Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டைய தமிழர்களிடம் இருந்த பன்வகையான படைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழர்களிடம் அக்காலத்தில் பல்வகையான படைகள் இருந்ததாக அறியக் கிடைக்கின்றது.

→ சேனையின் உட்பிரிவே ஒவ்வொரு விதமான படைகளாகும். ஆனால் பொதுவாக சொல்லும்போது படையென்னும் பெயரே ஆய்தம் தாங்கிய அரச ஆணைபெற்ற படைகளைக் குறிக்கின்றன..

main-qimg-8b1d820f99b905570fa7a4159f85fd8e

 

முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு

  1. அகப்படை - Internal Defensive Force
  2. மறப்படை - Expeditionary Force

- என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.

 


கோட்டைப் போரின் போது பொருதும் படைகள்

  1. உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை.
  2. நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை.

என்று அழைக்கபட்டன.

 


இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:

  1. பயிற்சிப் படை = போர்ப் பயிற்சி கற்ற சேனை.
  2. பயிற்சியிலாப் படை = பயிற்சி பெறாத-உணர்ச்சியுள்ள மைந்தர் கூட்டம்.

 


அடுத்து, கருவிகள் அடிப்படையில் படைகள் இவ்வாறு பிரிக்கப்படும்:

  1. கரணப்பல்படை - பல்வகையான படைக்கலங்களைத் தாங்கிய படை
  2. கருவிபெறு படை = அரசனால் வழங்கப்படும் போர்க்கருவிகளைப் பெற்று விளங்கும் சேனை.
  3. தற்கருவிப் படை = தத்தம் போர்க்கருவிகளைக் கொண்டு பொருதும் சேனை.

 

அடுத்து, நகர்திறன் அடிப்படையில் இவ்வாறு பிரிக்கப்படும்:

  • தானே செல்வது - காலாட்படை/தானை
    • தானாகச் செல்லும் படையாகிய காலாட்படையினை தானை என்றனர் பண்டைத்தமிழர். இதை தற்காலத்தில் சேனைக்கு ஒத்த சொல்லாக சிலர் கருதுகின்றனர், அது தவறு. சேனை என்பது மொத்தமானது.
      • [அறுவகைத் 'தானை' என்பது முதன்மையான அறுவகை படைக்கலங்களைக் குறிப்பவையே (வில், வேல், வாள், குதிரை, யானை, தேர்).. இவை அறுவகைப் படைகள்(~சேனை) அன்று. தானை என்றால் தமிழில் ஆய்தம் என்றும் ஒரு பொருள் உண்டு என்பதை அறிக. ]
    • தேரும் குதிரை மூலம் இயங்குவதால் அதுவும் குதிரையினுள் அடங்கிவிடும்.
    • ஆதாரம்:

'தானை, யானை, குதிரை

நோனார் உட்கும் மூவகைந் நிலையும்

→ (தொல்.பொருள்.புறத். 14:1,2)'

  • பிறவாற் செல்வது - குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

 


அடுத்து, தேர்ப்படையானது ஊர்திகள் அடிப்படையில் படைகள் இவ்வாறு பிரிக்கப்படும்:

  1. ஊர்திபெறுபடை = காவலனால் தரப்பட்ட ஊர்திகளில் ஏறிப் போர் புரியும் சேனை.
  2. தன்னூர்திப்படை = தத்தம் ஊர்திகளில் ஏறிப் போர் புரியும் சேனை.

 

பின்னர் எல்லாப்படையும் நால்வகையாக ஒட்டுமொத்தமாகப் பிரித்தனர். இவற்றினை நாற்படைகள் என்று கூறூவார்கள்.

  • காலாட் படை / ஆட்படை
  • தேர்ப்படை/ சகடப்படை
  • குதிரைப்படை / புரவிப்படை/ பரிப்படை
  • யானைப்படை/ கடகப்படை/ கரிப்படை

இவற்றுடன் வேவுப்படை என்றும் ஒன்றிருந்தது. அதன் சேவை யாதெனில் எதிரியின் இடத்திற்குச் சென்று தகவல் திரட்டும் படை. இது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்பதால் 'ஐந்தாம்படை' என்றும் அழைப்பர்.

இவை தவிர, கடற்படையும் இருந்தது - இது கடலில் நடைபெறும் கடற்சமர்களில் ஈடுபடுவதற்காக வைத்திருந்த படையாகும்.

 


  1. வன்படை - நாட்டுப்பற்றால் ஏற்பட்ட மனவெழுச்சி காரணமாக எழுந்த படை
  2. மென்படை - இலகுவான படை - Light army

 

பேந்து, அறுவகைப்படையாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன,

  • ஊழியக் கால அளவு பற்றி:-
    • கூலிப்படை/ படிப்படை - கூலிக்கு அமர்த்தும் படை.
    • மூலப்படை/ தொல்படை/ நிலைப்படை- பயிற்சிசெய்து நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் படை.
      • இந்த மூலப்படையினால் ஏற்படும் பலத்தின் பெயர் மூலபலம் என்பதாகும்.
  • தொகுக்கும் இடம்பற்றி:-
    • நாட்டுப்படை/ அமையப்படை - போர்க்கலங்களில் மன எழுச்சி மிக்கு உருவாகும் படை. மனையிலும் மன்றிலும் மரபுவழி பயிற்ச்கி பெற்றவர். இவர்கள் மூப்படைக்கு துணையாவ்ர் ; அவர் செல்லும் வழி காப்பார்; எல்லைகளை காப்பார்; மனைகளை, நீர்நிலைகள் போன்றவற்றை காப்பார்
    • காட்டுப்படை - கானக மக்களால் ஆன படை
  • சேர்ந்துள்ள பக்கம்பற்றி:-
    • துணைப்படை - நட்பரசரதாய்த் தனக்கு உதவுஞ் சேனை.
    • பகைப்படை - பகைவர் படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும் அமைந்த படை.

