Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதிப்பேச்சு பற்றி வள்ளுவர்

Featured Replies

இன்றைய அமைதிப்பேச்சுபற்றி அன்றே வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்....!

- அருள்மொழி

அந்தச்சிறுமியின் குரல் தந்தை பெரியாருக்குத் தேன்...!

தமிழின எதிரிகளுக்கு சம்மட்டி!

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அவர்இ அண்மையில் நடிகர் ரஜனிகாந்தை உச்சிமுடியில் பிடித்து உலுக்கியதை பலர் அறிந்திருப்பீர்கள். அவர்தான் அருள்மொழி. திராவிடர் கழக முதன்மை வழக்கறிஞர்களுள் ஒருவர். தடாஇ பொடா சட்டங்களுக்கு மனிதர்கள் பயப்படுவதுண்டு.

ஆனால் அந்தச் சட்டங்களை ஏவுபவர்கள் கூட இவரைக் கண்டஞ்சுவார்கள். தமிழின உணர்வாளரும் பெண்ணுரிமை வாதியுமான இவரை முழக்கம் இதழ் சார்பில் நேர்கண்டபோது..

ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் பெண்ணுரிமை பற்றித்தான் பேசிவருகின்றீர்களா?

நான் பேச ஆரம்பித்தது பெண் உரிமை பற்றி அல்ல. கடவுள் மறுப்பு பற்றி. நான் மூன்று வயது முதலே பாரதி தாசனின் கவிதைவரிகளை மனப்பாடம் செய்து மேடைகளில் பெரியார் முன்னிலையில் ஒப்பித்துவந்தேன்.

பின்னர் கடவுள் மறுப்புஇ சாதி மறுப்பு சமூக சீர்திருத்தம் இவைகள் பற்றிப் பேசி வளர்ந்து வரும்போதுஇ இந்த அடிமைகளுக்குள்ளும் ஒரு அடிமை உண்டு. ஆகையால் அடிமைத்தனம் பற்றிப்பேசுகின்றோம் என்றால் எல்லா அடிமைகளைப் பற்றியும் பேச வேண்டும். யார் ஒடுக்கப்படுகின் றார்களோ அவர்களுக்காக எல்லாம் குரல் கொடுக்கவேண்டும் என்ற வளர்ச்சிதான் பெண்ணுரிமை பற்றிப் பேசுதல் என்பேன்.

வழக்குகளில் பெண்களுக்காக வாதாடும் வாய்ப்புதான் உங்களின் இந்த வளர்ச்சிக்குக் காரணமா?

நான் வழக்கறிஞரானது 22 வயதிற்குப் பின்னர். அதற்கு முன்னரேயே நான் ஓரளவு அறிமுகமான பேச்சாளர். வழக்கறிஞர் தொழில் பல பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பவை பற்றி புரிந்துகொள்ள வாய்ப்பு தந்தது.

சந்திரிகாவும் ஒரு பெண்தான் ஜெயலலிதாவும் ஒருபெண்தான். பெண்களின் கையில் ஆட்சி பொறுப்பு கிடைக்கும்போது இப்படித்தான் ஆகிவிடுமோ? (சிரிப்போடு..)

ஜெயவர்த்தனாவும் ஆண்தான். ராஜீவ் காந்தியும் ஆண்தான். அவர்கள் தப்பு பண்ணும்போது ஆண்களின் தவறு என்றா பார்த்தீர்;கள்? தமிழ்நாட்டில் பட்டுகட்டுகின்ற சாதியில் பிறந்து தேவதாசி முறையை ஒழிக்கப் போராடி வெற்றிபெற்றவர் முத்துலச்சுமி ரெட்டியார். அவரும் பெண்தான். தமிழ்நாட்டில் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர்இ அவ்வை இல்லத்தை நிறுவியவர் எல்லாம் பெண்கள். அந்தப் பெண்க ளைப் பற்றிப் பேசாமல் தவறுசெய்யும் பெண்களைப் பற்றித்தான் பேசவேண்டுமா...?

