Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதர்களின் மனதிற்கும், மிருகங்கள் மற்றும் பறவைகள் மனதிற்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மிருகங்கள் மற்றும் பறவைகள் தனது போக்கிலேயே போகின்றன. எந்த மனமாற்றமும் கொண்டிடாது. ஆனால் மனிதர்களின் மனமோ….வினாடிக்கு வினாடி மாறக்கூடியது. தாவக்கூடியது.

மற்ற விலங்குகளை ஒப்பிடும்போது இந்தப் பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்தது முதுகுவலி யும் கழுத்து வலியும் தான் ஏனென்றால் உண்மையில் மற்ற உயிரினங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன மனிதன் மட்டுமே அதை பெற தவறிவிட்டான்

எவ்வளவு குளிர் அடித்தாலும் ஆடு மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கு கம்பளி ஆடை கம்பளி போர்வைகள் தேவைப்படுவதில்லை ஆனால் மனிதர்களுக்கு தேவை

பரிணாம வளர்ச்சியில் இயற்கைக்கு ஏற்ப நாம் நம்மை பரிணமித்து கொள்ளவில்லலை

ஒரு சிம்பன்ஸி சமைக்கப்படாத உணவை சாப்பிட 5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது ஆனால் மனிதனுக்கு சமைக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ள ஒரு மணி நேரமே போதுமானதாக உள்ளது. 

மனிதர்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் விலங்குகள், பறவைகள் உள்ளதா?

மனிதர்களைப் போல? 

மனிதர்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையே இன்றைய வளர்ந்துவரும் நாகரீகத்தில் குறைந்துவருகிறது.

கணவன் இருக்கும் போதே மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு!

மனைவி இருக்கும் போதே கணவன் பல பெண்களுடன் தொடர்பு என்று அன்றாடம் நாம் செய்தி தாள்களில் படிக்கிறோம்.

திருமணம் செய்யாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள் என்னவென்று கேட்டால் லிவ்விங் டுகெதர் என்கிறார்கள்.

திருமண பந்தத்திற்கு அப்பாலான தகாத உறவு குற்றமில்லை என்று நீதிமன்றமே சொல்கிறது.

இப்படி மனித சமூகம் இந்த நிலையில் போய்கொண்டிருக்கிறது.

ஆறு அறிவினைக் கொண்ட மனித இனமே காமத்தில் தடுமாறி உறவில் தடம் மாறுகிறது.

பறவை, விலங்கிடம் போய் நாம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

அப்படியும் இவ்வுலகில் சில உயிரினங்கள் இருக்கத்தான் செய்கிறது.

அப்படி விதிவிலக்காக இருக்கிற சில பறவைகளும், விலங்குகளும் நம் வாழும் இதே .உலகில் அவைகளும் வாழ்கின்றன

 

அவற்றை பற்றியே இந்த பதிவு....

main-qimg-d90771d869e01532d9a6840a45a923b2-pjlq
  • ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் உயிரினங்களில் பறவைகளும் உள்ளன! பாலூட்டிகளும் உள்ளன!
  • பாலூட்டிகளில் மிகவும் குறைவான குறிப்பிடத்தக்க விலங்குகள் மட்டுமே உள்ளன.
  • எனவே, பாலூட்டிகளை பற்றி பதிவின் முடிவில் பார்ப்போம்.
  • முதலில் பறவைகளிலிருந்து.

பறவைகள்

  • பறவைகளில் சுமார் 90 சதவிகித பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் குணம் கொண்டவை.
  • ஆனால், அவை வாழ்நாள் முழுவதும் ஒரு துணையுடன் மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடும் என்று அர்த்தமல்ல.
  • இவற்றை மோனாகாமி (Monogamy) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
  • அவற்றில் இரு வகையான மோனோகாமிகள் உள்ளன.

01. சமூகத்துக்காக ஒன்றாக வாழும் பறவைகள்:

  • சமூக சார்ந்து வாழும் பறவைகள் தங்கள் குஞ்சுகளை வளர்க்க உதவும் ஒரு "துணை" யைத் தேர்ந்தெடுக்கின்றன.
  • பெண்கள் சில நேரங்களில் மற்ற ஜோடிகளின் கூடுகளில் முட்டையிடுவார்கள்.
  • மற்ற பறவைகளுடன் அவை இனச்சேர்க்கை செய்யும்.
  • ஆனால், இந்த வகையில் ஜோடி பறவைகள் ஒர் குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக இணைந்து வாழும். பின்னர் வேறொரு துணையை தேடிக்கொள்ளும்.
  • பெரும்பாலான பறவைகள் சமூக ரீதியாக ஒரே மாதிரியானவை.

02. இனச்சேர்க்கைக்காக ஒன்றாக வாழும் பறவைகள்:

  • பாலியலுக்காக ஒன்றாக வாழும் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் ஒரு துணையுடன வாழ்கின்றன.
  • பின்னர் இனச்சேர்க்கை முடிந்த பின்னரும் சில ஜோடி பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடனே வாழ்கின்றன
  • சில சமயங்களில் ஜோடி பறவைகள் பெற்றோர்களுடனும் ஒன்றாக வாழ்கிறது.
  • அரிதாகவே அவர்கள் மற்ற பறவைகளுடன் அவைகள் இனைச் சேருவார்கள்.

அப்படி, இப்பூமியில் எந்தெந்த பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழ்கிறது என்பதை பார்ப்போம்.

