Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் போராட்டம் நீதியான ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே

[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார்.

சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு- சிறிலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிசிலிருந்து வெளியாகும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல் பகுதி:

கேள்வி: ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் முன்னெப்போதையும் விட அனைத்துலக மயப்பட்டு நிற்கின்றது. இந்நிலையிலும் கூட சிறிலங்கா அரசானது, நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே இல்லை அது வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை எனக் கூறி வருகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையில் தமிழர் பிரச்சினை என்பது சிறிலங்கா அரசால், குறிப்பாக கூறுவதானால், காலனித்துவத்திற்கு பிந்திய சிறிலங்கா அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. சமூகத்திலிலுள்ள பல்லினத் தன்மையைப் புரிந்து கொண்டு நடக்காமல் விட்டதனால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். ஏனெனில் இலங்கை என்பது சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், மலேயர்கள் என பல இனங்கள் வாழுகின்ற நாடு.

இத்தகைய பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டிலே மற்றொரு இனத்தை ஓரங்கட்டும் பெரும்பான்மையின ஆட்சி வெற்றியைத் தராது. மேற்கு இந்திய நாடுகளில் பிறந்து இங்கிலாந்திலே விரிவுரையாளராகப் பணியாற்றிய பிரபல பொருளியலாளரான ஆர்தர் லூயிஸ் பின்வருமாறு கூறினார் "பெரும்பான்மை ஐனநாயகம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. அது மட்டுமன்றி அநீதியான ஒன்றுமாகும்." இந்த அடிப்படையில் பார்த்தால் காலனித்துவத்திற்குப் பிந்திய சிறிலங்கா அரசு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை நீண்ட காலமாகத் தொடரும் யுத்தம் நிருபிக்கின்றது. அதுமட்டுமல்ல அது அநீதியானதும் கூட. ஏனெனில் அங்கு சகவாழ்வு என்பதற்கான அடிப்படை கூட இல்லை.

எனவே தமிழர் போராட்டம் என்பது நியாயமான காரணங்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று. தேசிய அபிலாசைகளின் அடிப்படையில் நடைபெறும் அப்போராட்டத்துக்கு நியாயமான தேவை இருக்கின்றது. ஆனால் அது நடைபெறுகின்ற வழிமுறை சரியா என்பது கேள்விக்குரியது. ஆனால், அடிப்படையில் தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டுள்ளது.

கேள்வி: உங்கள் கருத்தின்படி சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழ் மக்களுக்கு நியாயமான காரணங்களுண்டு. அண்மைய உலகப் போக்குகளை கருத்தில் எடுக்கும்போது, உலகெங்குமுள்ள விடுதலைப் போராட்டங்கள் ஜோர்ஜ் புஷ்ஷின் ~பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருத்தின் கீழ் நசுக்கப்பட்டு வருவதனைக் காண்கின்றோம். சிறிலங்கா அரசு கூட இதனையே முன்னிலைப்படுத்துகின்றது. இந்த நிலைப்பாடு சரியா?

பதில்: ஜோர்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருதுகோள் பைத்தியக்காரத்தனமானது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். சில தீவிரவாத அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புக்கள் எனக்கூறும் அவர் அமெரிக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அல்லது அமெரிக்க நலன்களைப் பேணுகின்ற அதுபோன்ற அமைப்புக்களைப் வளர்த்து வருகின்றார். அமெரிக்க நலன்கள் எனும்போது அது அமெரிக்க ஏகபோகத்தை குறிக்கின்றது. உதாரணமாகக் கூறுவதானால் சதாம் உசைன் மீது எனக்கு அனுதாபம் கிடையாது. ஆனால, ஈராக் தலையீடு என்பது ஈராக் மக்களுக்கு ஐனநாயகச் சூழலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அல்ல. மாறாக மொபைல் உட்பட ஏனைய பல்தேசிய எண்ணெய்க் கொம்பனிகளை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

