Jump to content

தமிழீழ விடுதலைப்புலிகளால் அணியப்பட்ட உடற்கவசங்கள் - ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!
  • This documentary is solely made for an educational purpose only.

 

எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது ஈழப் போர்க்களங்களில் புலிகள் அணிந்த உடற்கவசங்கள் பற்றியே. புலிகள் தங்களின் சமர்க்களங்களில் உடற்கவசங்கள் அணிந்ததில்லை. ஆனால் விலக்காக நான்காம் ஈழப்போரின் ஒரு சில களங்களில் மாத்திரம் சிலர் அணிந்திருந்தனர். அப்படி புலிகளால் அணியப்பட்ட கவசங்களான

  • தலைச்சீரா - Helmet
  • சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம் - Bullet resistant vest 

ஆகியவற்றைப் பற்றி இன்று நாம் விரிவாகக் காணப்போகிறோம்.

வாருங்கள் கட்டுரைக்குள் தாவுவோம்…

 


  • தலைச்சீரா - Helmet

இவர்களின் தலைச்சீராப் பயன்பாடானது, சிங்களத்தின் வெற்றியுறுதி(ஜெயசிக்குறு) என்ற தோல்வியில் முடிந்த நடவடிக்கைக் காலத்திலே தொடங்கப்பட்டு விட்டாலும் நான்காம் ஈழப்போர்க்காலத்தில்தான் பரவலாக பயன்படுத்தப்பட்டது (எல்லோராலும் அல்ல). இவர்களின் தலைச்சீரா சிங்களத்தின் தலைச்சீரா போன்றே இருந்தாலும், உருமறைப்பு மூலம் அவர்களிடம் இருந்து வேறுபடுத்தப்பட்டிருந்தது. அந்த உருமறைப்பு வழக்கமான புலிகளின் வரியே ஆகும்.

2009 ஆண்டுவரை சிங்களத்திடம் இருந்த தலைச்சீராவின் வலிமை எவ்வளவோ, அவ்வளவே இதனுடைய வலிமை ஆகும்.

main-qimg-6cc60ba34f6c1ee121766f97798e74e7.png

'புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒருதொகை தலைச்சீராக்கள்'

main-qimg-bf53ff06bee6001ba6fbd875c8429fa1.png

'தலைச் சீராவின் வெளிப்புறம் | பக்க மண்டை'

main-qimg-0204368ce8ec8c172f8d8c9b3f229e3d.png

'தலைச்சீராவின் உட்பகுதி'

main-qimg-e26927b8fbf55c0710afc28be3d0153f.png

'தலைச்சீராவின் ஒருபக்க மண்டைக்கான உட்பகுதி '

main-qimg-ea7a1dcd24d01b7ccf6b340464d610ca.png

'ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணியின் கணையெக்கி(mortar) பிரிவு படையினர் | இவர்கள் தலையில் தலைச்சீரா அணிந்துள்ளதைக் காண்க.'

main-qimg-bb66262594271b77a0c5c98e32a0f2f5.png

'நான்காம் ஈழப்போரில் புதுக்குடியிருப்புச் சமரில் ஈடுபட்டுள்ள புலிவீரன் | தலையில் வரிப்புலி உருமறைப்புக் கொண்ட தலைச்சீரா அணிந்துள்ளதை நோக்குக'

 


  • சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம் - Bullet resistant vest

புலிகள் 3 வகையான சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களை அணிந்திருந்தனர். 