 


அதன் பின்னர் அவற்றினுள் கீழ்கண்ட சேனைகள் பிரிவுகளாக இருக்கும்:

  1. குடிப்படை/ வன்படை - போர்வேளையில் நாட்டுப்பற்று அரசபற்று காரணமாக பொருள் பற்றின்றி எழுந்த முறையான பயிற்சி பெறாது மரபுவழி மனையில் மறப்படை பயிற்சி பெற்றவர்
  2. பாசிப்படை - திடீரென்று தாக்கும் படை
  3. செருப்படை - சிறந்த வீரர்களைக் கொண்ட படை
  4. பதிபடை/ ஒளிபடை- பதுங்கித் தாக்கும் படை - Ambush army
  5. கைக்கொளவர் படை/ கைக்கோளப்படை/ வேளைக்காரர் படை - அரசனிற்கு அவ்வப்போது வேண்டும் பணிகளை தப்பாது செய்ய வேண்டும் என்றும், தப்பின் உயிர் துறப்பது என்றும், சூளிட்டுக் கொண்ட பணியாளர். கைக்கோளர் என்பவரே வேளைக்காரர் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப் பவாணர் அவர்கள். இவர்கள் இரு பிரிவாக இருந்தனர்:
    1. அத்திகோசம் - ஆனையைக் கொல்வோர்
    2. வீரகோசம் - வீரரைக் கொல்வோர்
    3. ஆபத்துதவிகள் - பாண்டிய தேசத்து வேளைக்காரர்.
      1. ஆபத்து - சமற்கிருதம்
  6. ஊசிப்படை - தாக்குதல் படை
  7. உரிமைப்படை - மானியம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்து அரசனுக்காகப் போரிடும் சேனை.
  8. புதுப்படை - அவசர நிலையில் புதிதாய்ச் சேர்க்கப்படும் படை
  9. பங்களப்படை - newly enlisted army useless as chaff
  10. தனிப்படை - தலைவனை இன்றித் தாமாகவே இயங்கும் சேனை.
  11. குழுப்படை - மன்னன் அமைத்த தலைவனையுடைய சேனை.
  12. அங்கபடை - மெய்க்காவல் படை
    1. [இச்சொல் பொற்பனைக் கோட்டையில் கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் கல்வெட்டில் இருந்து கிடைக்கப்பெற்றது... எனவே தமிழ்ச்சொல் என்று நினைக்கின்றேன்.]
  13. நிழற்படை- "அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர்" என்பதாகப் முனைவர் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
    1. நிழல் - சுருக்கமாக
  14. மாப்படை - கரி, பரி மற்றும் சிறந்த வில் வீரர்களைக் கொண்ட படை
  15. தளப்படை - காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த படை. இவர்கள் கூழைப்படையாகவும் கரந்தடிப்படையாகவும் பின்வாங்கும்போது பாவிக்கப்படுவர்.
  16. சாவேறு - பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படை மீது ஊடறுத்துச் செல்ல முயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே நோன்பாகக்கொண்ட வீரர்கள்
  17. முனைமோகர், முனையெதிர் மோகர் - என்னவகைப் படைப் பிரிவு என்று அறிய முடியவில்லை!
  18. மற்படை - ஆய்தம் இன்றி போரிடுவோர் - வர்ம வீரர், மற்போராளர்
  19. கள்ளர் படை - போர் தொடங்குவதற்கு முன்னரே பகைவரின் ஆநிரைகளை கவர்ந்து வருவதற்காக அமைக்கப்பட்ட படை.

 


செயல்களின் அடிப்படையில் எழுந்த அடைமொழி போன்ற சொற்கள்

  1. உடைப்படை - எப்பொழுதும் தன்னுடனே வைத்துக்கொள்ளும் படை
  2. கூளப்படை - பல வகைப் படைகள் கலந்த படை
  3. குமரிப்படை - அழியாப்படை
  4. தடுபடை - மாற்றுப்படை
  5. புடைப்படை - சூழந்து செல்லும் படை
  6. துறுபடை - நெருக்கமாக ஓரிடத்தில் நிற்கும் படை
  7. வென்படை/வாகைப்படை - வென்ற படை
  8. அளவுபடை - மிகச்சிறிய படை
  9. பெரும்படை - பெரிய படை
  10. அடும்படை, வியன்படை, வெம்படை, வருபடை, பொருபடை, பெயர்படை, அழிபடை, வெல்படை, நெடும்படை - - விதப்பான பொருள் என்னவென்று தெரியவில்லை

 


கூடுதல் செய்திகள்:


 

உசாத்துணை:

 

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to பண்டைய தமிழர்களிடம் இருந்த பல் வகையான படைகள்
  • நன்னிச் சோழன் changed the title to பண்டைய தமிழர்களிடம் இருந்த பன்வகையான படைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.