Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விரிவுரையாளர்களை வெளியேறவிடாது கதவை மூடி மாணவர்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விரிவுரையாளர்களை வெளியேறவிடாது கதவை மூடி மாணவர்கள் போராட்டம்

ShanaApril 30, 2022
 
279548425_2126211474227688_3090540575749888919_n.jpg

 

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இரு மாணவர்கள் மீது விரிவுரையாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு தாக்குதல் நடாத்தியதை கண்டித்து நீதிகோரி நிறுவகத்தின் பணிப்பாளர் உட்பட அங்கு கற்பிக்கும் விரிவுரையாளர்களை வெளியே செல்லவிடாது பல்கலைக்கழக கதவை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லடியில் அமைந்துள்ள குறித்த நிறுவகத்தில் கல்விகற்றுவரும் இரண்டாம் வருட 2 மாணவர்களும் ஒரு முதலாம் ஆண்டு மாணவர் உட்பட 3 மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எந்தவிதமான விசாரணையும் இன்றி அவர்களை கல்வி கற்க இடை நிறுத்தப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் செய்த குற்றத்தை மன்னித்து நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு அவர்கள் மீது கல்வி கற்க தடைசெய்யப்பட்டதை நீக்ககோரி மாணவர்சங்க மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கையை சம்பவதினமான நேற்று காலை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்த நிலையில் மாலை 6.30 மணியளவில் தீர்வு அதற்கான தீர்வினை நிர்வாகம் வழங்காத நிலையில் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறிய போது மாணவர்கள் எங்களது கோரிக்கைக்கு தீர்வு வழங்கிவிட்டு செல்லுமாறு கோரி அவர்களை செல்லவிடாது தடுத்தனர்.

இதன் போது மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடு எற்பட்ட நிலையில் விரிவுரையாளர் ஒருவர் இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக வாயில் கதவுகளை மூடி தாக்கப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் நீதி கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழக பணிப்பாளர், விரிவுரையாளர்கள் உட்பட 10 மேற்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற விடாது வாசல் கதவுகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் பொலிசார் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்பட்டபோது அவர்களை ஆர்ப்பாட்டகாரர்கள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் குறித்த விரிவுரையாளர் வேண்டாம் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி வேண்டும், இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு நீதி வேண்டும், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் இங்கு வர வேண்டும் எனக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து பல்கலைக்கழக விரிவுரையாளர் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் நிறுவக பணிப்பாளர் மற்றும் நிர்வாக பிரிவுடன் மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மாணவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்ததையடுத்து இரவு 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் வெளியேறிச் சென்றனர்.

 

279131046_2126211180894384_2622738624466292156_n.jpg

 

279526572_2126211314227704_8908548605615740270_n.jpg

 

279551629_2126211450894357_4766696044838306219_n.jpg


 

http://www.battinews.com/2022/04/blog-post_242.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பழைய மாணவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து பழகிச் சினேகிதமாக இணைவதற்குப் பகிடி அவசியம் தேவை. அதற்குள் இருக்கும் வதை நற்பண்பாடுகளை மீறிப் போகக்கூடாது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்-- கிழக்கு பல்கலை. துணைவேந்தர்

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் கடந்த 20ஆம் திகதி அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளதுடன் சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கை நிறுவகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வி.கனகசிங்கம் தெரிவித்தார்.

May be an image of 11 people, people standing, tree and outdoors

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் இடம்பெற்று ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (02) திகதி துணைவேந்தர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் இடம்பெற்ற பகிடிவதை. வன்முறைகள், மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக விசாரணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆண்கள் விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உடைக்கப்பட்டமை இதனை உடைத்த மாணவர்கள் உடைக்கப்பட்ட தொiலைக்காட்சி பெட்டியின் பெறுமதி தொகையை சமமாக பிரித்துச் செலுத்துவதோடு குறிப்பிட்ட அந்த மாணவர்கள் தொடர்ந்து விடுதியில் தங்கியிருக்க தடைவிதிக்கப்பட்டது.