  1. கவசக் கத்தனம் - Armour jacket (Flack jacket)
  2. கவசத்தட்டுக் காவி - Armour plate carrier
  3. மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி - Armour plate carrier - Concealable armour plate carrier

 

1) கவசக் கத்தனம் - Flak jacket:

90களின் இறுதியிலிருந்து 2005-இற்கு முன் வரை சாதாரண புலிவீரர்கள் சிறிலங்கா படைத்துறையிடமிருந்து இருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனங்களையே சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். (அதற்குப் பின்னரான காலப் பகுதியிலும் ஒருசிலர் அணிந்தனர் என்பது வேறு விடையம்) 

90களின் தொடக்கத்தில் தவிபு இயக்கத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவினர் இவர்களிடம் இருந்து வேறுபட்டு முற்றிலும் உள்நாட்டிலே உண்டாக்கப்பட்ட கவசக் கத்தன அணிந்திருந்தனர். அதற்கு மேல் தாக்குதல் கஞ்சுகங்களை(assualt vest) அணிந்தனர்.

main-qimg-7eb156b474c9b562a3e46da6acfae55d.jpg

'90களின் தொடக்கத்தில் தலைவரின் மெய்யக்காவலர் பிரிவினர்'

main-qimg-cad58e1c6311c1e1d467e5fa6895e2ae.jpg

'தலைவரின் விளிம்புக்கவியினை வைத்துப் பார்க்கும் இப்படத்தின்(திரைப்பிடிப்புத்தான்) காலம் போது 93க்குக் கிட்டவாக இருக்கும் என்று நினைக்கிறேன். '

இதில் முன்னால் நிற்கும் அந்த ஜக்கட் மெய்க்காவலன் கப்டன் 'மயூரன்' ஐ நோக்கவும். அவர் அணிந்திருக்கும் கவசக் கத்தனமானது மேலே இருக்கும் கவசக் கத்தனத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். ஏனெனில் இதில் சோளியல்கள் ஏற்கனவே தைக்கப்பட்டுள்ளனன. அது மட்டுமல்லாமல் இதில் மற்றொன்றும் தெரிகிறது. அதாவது மேலே உள்ள படத்தில் இருக்கும் மெய்க்காவலர் யாரும் மரும உறுப்பிற்கான சன்ன எதிர்ப்பு உறுப்பினை மெய்க்கவசத்துடன் சேர்த்து பிணைக்கவில்லை. ஆனால் இவர் அதைப் பிணைத்துள்ளார்.

main-qimg-4e7dc6e3f11f4857251d90b1978a8c2d.png

'எசு.பி.யீ-9 (SPG-9) என்ற பின்னுதைப்பற்ற சுடுகலனை தாணிக்கும்(load) தவிபு-இன் விக்டர் கவச எதிர்ப்புப் படையணிப் போராளிகள். | இவர்கள் தலையில் தலைச்சீராவும் உடலில் சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனமும் அணிந்துள்ளதைக் காண்க. | படம் - 3ம் ஈழப்போரின் ஆனையிறவுச் சமர்க்களம். '

fvu.png

'106மிமீ எம்40ஏ1 என்ற பின்னுதைப்பற்ற சுடுகலனை தாணிக்கும் தவிபு-இன் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் போராளிகள். | இவர்கள் தலையில் தலைச்சீராவும் உடலில் சிறீலங்கா படைத்துறையிடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனமும் அணிந்துள்ளதைக் காண்க. | படம் - 3ம் ஈழப்போர் காலம். '

ஆனால் இக்கால கட்டத்தில் தலைவரின் மெய்க்காவல் பிரிவினர் உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட ஒரு விதமான சோளியல்கள் கொண்ட கவசக் கத்தனங்களை அணிந்திருந்தனர். அவை வழக்கமான வரியில் இல்லாமல் சிறீலங்காத் தரைப்படையின் உருமறைப்பில் இருந்தன.

main-qimg-8be29fe81f78a4987ccb9a7d45549a59.jpg

'முன்பக்கம் இங்கு தெரிகிறது. வீரனின் வயிற்றுப் பகுதியைக் காணவும். சன்னக்கூட்டுச் சோளியல்(magazine pouch) தெரிகிறது.'

main-qimg-aa8b3aa47b724e3891b7933014333d6c.png

'இஃது அக்கவசக் கத்தனத்தின் பின்பக்கம் ஆகும்'