எனவே பல்வேறு சமூக இனங்களையும் பற்றி பேசும்போது ஜோர்ஜ் புஷ்ஷின் கருத்தின் அடிப்படையில் அவற்றைப் பார்ப்பது தவறு. ஏனெனில் புஷ்ஷின் வரையறை என்பது விஞ்ஞான அடிப்படையிலேயோ விழுமியங்களின் அடிப்படையிலேயோ மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அது அடிப்படையில், அமெரிக்காவின் சாதாரண மக்களின் நலனையன்றி அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகர்களின் நலன் சார்ந்தது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கின்றதோ எங்கெல்லாம் அடக்குமுறை நிலவுகின்றதோ எங்கெல்லாம் ஓரங்கட்டல் நடக்கின்றதோ எங்கெல்லாம் பாரபட்சம் காட்டப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் முன்வந்து அதனை எதிர்க்கவே செய்வர். தமது கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கவே செய்வர். இது இயற்கையானது.

ஆகவே புஷ்ஷின் கொள்கையின் அடிப்படையில் கதைப்பதை விட்டுவிட்டு பேராசிரியர் எட்வேர்ட் டாசனின் கருத்தை அடிப்படையாகக்கொண்டு பேச விரும்புகின்றேன். அமெரிக்க - மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் முரண்பாட்டுத் தீர்வு விவகாரத்தில் பிரசித்தி பெற்றவர்.

சிறிலங்காவில் நிலவுவது போன்ற முரண்பாடுகள், நீடித்த சமூக முரண்பாடுகள இவை நான்கு விடயங்களின் அடிப்படையில் உருவாகின்றன.

அவற்றுள் முதலாவது, காலனித்துவக் கொள்கைகள். சிறிலங்காவின் நிலைமையைப் பின்நோக்கிப் பார்ப்போமானால் காலனித்துவக் கொள்கைகள் சிறிலங்காவின் நீடித்த சமூக முரண்பாட்டிற்கு ஓரளவு பங்களித்திருப்பதைக் காண முடியும்.

இரண்டாவதாக, நாட்டின் சமூகக் கட்டுமானத்தைக் குறிப்பிடமுடியும். இதை அடிப்படையாகக் கொண்டே சிறிலங்காவில் பல தேசிய இனங்கள் வாழுவதாக முன்னர் நான் கூறினேன். பல தேசிய இனங்கள் இருக்கும்போது, பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கும்போது, பல்வேறு மதங்கள் இருக்கும்போது முரண்பாடுகள் வருவது இயற்கையே.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர் உண்மையிலேயே என்ன நடைபெற்றது என்றால், சிறிலங்கா அரசானது காலனித்துவ ஆட்சியாளர்கள் எத்தகைய கொள்கைகளைக் கடைப்படித்தார்களோ அதனையே கடைப்படித்து வந்தது. எனவே, அது ஒரு பெரும்பான்மை ஜனநாயகம். கடந்த காலத்தை எடுத்து நோக்கினால் எப்பொழுதெல்லாம் பெரும்பான்மை ஜனநாயகம் செயற்படுகின்றதோ அப்போதெல்லாம் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வந்தள்ளனர்.

உதாரணமாக, 1940 இன் இறுதிப்பகுதியில் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு கண்டித் தமிழர்களான இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோரின் குடியுரிமைமை பறிக்கப்பட்டது. தேசியக் கொடி பற்றித் தீர்மானிக்கப்பட்ட போது அது சிறிலங்காவின் பல்லினத்தன்மையைப் பிரதிபலிப்பதாக அன்றி, சிங்கள தேசத்தின் மேலாதிக்கத்தை மாத்திரம் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது.

1956 இல் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் தனிச்சிங்களச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இவை சுதந்திரத்திற்குப் பின்னான காலப் பகுதியில் அரச கொள்கைகள் எத்திசையில் பயணித்ததன என்பதனைக் காட்டுகின்றன. இதுவே யதார்த்தமாக இருக்கையில் ஏனையோரின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாது விடும்போது, பாரபட்சமாக நடத்தப்படும் போது, ஓரங்கட்டப்படும் போது அவர்கள் எதிர்ப்பை வெளிக்காட்டுவது இயல்பானதே. எனவே தமிழர் அரசியலில் 50, 60 மற்றும் 70 களில் அகிம்சை ரீதியில் நடைபெற்ற விடயங்கள் இயல்பானதே.

