Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து

  • மார்க் கின்வெர்
  • சுற்றுச்சூழல் செய்தியாளர்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆர்க்டிக் பனி அடுக்குகள்

பட மூலாதாரம்,ANGELIKA RENNER

 
படக்குறிப்பு,

புவிக்கு கவசமாக உள்ள பனி அடுக்குகளில் பிளவு.

ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி.

ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாமல் போவதாக அமெரிக்காவின் விண்வெளி முகமையான நாசா கூறுகிறது. இது 1981 முதல் 2010 வரையான ஆண்டுகளின் சராசரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்க்டிக் பகுதியில் பனி அடுக்குகள் சுருங்குவதற்கு, மனிதர்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாக சேர்வதுதான் முதன்மையான காரணம் என, கடந்த 2007ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவின் நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகரித்து வரும் புவியில், காணாமல் போகும் கடல் பனி அடுக்குகள், பூவிப் பரப்பின் சராசரி வெப்ப நிலை அதிகரிக்க காரணமாகும். இந்த பனி அடுக்குகள் 80 சதவீத சூரிய ஒளியை எதிரொலிக்கின்றன. இதனால், சூரிய ஒளி புவியை வெப்பமாக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

 

கடல் பனி அடுக்குகள் உருகும் போது, பெருங்கடல்களில் மேற்பரப்பின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. பெருங்கடல்கள் 90 சதவீத சூரிய ஒளியை உள்வாங்கிக் கொள்கின்றன. அது ஒட்டுமொத்த வட்டாரத்தையும் சூடாக்குகிறது. இதை ஆங்கிலத்தில் அல்பெடோ எஃபெட் (Albedo Effect) என்கிறார்கள்.

மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது

பனி அடுக்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மலைபோல நின்று காக்கும் பனி.

வெளிர் நிறங்கள் வெப்பத்தை எதிரொலிக்கும், அடர் நிறங்கள் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் என்கிற எளிய தத்துவத்தால் இந்த விளைவு ஏற்படுகிறது.

ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உறைவதும், உருகுவதும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் ஒரு விஷயம். மார்ச் மாதங்களில் உறைந்து கிடக்கும். செப்டம்பர் மாத காலத்தில் உருகிய நிலையில் இருக்கும்.

ஆர்டிக் கடல் பனி அடுக்குகள் சுருங்கி வருவதாக களத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கைக் கோள் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

கடல் பனி அடுக்குகள் சுருங்குவதால், பெருங்கடல் பரப்புகள் அதிக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன. எனவே இது ஒட்டுமொத்தமாக நிலப்பரப்புகள் மற்றும் கடல்களை அதிகம் வெப்பமடையச் செய்கின்றன.

பனியால் மூடப்பட்டிருக்கும் பகுதிகள் குறைந்து, நேரடியாக சூரிய ஒளி படும் பகுதிகள் அதிகரித்து வருவது, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால்தான் புவியை சூழ்ந்த வளிமண்டலத்தின் வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கிறது. அது அபாய அளவை எட்டிய பிறகு மனிதர்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும் அதன் வெப்ப நிலையை மாற்ற முடியாமல் போகிறது.

சிறிய மற்றும் வெப்பமான பூமி

ஆர்டிக் பனி அடுக்குகள்

வட துருவத்தில் பனி அடுக்குகளின் அடர்த்தி குறைவது மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது வடமேற்கு போக்குவரத்துப் பாதையை திறந்துவிடுகிறது. இந்த வணிகப் பாதை வட அட்லாண்டிக் மற்றும் வட பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது.

கிரீன்லாந்து மற்றும் கனடா நாட்டுக்கு மத்தியில் உறைந்து கிடக்கும் ஆர்டிக் பெருங்கடலில் ஒரு போக்குவரத்துப் பாதையைக் கண்டுபிடிக்க 19ஆம் நூற்றாண்டில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் கோடை காலத்தில் கடல் பகுதி உருகுவதால், எதிர்காலத்தில் அது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் ஒரு தடமாக மாறலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிலரோ, இது உலக கப்பல் போக்குவரத்தில் ஏற்படவிருக்கும் மிகப் பெரிய புரட்சிகரமான மாற்றமாக இருக்கலாம் என்கிறார்கள். சிலரோ இது அப்பகுதியில் ஏற்படவிருக்கும் பேரழிவு என்கிறார்கள்.

அவ்வழித் தடத்தில் அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்து, அப்பகுதியில் இருக்கும் கடல் வாழ் உயிரினங்களின் சூழலியலையை பாதிக்கும் என தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சுற்றுச்சூழல் அமைப்புகள்.

இந்த துருவ பகுதியில் கப்பல்கள் விபத்தை எதிர்கொண்டால் அது மிக மோசமான மாசுபாட்டை ஏற்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

போதுமான உணவு இல்லை

போலார் பனி கரடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடல் பனி அடுக்குகளின் அடர்த்தி குறைவதால் சில விலங்கினங்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இதில் போலார் பனிக் கரடிகளும் அடக்கம்.

