Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறுமுக நாவலரால்... 1853´ல் ஆரம்பிக்கப் பட்ட, "சைவ பிரகாச சபை" தமிழர் உரிமை பற்றி பேசப்பட்ட தொடக்க காலம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of money  May be an image of 1 person    May be an image of outdoors

போராட்ட வரலாற்றில் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக,
ஆறுமுக நாவலரால் 1853´ல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை" 
தமிழர் உரிமை பற்றி; பேசப்பட்ட தொடக்க காலம்!!

இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை' என்னும் அமைப்பைச் சொல்லலாம். இந்த சபை அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டபோதிலும், நிர்பந்தங்கள் காரணமாக தமிழர் உரிமைகளைப் பற்றியும் நாவலர் பேசினார். இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம் கண்டது.
 
வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில் இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும் ஆறுமுகநாவலர் எடுத்தார். சட்ட நிரூபண சபைக்கு பொ. இராமநாதன் நியமனத்திற்காக ஆளுநருக்கு எழுதினார். இதன்மூலம் 50 ஆண்டுகள் தமிழர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பொ.இராமநாதனுக்கு கிடைத்தது. ஆனாலும் பொ.இராமநாதன் ஆறுமுகநாவலரின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக இருந்தது. மாறாக, இராமநாதன் இலங்கை தேசிய சங்கத்தை நிறுவி ((Ceylon National Association)) அதன் தலைவராக அரசமைப்பு சீர்திருத்தத்திற்கும் அதன்மூலம் அதிக உள்ளூர் பிரதிநிதிகளை அரசியல் நிர்ணய சபையில் அங்கத்தினர்களாக்க பெரிதும் பாடுபட்டார். 13 ஆண்டுகள் பதவி வகித்த பொ.இராமநாதனுக்குப் பிறகு அவரது சகோதரர் பொ.குமாரசாமி வந்தார். இவரின் பதவிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு புகைவண்டி இருப்புப் பாதையை அதிகரிக்கப் பெரிதும் முயன்றார்.
 
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "ஹிந்து ஆர்கன்' மற்றும் அதன் தமிழ் பதிப்பான "இந்து சாதனம்' மட்டுமே தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கும் விதமாகக் கட்டுரைகள், தலையங்கங்களை எழுதின. உதாரணமாக, இந்து சாதனம் நாளேட்டில் எழுதப்பட்ட தலையங்கத்தின் ஒருபகுதி வருமாறு:
""நாம் ஒன்றிணையவில்லை. நாம் பிரிந்து நிற்கிறோம். மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும் கடினம். ஒற்றுமையின்மை காரணமாக ஏற்பட்ட அழிவின் பாதிப்புகளினால் நாம் வருந்துகின்றோம். ஒரு காலம் பெருமையுடன் நாம் ஆண்ட நாட்டை அந்நியருக்கு விட்டுக்கொடுத்து விட்டோம். எமது நாட்டின் பிரச்னைகளை எமது மக்கள் ஒன்று கூடிக் கலந்துரையாடுவது கிடையாது. எமது சுதந்திரங்கள் யாவற்றையும் நாம் சரணளித்துவிட்டு, சித்த சுவாதீனம் இழந்தவராய் நிற்கிறோம்'' இவ்வகை எழுத்துக்கள் மக்களை எழுச்சியுறச் செய்தன.
 
1905-ஆம் ஆண்டு இறுதியில் "யாழ்ப்பாணச் சங்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து 1906-இல் வெளியான "ஹிந்து ஆர்கனி'ல், ""தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை அரசின் முன்வைத்து தீர்க்கும் விதமாக யாழ்ப்பாணச் சங்கம் உருவாகியுள்ளது. இது பூரண ஒற்றுமையுடனும், முழுமனதோடும், சாதி சமய பாகுபாடுகளின்றிச் செயற்படுமானால், அரசியல் அரங்கத்தில் அது பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மாத்திரமின்றி, சமூக நிலைகளிலும் பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் - ஒற்றுமையே பலம்.'' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.
 
இதேவேளையில் முத்துக்குமாரசாமியின் மகனாகிய கலாநிதி ஆனந்த குமாரசாமி 1906-இல் யாழ்ப்பாணம் வந்தார். அவர் தனது ஆங்கிலேய தாயாருடன் லண்டனில் வளர்ந்தவர். சைவ பரிபால சபை சார்பில் 1906 மே 14-இல் இந்துக் கல்லூரியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது நன்றியுரையில், ""தமிழ்க் கலாசாரம்,பாரம்பரியங்கள் என்பனவற்றைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேற்கத்திய கலாசாரத்தை யாரும் பின்பற்றக்கூடாது. தமிழரின் கலாசார அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இதை தமிழர்களுக்கு எனது வலியுறுத்தலாகக் கூறிக்கொள்கிறேன்'' என்றார்.
 
