuman-slokas.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.