இத்தகைய எதிர்ப்புக்களை அடக்கிவிடவே அரசு முயற்சித்தது. எதிர்ப்புக்கள் உருவாகும் போதெல்லாம் அரசுகள் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும், பாரபட்சத்தையும், ஓரங்கட்டுதலையும் முன்னரை விடத் தீவிரமாக மேற்கொள்ளுகின்றன. ஆனால் சில நாடுகள் வித்தியாசமான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன.

உதாரணமாக இந்தியாவைக் குறிப்படலாம்.

இதனைத் தெளிவாகக் குறிப்பிடுவதானால் இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தி ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டதும் அதற்குக் கடும் எதிர்ப்புக்கள் உருவாகின.

குறிப்பாக, தெற்கே தமிழ்நாட்டில் சுயாட்சிக் கோரிக்கை கூட முன்வைக்கப்பட்டது. ஆனால் 50 களில் ஐவகர்லால் நேரு இந்தி ஆட்சிமொழி என்ற சட்டத்தை நீக்கி மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கமைய ஒவ்வொரு இந்தியனும் தனது மாநில மொழியை முதன் மொழியாக கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது தமிழ்நாட்டவர் தமிழையும் ஆந்திர மாநிலத்தவர் தெலுங்கையும் கன்னட மாநிலத்தவர் கன்னடத்தையும் கேரள மாநிலத்தவர் மலையாளத்தையும் கற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டனர்.

இரண்டாவது மொழி அனைத்துலக மொழியான ஆங்கிலமாக இருந்தது. மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ளுமாறு அவர் கூறவில்லை. மாறாக தத்தம் மாநிலத்தில் இல்லாத வேறு ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளுமாறு கோரினார். இதன்மூலம் இந்தியாவில் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

ஆகவே 50களில் இந்தியைக் கற்றுக்கொள்ளுவதை எதிர்த்து வந்த மக்களில் பலர் இந்தியை தாமாகவே கற்றுக்கொள்ள முன்வந்தனர். ஏனெனில் அதனால் பல நன்மைகள் விளைந்தன.

50 களில் யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கூட சிங்களத்தைக் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் சிங்களம் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு தபாலதிபராகப் பணியாற்ற அரச திணைக்களங்களில் எழுதுவினைஞராகப் பணியாற்ற என பல்வேறு விடயங்களுக்கு அவசியமாக இருந்தது.

இந்தியா ஒரு மொழிக்கொள்கையிலிருந்து மும்மொழிக் கொள்கைக்கு மாறிய போது சிறிலங்கா அதற்கு முற்றிலும் எதிர்மாறான கொள்கையைக் கடைப்பிடித்தது. சிறிலங்கா அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் எவ்வாறு சிறிலங்காவின் பல்லினத் தன்மைகளைப் புறந்தள்ளி தமது முடிவுகளை எடுத்தார்கள் என்பதனை இது புலப்படுத்துகின்றது.

இதுவே, நீடித்த சமூக முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் காரணிகளில் ஒன்றாக சமூகக் கட்டுமானத்தை டாசன் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் தமிழ் மக்களின் போராட்டம் என்பது அவர்களின் துயரங்களுக்கு வழிதேடும் வகையிலான நீதியிலான ஒரு போராட்டம் என நான் கூறுகிறேன். எனவே தமிழ் மக்களின் போராட்டம் பயங்கரவாதம் என்ற கருத்து இங்கு பொருத்தமற்றது.

இன்றைய உலகச் சூழலில் நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, துருவமயப்பட்டுள்ள உலகில் அமெரிக்காவின் கொள்கையே பல நாடுகளின் கொள்கையினைத் தீர்மானிப்பதாக உள்ளது. பிரித்தானியா அமெரிக்காவைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முழுமையாக இல்லாது விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய பல நாடுகளும் இம்முடிவினையே பின்பற்றுகின்றன. இந்தக் கொள்கை சரியென்பதற்காக அல்ல, மாறாக பலமுள்ளவனின் கொள்கை என்பதற்காகவே அது பின்பற்றப்படுகின்றது.

