Jump to content

டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

11 மார்ச் 2022
புதுப்பிக்கப்பட்டது 23 ஏப்ரல் 2022
 

Reading

பட மூலாதாரம்,GETTY IMAGES

(இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு, வாசிப்பு பழக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக மாறியிருக்கும் டிஜிட்டல் வாசிப்பு முறை குறித்த கட்டுரையை உங்களுக்காக பகிர்கிறோம். )

வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் ஒரு வாழ்க்கை அனுபவம்; புத்தகங்கள் அறிவு சார்ந்தது. புத்தகங்கள் ஒரு சமூகம். புத்தகங்கள் இல்லையென்றால் மனிதர்களுக்கு தற்போது இருக்கும் பண்புகள் இருந்திருக்காது.மனித  இனத்தின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்புகளில் ஒன்று, படிப்பறிவு.

நம் பரிணாம வளர்ச்சி எனும் கடிகாரத்தில், கண் இமைக்கும் நொடியில் வாசிப்பு உருவானது.  வாசிப்பு பழக்கம் தொடங்கி வெறும் ஆறாயிரம் ஆண்டுகளே ஆனது.  எத்தனை மது பாத்திரங்கள் அல்லது கால்நடைகள் நம்மிடம் உள்ளன என்பதை குறித்ததில் தொடங்கியது வாசிப்பு. எழுத்துக்கள் தோன்றியதால் அறிவை  சேமிக்கவும், நினைவில் வைத்து கொள்ளவும் ஒரு சிறந்த  முறை உருவானது.

மனித மூளை வடிவமைப்பின் முக்கிய அமைப்பை மாற்றும் சக்தி கொண்டது  வாசிப்பு.  இது பார்வை திறன்,  மொழி திறன், சிந்தனை  திறன், உணர்வு திறன் ஆகியவற்றுக்குள் ஒரு புதிய தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது.  ஒவ்வொரு புதிய வாசிப்பாளருக்கும்  உண்மையில் புத்துணர்ச்சியை தருகிறது. அது நம் மூளையில் இயல்பாக உருவாக வில்லை.

படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு நபரும் தங்கள் மூளையில் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.

ஒரு நல்ல கதையை வாசிப்பது என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட அதிக நன்மைகள்  அளிக்கக்கூடியது.  வாசிப்பு பழக்கத்திற்கு பல மருத்துவ  ரீதியான நன்மைகள் உள்ளன. வாழ்வில் ஏற்படும் நோய்களுக்கு  தீர்வாக புனைவுகளை பரிந்துரைக்கும் கலையே நூலியல் மருத்துவம் பிப்லியோதெரபி.படைப்பாற்றலும், அறிவாற்றல், கருணை ஆகிய மூன்று  அற்புதமான திறன்களை  வாசிப்பு அளிக்கிறது.

நீங்கள் படிக்கும் போது, உங்கள் மூளை தியான நிலைக்கு செல்கிறது.  உங்கள் இதயத் துடிப்பு சீராகி, உங்களை அமைதிப்படுத்தி, பதட்டத்தைக் குறைக்கும் ஒரு செயல்முறையாக வாசிப்பு உள்ளது.

நாம் மேலோட்டமாக படிக்கும்போது, நாம் தகவலை மட்டும் பெறுகிறோம். நாம் ஆழமாகப் படிக்கும்போது, நமது பெருமூளைப் புறணியை (cerebral cortex)  அதிகம் பயன்படுத்துகிறோம்.  ஆழ்ந்த வாசிப்பு என்பது நாம் தொடர்பு முறையை உருவாக்குவதாகும்.  நாம் அனுமானங்களை உருவாக்குகிறோம். இது நம்மை உண்மையிலேயே விமர்சனம், பகுப்பாய்வு, கருணை கொண்ட மனிதர்களாக உருவாக்குகிறது.

புத்தகம் வாசிப்பை ஒரு வேலை என்று நாம் நினைக்கிறோம், ஆனால் புத்தகம் வாசிப்பு ஒரு விநியோக செயல் திறன் கொண்டது (Delivery Mechanism).  

