Jump to content

Recommended Posts



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣............. இது தான் இவரைத் தேர்தெடுத்த மக்கள் இவரிடம் எதிர்பார்த்தது.............. உண்மையிலேயே. இவர் இப்படியே கைதட்டல்களுக்காக ஒரு வித்தைக்காரர் போல மரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்..............🫣.
    • அத்துமீறினால் நடவடிக்கை எடுப்போம்! அர்ச்சுனாவை எச்சரிக்கும் வைத்தியர் சத்திய மூர்த்தி    
    • (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத  பெறுமதி சேர் வரியை (வற் வரி) உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கம், இலங்கை  நூல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சங்கம், அகில இலங்கை நூல் விற்பனையாளர்கள் சங்கம், இலங்கை எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களும் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்துகிறது.  இவ்விடயம் குறித்து தாம் தற்போது புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்திற்கு பிரேரணையொன்றை  முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த சங்கங்கள், சார்க் வலய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே புத்தகத் துறைக்கு 18 வற்  வரி அறவிடப்படுவதாகவும், ஏனைய சார்க் நாடுகளில் பூச்சய வீத வற் வரியே அறவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.  மேலும்,அறிவு மற்றும் கற்றல் தொடர்பான மூலதாரங்களுக்கு வரி விதிதப்பதால் ஏற்படுகின்ற நிதியியல் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்புத்வ ஜயந்தி மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன்த இந்தீவர, "பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த போது புத்தகத் துறைக்கு 18 வீத வற்  வரி விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவத்தவர்கள், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.  அன்று இவ்விடயத்‍தை எதிர்த்தவர்கள், புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் VAT வரியை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  புத்தகங்கள் மீது வற்  வரி  விதிக்கப்படுவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதற்காக அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தின்போது எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் "  என்றார். இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க கூறுகையில், "பெரும்பாலான பதிப்பக நிறுவனங்கள்  வற்   வரியை  செலுத்தவதற்கான தகுதியை கொண்டதானவை அல்ல. ஏனெனில், அவர்கள் பாரிய ரீதியில் வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை. இதனால், 18 வீத வற்  அறவீட்டை  கழித்துக்கொள்ளவும் முடியாத துர்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது. உள்நாட்டு தொழிலாளர்களைத் தவிர, பதிப்பகத் துறைக்கான அனைத்து உள்ளீடுகளும் இறக்குமதி செய்யப்படுவதால், இலங்கையின் புத்தகத் துறைக்கு ஏற்கனவே  33.04 சதவீத வரி அறவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு மேலதிகமாக, 18 சதவீதவற்   வரி அறவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, புத்தகங்களின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதுடன், புத்தகத்தை கொள்வனவும் செய்யும் நுகர்வின் அளவும் 30 சதவீதத்தால் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணிகள், இலங்கையின் புத்தகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அத்துடன், சிறியளவான வர்த்தகர்கள் இத்துறையை விட்டு செல்கின்றனர். இதனால் உள்நாட்டு தொழிலாளர்களும் தமது தொழிற்துறைகளை இழந்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இழக்க நேரிடும். நாட்டில் புத்தி கூர்மையான மக்களை உருவாக்குவதில் புத்தகத்துறை பெரும் பங்கு வகிக்கிறது என்பதை தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசாங்கம் நம்புகிறது. இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத  பெறுமதி வற் வரியை  உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என லியுறுத்தி நிற்கிறோம் " என்றார். இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை நீக்குமாறு வலியுறுத்தல் ! | Virakesari.lk
    • 👍..................... ராஜன் குறை அவர்களின் நல்லதொரு கட்டுரை. மக்களிடம் இறங்கிப் போகவேமாட்டீர்கள், ஆனால் மக்களாட்சி என்று சொல்வீர்களா............🤣. சமீபத்தில் விஜய் கனமழையின் போது செய்த செயலும், விட்ட அறிக்கையுமே போதும் இவரின் சிந்தனைப்போக்கை,  தெளிவைத் தெரிந்து கொள்ள. ஆதவ்வின் பிரச்சனை வேறு. அவரின் பிரச்சனை உதயநிதியுடனான தனிப்பட்ட பிரச்சனை. அதற்காக அவர் எந்த எல்லைவரையும் போய் உதயநிதியை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார். விசிகவும், தவெகவும் ஆதவ்வின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது திருமா கொஞ்சம் சுதாகரித்து ஆதவ்வை  ஆறு மாதங்கள் பதவியிலிருந்து இடைநிறுத்திவிட்டார். ஆனால் விஜய் தான் ஆதவ்வின் அடுத்த இலக்கு. ஆதவ் அங்கே போகக்கூடும். விஜய்யை வேங்கைவயலிற்கு வாங்கள், களத்தில் இறங்குங்கள் என்று ஆதவ் கூப்பிடுகின்றார்............... நடக்கிற காரியமா இது................ முதலில் வேங்கைவயலில் என்ன நடந்தது என்று ஒரு திரைக்கதை எழுதி, விஜய் அதில் நடித்துப் பழகவேண்டும்.................. செந்தில் பாலாஜியா, ஆதவ்வா என்ற நிலையில் செந்தில் பாலாஜியின் பக்கம் சாய்ந்தார் உதயநிதி. இந்த இருவருமே சுத்தம் கிடையாது. டாஸ்மாக் மற்றும் பல வழிகளில் கட்சிக்கு அதிகப் பணம் யார் கொண்டு வருவார்கள் என்பதில் தான் இந்த இருவருக்குமே போட்டி. அத்துடன் செந்தில் பாலாஜி ஒரு படி கீழேயே நின்றும் விடுவார். ஆதவ் எல்லாப் படிகளும் ஏறவேண்டும் என்ற விருப்பில் இருக்கின்றார். விடுவாரா உதயநிதி.............. பட்டியலின மக்களுக்கு உரிமை என்று கோஷத்துடன் விசிகவில் சேர்ந்தார் ஆதவ். அது அவ்வளவாக எடுபடவில்லை. இப்பொழுது மன்னராட்சியை அழிக்கப் போவதாக விஜய்யை வேங்கைவயலிற்கு கூப்பிடுகின்றார்..................🫣. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.