இந்தக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்துவரும் சிமோன் செர்க்னொவ்ஸ்கி இது ஒரு முட்டாள்த்தனமான கொள்கை என வாதிடுகிறார்.

எனவே அமெரிக்கா கூறுவதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்காமல், ஆய்வு அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இப்போது நீங்கள், "நீதியான காரணம் இருக்குமாக இருந்தால் எந்தவொரு நடவடிக்கையையும் நியாயப்படுத்திவிட முடியுமா?" என்றொரு கேள்வியைக் கேட்கலாம். இங்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ் போன்றோர் வேறுவிதமான அணுகுமுறைகளைக் கைக்கொண்டனர். இரண்டு காரணங்களுக்காக காந்தி இதனை எதிர்த்தார். முதலாவதாக விளைவுகள் நல்லவை என்பதற்காக அதனை அடைகின்ற வழிமுறைகள் எத்தகையதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது. சிலவேளை இது குறுகிய காலத்தில் மிகச் சிறந்ததாகத் தென்படமுடியும்.

இது மாத்திரமல்ல, இலக்கை அடையும் வழிமுறையைத் தெரிவுசெய்ய வேண்டும் என்றார். இதுவே காந்தி அறிமுகம் செய்த அகிம்சை - இதனையே அமெரிக்க சிவில் இயக்கம் உட்பட பல அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டன.

ஏனெனில், நீங்கள் இலக்கை எட்டாத போதிலும் நீங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கேயே இருக்க முடியும். உங்களுக்கு ஆதரவு கிட்டுமே ஒழிய, பாதிப்பு எதுவும் வந்துவிடாது. இது ஒரு விடயம்.

இரண்டாவது விடயம் உங்கள் வழிமுறை நியாயப்பூர்வமானதாக இருத்தல் ஆகும். நான் இதனையே பின்பற்றுகிறேன். ஒரு வேலைத்திட்டத்தை வரையறை செய்துகொண்டு அதற்குள்ளாக ஒரு சமரசப் பேச்சுக்களினூடே இலக்கை அடைதலே அதுவாகும். இது நிச்சயமான வழி.

சிறிலங்கா விவகாரத்தை எடுத்துக்கொண்டால் இதுவரை 65,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தத் தொகையில் அரைவாசிக்கும் குறைவானோரே இரண்டு தரப்பையும் சேர்ந்த ஆயுதப்படைகளில் உயிரிழந்தோர் ஆவார். சகல யுத்தங்களையும் போல முதலாம் உலக யுத்தமாயினும், 2 ஆம் உலக யுத்தமாயினும், ஏனைய யுத்தங்களாயினும் - குடிமக்களே யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

துல்லியமாக இல்லாவிட்டாலும் எனக்குத் தெரிந்தளவில், யுத்தத்தில் இறப்போரில் 60 வீதமானோர் குடிமக்களே. அதில் பெரும்பான்மையானோர் சிறுவர்களும் பெண்களும் ஆவார். எனவே, இவ்வாறு நாம் தொடர்ந்து செல்ல முடியுமா? அரசாங்கத்தின் மீது நாம் குறை கூறுவதானாலும் கூட நாம் இவ்வாறு தொடர்ந்து செல்லப் போகின்றோமா எனச் சிந்திக்க வேண்டும்.

இது நான் முன்வைக்க விரும்பும் கேள்வி - இதே கேள்வியையே காந்தியும் முன்வைத்தார். அதனை (வன்முறையை) நீங்கள் ஆரம்பித்து வைத்தால், அதற்கு முடிவே இருக்காது காந்தி கூறினார்.