இதே காலகட்டத்தில் சில வேளைகளில் புலிகளின் மெய்க்காவலரும் சிங்களத்தின் கவசக் கத்தனத்தினை அணிந்திருந்தனர்.

main-qimg-691fc53d3bb26d0e36fcb777c9f8aff5.jpg

'தலைவர் ஏந்தியிருப்பது மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.- 103'

கவசக் கத்தனங்களை ஆண் & பெண் என இரு பாலரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

main-qimg-5190b2ff2d344290b4e13270df02b2a7.png

'கிட்டு பீரங்கிப் படையணியின் மகளீர் பிரிவுப் போராளிகள் தெறோச்சியை(Howitzer) இயக்கும் காட்சி | வலது ஓரத்தில் நிற்கும் போராளி கவசக் கத்தனத்தினை அணிந்திருப்பதை நோக்கவும்.'

இவற்றைப் போலவே போல புலிகள் 2001-ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்திலிருந்து 2005 வரை மற்றொரு விதமான சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவர்களின் உருமறைப்பினை (சிறீலங்கா படைத்துறை படைப்பிரிவுகளில் ஒன்றான 'சிறப்பு பணிக்கடப் பிரிவு' (STF) இன் உருமறைப்பு) கொண்டதோர் கவசக் கத்தனத்தினை அணிந்திருந்தனர். அதனைக் கீழ்க்கண்ட படத்தில் காணவும் .

main-qimg-3ec82eab3e54c82bc9aa80835c0ed8a9.png

'ஜக்கெற் மெய்க்காவலர்களான இ: கவியுகன்; வ: லெப் கேணல் வள்ளுவன் | இவ்விரு மெய்க்காவலரும் கையில் ஏந்தியிருப்பது மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.74u துமுக்கி . இவர்கள் இருவரும் அந்த விதமான கவசக் கத்தனத்தினைத் தான் அணிந்துள்ளனர்.'

இதேபோலல்லாமல் சிங்களத்தின் உருமறைப்பைக் கொண்ட இன்னொரு விதமான கவசக் கத்தனமானது, தலைவரின் மெய்க்காவலர் பிரிவினரால் மட்டும் நான்காம் ஈழப்போரில் அணியப்பட்டது. இதுவும் உள்நாட்டு மானுறுத்தமே!

main-qimg-c22e2246fdda20314a3d55087cd7d9e0.jpg

'தலைவர் குறிவைக்கப் பயன்படுத்தும் துமுக்கி-திராகுனோவு குறிசூட்டு துமுக்கி(dragunov sniper rifle)'

-5769562378151770156_121.jpg

'தலைவர் குறிவைக்கப் பயன்படுத்தும் துமுக்கி-மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.103'

மேற்கண்ட இரு படங்களிலுமுள்ள மெய்க்காவலரை நோக்கவும். இக்கவசக் கத்தனத்தின் முன் தட்டுக்காவி எப்படி இருக்கும் என்று அறியேன். ஆனால் பின்பகுதியின் தோட் பகுதியில் இருதோள்களிலும்(வலது,இடது) தலா இரண்டு சோளியல்கள் என மொத்தம் நான்கு சோளியல்கள் உள்ளன. அவை துமுக்கிக்கான சன்னக்கூடு வைக்கும் சோளியல்கள் ஆகும். இவை அவசரகால சோளியல்கள்(emergency pouch) எனப்படும். இவையே புலிகளால் உண்டாக்கப்பட்ட முகனையான(modern) சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களாகும். அவற்றையே தலைவரின் மெய்க்காவல் பிரிவினர் தொடர்ந்து இறுதிவரை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2) கவசத்தட்டுக் காவி - Armour plate carrier