01. பேசாத அன்னப் பறவைகள் (Mute Swan)

main-qimg-deb83ef2c30edf73fa46fd599d88def9-lq
  • 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது.
 
main-qimg-b70dcad5035a08167aa3d8a619db7112-lq
  • ஜோடி அன்னப்பறவைகள் ஒருவருக்கொருவர் தங்கள் நீண்ட கழுத்தை வளைத்து, இதய வடிவத்தை உருவாக்கி "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தொடர்புகொள்வது போல இருக்கும்.
main-qimg-8a8a09b79fa73b928a8a0786153911a1-pjlq
  • அன்னப்பறவைகள் சமூக ரீதியாக மட்டுமே ஒன்றாக துணையுடன் வாழ்கின்றன.

02. ஆமை புறாக்கள் (Turtle Dove)

main-qimg-5b2376725a9a90e3655f6169d0e21a75-lq
main-qimg-0befa25415f452a93bea1392cb00a387-lq
  • பொதுவாக ஆமை புறாக்களும் மற்றும் காதல், அன்பு நம்பகத்தன்மை, ஒற்றுமை போன்ற அடையாளங்களாகக் கருதப்படுகிறது.
main-qimg-e564256e81a2d3cfa715dcab25dd19bb-lq
  • ஆமை புறாக்கள் சமூக ரீதியாக மட்டுமே ஒன்றாக துணையுடன் வாழ்கின்றன.
main-qimg-758c4b9ddaa91fe8c92686a885b2a53f-lq
  • அவைகள் பாலியல் ரீதிக்காக ஒன்றாக வாழ்பவை அல்ல!

03. பனி ஆந்தைகள் (Snowy Owls)

main-qimg-7d89b34fb2a28c4e2a151b5410cd6242-lq
  • பனி ஆந்தைகளின் ஜோடிகள் வாழ்நாள் முழுவதும். ஒன்றாகவே வாழ்கின்றன.
main-qimg-0202715de27da008c238ef95d9a21989-lq
  • அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை தேய்த்து அன்பை வெளிப்படுத்துக்கின்றனர்.
main-qimg-30dc6e632c013f74daa2b79f4c7ba66a-lq
  • ஒருவருக்கொருவர் அன்பை பொழியும் ஜோடிகளாக இருக்கிறது.
  • வாழ்நாள் முழுவதும். ஒன்றாகவே வாழ்ந்தாலும் இதற்கு ஒரு விதிவிலக்கு இருக்கிறது.
  • அது உணவிற்க்காக நிகழ்கிறது, இந்த நிகழ்வில் இரண்டு பெண் ஆந்தைகள் ஒரு ஆணுடன் இனப்பெருக்கம் செய்கிறது.

 

04. கருப்பு பிணந்திண்ணி கழுகுகள் (Black vultures)

main-qimg-e0dea2d6f80e242f4e64e4a3a3ce1a16-lq
  • இந்த பிணந்திண்ணி கழுகுகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் மிகப் பெரிய நம்பிக்கைக்குரியவர்களாக உள்ளன.
main-qimg-9b28c4760a85c3df5bd151727b1ec886-lq
  • அவைகள், பெரிய விசுவாசிகளாக இருக்கிறார்கள், ஒரு கழுகு அதன் துணையை ஏமாற்றி வேறோரு துணையுடன் பாலியலுக்காக இனச்சேருவது என்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.
main-qimg-c477a860fddb374db61b1f195c739f8f-lq
main-qimg-41e738d1a71705204d6b6ea73dbf5e23-pjlq
  • ஒருவேளை, அப்படி நிகழ்ந்தால் ஏமாற்றுக்கார கழுகினை அதன் சக கழுகுகளின் ஒரு குழுவால் தாக்கப்படுகிறது.
main-qimg-aef26f059370d407d99aad47e3994e9b-lq
  • கழுகுகள் மத்தியில் மோசடி மிகவும் அரிதானது என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

 

05. ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி (Scarlet Macaw)

main-qimg-062cc08718c15bb6d24135d74bc6d98a-lq
  • ஸ்கார்லெட் மக்கா என்பது நியோட்ரோபிகல் கிளிகளின் குழுவிற்கு பெரிய கிளி வகை.
main-qimg-0edccb02327a9e436715b7eb78fd1c42-lq
  • மெக்ஸிகோ மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்விடம் உள்ளன. ஸ்கார்லெட் மக்கா ஆறுகளுக்கு அருகிலுள்ள மழைக்காடுகள், வனப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கிறது.
  • இந்த கிளிகள் வாழ்க்கை துணையாக இருக்கும் கிளியோடு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் இனச்சேர்க்கை செய்கிறனர்.
  • சில கிளிகள் சில நேரங்களில் இனப்பெருக்க காலம் வரை தனித்தனியாக வாழ்வதாக அறியப்படுகிறது,
main-qimg-23ff6691ae0cc272f6b33c4228ad422a-lq
  • பெரும்பாலும் ஜோடி கிளிகள் ஒன்றாக இருப்பதை விரும்புகிறார்கள்.
main-qimg-4a387d037fe257064f3437d09fa396d5-lq
  • அதே சமயம் இந்த கிளிகள் குடும்ப வாழ்க்கையை மதிக்கின்றன, எப்போதும் ஒருவருக்கொருவர் அன்பை பொழியும் கிளிகளாக இருக்கிறது.
  • ஒரு கூட்டில் ஒரு நேரத்தில் இரண்டு முதல் நான்கு குஞ்சுகளை வளர்க்கிறார்கள்.
main-qimg-d9359002d9e946aa9ffa6fdfbd4a10ae-lq
  • தாய், தந்தை இருவரும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள், முட்டைகளை அடைகாப்பதில் இருந்து குடஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன.
main-qimg-eefc4f32ddae54cb1d9295ca37f8e5a7-lq
  • மேலும் அவைகளின் குஞ்சுகள் தனியாக சுதந்திரமாக வாழ முடியும் வரை மீண்டும் தாய் தந்தை இனச் சேர்ககை செய்வதில்லை, இது இரண்டு ஆண்டுகள் வரை இருக்கலாம்.