* யாழ்ப்பாணத் தமிழர் சங்கத்தில் அங்கம் வகித்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கும்பகோணம் கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஜேம்ஸ் ஹென்ஸ்மன். இவர் தலைவராகவும், வழக்கறிஞர்கள் ஹோமர் வன்னியசிங்கம், எஸ்.காசிப்பிள்ளை உப தலைவர்களாகவும் இருந்தனர். ஜேம்ஸ் ஹென்ஸ்மன் தலைசிறந்த ஆங்கிலப் பேராசிரியர் ஆவர். பின்னாளில் "வெள்ளி நாக்குத் தமிழர் ஸ்ரீநிவாசசாஸ்திரி' என்று போற்றப்பட்ட-‘Silver Tongue Srinivasa Sastry’ வரின் குரு. ஹென்ஸ்மனுக்கு இரு புதல்வர்கள். அவர்கள் இருவரும் சென்னையிலேயே பணிபுரிந்தனர். அவர்களும் ஹென்ஸ்மன் என்றே அழைக்கப்பட்டனர். அந்த ஹென்ஸ்மனில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்து அரும்பணியாற்றிய காரணத்தால், அவரது பெயரில் தியாகராயநகரில் ஹென்ஸ்மன் சாலை என்று ஒரு சாலைக்குப் பெயரிடப்பட்டது. இன்று அந்த சாலை கண்ணதாசன் சாலை என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.
 
பின்னர் சமூக சீர்திருத்த சங்கம் (1906), ஐக்கிய நாணயச்சங்கம் (1913), யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம் (1918), திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் (1920), மட்டக்களப்பு சங்கம் (1920). முல்லைத்தீவு மகாஜன சங்கம் (1921) ஆகியவை உருப்பெற்று யாழ்ப்பாணச் சங்கத்துக்கு உதவியாகவும், ஆலோசனை கூறுகிற அமைப்புகளாகவும் அமைந்தன.
 
1921 ஆகஸ்டு 15-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட தமிழர் மகாஜன சபை, தமிழர்களின் பிற்கால அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
 
இந்தப் பின்னணியில் தமிழர் அரசியல் அமைப்புகளைப் பார்ப்போம்:
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி:
தமிழர்களின் ஒட்டுமொத்தமான தேசிய இன உணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் 1949-இல் இது உருவாகிறது.
தன்னுடைய தனித் தன்மையையும் பல பிரிவுத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் இது பிரதிபலித்துப் பலமுனைச் செயல்பாடுகளால் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான ஒரு கட்சியாக இது உருவானது.
சிங்கள வெறிக்கும் இனவாதத்திற்கும், பதில் கூறக் கூடிய வகையில் இது செயல்பட்டது. அதை நேருக்கு நேர் நின்று எதிர்த்தது. பரவலான மக்கள் இயக்கங்கள் அனைத்தையும் கட்டி எழுப்பியது.
 
தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக 1956-இல் உடனுக்குடன் ஒரு மிகப்பெரிய சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தியது.
இந்த எதிர்ப்பின் விளைவாகப் பணிந்த அரசாங்கம் கடைசியில் இந்தத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதுவே சரித்திரப் புகழ்பெற்ற பண்டாரநாயக்கா~செல்வா ஒப்பந்தமாகும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
 
காரணம், சிங்களர்களும், புத்த பிக்குகளும் அணி திரண்டு தீவிரமாக அதை எதிர்த்தனர்.
இதுபற்றி அன்றைய டெய்லி நியூஸ் கருத்துக் கூறுகையில், 200 அரசியல் பிக்குகள், 15,000 மக்கள் திரண்ட ஓர் ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கலந்துகொண்டு இதைக் கண்டித்துப் பேசுகின்றனர். ஜெயவர்த்தன புத்த பிக்குகளின் இந்தக் கண்டனக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கண்டியை நோக்கிப் பாத யாத்திரை செல்கிறார். இந்த ஒப்பந்தத்தைத் தூக்கி எறிய அரசை வலியுறுத்துவதற்காக இப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சில மந்திரிகளும் கூட இந்த ஒப்பந்தத்தைக் கண்டிக்கின்றனர்.
 
