Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் நீலச்சேனை மினிமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது.பத்துப்படையினர் பலி.நான்குக்கும் மேற்பட்ட படையினர் படுகாயம். ஆயுதங்கள் மீட்பு.4 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மினிமுகாம் மீது தாக்குதல் பத்துப்படையினர் பலி.

மன்னார் நீலச்சேனைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் சிறிலங்காப் படையினரின் மினிமுகாம் ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நான்குக்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் முழுவிபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை

- சங்கதி

Edited by கந்தப்பு

மகிந்த இதுகெல்லாம் கொண்டாடமாட்டாரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாக்குதலை புலிகளும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். 4 போராளிகள் வீரச்சாவு.இராணுவத்தில் 10 பேர் பலி. மினி முகாமில் இருந்த அனைத்து ஆயூதங்களும் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Liberation Tigers launched a pre-dawn raid Friday on a Sri Lanka Army (SLA) minicamp at Neelachcheanai in Mannar, killing 10 SLA soldiers and seizing all the weapons from the camp, located near Uyilangku'lam entry/exit point. Four LTTE fighters were killed in action. A Medium Machine Gun (MMG), a Light Machine Gun (LMG), a 60 mm mortar, four automatic rifles, 25 hand grenades and an ammunition cache were seized by the Tigers, according to LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan.

LTTE fighters returned to their positions after "succesfully neutralizing the threat posed by the hostile enemy camp from which infiltration units were operating," Mr. Ilanthiryan said.

The raid took place at 2:35 a.m.

-TamilNet

- - - - - - - -

சங்கதி இணையத்தளத்தில் வந்த மேலதிகச் செய்திகள்

மினிமுகாம் மீது தாக்குதல் பத்துப்படையினர் பலி. மன்னார் நிலாச்சேனைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் சிறிலங்காப் படையினரின் மினிமுகாம் ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவ் சிறிலங்கா படையினரின் மினி முகாம் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் பெருமளவு ஆயுததளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வருமாறு

இடைத்தர மிசின்கண் - 01

லைற் மிசின்கண் - 01

60 எம்.எம் மோட்டார் - 01

ரி-56 – 04

பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத் தாக்குதலின் போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

நான்கிற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தல்லாடி இராணுவ முகாமில் இருந்து வீசிய செல் தாக்குதல்களுக்கு ஒரு வயதுடைய சிறுவனினும் , 30 வயது தாயாரும் காயமடைந்துள்ளார்கள்.

One-year-old baby, mother wounded in SLA shelling in Mannaar

A mother and her one-year-old baby were wounded in artilery fire by the Sri Lanka Army from Tha'l'laadi SLA camp, Tamileelam Police officials in Liberation Tigers controlled territory in Mannaar said.

One-year-old Dusmithan Anisdan with injuries in his hands and his 30-year-old mother, Sagayamma Anisdan, wounded in throat, in indiscriminate artillery fire by the SLA around 5:30 a.m. towards civilan settlements in Aalangku'lam and Vaddakka'ndal in LTTE territory in Mannaar.

-TamilNet

மன்னார் நீலாசேனை மினிமுகாமை தாக்கியழித்தனர் புலிகள்: 10 இராணுவத்தினர் பலி.

மன்னார் நீலாசேனை சிறிலங்கா இராணுவ மினிமுகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 10 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

மன்னார் உயிலங்குளம் பகுதி நீலாச்சேனை சிறிலங்கா இராணுவ மினி முகாம் மீது விடுதலைப்லிகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் தாக்குதல் நடத்தினர்.

இதில் 10 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய இராணுவத்தினர் படுகாயமடைந்து தப்பியோடியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது ஆயுதங்களும் வெடிபொருட்களும் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன.

சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மினிமுகாம் அழிக்கப்பட்ட தாக்குதலில் போராளிகள் 4பேர் வீரச்சாவைத்தழுவியுள்ளனர்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jul 21 8:40:03 EEST 2007

மன்னாரில் படைமுகாம் மீது தாக்குதல் முறியடித்ததாக அரசு தரப்புத் தெரிவிப்பு சேதங்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

மன்னார் மாவட்டம், நீலச்சேனையில் உள்ள இராணுவ மினி முகாமை தாங்கள் அழித் தனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தாக்குதலைத் தாம் முறியடித்ததாகவும், அவர்களுக் குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் இராணுவம் தெரிவித்தது.