06. வழுக்கை கழுகுகள் (Bald Eagles)

main-qimg-fc50f5c497c22016a7e3c86c1ca32ae5-lq
  • வழுக்கை கழுகுகள் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக ஒரே துணையுடன் வாழ்கிறது. ஆனால், இரண்டு நிபந்தனைகளுடன்.
main-qimg-6bc2acb612e8290f42bcc6c9ab52892a-lq
இரு ஜோடியுமே சேர்ந்து சந்ததிகளை உருவாக்க முடியாவிட்டால், அவைகள் பிரிந்து மற்றொரு துணையைத் தேடுகிறது. 
ஜோடியில் ஒரு ஜோடி இறந்தால், மற்றொரு ஜோடி ஒரு புதிய துணையை ஏற்க தயங்காது. 
main-qimg-6c20852065daa1eb6a47d428b554f514-lq
  • ஜோடி ஒன்றாக வாழ்ந்து இனச்சேர்கை செய்து பின்னர் பிரிந்தால் மீண்டும் அந்த ஜோடி ஒரு போதும் இணைச் சேராது.
main-qimg-279395bf60fab6ceac927fde3a7e26dd-lq
  • மேலும், வழுக்கை கழுகுகளை முற்றிலும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருத்தி என்று வாழும் பறவையாக கருதப்படுவதில்லை.

 

07. கூகை ஆந்தை (Barn owl)

main-qimg-11cb8cb1535a9c427f0fbf1bc08a3da0-lq
  • ஆந்தைகளிலே மிகவும் அழகான ஆந்தை எது என்று கேட்டால் கூகை ஆந்தை கூறலாம். மிகவும் சாதுவானதும் கூட…
  • ஆர்டிக், அண்டார்டிகாவைத் தவிர, உலகம் முழுவதும் வாழ்கின்றன.
main-qimg-00ee350356104f5e8d5d55184d0d208c-lq
  • கூகை ஆந்தைகள் பறக்கும்போது இறக்கைகளிலிருந்து ஒலி எழுவதில்லை.
main-qimg-a8d5a27d6e0f3b39cdbebcfb5b06c70b-lq
  • அழகிற்காகவும், அமைதியான குணத்திற்காகவும் இதனை மேற்கத்திய நாடுகளில் இதனை வீடுகளில் செல்ல பறவையாக வளர்க்கிறார்கள்.
main-qimg-22f6b294f752ef41738d4142d3df7116-lq
  • கூகை ஆந்தைகள் சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய குறுகிய ஆயுட்காலம் கொண்ட ஆந்தை.
main-qimg-39f721b13ac8556ffcc126f963e6467a-lq
  • ஆனால், அந்த நேரத்தை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்கள்.
  • கூகை ஆந்தைகள் இனப்பெருக்க காலத்திற்கு வெளியே கூட தங்கள் துணையுடன் பாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
main-qimg-4b0dd2879c1f92a917dc7bdbdd69bdb9-lq
  • அவைகள் ஒருவருக்கொருவர் சாய்ந்து, கன்னத்தில் தேய்த்தல் மூலம் அன்பை வெளிபடுத்துக்கின்றனர்.
main-qimg-093197aa83d491bc272b8885cb18d8fa-lq
  • அவர்களின் வெள்ளை இதய வடிவிலான முகங்கள் தோற்றத்திற்கு மட்டுமல்ல. அதன் உள்ளத்திற்கும் தான்.

08. அல்பட்ரோஸ் (Albatrosses)

