Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக் கூறுகிறார்: "(கடந்த 130 ண்டுகளில்) மலேசியாவின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் (நாள், வார, மாத இதழ்கள் பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்குற்றியிருக்க வேண்டும்" .

மலேசியாவில் தமிழர் வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் அவர்களின் மொழி, கலை, இலக்கிய, சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாக இருந்து அவற்றை வழி நடத்தவும் இந்தக் கட்டுரைகள் பெரும் பங்கு ற்றியிருக்கின்றன என்பது சரியான ஊகமே. இக்கட்டுரைகள் சில வேளைகளில் நூல் உருவம் பெறும்போதுதான் அவை வரலாற்றில் நிலைக்கின்றன. அவற்றைப் பற்றியே இக்கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

தொடக்க காலம்.

மலாயாவில் தொடக்க காலத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ள நூல்களாக 1887-இல் பலவேந்திரம் இராயப்பன் என்பவர் எழுதிய "சத்திய வேத சரித்திர சாரம்" என்னும் கிறிஸ்துவ நூலும், 1890-இல் பதிப்பிக்கப்பட்ட "பதானந்த மாலை" என்னும் இஸ்லாமிய சமய நூலும் குறிப்பிடப்படுகின்றன. இந்தத் தொடக்க கால நூல்களில் கவிதைக்கூறுகள் அதிகம் இருந்தாலும் கட்டுரைக் கூறுகளும் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.

தொடக்ககாலப் பதிப்பு நூல்கள் சமய நூல்களாகவே இருந்திருக்கின்றன. அச்சியந்திரம் சியாவில் தோன்றிய ஆரம்ப காலத்தில் கிறித்துவ சமயப் பிரச்சாரம் தலையோங்கி இருந்ததால் அதுவே முதல் அச்சு உற்பத்தி ஆயிற்று. இதனை முன்னோடியாக வைத்து இந்து, இஸ்லாமியப் பிரச்சார இலக்கியங்களும் அச்சேறின.

இராம சுப்பையா தொகுத்துள்ள Tamil Malaysiana என்னும் நூலின் படி 1920 முதலே மலாயாவில் நூல் பதிப்புக்கள் தொடங்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக 1920-இல் "தமிழின் பெருமை" (டி.கே கந்தையாப்பிள்ளை); 1928-இல் "சத்திய தரிசனம்" (ர்.சுவாமி); 1931-இல் "தமிழன்" (வே.கந்தையா); 1931-இல் "பத்துமலை மகத்துவம்" (அற்புதானந்தா), 1932-இல் "அகில மலாயா தமிழர் மாநாடு" (கோ.சாரங்கபாணி); 1933-இல் "தமிழ் மக்கள் மாண்பு" (வ.மு.கனகசுந்தரம்); 1933-இல் "யாழ்ப்பாணக் குடியேற்றம்" (சிவானந்தன்); 1935-இல் "கடிதங்களும் அவை எழுதும் முறையும்" (பி.கோவிந்தசாமி); 1936-இல் "எங்கள் எதிர்காலம்" (சி.சின்னதுரை); 1936-இல் "கடவுளின் உண்மைத் தோற்றம்" (எஸ்.கே.சின்னமுத்து); 1936-இல் "உலகம் போற்றும் உத்தம நபி" (உ.அப்துல் அனீ·ப்); 1937-இல் "பண்டித நேருஜியின் மலாயாச் சுற்றுப் பயணச் சரித்திரம்" (நெல்லை இரா.சண்முகம்); 1937-இல் "வருங்கால நவயுகம்" (சீ.வி.குப்புசாமி); 1937-இல் "மலாயாவின் தோற்றம்" (முத்துப் பழனியப்பச் செட்டியார்); 1939-இல் "மலாயா மான்மியம்" (சரவணமுத்து).

இவை போலவே இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ சமய விளக்கங்களும், மலாயாவின் வரலாறும், இந்திய வரலாறும், தமிழர் சமுதாய நிலையும் மலாயாவில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களில் அதிகம் எழுதப்பட்டுள்ளன.