இந்த அடிப்படையில் நான் ஒரு தமிழ்த் தேசியவாதி எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு நான் கூறும்போது நளின் டீ சில்வா போன்றோர் என்னை விமர்சிக்கிறார்கள். நீ ஒரு சிங்களவனாய் இருந்து கொண்டு தமிழ்த் தேசியவாதியாய் இருக்கிறாய் என்கிறார்கள். நீங்கள் கூறுவதைப் போன்று தமிழர்களில் கூட சிலர் சிங்களத் தேசியவாதிகளாய் இருக்கிறார்கள்தானே?

தேசியவாதம் என்பது படுமோசமான ஒரு விடயம் எனப் பலர் கூறுகிறார்கள். தேசியவாதம் தொடர்பாக பிரபலமான புலமையாளரான பெனடிக்ற் அண்டர்சன் கூறுவதுபோல தேசியவாதம் என்பது ஒரு இயல்பான விடயம். நான் கூட ஒரு முறை "மார்க்சிசம், லெனினிசம், என்பவற்றைவிட தேசியவாதம் மிகவும் துல்லியமான ஒரு தத்துவம்" என எழுதியிருந்தேன். ஏனெனில், தேசியவாதம் என்பது மார்க்சிசம், லெனினிசத்தை விட அதிக பரப்பெல்லையைக் கொண்டது. இது வேறு விடயம்.

நான் கூற விரும்புவது என்னவெனில், தேசியவாதி என்பவரை எவ்வாறு வரையறுப்பது? "நீங்கள் உங்கள் நாட்டுக்கு அவமானமாக விளங்குவீர்களானால் நீங்கள் ஒரு தேசியவாதி"

என பெனடிக்ற் அன்டர்சன் கூறுகிறார். நான் என்னைச் சிறிலங்காத் தேசியவாதி எனக் கூறிக்கொள்கிறேன். ஏனெனில் நான் சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றையிட்டு வெட்கப்படுகின்றேன். இந்த அடிப்படையில் நான் ஒரு தேசியவாதி.

உண்மையில் பெனடிக்ற் அன்டர்சன் ஒரு சந்தர்ப்பத்திலே தான் பிறந்த நாடான பிரித்தானியாவின் அவமானமாக மாறியதாகக் கூறினார். 1956 காலப் பகுதியில் தனது மாணவர்கள் சிலர் சிறிலங்கா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது தாக்கிய விவகாரத்தின் போதே இவ்வாறு கூறினார்.

ஜேர்மன் பேராசிரியரான கான்ட், தனது கட்டுரையில் பின்வருமாறு கூறினார். "மற்றைய தரப்பினரை நீங்கள் மோசமாக நடத்தவில்லையானால் நீங்கள் ஒரு சரியான குடிமகன் அல்ல."

தேசியவாதம் வேறு, தேசியவாதி வேறு. இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் - வன்முறையையும் தேசியவாதத்தையும் நீங்கள் இணைக்கமுடியாது. ஏனெனில், பல இடங்களில் அது வெற்றிபெறவில்லை. உதாரணமாக சல்வடோர், நிக்கரகுவா போன்ற நாடுகளைக் கூற முடியும்.

இது இன்றைய உலகச் சூழ்நிலையிலும் ஓரளவு தங்கியுள்ளது. இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தேசங்களின் கூட்டமைப்பாக இல்லாமல் அரசாங்கங்களின் கூட்டமைப்பாகவே உள்ளது. ஏனெனில், உலகில் சுமார் 6,000 தேசிய இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிலர் 12,000 தேசிய இனங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஐ.நா. சபையில் எத்தனை நாடுகள் இருக்கின்றன. 200 நாடுகள் என வைத்துக்கொண்டால் சராசரியாக 30 தேசிய இனங்கள் ஒரு நாட்டில் இருப்பதாகக் கொள்ள வேண்டும். இதனால் யப்பானிலோ, ஐஸ்லாந்திலோ 30 தேசிய இனங்கள் இருப்பதாகக் கொள்ள முடியாது. ஆனால் இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளன.