main-qimg-fc62c8a66f2d4507a039a4b3e563d64c-lq
  • அல்பட்ரோஸ் ஒரு கடற்பறவை ஆகும்.
  • பெரும்பாலான அல்பாட்ரோஸ்கள் அண்டார்டிகாவிலிருந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரையிலான தெற்கு அரைக்கோளத்தில் காணப்படுகின்றன.
main-qimg-aa4c6e6e2aa18f9700132da6b893ecdb-lq
main-qimg-67752b6a5ed8b0ba14f84d2f94d51dc3-lq
  • உலகிலே மிக நீளமான இறக்கை கொண்ட பறவை என்ற பெருமையை கொண்டுள்ளது. (அதன் இறக்கையின் நீளம் 6.5 முதல் 11.4 அடி வரை வளரும்)
main-qimg-8541be8f74e48ab2320c5cab9cc53721-lq
  • அல்பட்ரோஸ்க்கு வெறும் இறக்கை மட்டும் நீளம் அல்ல அன்பிலும் அரவணைப்பிலும் துணையுடன் வாழும் காலமும் கூட நீளமே..
main-qimg-c2c717a480d8448636a84c2abbf8a98a-lq
  • அல்பட்ரோஸ் பறவை சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தேடுத்தால் பல வருடங்கள் கூட ஒன்றாக வாழும்.
  • அல்பட்ரோஸ், ஒரு துணையை கண்டுபிடிக்கவும் துணையை கவரவும் வித்தியமாக நடன அசைவுகள் செய்கின்றன.
main-qimg-376f57d250a7de4597d6ce535cbfe2f9-lq
  • ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்துவமான ஒரு நடனம் அமைப்பை கொண்டுள்ளன.
  • அல்பாட்ரோஸ்கள் துணையுடன் மிகக் குறைந்த நேரத்தை ஒன்றாக செலவிடுகின்றன.
main-qimg-16e31237307123cdfb2f2496194f524f-lq
  • அல்பாட்ரோஸ்கள் தங்கள் வாழ்க்கையை 80% க்கும் அதிகமாகமான நேரத்தை கடலில் தனிமையில் கழிக்கின்றன.
main-qimg-3ba92257c71edfdf583d4ccca26f3ce8-lq
  • இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே நிலத்திற்கு வருகின்றன.
main-qimg-c617ce787e6794cbaebc00e0ca13756e-lq
  • ஆனால், அவைகள் ஒன்றாக இருக்கும் நேரம் பாசத்தாலும், அரவணைப்பிலும் நிறைந்திருக்கும்.

 

பாலூட்டிகள்

09. சாம்பல் ஓநாய்கள்

main-qimg-a4b842f8bfd362da63a4411b8f9be3e2-lq
  • சாம்பல் ஓநாய்கள் கூட்டமாக சமுகம் சார்ந்த வாழக்கூடிய மிகவும் புத்திசாலித்தனமான பெரியநாய் இனமாகும்.
  • வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றன.
  • அவைகள், சமூக அமைப்பு மற்றும் நடத்தை விதிகளைக் கொண்டுள்ளது.
main-qimg-8ee25f2f33d65d10e4443119ce13197c-lq
main-qimg-2befb33955e28df524c597dbf08450c9-lq
  • ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 6 முதல் 10 வரை உறுப்பினர்கள் இருக்கின்றன.
  • அதிகபட்சமாக ஒரு குடும்பத்தில் 30 வரை கூட உறுப்பினர்கள் இருக்கிறது.
main-qimg-0ab63f0f8e4e0845d634ebb71a3f5f0f-lq
  • ஒரு கூட்டத்தின் தலைவர்கள் ஒரு ஆண் ஓநாய் மற்றும் ஒரு பெண் ஓநாய்.
  • இந்த இரண்டு ஓநாய்களும் கூட்டத்தில் உள்ள மற்ற அனைத்து ஓநாய்களையும் விட ஆதிக்கம் செலுத்துகின்றன.
main-qimg-a4b065b4109f3f6559f930ecb379a363-lq
  • கூட்டத்தில் தலைவன், தலைவி மட்டுமே இனப்பெருக்கம் செய்து சந்ததியினரை உருவாக்கின்றனர்.
main-qimg-e7d64930add5a21e8a98e5a0aff933aa-pjlq
  • மேலும், அவை இரையை கொல்லப்படும்போது தலைவன், தலைவியே முதலில் சாப்பிடுகின்றன.
main-qimg-fa11f14063f77edda6c69c70ca9e2ca0-lq
  • இந்த ஜோடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கிறது.
main-qimg-61e9f1797fd0915651bf41e24f19510e-lq
  • இந்த சாம்பல் ஓநாய்கள் தங்கள் துணைகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
  • ஒருபோதும் முறை தவறி நடப்பதில்லை. நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் துணைகளுக்கு உண்மையாகவே இருக்கின்றன.
main-qimg-656686ad4c16cea1690660458e7a027b-lq
  • ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் வாழும் சிறந்த பாலூட்டி ஆகும்.

 

10. கிப்பன் (Gibbon)

main-qimg-7e5cff10ed3d7ffdf08eb2d5632767d5-lq
  • கிப்பன் ஓர் சிறிய ரக மனித குரங்குகள்.
  • கிப்பன்கள் பெரிய மனித குரங்குகளிலிருந்து வேறுபடுகின்றன.
  • வடகிழக்கு இந்தியாவில் தொடங்கி தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில், சீனாவிலிருந்து மலாய் தீபகற்பம், பர்மா மற்றும் வடக்கு சுமத்ரா வரை கிப்பன்கள் வாழ்கின்றன.
  • பெரும்பாலும், வெப்பமண்டல மழைக்காடுகளில் கிப்பன்கள் தங்களது இருப்பிடத்தை கொண்டு உள்ளது.
main-qimg-921c11769cef799a0f4c18f9afd27e77-pjlq
  • கிப்பன்கள் மிகவும் அறிவார்ந்த மனித குரங்குகள். மேலும், அவர்கள் பல்வேறு ஒலி எழுப்பி வழியாக அவைகளுக்குகிடையே தொடர்பு கொள்ள முடிகிறது.
main-qimg-e62f57f28fd9f733f5dfcf9b132ccf16-lq
  • இந்த சிறிய மனித குரங்குகள் மனிதர்களின் உறவுகளை பிரதிபலிக்கும் உறவுகளைக் கொண்டுள்ளன.
  • கிப்பன்கள் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட நிலையான குழுக்களாக வாழ்வதாக கருதப்படுகிறது.
main-qimg-61b0a748d6ed07a5a67ec5f7cb46e680-lq
  • அதில் தம்பதிகள் ஏமாற்றுகிறார்கள், பிரிந்து செல்கிறார்கள், “மறுமணம் செய்து கொள்கிறார்கள்.
  • பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் ஒரு டூயட் பாடுகின்றன. ஆணும் பெண்ணும் இணக்கமாக இருக்கிறன.
main-qimg-d567e5b4ea2f1fc02cef9541c5cfe701-lq
  • ஒன்றாக இருக்கும் கிப்பன் ஜோடிகளுக்கு, அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகின்றன.
  • மேலும், தங்கள் குட்டிகளை வளர்க்க இரு கிப்பன்களும் சமமாக உதவுகிறன.