1940-களில் சுவாமி சத்தியானந்தா மலாயாவில் வாழ்ந்திருந்து "சுத்த சமாஜம்" என்னும் அனாதைக் குழந்தைகள் சிரமத்தை நிறுவியதுடன் மலாயாவின் அரசியல் சமூக வரலாறுகள் பற்றியும் இந்து சமயம் பற்றியும் நூல்களும் எழுதினார். பிரமச்சாரி கைலாசம் என்பது அவருடைய இன்னொரு பெயரும் ஆகும். அவருடைய நூல்களில் குறிப்பிடத் தக்கன: 1940-இல் "மலாயா சரித்திரம்"; 1941-இல் "மலாயா தேசிய சரித்திரக் காட்சிகள்"; 1950-இல் "கண்ணன் சரித்திரம்"; 1952-இல் "நமது சமய விளக்கம்"; 1953-இல் "உயர்ந்தோர் உலகு"

1940 முதல் திராவிடர் கழக சீர்திருத்தப் பிரச்சாரங்கள் பற்றிய நூல்கள் எழுதப்பட்டன. எடுத்துக்காட்டாக 1939-இல் "பெரியார் ஈ.வே.ரா." (சீ.வி.குப்புசாமி); 1955-இல் "வரலாற்றில் தமிழகம்" (கா.ப.சாமி) கியவை. 1935-இல் அ.சி.சுப்பையா "சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" என்னும் அரிய கற்பனை நூலை எழுதினார். பரமசிவன், சுந்தர மூர்த்தி நாயனாருக்குச் செய்தது துரோகம் என்னும் தொனியில் நீதிமன்ற வழக்காக அவர் எழுதியது புராணக் கதைகளைக் கேலி செய்யும் திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் அடிப்படையிலேயே ஆகும். :angry: :angry: :angry: :angry:

தமிழ் முரசு தந்த ஊக்கம்:

சிங்கப்பூரில் கோ. சாரங்கபாணி சிரியராக இருந்து நடத்திய தமிழ் முரசு நாளிதழில் எல்லாவித இலக்கிய வடிவங்களையும் ஊக்குவிக்கவேண்டும் என்று 1952-இல் நடத்தப்பட்ட எழுத்தாளர் பேரவை, கட்டுரைகளையும் ஊக்குவித்துப் பயிற்சியும் அளித்தது. தரக்கட்டுப்பாட்டிற்கு எந்த அளவிற்கு, அந்தக் காலத்திலேயே, எழுத்தாளர் பேரவை முக்கியத்துவம் கொடுத்தது என்பது கவனிக்கத் தக்கது.

எந்த ஒரு படைப்பும் உறுப்பினரான இரணடு எழுத்தாளர்களுக்கு அனுப்பப்பெற்றுத் திருத்தம் பெற்ற பின்னரே அச்சில் ஏறமுடியும். மற்றுமொரு விதி, பேரவையில் உறுப்பியம் பெற்றவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பை ஒப்படைக்க வேண்டும். இது, எழுத்தாளர்களைத் தொடர்ச்சி குன்றாமல் வளர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சி.

தாளிகைகளில், அறிவுபூர்வமான சிந்தனைகளையும், எழுத்தாற்றலையும் வளர்ப்பதற்கு, வேண்டுமென்றே முடுக்கிவிடப்பட்ட சில சர்ச்சைகள் கட்டுரைத் துறையை வளர்த்தன. பேரவையை முன்னின்று நடத்திய சுப.நாராயணன் (கந்தசாமி வாத்தியார்) "அண்ணா அறிஞரா?" என்ற கேள்வியை எழுப்பினார். அண்ணாவின் எழுத்தில் தணியாத வல் கொண்டிருந்த பலரை இந்தக் கேள்வி வேசம் கொள்ளச் செய்தது. அண்ணா அறிஞர்தான் என்று பல சான்றுகளுடன் பலர் எழுதினார்கள். அடுத்து, "திருக்குறள் அபத்தக் களஞ்சியம்" எனும் கட்டுரைத் தொடரை சுப. நாரயணனே எழுதி தமிழ் முரசில் வெளியிட்டார். இதற்குப் பதிலாக "திருக்குறள் அறிவுக் களஞ்சியம்" என்ற பதில் கட்டுரையை தி.சு.சண்முகம் எழுதினார்.

புதுமைப் பித்தன் கதைகள் பாசமானவை எனும் பொதுக் கருத்தை தீவிரமாக எதிர்த்து, சுப.நாராயணனும் மா.செ. மாயதேவனும், அவை விரசமற்றவை எனும் ய்வுக் கட்டுரைகளைத், தக்க சான்றுகளுடன் எழுதி "இலக்கியத்தில் புதுமைப் பித்தன்" எனும் நூலை 61-இல் வெளியிட்டனர்.