நேற்றைய தாக்குதலில் ஏற்பட்ட சேதங் கள் குறித்தும் இரண்டு தரப்புகளும் முர ணான தகவல்களை வெளியிட்டதாக செய்தி ஏஜென்சிகள் தெரிவித்தன.

மன்னாரில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கும் இடை யிலான போக்குவரத்து நடைபெறும் உயி லங்குளம் சோதனைத் தடை முகாமை அண் டியிருந்த நீலச்சேனை மினிமுகாம் மீதே நேற்று அதிகாலை 2.35 மணியளவில் புலி கள் அதிரடிப் பாய்ச்சல் நடத்தியிருக்கின்றனர்.

அங்கு நடந்த சமரில் பத்துப் படையின ரைக் கொன்று, மினிமுகாமிலிருந்த அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் கைப்பற்றினர் எனப் புலிகள் தெரிவித்தனர். இச்சமரில் தமது தரப்பில் நான்கு போராளிகள் உயிரிழந்த னர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நடுத்தர இயந்திரத் துப்பாக்கி (எம்.எம்.ஜி.) 1, இலகுரக இயந்திரத் துப்பாக்கி (எல். எம்.ஜி.) 1, 60 எம்.எம். மோட்டார் 1, தானி யங்கித் துப்பாக்கிகள் 4, கைக்குண்டுகள் 25 மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன புலிகளால் மினி முகாமிலிருந்து அள்ளப்பட் டன என்றும் புலிகளின் இராணுவப் பேச் சாளர் இராசையா இளந்திரையன் தெரி வித்தார்.

""ஊடறுத்துத் தொல்லைப்படுத்தும் வேவு அணிகள் மையம் கொண்டு செயற்படு கின்ற எதிரிகளின் இந்த முகாமை அழித் தன் மூலம், அந்த முகாமினால் விடுக்கப் பட்டு வந்த அச்சுறுத்தலைப் புலிகள் முறி யடித்துள்ளனர்'' என்றும் அவர் கூறினார்.

ஆனால்

இந்தச் சமரில் அரச படையினர் மூவர் மட்டுமே உயிரிழந்தனர் என்றும் புலிகள் தரப்பில் ஒன்பது பேர் பலியாகினர் என் றும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

""மன்னாரில் அதிகாலையில் மோதல் நிகழ்ந்தது. புலிகள் மோட்டார் மற்றும் பீரங்கி கொண்டு தாக்கினர். நாங்கள் மூன்று சிப் பாய்களை இழந்தோம். நால்வர் காயமடைந் தனர்'' என்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.

""புலிகள் தரப்பில் 9 பேர் உயரிழந்த மையை எமது துருப்புகள் அவதானித்துள் ளன. புலிகள் தரப்பில் மேலும் 24 பேர் காய டைந்தனர் என வட்டாரங்கள் தெரிவித் தன'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு நீலச்சேனை மோதல் குறித்து தகவல் எது வும் கிடைக்கவில்லை என்று அதன் பேச்சா ளர்களின் ஒருவரான ஸ்ரெயினர் ஸீவன்சன் தெரிவித்தார்.

கிழக்கை மீட்டுவிட்டதாக அரசாங்கம் "கிழக்கு உதயம்' வெற்றி விழா கொண்டா டிய 24 மணித்தியாலயங்கள் முடிவதற்குள் தாக்குதல் நடந்திருக்கிறது

வடக்கைத் தமது கட்டுப்பாட்டில் வைத் திருக்கும் விடுதலைப் புலிகள், படையின ரின் கிழக்கு தாக்குதல்களுக்கு பழிக்குப் பழி தீர்ப்பதாக சபதம் எடுத்துள்ளனர் என்று சர்வ தேச செய்தி நிறுவனம் ஒன்று நேற்றைய தாக் குதல் குறித்துப் பிரஸ்தாபித்திருக்கிறது.

(அசி)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.