நான்காம் ஈழப்போரில் புலிகளின் உள்நாட்டு மானுறுத்த(manufacture) கவசத்தட்டுக் காவி மூன்று தட்டுகளைக் கொண்டதாக உண்டாக்கப்பட்டது. இவை பன்னாட்டு கவசத்தட்டுக் காவிகளின் வடிவிற்றான் இருந்தன. ஆனால் இவற்றின் உருமறைப்பானது(camouflage) முந்தையவற்றைப் போலல்லாமல் புலிகளின் வரியில் ஆக்கப்பட்டிருந்தது. புலிகளின் இந்த சன்ன எதிர்ப்புக் கஞ்சுகத்தினுட் இருந்த "கவசத்தட்டுகள்" (armour plates) ஆனவை வெங்களியால்(ceramic) செய்யப்பட்டவை ஆகும். ஆனால் இதனோடு சேர்த்துக் கலக்கப்பட்ட கலவை யாதென்று தெரியவில்லை. தவிபு-ஆல் உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட இது பார்ப்பதற்கு மெச்சத்தக்கதாக இருக்கிறது.

இந்த சன்ன எதிர்ப்புக் கஞ்சுகத்தினுட் மொத்தம் 3 கவசத்தட்டுகள் இருந்தன.

  • முன் உறையினுட் இரு தட்டுகள் - பெரிய மெல்லியது ஒன்றும் சிறிய தடிமனானது ஒன்றும்
  • பின் உறையினுட் ஒரு தட்டு - பெரிய மெல்லியது ஒன்றும்

இருந்தன. ஆனால் இதற்குள் பக்கத் தட்டுகள் எதுவுமே இல்லை. அதற்குப் பகரமாக பெரியதான முன்றட்டும் பின்றட்டும் 'கான்னிலவு' (quater moon) வடிவில் வளைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வளைக்கப்பட்டிருந்தமையால் பக்கத் தட்டுகளிற்கான தேவை குறைக்கப்பட்டது. தட்டுகளின் விளிம்புகள் தடித்த மின்நாடாக்கள்(electric tape) கொண்டு ஒட்டப்பட்டிருந்தன.

→ முன் பக்க மெல்லிய பெரிய தகடு:-

இதை தட்டிய போது ஒரு வித வேறுபாடான ஓசை எழும்பியது

உட்புறம்:

main-qimg-25bae1e96eb7706170daf5de6f8460c3.png

 

வெளிப்புறம்:

main-qimg-434ffbd5b2ffe7e0bceda9405992eac6.png

 

→ முன் பக்க தடித்த சிறிய தகடு:-

இதை தட்டிய போது பெரிய தட்டினை விட வேறுபட்ட ஒரு வித ஓசை எழும்பியது.

main-qimg-c3214ca20394577e0dc32fc7f61fa5fe.png

 

→ பின்பக்க மெல்லிய பெரிய தட்டின் படம் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை!

 

ஈ கவசத்தட்டுக் காவியானது முன் தட்டுக்காவி, பின் தட்டுக்காவி(back plate carrier) என இரு துண்டுகளக இருக்கும். இவற்றின் முன் தட்டுக்காவியினுள்(front plate carrier) உள்ள இரு தட்டுகளின் பெரிய மெல்லிய தட்டு வெளியில் இருந்து முதலாவதாகவும் சிறிய தடித்த தட்டு இரண்டாவதாகவும் இருக்கும். இந்தச் சிறிய தடித்த தட்டும், பெரிதுக்குள் தன்னை அகப்படுத்திக்கொள்ள ஏதுவாக சற்று வளைந்தே இருக்கும். இந்த தட்டுக் காவியின் அடிப்பகுதியில் இருக்கும் வாயின் மூலமாகவே தட்டினை உள்ளுடுத்த வேண்டும்.