சுதந்திர மலேசியாவில் (1957-க்குப் பின்னர்) மலாயா சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) புதிய நாட்டில் தங்கள் மொழி, பண்பாடுகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்னும் மனநிலையும், பொருளாதாரத்தில் எழுச்சி பெற வேண்டும் என்ற மனநிலையும் உயர்ந்து இருந்தது. தமிழர் எழுச்சிக்காக கோ.சாரங்கபாணி தமிழர் திருநாள் இயக்கத்தைத் தொடங்கியதும் இந்த காலகட்டத்திலேயே ஆகும். இந்த உணர்வுகளைக் குறிக்கும் கட்டுரை நூல்கள் பல சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

மா.செ. மாயதேவன் இலக்கியம் சமுதாயம் இரண்டிலும் தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவர். 1958-இல் "தமிழர் நாகரிகமும் கலையும்" என்னும் நூல் ஒன்றினை அவர் பதிப்பித்தார். 1968-இல் "மலேசியாவில் தமிழர்கள்" என்னும் நூலையும் எழுதினார். இவரே தமிழ்ப் புத்திலக்கியத் தொண்டாக புதுமைப்பித்தன் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தி அக்கருத்தரங்கக் கட்டுரைகளை 1961-இல் பதிப்பித்தார். இதனைத் தொடர்ந்து மலேசிய எழுத்தாளரான மா. இராமையாவின் எழுத்துக்களைப் பாராட்டும் முகமான விழா ஒன்றையும் நடத்தி அந்தக் கட்டுரைகளை 1975-இல் "மா.இராமையாவின் இலக்கியப் பணி" என்ற தலைப்பில் வெளியிட்டார்.

கா.கலியபெருமாள் நீண்ட காலம் தமிழாசிரியராக தமிழுணர்வோடு ஏராளமான கட்டுரைகளை எழுதினார். 1965-இல் "மலேசியாவில் தமிழர் திருநாள்" என்னும் ஒரு நூலை எழுதினார். இவர் மலேசியத் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாட நூல்கள் பலவற்றையும் நிறையத் துணை நூல்களையும் எழுதியுள்ளார்.

ஐம்பது முதல் எழுபதுகள் வரை இலக்கிய விளக்க நூல்கள்:

எல்லாக் காலங்களிலும் இலக்கியம் கற்ற அறிஞர்கள் தொடர்ந்து இலக்கிய நூல்களைப் படைத்து வந்திருக்கிறார்கள். இவர்களுள் முக்கியமானவர் ரெ.இராமசாமி. யாப்பிலக்கணம் நன்கறிந்த புலவரான இவர், வானொலியில் தொடர்ந்து இலக்கிய உரைகள் ற்றியதுடன் நூல்களும் வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களில் குறிப்பிடத்தக்கன: 1967-இல் "பாரதியின் காதலி"; 1976-இல் "கம்பரின் காவிய ஓவியம்" கியவை.

மலேசியாவில் பணி புரிவதற்காக தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த சில அறிஞர்களும் இலக்கிய நூல்கள் படைத்து இங்கு பதிப்பித்துள்ளார்கள். சில எடுத்துக்காட்டுக்கள்: ஈ.ச.விசுவநாதன், "வான் கலந்த மாணிக்கவாசகம்", 1964; கா.பொ.இரத்தினம், "கல்கியின் இலக்கியத் திறன்", 1964; ப.அருணாசலம், "கவியரசர் பாரதி" 1966; சா.அமீது, "சிந்தைக்கினிய சிலம்பு", 1962.

இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட சில பிரயாண நூல்கள்: ஏ.சண்முகம், "போபாலில் கபி கபி", 1978; வே.விவேகானந்தன், "அஜந்தா அழைக்கிறது", 1979.

1980 - 2000-களில் மலேசியத் தமிழ்க் கட்டுரை நூல்கள்:

80-களில் அச்சுத் தொழிலின் முன்னேற்றமும் படிப்போர் தொகைப் பெருக்கமும் நூல்களின் பதிப்பை இலகுவானதாக கியதால் மேலும் நூல்கள் பல்கிப் பெருகுவதாயின. நூல்களின் கருப்பொருள்களும் பல்வேறாகின.

சமய ஆன்மீக நூல்கள்.

