Jump to content

கட்டுநாயக்க விமான நிலையத்தில், போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில், போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து அவர் திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.கே.ஏ.ஏ.எஸ்.கனுகல தெரிவித்தார்.

அதன்படி, நேற்று  நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை உரிய கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக திரு.கே.ஏ.எஸ்.கனுகல தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1290803

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன

எந்தவொரு தலைவரும்... நாட்டைவிட்டு, வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன.

எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் காணொளிகளில் உண்மையில்லை என அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியிருப்பார்கள் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1290850

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம்

  • பரணி தரன்
  • பிபிசி தமிழ்
22 நிமிடங்களுக்கு முன்னர்
 

பசில் ராஜபக்ஷ

 

படக்குறிப்பு,

விமான நிலைய பட்டுப்பாதை சிறப்பு ஓய்வு அறை வளாகத்தில் பசில் ராஜபக்ஷ, நாள்: 11-07-2022

இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது. இவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தம்பி ஆவார்.

மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்த தகவலை பிபிசியிடம் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனால், விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். அவர் அந்த வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.

இதேவேளை பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

பயணிகள் போராட்டம்

 

பசில் ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில், பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று இரவு முதல் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் சேவை வழங்குவதில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இதனால் இன்று காலை இந்த முனையத்தில் பயணிகள் சிறப்புச் சலுகையுடன் பயண நடைமுறைகளை நிறைவேற்ற வாய்ப்பின்றி பிசினஸ் வகுப்பு பயணிகள், சாதாரண வகுப்பு பயணிகள் போல வரிசையில் காத்திருந்து விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசினஸ் வகுப்பு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக பிரத்யேகமாக இந்த 'சில்க் ரூட் பேசஞ்சர் கிளியரன்ஸ் டெர்மினல்' என்ற பெயரிலான தனி பாதை மற்றும் விரைவு விமான பயண நடைமுறையை நிறைவேற்றும் வசதி செயல்பாட்டில் உள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இது குறித்து இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை அதிகாரிகள் சங்கத் தலைவர் கே.ஏ.ஏ.எஸ். கனுகலா கூறும்போது, "நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை, நெருக்கடி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தலைவர்கள் மிகப்பெரிய அளவில் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு எங்களுடைய சேவையை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளோம்," என்றார்.

பட்டுப்பாதை வசதி எப்படி இருக்கும்?

 

இலங்கை விமான நிலையம்

பட மூலாதாரம்,BIA SRILANKA

  • இந்த வசதியை பயன்படுத்த நாட்டின் அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதல்வர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் தகுதி பெறுவார்கள். இவர்களுக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும்.
  • அதே சமயம், பிசினஸ் வகுப்பு பயணிகள் கட்டண முறையிலும் விமான நிறுவனங்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டு திட்டத்தின் கீழும் அவற்றின் கவனிப்பில் பட்டுப்பாதை முனைய சேவையை வழங்கலாம்.
  • இது தவிர, இந்த சேவையை பெற விரும்பும் பயணி ஆன்லைனில் கிரெடிட் கார்டு அல்லது டிபார்ச்சர் சில்க் ரூட் லவுஞ்ச் அல்லது வருகை முனையத்தில் உள்ள வெளிப்புற கவுன்ட்டரில் இந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்தி வசதிகளை அனுபவிக்கலாம்.
Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

  • சோதனை நடவடிக்கையின்போது ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • தற்போது புறப்பாடுக்கான பட்டு பாதை ஓய்வறையில் குடியேற்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை.
  • அதேசமயம், வருகை பட்டுப்பாதை வழியாக வெளியே வர அனுமதிக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நிலையத்துக்குள் நுழைந்ததுமே அவரை இந்த முனையத்தின் சேவைப்பிரிவு பிரதிநிதிகள் வரவேற்று அழைத்துச் செல்வர். இன்னொரு குழு பயணியின் உடைமைகளை துரிமாக எடுத்து வந்து பயணிகளிடம் ஒப்படைக்கும். இடைப்பட்ட நேரத்தில் சிறப்பு ஓய்வறையில் பயணிகள் தங்கி இளைப்பாறவும் அவர்களை உபசரிக்கவும் பிரதிநிதிகள் இருப்பார்கள். விமான நிலையத்தில் இருந்து அந்த பயணிகள் வாகனத்தில் புறப்படும்வரை அவர்களுடன் ஒரு பிரதிநிதி பிரத்யேகமாக இருந்து வழியனுப்பி வைப்பார்.

மக்களே உருவாக்கிய தணிக்கைச்சாவடிகள்

 

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தமது விலகல் கடிதத்தை இன்றே வழங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் அந்த மாளிகைகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது தவிர, நாட்டின் அரசியல் தலைவர்களில் குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தினர் யாரும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக போராட்டக்காரர்கள் தற்போது தாங்களாகவே பல முக்கிய பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ளூர் போலீஸாரும் உள்ளனர்.

இந்த நிலையில், பசிலின் அண்ணன்களான முன்னாள் பிரதமர் மஹிந்த, ஜனாதிபதி கோட்டாபய ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பில் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தப் பின்னணியில் ஜூலை 13ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கெனவே கூறியது போல முறைப்படி பதவியில் இருந்து விலகினால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சித்த தலைவர்களுடன் பேசிய பிறகு நாடாளுமன்றத்தில் ஜூலை 20ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62131361

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

பசில் ராஜபக்சவின் விமானச் சீட்டு.   கொழும்பு  ---  டுபாய்  ---  வாசிங்டன். 
நேற்று, விமான நிலையத்தில் இருந்து பசில் திருப்பி அனுப்பப் பட்டார். 

 👉   https://www.facebook.com/100009615912887/videos/pcb.3147311598932673/2032978690231223  👈

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/  
    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
    • சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
    • நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன்  They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.  இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும்.  அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.