Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை எழுப்பும் ஞான சார தேரரின் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை எழுப்பும் ஞான சார தேரரின் நியமனம்

 
”2019மே 23 அன்றுபிக்குவுக்கு  வழங்கப்பட்ட மன்னிப்பு, மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது , ஏனெனில் அது  “சட்டத்தின் முன் சமத்துவம்” மற்றும் “ஒவ்வொரு இலங்கையருக்கும் பொதுவான சட்டம்” என்றஅனைத்து சட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறியது ம்  நேரடியாக முரண்பட்டதுமாகும்.”

0000000000000000
பி.கே.பாலச்சந்திரன்
000000000

ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ச , “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்தீட்டை  நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கும், மதம், இனம் என்ற பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரே சட்டத்தை கொண்டு வருவதற்குமான  சட்ட வரைவை தயாரிப்பதற்கு ஜனாதிபதி செயலணிபிரிவை புதன்கிழமை நியமித்துள்ளார். .
9b3d3c0f-cc842846-872d59eb-efb34cf8-fa75

அனைவரையும் ஒரே மாதிரியான சட்டங்களுக்குக் கீழ்ப்படியச் செய்யும் நகர்வு  பாராட்டத்தக்கது. “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்து நவீன ஜனநாயகத்தின் அடையாளமாகும். ஆனால்முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரமானபோக்குடையவரான   பவுத்தத்துறவியான , வண. கலகொட அத்தே ஞானசார தேரர், செயலணிபிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டமை, அந்தப்பிரிவானது  சமூகங்கள், மற்றும் அவற்றின் தனித்துவமான கலாசாரங்கள் ,உணர்வுகளுக்கு மதிப்பளித்து,  சமன் செய்து, அனைவருக்கும் நீதியை வழங்குமா என்று இலங்கையில் உள்ள  தாராளவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைஆச்சரியப்பட வைத்துள்ளது.

வண.ஞானசார தேரரைத் தவிர ,ஜனாதிபதி செயலணிப்பிரிவில்  பேராசிரியர் தயானந்த பண்டா, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேதா சிறிவர்தன, என்.ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஸ் செனவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மார ம்பே, எரந்த நவரத்ன, பாணி வெவல, காலி உலமா சபையின் மௌலவி மொஹமட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கலீல் ரகுமான் மற்றும் அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..

ஜனாதிபதி  செயலணிப்பிரிவுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள பணிகள்:
(1) “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி அனைவருக்கும் நியாயமான” சட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயற் படுத்துதல்.
(2) எந்தவொரு பிரஜையும்  சட்டத்தின் பார்வையில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்பதையும், தேசியம், மதம், சாதி அல்லது வேறு எந்தக் கருத்தில் யாருக்கும் எந்த சிறப்பும் வழங்கப்படுவதில்லை என்பதையும் உறுதிசெய்தல் .
(3) “ஒரு நாடு, ஒரு சட்டம்” கருத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான விழுமியங்களுக்கு அமைவாக  இருப்பதை உறுதி செய்தல்

இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டவரைவுகள்  மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து, அவற்றின் சரியான தன்மையை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கான பணி  ஜனாதிபதி செயலணி பிரிவுக்குவழங்கப்பட்டுள்ளது.

கவலைகள்
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உலகளாவிய ஏக்கத்தை பிரதிபலிக்கும் அதே வேளையில், இலங்கையின் அடிப்படை யதார்த்தத்தைப் பொறுத்தவரையில் அதிகளவுக்கு  கவலைகள் உள்ளன.
முதலாவதாக,ஜனாதிபதி செயலணிப்பிரிவில்  தமிழர்கள்  இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,ஜனாதிபதி  செயலணி ப்பிரிவில் இலங்கையின்  இரண்டாவது பெரிய இன மற்றும் மத சமூகத்தின் பிரதிநிதிகள் இல்லை. இரண்டாவதாக,முஸ்லி ம் தலைவர்கள்கடுமையாக  எதிர்க்கும்  முஸ்லி ம் காஜி நீதிமன்றங்களை தடை செய்வதற்கும், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை ஏற்கனவே முடிவு செய்துள்ளது. மூன்றாவதாக, சமூகம் சார்ந்த சட்டங்களை நீக்குவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் மனித உரிமை மீறலாகக் கருதப்படலாம்.

அரசாங்கத்தின் நடவடிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜிஎஸ்பி-பிளஸ் வரிச்சலுகையைவாபஸ்பெறகைகூடும்.  , இது விரைவில் மீளாய்வுக்கு வரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்   ஜிஎஸ்பி-பிளஸ் வரிச்சலுகையை திரும்பப் பெறுவது இலங்கையின் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதியை மோசமாக பாதிக்கும்அத்துடன் இலங்கையில் உழைக்கும் மக்களையும்  பாதிக்கும்.

