Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடிபாட்டியலில் வெடிபொதியின் (cartridge) உறுப்புகளுக்கான தமிழ்ச்சொற்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

கீழே நான் கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) சிதறுசுடுகலனிலும்(scatter gun) போட்டு சுடும் வெடிபொதிகளின் உறுப்புகளுக்கான தமிழ்ப்பெயர்களை கொடுத்துள்ளேன்.. படித்து மகிழவும்….

 


  • கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) வெடிபொதிகளின் உறுப்புகள்:

main-qimg-d265a02c51256a191fabb1062eb4c0d8.png

படிமப்புரவு(image courtesy): NOQ Report

  1. வெடிபொதி - cartridge
  2. நடுவடி வெடிபொதி - centerfire cartridge
  3. விளிம்படி வெடிபொதி - rimfire cartridge
  4. கோது - case
  5. சன்னம் - bullet
  6. வெடிமருந்து - gun powder (propellant)
  7. எரியூட்டி - primer
  8. எரியூட்டி கொண்ட விளிம்பு - rim with primer

 

 


  • சிதறு சுடுகலன்(scatter gun) எறியத்தின்(projectile) உறுப்புகள்:

அது என்ன சிதறு சுடுகலன்(scatter gun) .. அட அது வேறொன்றும் இல்லை மாக்களே, அதுதான் வேட்டைச் சுடுகலன்(fowling piece), குளிகைச் சுடுகலன்(shot gun) என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சுடுகலன் ஆகும்.

இன்னமும் குழப்புகிறதா?.. இதோ அந்த சுடுகலனின் படிமம்:

main-qimg-90a6bf725370ac11e4309a2a8c2ef26b.png

படிமப்புரவு: Outdoor Life

சரி, இனி அந்த சுடுகலனின் முக்கிய எறியங்களான குளிகைப்பொதி(shot shell), நொய்யகோ பொளுக்கை(wad slug) ஆகியவற்றிற்கான உறுப்புகளின் தமிழ்ப்பெயர்களை அப்படியே பார்த்துவிடுவோம்

  • நொய்யகோ பொளுக்கை(wad slug) :

bkj.jpg

படிமப்புரவு: Anesthesia Key

  • SLUG: பொளுக்கை
  • HARD WAD: வன் நொய்யகோ
  • SOFT WAD: மென் நொய்யகோ
  • PLASTIC WAD: நெகிழி நொய்யகோ
  • BRASS HEAD CONTAINING POWDER AND PRIMER: வெடிமருந்தும் எரியூட்டியும் கொண்ட பித்தளைத் தலை.

 

 


  • குளிகைப்பொதி(shot shell):

main-qimg-695efd2f4e129df410bc0ab7c4f6a930.png

படிமப்புரவு: Hunting, Fishing and Shooting News | Grand View Outdoors

  1. CRIMP: இறுக்கம்
  2. WAD: நொய்யகோ
  3. SHOT CUP: குளிகைகள் கலயம்
  4. CASE: கோது
  5. PRIMER: எரியூட்டி
  6. PRIMER POCKET: எரியூட்டிப் பக்கு
  7. SHOT: குளிகைகள்
  8. SEALED GAS CHAMBER: அடைக்கப்பட்ட வளி அறை
  9. POWDER : வெடிமருந்து
  10. BRASS BASE: பித்தளைத் தலை

 

 


மேலே நான் பயன்படுத்தியுள்ள கலைச்சொற்களுக்கான விளக்கங்கள்:

  1. நெய்யகோ(wad) :

நொய்யகோ=நொய்ய + கோ

  • நொய்ய = அற்பமான, மென்மையான, கடுமையான, வலியற்ற
  • கோ = கவிந்து கொள்ளுதல் (to envelop, cover)

நொய்யகோ = அற்பமான, மென்மையான, கடுமையான, வலியற்ற கவிந்து கொள்ளக்கூடிய பொருள்.(ஆய்தவியலில் wad குறிக்கும் அதே பொருளோடு உருவாக்கிவிட்டேன்😎 )

2.குளிகைகள் (shot😞

குள் → குளி → குளிகை (உருண்டை)

குளிகைப்பொதிக்குள்(shot shell) இருப்பவை அனைத்தும் உருண்டைகளே... உருண்டைகளை குறிக்க தமிழில் உள்ள மற்றொரு சொல் குளிகை.. பல குளிகைகள் உள்ளிருப்பதால் அதை குளிகைகள் என்று வழங்கியுள்ளேன். ஆகையால் இச்சொல் இங்கு அருமையாக பொருந்துகிறது... எனவே இச்சொல்லினை இதற்கான புத்தம் புதிய கலைச்சொல்லாக உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு விடுகிறேன்..