பனிக் கரடிகளின் உடல் எடையை தாங்கும் அளவுக்கு பனி அடுக்குகளின் அடர்த்தி இல்லாததால், அவ்உயிரினங்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தி இரையை வேட்டையாட வேண்டி இருக்கிறது அல்லது ஒட்டுமொத்தமாக இரையை வேட்டையாடுவதே சிரமமாகி இருக்கிறது.

பனிக்கரடிகள் தனக்கு போதுமான உணவு கிடைக்காததால், மக்கள் வாழும் இடக்களுக்கு உணவைத் தேடி வருகின்றன.

இது போக விஞ்ஞானிகள் மத்தியில் இருக்கும் மற்றொரு மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் அது நீரோட்டம். கடல் பனி அடுக்குகள் உருகுவதால் ஆர்டிக் பகுதியில் கடலின் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது.

பொதுவாக கடலின் உப்பு நீரை விட, நன்னீரின் அடர்த்தி குறைவாக இருக்கும். திடீரென ஆர்டிக் கடலில் உருவாகும் நன்னீர், வடக்கு அட்லாண்டிக் கடலில் கலப்பதால் கடல் நீரோட்டத்தின் வலிமை மாற்றத்துக்கு உள்ளாகிறது. இது ஒட்டுமொத்தமாக உலகின் பருவநிலை அமைப்பில் காலநிலை முறைகளை பாதிக்கலாம்.

https://www.bbc.com/tamil/science-57708757

  • கருத்துக்கள உறவுகள்

கிரீன்லாந்து பனி அடுக்கு உருகுவதற்கான புவி வெப்பமயமாதலே காரணமாக இருக்கலாம்

By Bryan Dyne 

கிரீன்லாந்து பனி அடுக்கின் மேற்பரப்பு ஜூலை 8 முதல் ஜூலை 12 வரையில் அதிகளவு உருகியது. நாட்டில் கிட்டதட்ட 97 சதவீதத்தினர் நான்கு நாட்களில் 40 சதவீதத்திலிருந்து அதிகரித்த மேற்பரப்பு பனி உருகலை கண்ணுற்றனர். இதுபோன்ற ஒரு நிகழ்வு கடைசியாக 1889ல் நிகழ்ந்தது.

ஒரு குறைந்தகால உறைவுக்குப் பின்னர், ஜூலையின் இறுதியளவில் வெப்பநிலை மறுபடியும் உயர்ந்தது. ஜூலை 28 இல், கிட்டத்தட்ட கிரீன்லாந்தின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கில் பனிப் படலம் உருகியது. இது ஜூலை மாத 25 சதவீத சராசரி பனி உருகலுக்கு இணையாகிறது.

வழக்கமாக, கோடையின் அதிவெப்பமான தருணத்தின்போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்து மேற்பரப்பு பனி உருகியிருக்கிறது. பின்னர், ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மறுபடியும் உறைகிறது. இவ்வருடம், கிரீன்லாந்தை கண்காணிப்பதற்கு செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தி, அதன் உயர்ந்த அளவு உள்ளிட்ட, ஏறக்குறைய கிரீன்லாந்தின் அனைத்து பனி அடுக்கும் சில டிகிரி அளவுக்கு உருகியிருப்பதை காண்பித்ததாக மூன்று தனித்தனி கருவிகள் மூலமாக விஞ்ஞானிகள் ஊர்ஜிதம் செய்தனர்.


படம்: இளஞ்சிவப்பு நிறத்தால் குறிப்பிடப்பட்ட பகுதி ஜூலை 8 முதல் (இடது) 12 வரை சற்று உருகிய மேற்பரப்பினைக் குறிக்கிறது
நன்றி: நாசா

தீவிரமான உருகலுக்கு சந்தேகிக்கப்படும் காரணம் வெப்பக் கூரை” (heat dome) என்று அறியப்படுகிறது. ஒரு உயர் அழுத்த அமைப்பு குளிரான வேக காற்றோட்டத்தை வடக்கிற்கு அப்பால் வைத்திருப்பதாலும் அது மெக்சிகோ வளைகுடாவிலிருந்து வடக்கிற்கு வெப்பத்தையும் ஈரப்பதத்தினையும் கொண்டுவருவதாலும் இது நிகழ்கிறது. இவ்வுயர் அழுத்தம் அப்பகுதியில் மேகங்கள் உருவாவதையும் தடுத்து, மழையினையும் தடுக்கிறது. இந்த வளிமண்டல வடிவமைப்பே இந்த கோடைகாலத்தில் அமெரிக்கா முழுவதிலுமான வரட்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இதே வெப்பக் கூரை பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்தது, அதுவே பனி அடுக்கு உருகலுக்கான காரணமாகின்றது. இது, மிகவும் பொதுவாக, அதிக அளவு ஆர்க்டிக் பனி உருகுவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது.