main-qimg-2ccba69cc4ec8c900b814be096273c2f.png

'விதம் ஒன்றினைச் சேர்ந்த கவசத்தட்டுக் காவியின் அடிப்பகுதி. அதன் வாயில் திறந்துள்ளதையும் அதனுள் தட்டுகள் தென்படுவதை நோக்கவும்'

main-qimg-726e656d96a0094fcffa1112112eb59a.png

'இதுதான் புலிகள் நான்காம் ஈழப்போரில் மானுறுத்திய மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி | இது காவியின் முன்பக்கமாகும். இதே போல் தான் அனைத்து வரிக் காவிகளின் பின்பகுதியும் இருக்கும்'

main-qimg-ea80cb68c2d69848b70fca41484e6d26.png

இந்த முன் தட்டுக்காவியின் அடிப்பகுதியில் முதுகுப்பக்கத்திலிருந்து சுற்றிக் கட்டுவதற்கு ஏதுவாக யாத்துணி(ஒன்றோடொன்று பொருந்தி சேர்த்துக் கட்டும் துணி) எனப்படும் ஒரு துணியானது பளுப் (கமக்கட்டில் இருந்து நேர்கீழாக வரும் பக்கவாட்டுப் பகுதி) பகுதியில் தைக்கப்பட்டிருக்கிறது. அவ்விரண்டு துணியிலும் ஒரு பிணையொட்டி(velcro) இருக்கும். அந்த யாத்துணியின் உயரமானது சள்ளையில் (இடுப்பின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதி) இருந்து பளுவின் தொடக்கத்திற்கு சற்றுக் கீழே வரை எவ்வளவு உயரமோ, அவ்வளவே. இவ்வளவு உயரம் கொண்ட யாத்துணியானது முதுகின் தண்டுவடத்தை நோக்கிப் போகப்போக முக்கோண வடிவில் குறுகிச் சென்று சதுர வடிவ முடிவை அடையும். இதில் இடது பக்கத்தில் இருந்து வரும் யாத்துணி கீழ்ப்போக வலப்பக்க யாத்துணி மேற்போகும். (படத்தில் காண்க) அதே போலதான் தோளிலும். அத்தோட்டுணியிலும் (வலது,இடது) பிணையொட்டி உண்டு. அங்கு, முன் தட்டுக்காவியின் தோட்டுணி மேற்போக பின் தட்டுக்காவியின் தோட்டுணி கீழ்ப்போகும். மொத்தத்தில் பின் தடுக்காவியானது முன் தட்டுக்காவியினுட் அடங்கிக்கொள்ளுகிறது.

இந்த வகை கவசத்தட்டுக் காவியில் 4 விதம் இருந்தது.

  1. ஒன்றினது பின் தட்டுக்காவியில் சதுரவடிவிலான ஒரு பெரிய பையொன்று இருந்தது. அதற்கு அதன் அரைவாசி உயரமுள்ள மூடி இருந்தது. இதன் முன்பக்கம் வெறுமனே இருந்தது.
  2. மற்றொன்றில் வெளிப்புறத்தில் 4 சன்னக்கூடு வைப்பதற்கு ஏதுவாக 4 சோளியல்கள் இருந்தன. அந்த சோளியலின் வெளிப்புறத்தில் மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு பிணையொட்டி குதைகள்(loops) இருந்தன. ஆனால் அதற்கான மூடியில் ஒரே ஒரு பிணையொட்டி கொளுவி(hook) மட்டுமே இருந்தது. இதன்மூலம் கீழே இருந்த பிணையொட்டிக் குதையில் மேலும் ஒரு சோளியல் தேவைப்படின் மாட்டப்பட்டிருக்கலாம். அதாவது பன்னாட்டு சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களில் உள்ள 8 சோளியல்கள் போன்று.
  3. பிறிதொன்றில் மேற்கண்ட இரண்டுமே கலந்த கலவை உள்ளது. அதாவது முன் தட்டுக்காவியில் பெரிய பையொன்றும் அதன் மேலே மூன்று சன்னக்கூட்டுச் சோளியல்களும் உள்ளன. ஆனால் அதில் மேலும் மூன்று சேர்ப்பதற்கான பிணையொட்டி காணப்படவில்லை.
  4. நான்காவதில் நான்கு சன்னக்கூடு வைப்பதற்கு ஏதுவாக நான்கு சோளியல்கள் மட்டும் இருந்தன. அதில் கூடுதலாக சோளியல்கள் சேர்ப்பதற்கு ஏற்ற கட்டமைப்புகள் இல்லை. இதற்கு கழுத்து காப்பு உள்ளது.