மந்திரிகள் கலந்துகொண்ட ஓர் ஊர்வலம் பிரதம மந்திரியின் வீட்டுக்குச் சென்று ஒரு மனுவை அளிக்கின்றது.
இந்த வகுப்புவாத நாடகத்தின் விளைவாகக் கடைசியில் இந்த ஒப்பந்தம் தூக்கி எறியப்படுகிறது.
அதிலிருந்து தொடர்ந்து 1958, 1961 வகுப்புக் கலவரங்களும், மோதல்களும் உருவாகின்றன. இது 1965 வரை தொடர்கிறது.
இதற்கிடையில் தமிழரசுக் கட்சி தலைமையிலான சிவில் ஒத்துழையாமை இயக்கம் (1961) மிக முக்கிய அரசியல் நிகழ்ச்சியாகும்.
 
பின்னர் 1965-இல் ஆட்சி மாற்றம். ஐக்கிய தேசிய முன்னணி U.N.P. அரசு ஏற்படுகிறது. சிங்களவர்கள் சில சலுகைகளைத் தமிழர்களுக்கு அளித்து ஒரு கூட்டுறவுத் தந்திரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக மாவட்ட சபைகளை உருவாக்கும் செல்வா-டட்லி ஒப்பந்தம் உருவாகியது. ஆனால் இந்த அமைதிச் சூழ்நிலை அதிக நாள் நீடிக்கவில்லை. சிங்கள இனவாதிகள் இதையும் அனுமதிக்கத் தயாராக இல்லை.
இதைத் தொடர்ந்து 1968-இல் தமிழரசுக் கட்சி அரசோடு ஒத்துழைக்காது வெளியேறியது. பின் 1970-இல் திரும்பவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்ரீமாவோ (சுதந்திரக் கட்சி) ஆட்சிக்கு வந்தன.
 
ஸ்ரீமாவோவின் ஆட்சிக் காலமான 1970-77-இல் நாடும் முழுவதும் கொந்தளிப்புகளும், குமுறல்களும், அரசு அடக்குமுறைகளும் மிகுந்த ஒரு காலமாகும்.
அப்போது இடதுசாரிக் கட்சிகளும் அரசில் பங்கேற்கின்றனர். சிங்கள இனவாதத்தின் முன்னே இடதுசாரிகளின் வேடம் அம்பலப்பட்டு அவர்களும் இனவாத நீரோட்டத்தில் கலந்து கரைந்து விடுகின்றனர். (லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி முதலியன)
1972-இல் ஸ்ரீமாவோ அரசு, இலங்கையைக் குடியரசாக அறிவித்தது.
 
சிறுபான்மையருக்குப் பாதுகாப்பு அளித்த பழைய அரசியல் சட்டத்தின் 29-ஆவது ஷரத்தை நீக்கியது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி மற்றும் சில கட்சிகள் இந்த அரசியல் சட்ட மோசடியை எதிர்த்தும், தங்களின உரிமைகளைப் பேணவும், அரசோடு பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குகின்றன. (1971)
 
அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகின்றது. கடைசியில் சிங்கள மொழியை ஆட்சி மொழி ஆக்கியும், புத்த மதத்திற்கு விசேஷ அந்தஸ்து அளித்தும் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. (1972).
 
* Sir, in the volume of ‘‘Connected Constitutional Papers‘‘ referred to by the Hon.Member for Kandy he would see that right at the very beginning, as early as 1909 or 1908 when several of us would not have been able to lisp in the English language, the Jaffna Association, under the Presidency of Mr.James Hensman, was asking for the introduction of the elective principle and for a degree of responsible governement in this country. Here you have the case of a Tamil Association that admittedly gave a lead to the political movement in this country. Happily Sir, that revered old man, who has given to India the Right Hon. Srinivasa Sastri, is yet spared to the Tamils of Ceylon in their day of travail; he is yet alive, and this is the message Mr.Hensman in the evening of his life, having seen all the various political facets, all the various political evolutions both in India and in Ceylon sent from his retirement in Jaffna. -Speech delivered in the State Council on the Reforms Dispatch by G.G.Ponnambalam M.Sc.
 
* (கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர்')
 
ஆறுமுக நாவலர்
 
(Arumuka Navalar, டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.
ஆறுமுக நாவளர் பற்றிய பதிவு விரைவில் பதிவு செய்கிறேன்.
நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.