அரசிடம் இருந்து பணஉதவி மற்றும் சலுகைகளுக்காக பெண்கள்

விவாகரத்து பெற்று உறவை உடைத்துக் கொள்கின்றார்கள் என்ற கருத்துக்குப் பதில்?

கனடா நல்ல நாடுஇ நன்றாக காசு உழைக்கலாம் என்றா கனடா வந்தீர்கள்? ஈழத்தில் இருக்க முடியாத பிரச்சனை இருந்ததால்தானே இங்கு வந்தீர்கள்? ஒரு குடும்பத்துக் குள் வாழமுடியாத சூழலில் இருக்கும் பெண்தான் வெளியில் வருவார். ஒருவருக்கு யாரும் விடுதலை கொடுக்கத்தேவையில்லை. தனக்கு எது விடுதலை என்பதை அவர்தான் தீர்மானிக்கவேண்டும். எது மறுக்கப்படுகின்றதோ அதைக் கேட்பதுதான் உரிமை.

பெண்ணை நாங்கள் அம்மாவாக உரிமைகொடுத்து உச்சத்தில் வைத்திருக்கும்போது சம உரிமை கோரி கீழ் இறங்கலாமா என்கிறார்களே சிலர்?

கொடுப்பது என்று வந்துவிட்டாலே அவர் வள்ளல் ஆகிவிடுகிறார். யார்கொடுப்பார்கள் அரசு கொடுப்பார்கள.; அரசு நிறுவனங்கள் கொடுக்கும்... கொடுக்கும் இடத்தில் உள்ளவர் அதிகாரம் உடையவர். அதைத்தான் அது நிலைப்படுத்துகிறது.

திருக்குறள் தமிழர்களின் மறை. அது தமிழர்களின் நீதி நூல். திருக்குறளை விமர்சித்தால் திராவிடக்கருத்து அடிபட்டுபோகாதா...?

எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதற்குப் பயந்தால் கருத்துகள் சொல்லமுடியாது. திருக்குறள் எந்தக்காலத்திலோ எந்த மக்கள் வாழ்க்கை முறையிலோ எழுதப்பட்டது. அதை இப்போ ஏன் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள். விமர்சனம் என்பது ஒன்றை நிராகரிப்பது அல்ல. |உயர்ந்த சிந்தனைஇ நினைத்ததை அடைதல்இ நிர்வாகம்இ ஆளுமைஇ.. இவையெல்லாம் அமெரிக்காவில் விற்பனையாகும் நூல்கள். திருக்குறளில் இல்லாதது இவற்றில் ஏதாவது உண்டா...? உயரமாக நினைஇ உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்... எண்ணிய எண்ணியாங்கு எண்ணுவர்... இப்படியாகத் திருக்குறளில் இல்லாது மேற்படி புத்தகங்களில் என்ன உள்ளது? இதெல்லாம் திருக்குறளில் இருக்கு இவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பெண்ணுரிமை என்று வந்தால் உண்மையான விமர்சனத்தை வைத்துத்தானே ஆகவேண்டும்.

இன்றைக்கு அமைதிப்பேச்சுவார்த்தை நடப்பின் அது எப்படி நடக்கவேண்டும் என்றுகூட வள்ளுவர் அன்றே சொல்லியிருக்கின்றார். எதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அளவுக்கு அதிகமான பணிவு வந்தால் சந்தேகப்படு என்று வள்ளுவர் கூறியுள்ளார். சொல்வழக்கம் எண்ணாக்கும் கொள்ளற்க... வில் வளைக்கும் தீங்கு குறித்தமையால்.