main-qimg-fe2d6a6f932768e88f36b796aacae9ea.png

main-qimg-066f682ce70887ab0429690cd14b523a.jpg

'விதம் ஒன்று கவசத்தட்டுக் காவி அணிந்து வகை-85 12.5 மி.மீ இயந்திரச் சுடுகலனால் எதிரி மீது சுடும் புலி வீரன்'

main-qimg-f7d7cb25d6ec715c6696bc022ecd8818.png

main-qimg-8abeadd4a863207b71bbee2235959c7d.png

'வட போர்முனை முன்னரங்க நிலைகளில் ஒன்றில் வைத்து எடுக்கப்பட்ட படம். | நான்கு புலிவீரர்களும் சீருடையில் உள்ளனர்.'

மேற்கண்ட படத்தில் அம்புக்குறியிட்டுள்ள வீரரைக் பார்க்கவும். அவர் தலையில் தலைச்சீராவும்(helmet), உடலில் மேற்குறிப்பிட்டுள்ள விதம் மூன்றினைச் சேர்ந்த கவசத்தட்டுக் காவியினையும் அணிந்துள்ளார்.

விதம் நான்கின் படம் என்னிடம் இல்லை!

 

 

3) மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி - Concealable armour plate carrier

main-qimg-8f688be2a4485dabcdc885e6ae1164a6.jpg

'இவர்தான் மேஜர் மிகுதன். அன்னார் தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் மாவீரராகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மெய்க்காவலர் ஆவார். அற்றை நாளில் இவரும் தமிழ்ச்செல்வனுடன் மாவீரரானார்.'

மிகுதன் அணிந்திருக்கும் கவசத்தட்டுக் காவியினை நோக்கவும். அதுதான் மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவியாகும். அதாவது மேற்சட்டையினுள் அணியும் வெளித்தெரியா சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம். இதனை அனைத்து மெய்க்காவலரும், ஒரு சில கட்டளையாளர்களும் அணிந்திருப்பர். அவர் கையில் வைத்திருப்பது தலைச்சீராவாகும்.

 


  • கடற்சமர்க் களத்தில்

புலிகள் கடற்படையான கடற்புலிகளும் தலைச்சீரா, கவசக் கத்தனம் & கவசத்தட்டுக் காவி ஆகியவற்றினை கடற்சமர்களில் அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த கவசக் கத்தனங்கள், சிங்களவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையும், புலிகளால் உள்நாட்டில் மானுறுத்தப்பட்டவையும் ஆகும்.

main-qimg-269c1ff8d5c63e43c84b1f3d904285d3.png

'சிங்களத்திடம் இருந்து கைப்பற்றிய கவசக் கத்தனம் & தலைச்சீரா அணிந்து கடற்சமரில் ஈடுபட்டுள்ள கடற்புலிகள் | இவர்கள் நிற்பது டோறா மாதிரி குமுதன் வகுப்புக் கலத்தில்'

main-qimg-61a7a02b05d927bddfaca969420bef48.png

'உள்நாட்டில் மானுறுத்திய வரி கவசத்தட்டுக் காவி & தலைச்சீரா அணிந்து பீகே இயந்திரச் சுடுகலனால் சுடும் ஒரு கடற்புலி வீரன்'

 


  • தலைவரின் மெய்க்கவசம்:

தலைவரிற்காக இறுதிநேரத்தில் காதிலிருந்து முழு மெய்யையும் கவர் செய்து எத்தகைய சிறு சன்னக்களையும் தகைக்கும் வகையில் பித்தளைகளை உருக்கி செய்யப்பட்ட ஓர் முற்றிலும் வேறுபட்ட உடற்கவசம் உண்டாக்கப்பட்டிருந்ததாக அவரது மெய்க்காப்பாளர் ரகு என்பவர் கூறியிருந்தார். இது தொடர்பான படங்கள் ஏதும் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை.