எனவே, இன்றைய சூழலில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகள் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டம் நீதியான ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது

[17 - August - 2007]

* தமிழ் மக்களின் போராட்டம் அவர்களின் துயரங்களின் முடிவுக்கு வழிதேடும் வகையிலான நீதியான ஒரு போராட்டம் அதை பயங்கரவாதம் என்று வர்ணிப்பது பொருத்தமற்றது

-பேராசிரியர் சுமணசிறி லியனகே-

இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று ஸ்ரீலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூக வியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார்.

சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு - ஷ்ரீலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிஸிலிருந்து வெளியாகும் மாதமிரு முறை இதழான `நிலவரம்' (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல் பகுதி:

கேள்வி : ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் முன்னெப்போதையும் விட அனைத்துலக மயப்பட்டு நிற்கின்றது. இந்நிலையிலும் கூட ஷ்ரீலங்கா அரசானது, நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே இல்லை. அது வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை எனக் கூறி வருகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் : உண்மையில் தமிழர் பிரச்சினை என்பது ஸ்ரீலங்கா அரசால், குறிப்பாக கூறுவதானால், காலனித்துவத்திற்கு பிந்திய ஷ்ரீலங்கா அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. சமூகத்திலிலுள்ள பல்லினத் தன்மையைப் புரிந்து கொண்டு நடக்காமல் விட்டதனால் ஏற்பட்ட விளைவே இது எனலாம். ஏனெனில் இலங்கை என்பது சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், மலேயர்கள் எனப் பல இனங்கள் வாழுகின்ற நாடு.

இத்தகைய பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டிலே மற்றொரு இனத்தை ஓரங்கட்டும் பெரும்பான்மையின ஆட்சி வெற்றியைத் தராது. மேற்கிந்திய நாடுகளில் பிறந்து இங்கிலாந்திலே விரிவுரையாளராகப் பணியாற்றிய பிரபல பொருளியலாளரான ஆர்தர் லூயிஸ் பின்வருமாறு கூறினார், "பெரும்பான்மை ஜனநாயகம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. அதுமட்டுமன்றி அநீதியான ஒன்றுமாகும்." இந்த அடிப்படையில் பார்த்தால் காலனித்துவத்திற்குப் பிந்திய ஷ்ரீலங்கா அரசு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை நீண்ட காலமாகத் தொடரும் யுத்தம் நிரூபிக்கின்றது. அதுமட்டுமல்ல அது அநீதியானதும் கூட. ஏனெனில் அங்கு சகவாழ்வு என்பதற்கான அடிப்படை கூட இல்லை.

எனவே தமிழர் போராட்டம் என்பது நியாயமான காரணங்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று. தேசிய அபிலாசைகளின் அடிப்படையில் நடைபெறும் அப்போராட்டத்துக்கு நியாயமான தேவை இருக்கின்றது. ஆனால் அது நடைபெறுகின்ற வழிமுறை சரியா என்பது கேள்விக்குரியது. ஆனால், அடிப்படையில் தமிழர் போராட்டம் நீதியான ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டுள்ளது.

கேள்வி : உங்கள் கருத்தின்படி சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழ் மக்களுக்கு நியாயமான காரணங்களுண்டு. அண்மைய உலகப் போக்குகளை கருத்தில் எடுக்கும் போது, உலகெங்குமுள்ள விடுதலைப் போராட்டங்கள் ஜோர்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கருத்தின் கீழ் நசுக்கப்பட்டு வருவதனைக் காண்கின்றோம். ஷ்ரீலங்கா அரசு கூட இதனையே முன்னிலைப்படுத்துகின்றது.இந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டம் நீதியான ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது

[18 - August - 2007]

பேராசிரியர் சுமணசிறி லியனகே

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ் போன்றோர் வேறுவிதமான அணுகுமுறைகளைக் கைக்கொண்டனர். இரண்டு காரணங்களுக்காக காந்தி இதனை எதிர்த்தார். முதலாவதாக விளைவுகள் நல்லவை என்பதற்காக அதனை அடைகின்ற வழிமுறைகள் எத்தகையதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது. சிலவேளை இது குறுகிய காலத்தில் மிகச் சிறந்ததாகத் தென்படவும் முடியும்.