வில் எவ்வளவு ஆழமாக வளைகின்றதோ அதற்கு அது அழகாக வளைகின்றது என்று பொருள் அல்ல. அது அவ்வளவுக்குப் பணிகிறது என்று பொருள் அல்ல. அவ்வளவு ஆழமாக குறிவைக்கின்றது என்பதுதான் பொருள். அந்தமாதிரி எதிரியின் பணிவு மிக அதிகமாக இருக்கும்போது அதை நம்பாதே என்கிறார் வள்ளுவர். இதெல்லாம் எங்கள் காலத்திற்கு பொருத்தமானது. இதைச் சொல்லுங்கள். நீங்கள் காலத்திற்குப் பொருந்தாத உதாரணங்களை சொல்லும்போது நாங்கள் அதனை நிராகரிக்கவேண்டி உள்ளது.

திருக்குறளைப்போல அறிவால் வாழ்வியலை சொன்ன உயர்வான நூல் உலகில் வேறேதும் இல்லை.

திருக்குறளில் இருக்கும் பெண் அடிமை சம்பந்தமானவை விட்டுவிட்டு மற்றையவற்றை ஏற்கலாம் என்கின்றீர்கள். ஆனால் கம்பராமா யணம்இ பெரியபுராணம் போன்றவற்றை எரிக்கவேண்டும் என்று சொல்கின் றீர்கள். இவற்றில் இருக்கும் நல்ல விடயங்களை எடுக்கலாம் அல்லவா...?

இல்லை. திருக்குறளில் சொல்லப்படுவது முழுக்க முழுக்க அறவுரை. அதில் இனம் இல்லை. வேதம் இல்லை. பெரியபுராணமும் கம்பராமாயணமும் முழுக்க முழுக்க தமிழர்கள் மீது பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்தியதுதான் கதை. இரண்டு கதைகளிலும் அசுரர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் யார் என்று பார்த்தீர்;களானால் அவர்கள் திராவிடர்கள். இதில் இராவணன்இ அதில் பத்மாசுரன். அதுமட்டுமல்ல அந்த வரைபடத்திலேயே தமிழ் நாட்டுத் தமிழர்கள் குரங்குகள். இலங்கைக்குப் போனால் அரக்கர்கள். எதிர்த்து நின்றவர்கள் அரக்கர்கள். ஆதரித்தும் பிளவுபட்டும் நின்றவர்கள் குரங்குகள்.

அவர்கள்தான் மனிதர்கள். அவர்கள் ஒழுக்கமானவர்கள். அறுபதாயிரம் மனைவியை வைத்திருந்தாலும் ஒழுக்கமானவர்கள். திராவிடர்கள் யார் என்று அந்தக்கதையில் பார்த்தால் அடுத்தவன் மனைவியைத் தூக்கிட்டு வருபவர்கள். இவர்களை வென்ற

கதைதான் கம்பராமாயணம். கம்பன் அருமையான சொல்லாட்சிமிக்க தமிழுக்கு சொந்தக்காரன். சொல்லாட்சி மிக்க கவிஞன் இனத்திற்கு எதிரான ஒரு காவியத்தைபடைத்ததற்கு பதிலாக எவ்வளவோ அழகான காவியங் களை படைத்திருக்கலாமே. அதேமாதிரி பெரியபுராணம் வந்து சைவமய மானது. எங்களுடைய சிவனுடைய அவதாரங்களும் எளிய தமிழனுடைய வடிவில் வந்தது அல்ல. அந்தணர் வடிவில்தான் வருவார். எங்களுடைய ஆதி சைவம் என்பது சடாமுடி சூடிய சிவனுமல்லஇ ஞானப்பழத்திற்கு சண்டை போட்டது தமிழ் முருகனும் அல்ல. அதையெல்லாம் விட்டு இவற்றை ஆரியமயமாக்க உதவிய கதைகள்தான் இவை. அதனால்தான் அதைக் கொளுத்தவேண்டும் என்று சொல்கின்றோம்.

திருக்குறள் தமிழர்களுடைய அறநூல். குர்ஆனில் இருப்பவை எல்லாம் காலத்திற்குப் பொருந்தாது. ஆனால் அது அவர்களுக்கு அறநூல். திருக்குறளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை காலத்தை விஞ்சி நிற்பவை. அவை எக்காலத்திற்கும் பொருந்தும்

india

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.