_____________________________________________________________________________________

மனிதர்களிலும் கட்டிய மனைவிக்கு துரோகம் இழைக்காமல் வாழும் கணவன்மார்களும் இருக்கிறார்கள்.

கணவனுக்கு துரோகம் இழைக்காமல் வாழும் மனைவிமார்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் வாழும் இதே பூமியில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் சில பறவைகளும், விலங்களும் உள்ளதில் ஆச்சரியம் இல்லை.

 

இறைவன் எழுதிய அழகான மென் பொருள் தான் பிரச்னை.

பிரச்னை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை.

  • 🤔 ஒரு பறவை இடத்தில் கண்ட விசித்திரமான விஷயம் என்னவென்றால் அது வெகு இயல்பாக இருக்கிறது.. (அன்றும், இன்றும், என்றென்றும்) 🤗 நம் மனிதர்களைப்போல குணம் மாறவில்லையே இதுவே விசித்திரம் தானே ! !!
  • முக்கியமா புறாக்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் தன் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிவது.. தன் இருப்பிடத்திற்கு வந்து சேருகிறது.
    • அதுமட்டுமில்லை எல்லாம் பறவைகளும் அப்படித்தன் போல ஏன் இந்த மனிதன் மட்டும்தான் பாரம்பரியத்தை மறுக்கிறான்???
  • 🤔நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது தன்னிடம் எதுவும் இல்லை என்றாலும் கூட.. . ஒரே ஒரு மூலதனமாக இருக்கும் சிறகுகளை வைத்து மேலே பறக்கிறது.. தன் உணவைத் தேடுகிறது.
 

விலங்குகள், பூச்சிகள், பறவைகள் மட்டும் தானா? ஏன், செடி, கோடிகளுக்கு உயிர் இல்லையா? மாணிக்கவாசகப் பெருமான் தனது சிவபுராணத்தில் கீழ்கண்ட பிறவிகளை பட்டியலிடுகிறார்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

*விருகமாகி = மிருகமாகி என்பதன் திரிபு. இதை மிருகங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நமது கர்மவினைக்கேற்ப பிறவிகள் அமைகின்றன. ஒவ்வொரு பிறவிக்கும் அதற்கேற்ற அறிவுடன் இறைவன் படைக்கிறார். ஆறாம் அறிவுள்ள மனிதனைத் தவிர்த்து.

 

இதில் எந்த வேறுபாடும் இல்லை. மிருகங்கள் பல்லை காட்டுவதில்லை சீறும், ஆனால் மகிழ்ச்சியையும் மனிதன் பல்லை காட்டி தான் வெளிப்படுத்த முடிகிறது. அந்த வகையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த தனி தனி முறைகளை கொண்டுள்ளது. நாய் வாலை ஆடிக்கொண்டே குழைந்து வந்து மூக்கால் முட்டியும், நக்கியும் வெளி படுத்தும், பூனை தன் முழு உடலையும் உரசி வெளிப்படுத்தும்.

main-qimg-3262257fde9333d696217da9ba2eb65a
main-qimg-2918f90b3db49be29330cce631f59039-lq

இதில் சந்தேகமே வேண்டாம்! விலங்குகளிலும் உண்டு.

இயற்கையில் உயிரினங்கள் என பொதுவாக எடுத்துக்கொண்டால் பாலினம் நிறவுறுக்கள்(Chromosome) மூலமாக மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அதற்கென சில கோட்பாடுகள் உள்ளன. 

  1. நிறவுறு கோட்பாடு(Chromosome Theory)
  2. பலவினப்புணரியுண்மைகோட்பாடு (Heterogamy Theory)
  3. மரபணு சமநிலைக் கோட்பாடு(Genic Balanced Theory)
  4. இயக்குநீர் கோட்பாடு(Hormone Theory)
  5. ஃப்ரீமார்டின்(கால்நடைகளில் மட்டுமே நடைபெறும்)
  6. சூழ்நிலையின் அடிப்படையில் பாலினம் நிர்ணயித்தல் கோட்பாடு
  7. ஆண் ஹாப்ளாய்டி கோட்பாடு(பூச்சிகளில் மட்டும்)
 

கற்றுக்கொண்டே இருந்தால் மட்டுமே எவ்வித உயிரினமாயினும் இவ்வுலகில் வெற்றி காண இயலும். கற்றலின் போது மனிதர்கள் கற்றுத்தராத பல புதிய சாகசங்களைப் புரிகின்றன விலங்குகள்.

எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வினைக் காணலாம்.