பொதுவாக சமயம் ஆன்மீகம் தொடர்பான நூல்களே அதிகம் வெளிவந்துள்ளன. சித.இராமசாமி பல நூல்கள் எழுதினார். 1985-இல் அவரின் "தேவாரத் தேன்", "ஆன்மீகச் சிந்தனைகள்" ஆகியவையும் 1989-இல் "இந்து சமயம்-ஒரு கண்ணோட்டம்" என்ற நூலும் வெளிவந்தன. எஸ்.ர்.எம். பழனியப்பன் 1995-இல் "நகரத்தாரின் குல தெய்வங்கள்" மற்றும் 1996-இல் "பருவநாள் விழாக்களும் பலன் தரும் விரதங்களும்" எழுதினார்.

இவற்றுக்கு எதிராக சமய / சடங்கு மறுப்புக் கொள்கை நூல்களும் வெளிவந்தன. நாரண திருவிடச்செல்வன் 1991-இல் "அலகுக் காவடி. தீமிதி: அருளா அறிவியலா?" என்னும் நூலை எழுதினார். குறள் நெறி போற்றூம் நூலாக சி.மணிக்குமரன் 1996-இல் "வள்ளுவர் சொல்லே வேதம்" என்னும் நூல் எழுதினார்.

ஒரு கிறிஸ்த்துவ சமய போதகரும் சமுதாயச் சிந்தனையாளருமான வே.தேவராஜுலு இக்காலகட்டத்தில் பல நூல்கள் வெளியிட்டார்: "உறவாடும் உண்மைகள்", "புதிய வாழ்க்கை", "நீதியின் பாதையில்", "இன்று புதிதாய்ப் பிறந்தோம்", "அருட்சுவைக் கதைகள்" கியவை அவற்றுள் சில.

2000-ம் ஆண்டுகளிலும் சமய நூல்கள் பல வந்தன. எஸ்.ஓ.கே. உபயதுல்லா 2002-இல் "இஸ்லாம்" என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்துவ சமய போதகரான மு.இராஜன் 2002-இல் "இயேசு செய்த அற்புதங்கள்", மற்றும் "கவிஞர் கண்ட இயேசு", "குமரிக் கண்ட நாகரிகமும் விவிலியமும்" என்னும் நூல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு, அனுபவங்கள் முதலியன 1980 முதல் இன்று வரையான கால கட்டத்தில் மலேசியாவில் வாழ்ந்த முக்கிய சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் நூல்களாகியுள்ளன. தமிழ்ச் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைவரை அறிமுகப்படுத்தும் நூலாக 1980-இல் மு.திருவேங்கடம் எழுதிய "கோ.சாரங்கபாணி" வெளிவந்தது. 1994-இல் தமிழ் அமைச்சர் சாமிவேலு பற்றிய "நாயகன் கண்ட சாமிவேலு" என்னும் நூலை மலர்விழி குணசீலன் எழுதினார். அதைத் தொடர்ந்து அதே ண்டில் இந்திராணி சாமிவேலு பற்றிய "மகளிர் மாமணிக்கு ஓர் மகுடம்" என்ற நூலை கலாராமு வெளியிட்டார். 1996-இல் மற்றொரு அரசியல் தலைவர் குறித்து "ம.இ.கா.வில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம்" என்னும் நூலை கு.சோணைமுத்து எழுதினார். 1998-இல் "ஜான் திவி முதல் சாமிவேலு வரை" என்னும் அரசியல் வரலாற்று நூலை ப.சந்திரகாந்தம் எழுதினார். இதே சிரியர் 1999-இல் "சாதனைப் படிகளில் சாமிவேலு" என்னும் நூலையும் மற்றும் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி சோமசுந்தரம் குறித்து "கூட்டுறவுக் காவலர்" என்னும் நூலையும் எழுதினார்.

தமிழ்ப் பத்திரிகைத் துறையில் நீண்டநாள் அனுபவம் உள்ள எம்.துரைராஜ் தமது அனுபவங்களைத் திரட்டி 2001-இல் "பாதைகள் பயணங்கள்" என்னும் நூலை வெளியிட்டார். 2003-இல் மேலும் ஒரு மலேசிய இந்தியர் காங்கிரஸ் பிரமுகர், சு. சுப்பிரமணியம், "மனதில் வரைந்த மனிதர்கள்" என்னும் நூலை எழுதினார். பத்திரிகைத் துறை அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட இன்னொரு பத்திரிக்கையாளர் வீ.செல்வராஜ். "சில உண்மைகள்", "ஒரு வித்தியாசமான பார்வை", "ஒரு பத்திரிக்கையாளனின் பார்வையில்" முதலியன அவரது நூல்கள்.