வாசிப்பில் புதுமை

வாசிப்பு பழக்கம் புதுமை அடைந்து வருகிறது.  அலைபேசியில் படிக்க வேண்டுமென்றே எழுதப்படும் அற்புதமான புத்தகங்கள் வந்துவிட்டன.

 இந்த மாதிரியான புதிய  முறைகள், புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு அதிக பலன்களை கொடுக்கின்றன. அவர்கள் தடைகளைக் கடந்து செல்ல வேண்டியதில்லை.  'நல்ல எழுத்து' இதுதான் என்ற கட்டமைப்பை அது உடைக்கிறது.  மேலும் இது உண்மையில் மக்களைப் பேசவும் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கிறது.

எதில் வாசிக்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி கிடைக்கிறது  என்பது முக்கியமில்லை, கதைதான் முக்கியத்துவம் பெறுகிறது.  புத்தகம் என்பது ஒருவேளை இதுதான் என்ற மாயையை வழங்குகிறது; உண்மையில் அது அப்படி இருந்தும் இருக்காது, இது ஒரு சிந்தனை செயல்முறைக்கான ஒரு வழி.

 

Reading

பட மூலாதாரம்,GETTY IMAGES

"முப்பதுக்கும்  மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், விஞ்ஞானிகளும் ஒன்றிணைத்து, வாசிப்பில் டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில்,  உங்கள் ஸ்மார்ட்போனில் சமமாக நன்றாகப் படிக்கக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன; நீங்கள்  சிறிய செய்தியையும் படிக்கலாம். ஆனால் அறிவாற்றல் அல்லது உணர்ச்சி ரீதியாக சவாலான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.  காகிதத்தில் படிப்பதை விட டிஜிட்டல் திரையில் படிப்பது மோசமான வாசிப்பு புரிதலுக்கு வழிவகுக்கிறது.", என்று கூறுகிறார் இ-ரீட் என்ற அமைப்பின் தலைவர் அன்னா மன்கேன்.

உண்மையில், நாம் எதைப் படிக்கிறோம் அல்லது எவ்வளவு படிக்கிறோம் என்பது அல்ல, ஆனால் எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். ஸ்கிம்மிங் செய்ய, அதாவது மேலோட்டமாக படிக்க, நமக்கு ஒரு நாட்டம் இருப்பதால் , எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  வாசிப்பு மூளையில் ஒரு பிளாஸ்டிக் சுற்றமைப்பை (Circuit) உருவாக்குகிறது.  இது அது படிக்கும் ஊடகத்தின் பண்புகளை பிரதிபலிக்கும்.  டிஜிட்டலின் குணாதிசயங்கள் சுற்றமைப்புகள் பிரதிபலிக்கும்.

வாசிப்பிற்கான திறன்களைப் பயிற்றுவிக்காவிட்டால், இறுதியில் மிகவும் சிக்கலான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும், ஒருவேளை ஈடுபடும் மற்றும் கற்பனை செய்யும் திறனையும் நாம் இழக்க நேரிடும்.

 மனிதனின் கற்பனை ஓர் அற்புதமான விஷயம் - நாம் எளிதில் ஒன்றை பழக்கக்கூடியவர்கள் .  நமக்குக் கிடைத்திருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாம் விரும்பியதைச் செய்வதற்கான வழிகளைக் காண்கிறோம்.

"மக்கள் இருமொழி மற்றும் மும்மொழி பேசக்கூடியவர்களாக இருப்பதைப் போலவே, நாம் ஒரு இரு அறிவுத்திறன் கொண்ட மூளையை வளர்த்துக்கொள்வோம் என்று நான் நம்புகிறேன்.  வாசிப்பு நம் இனத்திற்குக் கொடுத்த அசாதாரணமான பரிசை இழக்காமல் இருக்க, நாம் படிக்கும் சாதனம் அல்லது வழியை, மிகவும் பொருத்தமாக் தேர்வு செய்ய நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.", என்கிறார் எழுத்தாளர் மரியானே ஊல்ஃப்.

https://www.bbc.com/tamil/science-60698729

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.