வண.ஞானசார தேரரின் நியமனம்
Gnanasara-Thero-1-300x200.jpg
கடைசியாக,   மிக முக்கியமானது   ஜனாதிபதிசெயலணிப்பிரிவின்  தலைவராக பௌத்த அமைப்பான பொதுப் பல சேனாவின் பொதுச் செயலாளரும் அதிகளவுக்கு  முஸ்லிம் விரோதபோக்கை  கொண்ட  பௌத்த பிக்கு    வண .கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதாகும்.. வண.ஞானசார தேரர்  ஜனாதிபதிகோத்தாபய  ராஜபக்ச மற்றும் பிரதமர் மகி ந்த ராஜபக்சஆகியோருக்கு ஞானசார தேரர் மிகவும் நெருக்கமானவர். அத்துடன் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் நெருக்கமானவர். உண்மை எனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வண.ஞானசார தேரருக்கு ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

2019மே 23 அன்றுபிக்குவுக்கு  வழங்கப்பட்ட மன்னிப்பு, மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது , ஏனெனில் அது  “சட்டத்தின் முன் சமத்துவம்” மற்றும் “ஒவ்வொரு இலங்கையருக்கும் பொதுவான சட்டம்” என்றஅனைத்து சட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறியது ம்  நேரடியாக முரண்பட்டதுமாகும்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிக்கு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அவரது மேன் முறையீட்டு மனுவைஉயர் நீதிமன்றம் நிராகரித்தது.  நீதியின் தோல்வியை  சரிசெய்வதற்கே  ஜனாதிபதியின் பொது மன்னிப்பு இருப்பதாகமாற்றுக்கொள்கைகளுக்கானநிலையம்  அழு த்தியு ரைத்துள்ளது  . ஆனால்பிக்குவின் வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்  நீதிமன்றம் இரண்டும் அவரது மேன் முறையீட்டு மனுக்களை முறையாக நிராகரித்ததால், நீதி தவறவில்லை.
“எனவே, மன்னிப்பு என்பது சட்டரீ தியான  நடவடிக்கைகளில்  தேவையற்ற தலையீட்டிற்கு சமம்” என்று மாற்றுக்கொள்கைகளுக்கானநிலையம்  விடுத்துள்ளஅறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. “நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செயல்படுவது, முறையான நீதித்துறை செயல்முறை மூலம் தண்டிக்கப்படுவது, பின்னர் அரசியல்ரீதியான  பரீசீலனையின்பேரில்   வழங்கப்பட்ட மன்னிப்பின் மூலம் தண்டனையிலிருந்து விலக்கு பெறுவது சாத்தியம் என்ற பார்வையை மன்னிப்பு நியாயப்படுத்தியது.”என்று  அந்த அமைப்பு மேலும் தெரிவித்திருந்தது.

பௌத்த மதகுருமார்கள் போன்ற சில வகைபிரஜைகள் , சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்பார்க்கலாம் என்பதை இந்த மன்னிப்பு விசேடமாக  சமிக்கை செய்வதாகவும் அந்த  அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது .
வடமேற்கு இலங்கை முழுவதும் தீவிரவாத பௌத்த கும்பல் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டிவிட்டு, ஒரு முஸ்லீம் மனிதரின் மரணம் மற்றும் ஏராளமான முஸ்லீம் குடியிருப்புகள், வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு சேதம் விளைவித்த நேரத்தில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டதென  மாற்றுக்கொள்கைகளுக்கான  நிலையம் கூறியுள்ளது., . வண. ஞானசார தேரர் கடந்த காலத்தில் பொதுபல சேனாவின் செயலாளராக சிறுபான்மை சமூகங்கள் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பேச்சுக்களை பரப்புவதிலும் வன்முறையைத் தூண்டுவதிலும் “ஆவணப்படுத்தப்பட்ட பாத்திரத்தை” ஆற்றியிருந்தார்.
“இந்த மன்னிப்பு சிறுபான்மையினருக்கு எதிரான உணர்வின் கவலைக்குரிய ஒப்புதலைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் முஸ்லிம் இலங்கையர்களால் உணரப்படும் கவலை மற்றும் அச்சத்தை மட்டுமே உயர்த்த முடியும்” என்று CPA கூறியது.

2014 ஆம் ஆண்டு கொழும்பிற்கு தெற்கே அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்குவதற்கு வண.ஞானசார தேரர் கும்பல்களை தூண்டியிருந்தார். அதற்கு முன்னதாக பாதுகாப்புக் காரணங்களுக்காக பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகமூடி அணிவதை எதிர்த்து பிரச்சாரம் செய்த அவர், உணவுப் பொருட்களுக்கான ஹலால் சான்றிதழை ரத்து செய்யக் கோரியும் போராடினார்.

வண ..ஞானசார வுக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிய உறுதிப்பாடு உள்ளது .மற்றும் இலங்கை முஸ்லிம்கள்  சமூகத்தில்தீவிரவாதிகளைபொறுத்துக்கொள்கிறார்கள் என்ற கருத்தை பிரச்சாரம் செய்தார். 2021செப்டம்பர் 13அன்று அவர் ஹிரு தொலைக்காட்சியின் சலகு ண நிகழ்ச்சியின்போது , 2019 ஏப்ரல் 21 அன்று  260 க்கும் மேற்பட்டோர் பலியான உயிர்த்தஞாயிறு  குண்டுவெடிப்பைப் போன்ற மற்றொரு தாக்குதல் இடம்பெறக்கூடுமெனதெரிவித்திருந்தார். . மேலும் அவர் கூறுகையில், எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்க லாமமெனவும் ; சம்பந்தப்பட்ட குழுக்களை அவர் அறிந்திருந்தாரெனவும் ; மேலும் ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
இது கத்தோலிக்கர்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது. உயிர்த்த  ஞாயிறு தாக்குதல்களின் உண்மையை  கண்டறிதலில்  அரசாங்கத்தின் தாமதம் குறித்து கசப்புடன் புகார் தெரிவித்து வரும் கத்தோலிக்க திருச்சபை, உண்மையைஉறுதிப்படுத்த  அவசர விசாரணையை நடத்துமாறு கோரியி ருக்கிறது.

link – newsinasia
Appointment of militant monk to head task force on uniform laws raises human rights concerns
 

https://thinakkural.lk/article/146655

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.