இந்தக் காலகட்டத்தில் அமைச்சர் ச.சாமிவேலு குறித்த வேறு சில நூல்களும், மறைந்த வீ.தி.சம்பந்தன் குறித்த சில நூல்களும், மறைந்த மலேசியப் பிரதமர் குறித்த ஒரு நூலும் வெளிவந்துள்ளன. கடைசி இரண்டு தலைப்புக்களில் உள்ள நூல்களை பூ.அருணாசலம் எழுதினார்.

தமிழ் மொழி, இனம் பற்றிய நூல்கள்

கா.கலியபெருமாள் அதிகம் நூல்கள் எழுதியுள்ள நல்ல தமிழ்ச் சிந்தனையாளர். அவர் எழுதிய முக்கிய நூல்கள்: 1983-இல்"செந்தமிழர் சிந்தனைகள்"; 1985-இல் "உலகத் தமிழர்"; 1993-இல் "தமிழர்கள் சிந்திக்கிறார்களா?"; 2004-இல் "வளர்தமிழ்ச் சிந்தனைகள்". தமிழர்களிடையே காணப்படும் திருமணம் மற்றும் இறப்பு பற்றிய சடங்குகளை நெறிப்படுத்தும் இரண்டு முக்கிய கையேடுகளையும் அவர் எழுதியுள்ளார். "தமிழர் திருமண முறைகள்", "நீத்தார்கடன் நெறிமுறைகள்' என்னும் தலைப்புக்களில் அவை வெளிவந்துள்ளன.

இவருடைய பதிப்பு முயற்சிகளின் சிகரமாக 1997-இல் "தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியம்" என்னும் 1102 பக்கங்கள் கொண்ட பெருநூலைத் தொகுத்து வெளியிட்டார். தமிழ்நாடு, மலேசியாவில் உள்ள பல தமிழறிஞர்கள் இதில் கட்டுரைகள் வழங்கியுள்ளார்கள்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த இர.ந.வீரப்பன், 1992-இல் "இலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வரலாறு" என்னும் நூலை எழுதினார். தமிழர்கள் குழந்தைகளுக்குத் தமிழில்தான் பெயரிடவேண்டும் என்பதை வலியுறுத்தி 1980-இல் நாரண திருவிடச்செல்வன் "தமிழில் பெயரிடுவோம்" என்னும் நூலை எழுதினார். இது பல பதிப்புக்கள் கண்டிருக்கிறது.

தமிழின் பயன்பாட்டுச் சிதைவை எடுத்துக் காட்டும் நூலாக இரா.முருகனார் 1984-இல் "நசிவுறும் நற்றமிழ்" எழுதினார். தமிழாராய்ச்சி மாநாடுகளில் தாம் கலந்து கொண்ட அனுபவங்களைப் பத்திரிக்கையாளரான வே.விவேகானந்தன் 1993-இல் "உலகம் கண்ட தமிழ்" என்னும் தலைப்பில் எழுதினார்.

தமிழ் இலக்கியம், கலைகள் சார்ந்த கட்டுரை நூல்கள்

பொதுவாகத் தமிழ் இலக்கியத்தையும் மலேசிய இலக்கியங்களையும் போற்றும் நூல்களும் காலம் தோறும் தோன்றியவாறே உள்ளன. 1998-இல் சி.அன்பானந்தம் "கண்ணதாசனின் காவியக் கனிகள்" என்னும் நூலை வெளியிட்டார். 1990-இல் கா.கலியபெருமாளின் "கவிதை இன்பம்" வெளிவந்தது. 1991-இல் இலக்குமி மீனாட்சி சுந்தரத்தின் "இலக்கிய அரும்புகள்" வெளி வந்தது. சிங்கப்பூர் மலேசியக் கவிஞர் பற்றி 1992-இல் இர.ந.வீரப்பன் "மலேசியப் பாவரசு ஐ.உலகநாதன்" என்னும் நூல் எழுதினார்.