இப்போது உங்களுக்கு ஒரு ஐயம் தோன்றலாம் .. என்னடா பொடிப்பயல் குளிகைகள்(shot) என்று பன்மையில் சொல்கிறான் .. ஆனால் குளிகைப்பொதி(shot shell) என்று ஒருமையில் கொடுத்திருக்கிறான் என்று.. அது ஒரு சுருக்கம்.. அதாவது குளிகைகளின் பொதி என்பதை இட & பலுக்குதல் வசதிக்காக குளிகைப்பொதி என்று சுருக்கி கொடுத்துள்ளேன்.. அவ்வளவே... விரித்துப் போடுவதும் சுருக்கமாகப் போடுவதும் அவரவர் இட்டிகையே!

4. இறுக்கம் (CRIMP😞

[உறு → இறு → இறுக்கம்.]

  • நெகிழாத்தன்மை;
    tightness, compactness.
  • நெருக்கம்;
    closeness, rigidity.
  • கடுஞ்செட்டு;
    close-fistedness, niggardliness.
  • முட்டுப்பாடு;
    hardness, as of the times;
  • புழுக்கம்;
    closeness of weather sultriness.

அதாவது இந்தப் பகுதிதான் (crimp) இதற்குள் இருக்கும் அனைத்தையும் தன்னுள் அமுக்கி சுடுவதற்கு முன்னர் ஏதும் வெளியில் வந்துவிடாதவாறு மூடி போன்று மூடிக்கொண்டுள்ளது.. ஆகையால் இச்சொல்லினை இதற்குச் சூட்டி விட்டேன்.

5. கலயம் (cup):

குல் → கல் → கலயம் (உட்குழிவானது)

அதாவது இந்தப் பகுதிதான் குவளைபோன்ற உட்குழிவான தன்னுள் குளிகைகளை கொண்டுள்ளது.. ஆகையால் இச்சொல்லினை இதற்குச் சூட்டி விட்டேன்.

6. பொளுக்கை(slug): (ஆக்கியோன்: இரவீந்திரன் சிவன்)

புல் → புது → புதை → புடை= வீங்கு, பெருகு போன்ற வினையைக் குறிக்கும்.

புல் > பொல் எனும் வேர்ச்சொல் 'பருமை' - குறித்தது.

பரு > பருத்தது உருண்டும் (spherical), நீளுருண்டும் (cylindrical) வெளிப்படும்.

( உதா : பரு ( முகத்தில் தோன்றும் பரு) , சோற்றுப் பருக்கை).

புளுக்கை - என்ற சொல்லும் இதன் உறவே.

எனவே, Slug ஐ குறிக்க 'பொளுக்கை' என்பது பொருத்தமானதாக இருக்கும் .

→ புல் > பொல் > பொள் > பொளுக்கை.

 

 

உசாத்துணை:

தொகுப்பு & வெளியீடு

நன்னிச்சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆங்கில விகிப்பீடியாவில் இருந்து தமிழில் நான் உருவாக்கிய ஒரு அட்டவணை. வாசித்துப் பாருங்கள்…

  • ஈயக் குளிகைகள் ஒப்பீட்டு அட்டவணை

 

அளவு

வகை

திணிவு (கூலம்)

விட்டம்

0000

கலை (buck)

82 

(0.380")

000½

கலை

76 

(0.370")

000

கலை

70

(0.360")

00½

கலை

59

(0.340")

00

கலை

53.8

(0.330")

0

கலை

49

(0.320")

#1½

கலை

44.7

(0.310")

#1

கலை

40.5

(0.300")

#2½

கலை

36.6

(0.290")

#2

கலை

29.4

(0.270")

#3½

கலை

26.3

(0.260")

#3

கலை

23.4

(0.250")

#4

கலை

20.7

(0.240")

FF

தாரா (waterfowl)

18..2

(0.230")

F (or TTT)

தாரா 

16.0

(0.220")

TT

தாரா 

13.9

(0.210")

T

தாரா 

12.0

(0.200")

BBB

புள்(bird)

10.2

(0.190")

BB

புள்

8.50

(0.180")

BB (air gun)

புள்

8.10

(0.177")

B

புள்

7.40

(0.170")

#1

புள்

6.15

(0.160")

#2

புள்

4.40

(0.150")

#3

புள்

5.07

(0.140")

#4

புள்

3.30

(0.130")

#4½

புள்

2.90

(0.125")

#5

புள்

2.60

(0.120")

#6

புள்

2.00

(0.110")

#7

புள்

1.50

(0.100")

#7½

புள்/ களிவட்டு(clay)

1.29

(0.095")

#8

புள்/ களிவட்டு

1.09

(0.090")

#8½

புள்/ களிவட்டு

0.97

(0.085")

#9

புள்/ களிவட்டு

0.75

(0.080")

#10

பூச்சி(pest)

0.51

(0.070")

#11

பூச்சி

0.32

(0.060")

#12

பூச்சி

0.19

(0.050")

புழுதி (dust)

பூச்சி

0.10 அல்லது அதற்கும் கீழ்

1.00மி.மீ (0.040") அல்லது

அதற்கும் கீழ்

 

புள்

0.63


 

(0.70”)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.