Jump to content

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பம் ஒன்றின் சிறுவன் ஒருவரின் இரண்டு கண்களும் பழுதடைந்துள்ள நிலையில் குறித்த சிறுவனின் கண் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
மாவடிவேம்பு, வைத்தியசாலை வீதியில் வசிக்கும் செல்வராசா சோமேஸ்காந்த் என்னும் 13வது சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி கோரப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஒரு பெண் சகோதரியை கொண்ட குறித்த சிறுவன் குறித்த குடும்பத்தின் ஒரேயொரு ஆண்வாரிசாகும். தந்தை கூலித்தொழில்செய்து அன்றாடம் குடும்பத்தினை கொண்டு நடாத்திவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் நிலையில் குறித்த சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவி கோரிவருகின்றனர்.

ஏற்கனவே சிவப்பு படலம் கண்ணில் படர்ந்ததன் காரணமாக ஒரு கண் பார்வையிழந்துள்ள நிலையில் மற்றைய கண்ணிலும் சிவப்பு படலம் ஒன்று படர்வதன் காரணமாக சத்திரகிசிச்சை உடனடியாக செய்யவேண்டும் எனவும் அதற்கு சுமார் மூன்றரை இலட்சம் ரூபா செலவாகும் எனவும் குறித்த சத்திர சிகிச்சை கொழும்பில் விசேட வைத்திய நிபுணர் மூலமே சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த சிறுவனின் நிலைமையறிந்து தனவந்தர்கள் அவசர உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.குறித்த சிறுவனின் தொடர்பு இலக்கம்-0764665685,வங்கி சேமிப்பு கணக்கு –ஜெயமோகன் ஜெயதர்சினி –அடையாள அட்டை இலக்கம்-826824492ஏ,மக்கள் வங்கி கணக்கு இலக்கம் -227200230053139.

https://www.meenagam.com/சிறுவனின்-சத்திர-சிகிச்ச/

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.