இந்த உயர் வெப்பநிலையே வடக்கு கிரீன்லாந்தில் அமைந்துள்ள பீட்டர்மேன் சறுக்கு பனிப் பாளங்களின் ஒரு பகுதி உருகலுக்கு காரணமுமாகும். இந்த பனித்தொடர் 130 சதுர கிலோமீட்டர்கள் (50 சதுர மைல்கள்) பரப்பளவானது. இந்தப் படலம் ஏற்கனவே நீரின் மேல் மிதந்து கொண்டிருந்தது, அதனால் உலக கடல் மட்டத்துடன் சேராது. ஆயினும், இது கிரீன்லாந்தின் பனிப்படலங்கள் உருகி அட்லாண்டிக் கடலில் விழும் போக்கின் ஆரம்பம் என்றால், தீவின் உள்பகுதி பனி உருகி கடலில் கலந்து, உலகெங்கிலும் கடல் மட்டம் உயருவதற்கு குறுகிய காலமே எடுக்கும்.

எச்சரிக்கையாக, சேகரிக்கப்பட்ட அறிவியல் தகவல்கள் கிரீன்லாந்து பனி உருகல் அதிகரிப்பினை சுட்டிக் காட்டுகின்றன. 1979 முதல் 2002 வரை திரட்டப்பட்ட தகவல்கள், பெருமளவு கடற்கரையோர பனிப்பாறையிலிருந்து 16 சதவீத பனி உருகல் அதிகரிப்பினை காட்டுகின்றன, அவை கடல் மட்டத்தை அதிகரிப்பதில்லை. 2003 முதல் 2008 வரை, கிரீன்லாந்து சராசரியாக வருடத்திற்கு 195 கியூபிக் கிலோமீட்டர்களை (47 கியூபிக் மைல்களை) இழந்தது என்று, 2002ல் ஏவப்பட்ட, நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE)- ஆல் சேகரிக்கப்பட்ட மிக சமீபத்திய தகவலகள் தெரிவிக்கின்றன.

இந்த நூற்றாண்டில், கிரீன்லாந்தின் உள்ளூர் வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என்னும் எதிர்பார்ப்புடன் இணைந்து இந்நிகழ்வுகள், கிரீன்லாந்தின் பெரும் பனி உருகுவதன் அதிகரித்துவரும் அபாயத்தை தெளிவுபடுத்துகின்றன. கடந்த ஒரு சில தசாப்தங்களில் ஒரு குறிப்பிட்ட அதிகபட்ச பனிஉருகும் புள்ளியை எட்டிவிட்டது என்பதை ஏனைய சில ஆய்வு முறைகள் நிராகரிக்காத போது, இதுபோன்ற ஒரு நிகழ்வு சில நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் என்று மிகவும் பழமைவாத மதிப்பிடல்கள் கணிக்கின்றன. மொத்த பனி அடுக்கான 28,50,000 கியூபிக் கிலோமீட்டர்களும் (683,751 கியூபிக் மைல்கள்)  உருகினால், உலக கடல்மட்டம் 7.2 மீட்டர் (23.6 அடி) உயரும்.

மிகவும் பொதுவாக, இவ்வாண்டு அமெரிக்க மத்தியமேற்கில் நிலவிய வரட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள், பொதுவான உலக வெப்பநிலை உயர்வால் எதிர்பார்க்கப்படுபவைகளுக்கு உதாரணங்கள். இதுபோன்ற காலநிலை உலகின் எப்பகுதியிலும் உறுதியாக இல்லாத பட்சத்தில், புவி வெப்பமயமாதல் உள்ளூர் வெப்பநிலையில் ஒவ்வொரு வருடமும் அதிக அளவுடன் தீவிர மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கார்பன் வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதல் ஏற்படுவதற்கான தெளிவான ஆதாரம் இருந்தபோதிலும், உலக அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்தை கவனித்து எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் எடுக்க விரும்பாமலும், முடியாமலும் உள்ளன. பிரேசிலில் ஜூன் மாதம் நடந்த, மிக சமீபத்திய காலநிலை மாநாடு, உருப்படியாக எதையும் செய்யவில்லை. அமெரிக்காவால் தலைமைதாங்கப்படும் உலக அரசாங்கங்கள், பெருநிறுவன ஆதாயங்களையும் பூகோள-அரசியல் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ள தீர்மானமாக இருப்பதுடன், தம்முள் கசப்புடன் பிளவடைந்தும் உள்ளனர்.  

மனித இனத்தின் வாழ்வின் மீதும் மற்றும் பூமியின் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தீர்ப்பதற்கான உலக அரசாங்கங்களின்  இயலாமை, இயற்கை உட்பட அனைத்து விடயங்களும் உலக நிதிய மேல்தட்டின் நலன்களுக்கு அடிணியச்செய்யப்படுகின்றன என்ற ஒரு பொதுவான காரணத்திலிருந்து நேரடியாக ஊற்றெடுக்கின்றது.

ஆசிரியர் மேலும் பரிந்துரைப்பவை:

Rio+20 climate conference: “An epic failure”

Evidence of intensifying climate change grows

https://www.wsws.org/tamil/articles/2013/oct/131009_met.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.