ஒரு கடல்வாழ் உயிரினக் காட்சி சாலையில் (marine aquarium) உள்ள டால்ஃபின்களுக்கு (நீர்வாழ் பாலூட்டிகள்) பயிற்சி அளித்துள்ளனர். அதாவது காகிதங்களைத் தண்ணீருக்குள் போட்டு விடுவர். மூழ்கும் காகிதங்களை எடுத்து வரும் டால்ஃபின்களுக்கு மீன் வழங்கப்படும்.

பொதுவாக உயிரினங்களைப் பழக்க அவற்றிற்குண்டான உணவுப்பொருட்களைத் தருவது பொதுவான செயல்பாடு என்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லையே எனலாம்.

  1. மூளை கண்ணால் காணக்கூடியதாக உள்ளது. மனம் கண்ணால் காணமுடியாதது மட்டுமன்றி "மனதாலும்" நினைத்து பார்க்க முடியாததாக உள்ளது
  2. மனது பற்றிய சாஸ்திரம் மூளை பற்றிய சாஸ்திரம் போல பல நூறு மடங்கு பெரியது
  3. மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் செய்தல் போன்றவை மூலம் பயிற்சி அளிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் மூளையில் கண்கூடாக தெரிகிறது. இறுதியில் இணைத்துள்ள படத்தில் காணலாம்.
  4. மனம் ஆற்றல் கொண்டது என்றால் அதற்கான பல தடயங்கள் மூளையில் காணப்படும்.
  5. மூளையின் பின் பகுதியில் உள்ள முகுளம் (modulla oblangata ) விண்ணிலிருந்து வரும் அலைகளை கிரகித்து கொள்ளும் ஒரு கிரகிப்பாளர் ( receiver ) ஆக செயல்படுகிறது. துவக்குவது மனம் செயல்புரிவது மூளை
 

மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மனிதனைப்போல ஞாபக சக்தி உண்டா?

சற்றும் யோசிக்கும் விதமான கேள்விதான். எளிதாக பதில் அளிக்க வேண்டுமானால் மூளை என்ற ஒன்று இருக்கும் அனைத்து உயிரிக்கும் ஞாபக சக்தி என்ற ஒன்று இருக்கும். ஆனால் சில விலங்குகளில் அவை தனித்தன்மை பெற்றிருக்கும்.

உதாரணமாக பெரிய பாலூட்டிகளில் யானையை எடுத்துக்கொள்ளலாம். பாலூட்டிகளிலேயே அதிக ஞாபக சக்தி கொண்டதென்றால் அது யானை ஆகும். இன்னும் சில பாலூட்டிகளும் இருக்கின்றன. எதனால் இந்த பாலூட்டிகளுக்கு ஞாபக சக்திஉள்ளது என்று கூறுகிறோம் என்பதையும் இந்த பதிவில் காணலாம்.

பறவைகளை நாம் எடுத்துக் கொள்வோமானால் அவற்றில் ஞாபக சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு 

  • விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவான சராசரி உடல் வெப்பநிலை 98.6 ° F. இது சிலநேரங்களில் வேறுபடலாம். பிற பாலூட்டிகளின் வெப்பநிலை 97 ° F முதல் 104 ° F வரை இருக்கும். பறவைகள் சராசரியாக 105 ° F உடல் வெப்பநிலையைக் கொண்டுள்ளன.
  • மீன்கள் குளிர் இரத்தம் கொண்டிருப்பதால் அவை நீந்தக்கூடிய நீரில் இருக்கும் வெப்பநிலையைக் கொண்டிருக்கும் உதாரணத்திற்கு 40 ° F நீரில் நீந்திய ஒரு மீன் உடல் வெப்பநிலை 40 ° F க்கு மிக அருகில் இருக்கும். 60 ° F நீரில் உள்ள அதே மீன் உடல் வெப்பநிலை 60 ° F க்கு அருகில் இருக்கும்.
  • பெரும்பாலும் பறவைகள் மற்றும் பாலூட்டிகளாக இருக்கும் சூடான இரத்தம் கொண்ட விலங்குகள், எப்பொழுதும் நிலையான உடல்

நிறைய முறை கூடி கட்டி சரணாலயமாக கூட இருந்துள்ளது. கவலை அடைவதெல்லாம் இயற்கை. நம் தலையில் கவலை என்ற பறவை கூடு காட்டுகிறது என்றால் நாம் தானே அதற்கு இடம் கொடுக்கிறோம் என்று அர்த்தம். அதாவது நாம் அந்த அளவிற்கு பலவீனமாக உள்ளதாக அர்த்தம்.

எல்லாவற்றையும் சமாகவே பார்க்கவேண்டும். எதுவுமே நிரந்தரம் இல்லை. கவலையோ இன்பமோ குறிப்பிட்ட காலத்திற்கு இருந்து விட்டு நம்மை விட்டு விலகி விடும். இந்த எண்ணம் கொண்டிருந்தால் கவலையே நம்மிடம் வராது. அப்படியே வந்து விட்டால் நான் என்ன செய்வேன் என்று கூறுகிறேன்.

என் மாமா பிள்ளைகள் தான் எனக்கு முதல் மருந்து. பொதுவாக எல்லோருக்குமே குழந்தைகளை பார்த்தால் மனம் கவலைகளை மறந்து அமைதி

இதை இரண்டு விதமாக செய்யலாம்… எண்ணத்தின் சிதறல்கள் பின் ஓடி ஒற்றை வேரை பிடித்திட அவை ஒன்றுபடும் உங்களுக்கு மிகவும் பிடித்த செயலை செய்வதின் மூலம்..

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் இருக்கிறது என்பது உண்மையா?