அத்துடன் பகிடிவதையினை ஊக்குவித்தமை மற்றும் துணையாக செயற்பட்டமை காரணமாக நான்காம் ஆண்டு மாணவர் ஒருவரின் வழிநடத்தலில் பகிடிவதை நடவடிக்கைகளுக்காக துணைபோகுமாறு முதலாம் ஆண்டு மாணவர்களை கட்டாயப்படுத்திய முதலாம் வருட மாணவர் மற்றும் நான்காம் வருட மாணவர் ஆகியோருக்கு 3 வார காலத்துக்கு நிர்வாகத்துக்குள் உள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அதேவேளை பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பாக நான்காம்  ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை என்ற பெயரில் முதலாம் ஆண்டு மாணவரை தாக்கியதன் காரணமாக நிர்வாகத்துக்குள் உள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த விடையங்கள் அறிந்த மாணவர் ஒன்றியம் ஓழுக்ககாற்று அறிவிக்கப்பட்ட 29-4-2022 அன்று மாணவர்களை ஒன்று திரட்டி மேற்படி ஒழுக்ககாற்றை வாபஸ் பெறுமாறும் குறிப்பிட்ட மாணவர்களை நிர்வாகத்துக்குள் அனுமதிக்குமாறும் நிபந்தனைகளை முன்வைத்து பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை அழைத்து துறைத்தலைவர்கள் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒன்றிய பொருளாளர் போன்ற குழுவினை உள்ளடக்கிய குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்த சமயம் காரியாலயத்துக்கு வெளியில் பகிடிவதைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் முதலாம் தர மாணவர்கள் சிலர் சிரேஸ்ட மாணவர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டனர்.

அதனை தடுக்க முற்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சீவரெத்தினம் நான்காம் வருட மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளானதோடு அவரது கையடக்க தொலைபேசியும் பறித்து உடைக்கப்பட்டது அதனை தொடர்ந்து பணிப்பாளர் விரிவுரையாளர்கள் உட்பட 10 பேரை இரவு 12 மணிவரை வெளியில் செல்லாதவாறு காரியாலயத்தில் வைத்து பூட்டியுள்ளனர்.

மாணவர்களால் இழைக்கப்பட்ட நீதிக்கு புறம்பான வன்முறையினை மூடிமறைத்து தங்களுக்கு அனுதாபத்தை தேடிக் கொள்வதற்காக விரிவுரையாளர் ஒருவரால் தாக்கப்பட்டதாக விரிவுரையாளரை தாக்கிய மாணவர்களே உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களுக்கு கூறியதுடன்  தங்களை வைத்தியசாலையிலும் அனுமதித்துக் கொண்டனர்.

இந்த விடையம் தொடர்பாக 1-5-2022 கல்விசார் அவைக்குழு மற்றும் முகாமைத்துவசபை என்பன நடந்தேறிய விரும்பத்தகாத  செயல்களை நுட்பமாக பரீசிலனை செய்து மாணவர்களின் வன்முறை நடைவடிக்கைகளை கண்டித்ததுடன் நிர்வாகத்தில் சுமூகமான சூழலையும் விரிவுரையாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு 3-5-2022 இன்று காலை எட்டு மணிக்குள் நிறுவகத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேறுவதோடு மறு அறிவித்தல் வரை அவர்கள் உட்பிரவேசிக்க முடியாது எனவும். பல்கலைக்கழக கல்விசார் உறுப்பினர்களை உள்ளடக்காத சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை அமைக்கப்படும், 

மேற்படி விசாரணைக்குழுவின் அறிக்கை ஒரு மாத காலத்துக்குள் முகாமைத்துவ சபைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும். விசாரணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தவறிழைத்தவர்களுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 

 

https://www.virakesari.lk/article/126819

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.