Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுகிய கால நிகழ்வுகளின் அடிப்படையில் நீண்டகால உத்திகளைத் தீர்மானிக்க முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய கால நிகழ்வுகளின் அடிப்படையில் நீண்டகால உத்திகளைத் தீர்மானிக்க முடியாது

செய்தி ஆய்வு

[திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 14:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்குத் தம்மைத் தயார்படுத்தியுள்ளார்கள் எனவும், எந்தக் களமுனைகள் அவர்களது இலக்காக அமையலாம் எனவும் களமுனைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் தகவல்கள் மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டுள்ள படைத்துறை ஆய்வாளர்கள் இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கொழும்பின் ஆங்கில மற்றும் ஒருசில சிங்கள ஏடுகளும் கூட இந்த வேலைகளைச் செய்து வருகின்றன.

கடந்த கால புலிகளின் தாக்குதல் வரலாறுகளை தெளிவாகப் படித்திருந்தால் புலிகளின் தாக்குதல் முனைகள் இதுதான் எனக்குறிப்பிட்டு ஊகங்களை வெளியிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உண்மையில் கொழும்பின் ஆய்வாளர்கள் நன்றாக மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்பதை அண்மைக்காலமாக கொழும்பு ஏடுகளில் செய்தி ஆய்வுகளைப் படித்திருப்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு வாரம் மன்னாரில் புலிகள் தாக்குதல் நடத்த தயார் என்று எழுதுகிறார்கள். மறு வாரம் மணலாறில் தாக்குதல் நடத்த தயாராகிறார்கள் என்று எழுதுகிறார்கள். இதைவிட புலிகள் பற்றி உண்மைத் தகவல்கள் போல புரட்டுக்களை அவிழ்த்து விடுகிறார்கள்.

குறுகிய கால இராணுவ வெற்றிகள், தோல்விகள், இழப்புகளை வைத்துக்கொண்டு புலிகளின் பலத்தை மதிப்பிட முடியாது. இதற்கு யாழ்ப்பாணத்தை புலிகள் இழந்தமையும், முல்லைத்தீவு வெற்றியும் புதிய பலம் பெறலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

வன்னியின் அரைவாசிப் பகுதியை இராணுவம் 26 மாத நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றியபோது, அது புலிகளுக்குப் பாரிய பின்னடைவாகவே கருதப்பட்டது. ஆனால், இவ்வாறு கைப்பற்றப்பட்ட பகுதிகளை சில நாட்களில் புலிகள் கைப்பற்றினார்கள். அன்றைய இராணுவத்தின் குறுகிய வெற்றியை புலிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

இவ்வாரம் கூட கொழும்பிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ் நாளேட்டின் வாரப்பதிப்பில் படைத்துறை ஆய்வு எழுதும் ஒருவர், புலிகள் அடுத்த தாக்குதல் இலக்காக இருக்கலாம் என வடக்கில் உள்ள எல்லாக் களமுனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்படியானால் எந்தமுனையில் தாக்குதல் தொடங்கினாலும் நான் முன்னரே சொல்லிவிட்டேன் என்று நாளை தன்னை சிறந்த படைத்துறை சாத்திரக்காரனாக காட்டுவதற்காக அவர் இவ்வாறு எழுதுகின்றார் என்ற கேள்வி எழுகின்றது. இதைவிட புலம்பெயர் நிலையில் ஒரு ஆய்வாளர் புதிய உத்தி எழுத்து என்று குழப்பல் விளையாட்டுக் காட்டுகிறார்.

எல்லோரும் களமுனை நிலைமை தெரியாமல் புலிகளை வைத்து தம்மை நிலைநிறுத்த முனைகிறார்கள். ஆனால் முதலில் கள நிலைமையின் யதார்த்தத்தை, புலிகளை விளங்கிக்கொள்ள முயல வேண்டும். சிறிலங்கா அரசை இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அரசியல்வாதிகள். காசு கொடுத்தால் கூட உண்மைகளை அவிழ்த்து விடுவார்கள். ஆனால், விடுதலைப் புலிகளை அவர்கள் தாக்குதலுக்காக வகுக்கும் வியூகங்களை புரிந்துகொள்வது கடினம்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 11 இல் முகமாலை மோதல் தொடங்கிய நிலையில் பல ஊடகங்கள், புலம்பெயர் ஊடகங்கள் கூட தமிழர்களுக்கு உண்மைகளை தெரிவிக்கவில்லை. புலிகள் முகமாலைப் படையினரின் முதல் அரணை மட்டும் தாக்கி தாக்குதலை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தனர். அதனை புலிகள் தெளிவாக செய்தியாக வெளியிட்டிருக்க. புலிகள் அங்கு இங்கு நிற்கிறார்கள் என்று கைக்கணக்கில் செய்திகளை கொடுத்தார்கள். புலிகள் உண்மைகளை மறைக்கிறார்கள் என்றெல்லாம் செய்தியாளர்கள் புருடா விட்டார்கள்.

உண்மையை புலிகள் வெளியிட்ட நிலையில் ஊடகங்கள் தனி ஓட்டங்களை நடத்தின. இதனால் தமிழ் மக்கள் குழம்பிப்போனார்கள். தாயகத்தில் நிலைமைகளின் உண்மையை தமிழ் மக்கள் தெரிந்திருந்ததால் தெளிவாக இருந்தார்கள். ஆனால் படைத்துறை ஆய்வாளர்களும், செய்தியாளர்களும் வெளியில் இருக்கின்ற தமிழர்களை குழப்பி விட்டார்கள். இப்போது மீண்டும் அப்படியான குழப்பம் தமிழ் மக்களிடம் மற்றும் ஏனையவர்களிடம் ஏற்படுத்தப்படுகின்றது.

இது விடுதலைப் புலிகள் பற்றிய கருத்துக் கட்டி வளர்ப்பு என்பதை விட கருத்தைச் சிதைக்கும் முயற்சியாகவே இருக்கும். ஏனெனில் புலிகள் அங்கு தாக்குவார்கள் இங்கு தாக்குவார்கள் என்று தெரிவிப்பதானது. புலிகள் அவ்வாறு தாக்காமல் விடும்போது புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற உணர்வைத்தான் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் புலிகள் பற்றிய நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு உத்தியாகவே இது பயன்படுத்தப்படுகின்றது.

உண்மையில் புலிகளை சரியாகப் புரிந்துகொண்ட ஆய்வாளராக இருந்தால் புலிகள் எப்போது எங்கு எப்படித்தாக்குவார்கள் என்பதுதான் புலிகளின் தனித்துவ உத்தி எது என்பது புரியும். புலிகள் எதிர்வு கூறல்களுக்குட்பட்டு செயற்படுபவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். செய்திகளையும் குறுகிய கால நிகழ்வுகளையும் வைத்துக்கொண்டு நீண்டகாலப் புலிகளின் நகர்வுகளை தீர்மானிக்கமுடியாது.

ஆக புலிகளின் தாக்குதல் இலக்குகள் என்பதை கணிப்பிட முடியுமா என்பதை புலிகளின் வரலாற்றை தெளிவாக புரிய வேண்டும்.

புதினம்

புலிகளின் நில மீட்புத் தாக்குதல்கள் நடக்கப்போது என்பது உறுதி. அதை எங்கே, எப்போது, எப்படி தொடக்குவது என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போவது புலிகள்தான் ஊடங்களோ அல்லது ஆய்வாளர்களோ அல்ல.

மக்களை தெளிவடைய வைக்கும் முகமாக இந்த ஆய்வை வெளியிட்ட புதினத்திற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.