மிருக நிலையிருந்து மனிதனாக மாறியவர் தானே மனிதன்

விலங்குகளுடன் ஒப்பிடும்போது நம்மை "மனிதனாக" ஆக்குவது எது?

நாணம் யோசிக்கும் திறன்.

சமீபத்தில் நடந்த சம்பவம். ஸோமோடோ டெலிவரி செய்பவர் தன்னை தாக்கியதாக வைரலான வீடியோ.

main-qimg-72408aa41291d2a07e8d5c38f2170cf1-lq

இப்போலாம் தும்மல் வந்தா கூட வீடியோ எடுத்து போட்டுடறாங்க. அதையும் என்ன ஏதுன்னு தெரியாமல் வைரலாகிடுறாங்க.

நமக்கே தெரியும் டெலிவரி பண்ண வரவங்கலாம் எவ்வளவு பொறுமையா நடந்துப்பாங்கன்னு. ஏன்னா ஒரு சின்ன கம்ப்ளென்ட் கூட அவங்களுக்கு வேலை போக காரணமாயிடும்.

அப்படியிருக்கும் போது தன்னை அடிச்சதா புகார் பண்ணி வீடியோ வெளியிட்டு ஒருத்தவங்க வாழ்க்கையை கெடுக்குறதுல என்ன தான் சந்தோஷமோ தெரியலை.

எப்பவுமே ஒரு பக்க கதையை கேட்டு பொங்குற நம்ம மக்களுக்கு. அந்த டெலிவரி செய்ய வந்தவர் பக்க கதையை கேட்டோன தான் முழு உண்மையும் புரியுது.

குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

அழகாக ‌‌selfie- க்கு குடும்பதுடன் போஸ் கொடுப்பது

#அறிவியல் வளர்ச்சி

main-qimg-d135041aebf8202d9dafc1ae1dfeda00-lq
 

விலங்குகளும் சிந்திக்கின்றன ஆனால் மனிதனைவிட அதிகமான சிந்தனையிருக்குமானால் என்றோ உயிரியியலில் மனிதர்களுக்கு மேற்படியில் இருந்திருக்கும். ஆனால் எல்லாவிலங்குகளும் சிந்திக்கின்றனவா என்பது சந்தேகம்தான்.

தன்னுடன் வந்தவர்கள் பொறியில் மாட்டிக்கொண்டாலும், உணவே முக்கியமென அடிப்படை தேடலிலுள்ள எலிகள், இதில் 99% மனமே இல்லையென லாம்.

காகங்களுக்கு சிலகாலம் உணவினை தொடர்ந்து அளிக்கும்போது இவனை கண்டால் அதன் கரைதலில் வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றேன், மேலும் கீழே U வடிவ குழாயிலிருந்து உணவினை எடுத்து உண்ணும்போது, காகமானது முந்தைய செயலினால் விளைந்த வினையின் விடையை நினைவில்கொண்டு இது சரியா, இது தவறா என சிந்திக்கும்போது 

 

தாங்களும் வாழாமல், அவனுக்குச் செல்லப்பிராணிகளாகிய படைக்கப்பட்ட எங்களையும் கொடுமைப்படுத்திச் சாகடிக்கிறான். இவனுக்கு எதுக்கு ஆறறிவு என்று தான் திட்டும்.

ஒரு ஆங்கில மேற்கோள்.

main-qimg-28e5ebf982954a45d4b6b9efca0a4a53-lq

இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

தங்களது தேவைக்கேற்ப சங்கேத ஒலிகளை எழுப்பும் திறமை எல்லா பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் உண்டு. அவர்களை கூர்ந்து கவனித்தால் வித்தியாசங்களை உணரலாம், ஆனால் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆபத்தை உடனடியாக பறவைகள் உணர்ந்து, தெரிவித்து தங்களை காத்துக் கொள்ள பறந்து விடுவர். புலிகள் எதிரிகளைக்கண்டு உறுமுவதற்கும் தன் துணையை அழைப்பதற்கும் வேறுபாடு இருக்கும். தங்களது பலவிதமான தேவைகளை அவர்கள் தங்கள் குரல் மூலமே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

எழுத்தில்லா மொழிகள்!

முதலில் பதிலளிக்கப்பட்டது: மனிதன் தன் பிள்ளைகளை நேசிக்கும் அளவிற்க்கு எந்த விலங்கு(அ) பறவை அதன் குட்டி களை நேசிக்கிறது?

இக்கேள்வி என்ன பதிலை எதிர்பார்க்கிறது என்பது தெளிவாகத்தெரியவில்லை.மனிதர்களைப்போல் எப்போதுமே தன் பிள்ளைகளைப்பராமரிப்பதுபற்றியா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நன்கு பராமரித்துவிட்டு பின்பு பிரிந்து சென்றுவிடும் உயிரினங்கள் பற்றியா?

ஏனப்பா நீங்களெல்லாம் தவறு செய்துவிட்டு எங்கள் பெயரை கொண்டு திட்டுறீங்க ?

எங்களை ஏன் அவமானப்படுத்துறீங்க ?

என்று கேட்கும்.

நாயே ,

எருமை மாடே

பன்றி

கழுதை

குரங்கே

என்றெல்லாம் திட்டவைத்து எங்களை தரமிறக்காதீர்கள் என்று கூறும் .

இதனை பார்த்தபிறகும் நம்பமுடியுமா ?