பழம்பெரும் எழுத்தாளரான மா.இராமையா 1996-இல் "மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்" என்னும் அரிய வரலாற்று நூலை எழுதினார். தாம் ஏற்கனவே 1978-இல் எழுதிய "மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு" என்னும் நூலை விரிவாக்கம் செய்து எழுதிய நூல் இது. புத்திலக்கிய ய்வாளரான வே.சபாபதி 1995-இல் "விடுதலைக்குப் பிந்திய தமிழ் நாவல்கள்" நூலையும் தொடர்ந்து 1996-இல் "விடுதலைக்கு முந்திய தமிழ் நாவல்கள்" நூலையும் வெளியிட்டார். மலேசியாவில் இதுகாறும் வெளியான கவிதைகளைத் தொகுத்து அவற்றிற்கு ஒரு நெடிய ஆய்வு முன்னுரையும் எழுதி 1998-இல் முரசு நெடுமாறன் "மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்" என்னும் நூலை வெளியிட்டார். மேற்கண்ட நான்கு நூல்களும் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான நூல்களாக அமைந்தன.

இந்தக் கால கட்டத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு நோக்கில் காணும் நூல்கள் பல பதிப்பிக்கப்பட்டன. அவற்றுள் 2001-இல் சை.பீர்முகமது தொகுத்தளித்த "மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்" என்ற நூலும், 2004-இல் ரெ.கார்த்திகேசு எழுதிய "விமர்சன முகம்" என்னும் நூலும் முக்கியமானவை ஆகும்.

மலேசியாவில் மேடை நாடகங்கள் பற்றி பல நூல்கள் வெளி வந்துள்ளன. 1987-இல் அ.மணிசேகரன் "மலேசியாவில் மேடை நாடகங்கள்" என்னும் நூலை எழுதி அந்த வரலாற்றை வணப் படுத்தினார். 1994-இல் மேடை நாடகக் கலைஞர் ஆர்.பி.எஸ்.மணியம் "மலேசியத் தமிழ் நாடகங்கள்" எழுதினார். ரெ.சண்முகம் என்னும் இசை, மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர் 1997-இல் "இந்த மேடையில் சில நாடகங்கள்" என்னும் தலைப்பில் தம் மேடை நாடக அனுபவங்களை எழுதியுள்ளார்.

சமுதாயச் சிந்தனை நூல்கள்:

பொதுவாக உலகச் சமுதாயத்தையும் மலேசிய இந்திய சமுதாயத்தையும் பற்றிச் சிந்திக்கும் நூல்கள் பல வெளி வந்துள்ளன. மலேசிய நண்பன் என்னும் நாளிதழின் ஆசிரியராக இருந்த சிறந்த சமுதாயச் சிந்தனையாளர் தி.குமணன் அப்பத்திரிக்கையில் வந்த தமது கருத்துக் கட்டுரைகளைத் தொகுத்து 1984-இல் "பார்வைகள்" என்னும் நூலாக்கினார். அதே பத்திரிகையில் துணையாசிரியராக இருந்த கவிஞர் பாதாசன் தமது கட்டுரைகளை 1996-இல் "ஞாயிறு களம்" என்னும் தலைப்பில் வெளியிட்டார்.

பினாங்கிலிருந்து செயல் படும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உலகப் புகழ் பெற்றதாகும். அதிலிருந்து பல சமுதாய நல நூல்கள் வெளி வந்துள்ளன. பி.ப.சங்கத்தின் தலைவர் முகமது இத்ரிசின் கட்டுரைகளின் தொகுப்பாக "சுகங்களும் சுமைகளும்" 1990-இலும் "சுவடுகள் மறைந்தால்" 2004-யிலும் வெளி வந்தன. அதே

நிறுவனத்திலிருந்து 2004-இல் எம்.துரைராஜின் "நினைக்கத் தெரிந்த மனமே" என்னும் நூலும் சுவாமி பிரம்மானந்தாவின் "மனமே சுகமே" என்னும் நூலும் வெளிவந்தன. மலேசியாவில் இந்திய சமுக்கத்தினரிடையே பெருகிவரும் சமுதாயச் சீர்கேடுகளை ராய்ந்து 1999-இல் கே.ஏ.குணா எழுதிய "சமுதாயச் சீர்கேட்டிற்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வுகளும்" என்னும் நூல் வெளிவந்தது. சமுதாயச் சீர்கேடுகளை ராயும் இன்னொரு நூல் நா.அர்ஜுனன் 1995-இல் எழுதிய "சமுதாய மலர்கள்". அதே ஆண்டில் ப. சந்திரகாந்தம் "மலேசிய இந்தியர்களின் சமூக வாழ்க்கைப் போராட்டங்கள்" எழுதினார்.