—> தலைவரின் தலைமை மெய்க்காவலர் 'ரகு' என்பவர் கொடுத்த செவ்வியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.


 

 

இவைதான் ஒட்டுமொத்தமாக தவிபுவால் அணியப்பட்ட மெய்க்கவசங்களாகும். கட்டுரையினை இறுதிவரை வாசித்தமைக்கு மிக்க நன்றி. _/\_

 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • சொந்தமாக எழுதியது

படிமப்புரவு

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

முகமாலை

 

 

இப்படிமத்தில் இடது பக்கத்தில் உள்ளவொரு புலியண்ணா வரிப்புலி உருமறைப்புக் கொண்ட கவசத்தட்டுக் காவியும் தலைச்சீராவும் அணிந்துள்ளதைக் காண்க

mukamalai.png

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனக்கு அளிக்கப்பட்ட பதவியை பார்த்து பயந்து விட்டீர்கள் போலிருக்கிறது! பரவாயில்லை, தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை இவ்வாறு பல முத்திரை குத்துவார்கள். அதற்காக நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லாமல் இருக்க முடியாது. நான் யாரென்று எனக்குத்தெரிந்தால் இதற்கெல்லாம் பயப்படவேண்டியதில்லை. 
    • என்னது...... சம்பளமில்லாத தொழலுக்கா இவ்வளவு அடிபாடு? இவர்கள்தான் பெருத்த ஊழல் பெருச்சாளிகளும் தெருச்சண்டியரும். பொறுங்கோ, அனுரவை குடைச்சல் இல்லாமல் இருக்க விட்டால், இவர்களெல்லோரும் தீயில நடக்கவேணும். வேண்டுதல் ஒன்றுமில்லை, மக்களுக்கு சேவை செய்து உறுதிப்படுத்தினாலே அவருக்குரிய வேதனத்தை பெற முடியும், அது போக சமூக சேவை செய்பவர் தனது காரை தானே ஓட்டிப்போக வேண்டும். மக்கள் அலுவல் சம்பந்தமான போக்கு வரத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படவேண்டும், இல்லையேல் ஒதுங்க வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் குறிப்பிட்ட வேலைகளை செய்து உறுதிப்படுத்தவேண்டும், இல்லையேல் தங்கள் சொந்த நேரத்தில் முடிக்க வேண்டும் சம்பளம் கிடையாது. திறமையற்றவர்கள் விலகி, படித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு இடம்விட வேண்டும்.    
    • இந்தியா அப்படி தான் அங்கே இருந்து இலங்கைக்கு தொற்றிய நோய் தானே கலாநிதி பட்டம் விடுவதும் நல்ல காலம் தமிழ்நாட்டு தளபதி முருகன்  என்று பட்டம் கொடுக்காமல் விட்டார்களே.ரணில் வெளிநாட்டுகாரர் இந்திய இறையாண்மையில் தலையிட முடியுமா
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இது ரெம்பிளெட் ..  அடுத்த கிருத யுகம் வரை நீடிக்கும்..! திராவிட மொடல் அரசு அனுமதிக்குமா..?  பிசெபி/கொங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருமா..?   ஈழ தமிழர் படுகொலையை மறைக்க கருநா போட்ட ஆட்டத்தில் செம்மொழிக்கு உண்டான மரியாதையே போய்விட்டது ..  செம்மொழி அட்டவணையில் கிட்டதட்ட எல்லா கிந்திய மொழிகளும் இணைந்து விட்டது . பணம் அதிகமா இருந்தா ஏழைகளுக்கு கொடுங்கப்பா .. மட்டக்களப்பில் பிடிபட்டாலும் கச்சதீவு அருகில் என்டு ஒப்பாரி வைப்பினம். இலங்கை சிறைக்கு வந்து போவதற்கு வசதியா பாஸ் நடைமுறையை அறிமுகபடுத்த போகினமா.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.