அல்லது குரங்கே !என்று யாரையேனும் திட்ட முடியுமா ?

உங்களை பாராட்டியே தீர வேண்டும். அவைகளுக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை உள்ளது என்பதை மறந்து மனிதன் சுயநலமாக செயல்படுகிறான்.

ஒரு சுனாமியில் நாம் நிலை குலைந்து போகிறோம் மீன்களுக்கு தினம் தினம் சுனாமி.

யார் சிந்திப்பது ?

பள்ளியில் பூத்திருக்கும் கலியாணமுருங்கைகள். மாலை மூணு மணி அளவில் வரும் தேன்சிட்டுகள். கட்டைவிரல்பெரியது. மயிலிறகு நிறம். பயங்கரசத்தம். சின்ன மூர்த்தி பெரிய கீர்த்தி.

கடவுள் நம்பிக்கைக்கு மதம் வேண்டாம். மத நம்பிக்கைக்குக் கடவுள் கட்டாயம் இல்லை.

ஏர் இழுக்கச் செய்து, வண்டி இழுக்கச் செய்து, பொதிசுமக்கச் செய்து, வித்தைகள் காட்டச் செய்து, அவற்றின் குட்டிகளுக்குரிய பாலைக் கறந்து, அவற்றைக் கொன்று புலாலாக்கி உண்டு, எனப் பல வகைகள்!

பறவைகள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒரு விதம்

பயங்கள் ஒரு விதம்

அனைத்துமே தனி விதம்

1: கொக்கி குமாரு தெரியுமா உங்களுக்கு, அதாங்க நம்ம கருடன் (பால்ட் ஈகில் bald eagle) அது நினைச்சா நம்ம கைப்புள்ள அதோட நகத்த கொக்கிப் போட்டு மேல இருந்து கீழ வரைக்கும் கொண்டு வர முடியும். அதால நம்மளோட எலும்புகளும் முழிக்க முடியாது ஆனா நாம ரத்தம் சிந்திய செத்துருவோம். அதோட கை நகப்புறி நம்மளோட பிடியை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என அதுக்கு அவ்வளவு பெரிய வளைந்த நகங்கள் இருக்கு.

main-qimg-5515f1e1db02a122bb79405c44593fac-lq

(இந்தப்படத்தில் இருக்கிறது ஒரு தங்க கழுகு இது அமெரிக்காவோட தேசிய பறவையான பால்ட் ஈகிள் இல்ல ஆனா எல்லாமே ஒரே அளவுக்கு இருக்கும்.)

 

இரண்டு முக்கிய வேறுபாடுகள்:

  1. தெய்வம் என்பது லக்ஷ்மீ-நாராயண ஜோடி- வடகலை; தெய்வம்-நாரணன் மட்டுமே, லக்ஷ்மி துணைவி-தென்கலை;
  2. தெய்வத்தைச் சரண்புகுவது பக்தன் பொறுப்பு-வடகலை; பக்தனைத் தன் சரணத்தில் விழச் செய்வது தெய்வத்தின் பொறுப்பு-தென்கலை

ஒற்றுமை: ஶ்ரீவைணவம்

நான் சிறுவனாக இருந்த போது என்னை இருமுறை அண்டக் காகம் நடு மண்டையில் குத்தி (அ) கொட்டி இருக்கிறது. நல்ல வலி. 5 நிமிடத்தில் சரியாகி விட்டது.

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்.

அன்பு ஆசை இறுக்கம் ஈர்ப்பு உற்சாகம் ஊக்கம் எளிமை ஏக்கம் ஐயம் ஒழுக்கம் ஓதல் ஔடதம் ஃகணம்.

நிர்வகிக்க திறனற்றால் நிர்க்குமாம் பூலோகம்.

என்மீது போடப்பட்டகோடுகளை அழியுங்கள் கதறுகிறது பூமீ மனிதர்களைப்பார்த்து…

தவளை தன் தகவல் தொடர்புகளை சத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. அதிகமாக இனப்பெருக்க காலத்தில் தன் இணையுடன் கூடுவதற்காக ஒருவித சத்தத்தை எழுப்புகிறது. இந்த சத்தத்தை கொண்டு பாம்பு தவளை இருக்கும் இடத்தை எளிதாக கண்டு கொண்டு அதனை வேட்டையாடுகிறது. இதையே முன்னோர்கள் பழ மொழியாக கூறி வைத்தனர் இப்படி வச்சுக்கலாம்.

பாம்புக்கு காது கிடையாது எனில் 'தவளை எப்படி தன் வாயால் கெடும்" சொல்லுங்க.?பிளீஸ்

சத்தத்தைக் கிரகிக்கும் உணர்வு இருக்கலாம்.

இராமாயண விவரிப்புப்படிக் காண்கையில் கும்பகருணனுக்கு மாட்ட விலங்கு தயாரித்தால் அதுதான் பெரியதாக இருக்கும் என எண்ணுகிறேன்!

அறிவினால் அவைகள் எவ்வாறு வெவ்வெறு சமயங்களில் நடந்து கொள்கின்றன என்பதி புறிந்துக்கொள்ளமுடியும். ஆன்பினால் அவைகளை தன்வயப்படுத்தி கட்டுப் படுத்த முடியும்

Edited by Paanch
தேடலில் கிடைத்ததை அப்படியே பதிந்துள்ளேன். தேவையற்றவகளை நீக்கிச் சில எழுத்துப் பிழைகளை நீக்க முயன்றுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.