தோட்டத் தொழிலாளர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) பற்றிய பல நூல்கள் வந்திருக்கின்றன. சமுதாய ய்வாளரான மு.வரதராசு மலேசிய தோட்டச் சமுதாயம் பற்றிய தீவிர உணர்வுள்ள பல நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் "மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறும் பிரச்சினைகளும்", "மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் தொடரும் பிரச்சினைகள்" கியவை முக்கியமானவையாகும்.

மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு பற்றிய முக்கியமான ஆய்வு நூல் 1999-இல் பி.ராமசாமி எழுதிய "மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வும் போராட்டமும்" என்னும் நூல்.

தன்முனைப்பை ஊட்டும் நூல்களாகப் பல வந்துள்ளன. 1991-இல் சித.இராமசாமி "வாழ்வு நமதே", "எண்ணம் போல் வாழ்க்கை" என்னும் இரு நூல்களையும், சுப்பிரமணியம் சுப்பையா "உனக்குள் இருக்கும் உன்னை நம்பு" என்னும் நூலையும் வெளியிட்டார்கள். தன்முனைப்புப் பயிற்சியாளரான ரெ.கோ.ராசு எழுதிய நூல்களில் 1998-இல் வெளிவந்த "எல்லோரும் முன்னேறுவோம்", "உங்களால் முடியும்", "வெற்றிப் பாதையில்" என்னும் நூல்கள் முக்கியமானவை. 2004-இல் மு.கணேசன் "மனமே விழித்திடு" வெளியிட்டார். இந்த கால கட்டத்தில் காதர் இப்ராஹிம் போன்ற தன்முனைப்புப் பயிற்சியாளர்கள் பல நூல்கள் வெளியிட்டுள்ளனர்.

பிரயாணக் கட்டுரைகள்:

90-களில் வந்த பிரயாணக் கட்டுரை நூல்களில் சை.பீர் முகமதுவின் இரு நூல்கள் மிக முக்கியமானவை. அவருடைய ஸ்த்திரேலிய பிரயாண அனுபவங்களைத் தொகுத்து 1997-இல் "கைதிகள் கண்ட கண்டம்" என்னும் நூலை எழுதினார். இதைத் தொடர்ந்து தமது இந்தியப் பயணத்தை அடிப்படையாக வைத்து 1998-இல் "மண்ணும் மனிதர்களும்" என்னும் நூலை எழுதினார். இந்நூல் தமிழ் நாட்டிலும் பரவலாக அறிமுகம் பெற்றுப் பாராட்டுக்களும் பெற்றது.

இணையத் தமிழ் இலக்கியம்

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் இணைய இலக்கியமும் இடம் பெறத் தொடங்கியிருக்கிறது. மலேசியாவில் இருந்து இயங்கும் வலைத்தளங்களில் முக்கியமானது டாக்டர் சி.ஜெயபாரதி நடத்திவரும் "அகத்தியர்" தளமாகும். தமிழ் மொழி, கலாசாரம், தொன்மம், வரலாறு ஆகிய பலபொருள்களில் அவர் இணையத்தில் எழுதியுள்ள கட்டுரைகள் "இணையத்தில் ஜெய்பி" (2001) என்னும் தலைப்பிலும் "நாடி ஜோதிடம்" (2002) என்னும் தலைப்பிலும் நூல்களாக வெளிவந்துள்ளன.

முடிவுரை

மலேசியாவில் தமிழ் இதழ்கள் இருக்கும்வரை எல்லாவிதச் சமுதாயக் கூறுகளையும் விவாதிக்கவும் விளக்கவும் தமிழ்க் கட்டுரைகள் மற்றும் கட்டுரை நூல்கள் தொடர்ந்து வெளிவரும் என்பதில் ஐயமில்லை. மற்ற இலக்கிய வடிவங்களை விடவும் கட்டுரைகளுக்கே வற்றாத கருப்பொருள்கள் இருந்து வரும்.

நன்றி: தமிழோவியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://singaimurasu.blogspot.com/

மலேசியாவின் நுனியில் உள்ள சிங்கப்பூர் வலைப்பதிவாளர்கள்தொடுப்புக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட மலேசியத் தமிழ் நாவல்கள்

பகுதி 1

http://www.pudhucherry.com/pages/guna01.html

பகுதி 2

http://www.pudhucherry.com/pages/guna02.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.