இதுமாத்திரமல்ல, இலக்கை அடையும் வழிமுறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றார். இதுவே காந்தி அறிமுகம் செய்த அகிம்சை - இதனையே அமெரிக்க சிவில் இயக்கம் உட்பட பல அமைப்புகள் ஏற்றுக்கொண்டன.

ஏனெனில், நீங்கள் இலக்கை எட்டாத போதிலும் நீங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கேயே இருக்க முடியும். உங்களுக்கு ஆதரவு கிட்டுமே ஒழிய, பாதிப்பு எதுவும் வந்துவிடாது. இது ஒரு விடயம்.

இரண்டாவது விடயம் உங்கள் வழிமுறை நியாயபூர்வமானதாக இருத்தல் ஆகும். நான் இதனையே பின்பற்றுகிறேன். ஒரு வேலைத்திட்டத்தை வரையறை செய்துகொண்டு அதற்குள்ளாக ஒரு சமரசப் பேச்சுகளினூடே இலக்கை அடைதலே அதுவாகும். இது நிச்சயமான வழி.

ஷ்ரீலங்கா விவகாரத்தை எடுத்துக் கொண்டால் இதுவரை 65,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தத் தொகையில் அரைவாசிக்கும் குறைவானோரே இரண்டு தரப்பையும் சேர்ந்த ஆயுதப் படைகளில் உயிரிழந்தோராவர். சகல யுத்தங்களையும் போல முதலாம் உலக யுத்தமாயினும், 2 ஆம் உலக யுத்தமாயினும், ஏனைய யுத்தங்களாயினும் - குடிமக்களே யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

துல்லியமாக இல்லாவிட்டாலும் எனக்குத் தெரிந்தளவில், யுத்தத்தில் இறப்போரில் 60 வீதமானோர் குடிமக்களே. அதில் பெரும்பான்மையானோர் சிறுவர்களும் பெண்களும் ஆவர். எனவே, இவ்வாறு நாம் தொடர்ந்து செல்ல முடியுமா? அரசாங்கத்தின் மீது நாம் குறை கூறுவதானாலும் கூட நாம் இவ்வாறு தொடர்ந்து செல்லப் போகின்றோமா எனச் சிந்திக்க வேண்டும்.

இது நான் முன்வைக்க விரும்பும் கேள்வி - இதே கேள்வியையே காந்தியும் முன்வைத்தார். அதனை (வன்முறையை) நீங்கள் ஆரம்பித்து வைத்தால், அதற்கு முடிவே இருக்காது - காந்தி கூறினார்.

இந்த அடிப்படையில் நான் ஒரு தமிழ்த் தேசியவாதி எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு நான் கூறும்போது நளின் டீ சில்வா போன்றோர் என்னை விமர்சிக்கிறார்கள். நீ ஒரு சிங்களவனாய் இருந்து கொண்டு தமிழ்த் தேசியவாதியாய் இருக்கிறாய் என்கிறார்கள். நீங்கள் கூறுவதைப் போன்று தமிழர்களில் கூட சிலர் சிங்களத் தேசியவாதிகளாய் இருக்கிறார்கள்தானே?

தேசியவாதம் படுமோசமான ஒரு விடயம் எனப் பலர் கூறுகின்றார்கள். தேசியவாதம் தொடர்பாக பிரபலமான புலமையாளரான பெனடிக்ற் அண்டர்சன் கூறுவதுபோல தேசியவாதம் என்பது ஒரு இயல்பான விடயம். நான் கூட ஒருமுறை "மார்க்சிசம், லெனினிசம் என்பவற்றைவிட தேசியவாதம் மிகவும் துல்லியமான ஒரு தத்துவம் என எழுதியிருந்தேன். ஏனெனில் தேசியவாதம் என்பது மார்க்சிசம் லெனினிசத்தை விட அதிக பரப்பெல்லையைக் கொண்டது. இது வேறு விடயம்.

நான் கூற விரும்புவது என்னவெனில் தேசியவாதி என்பவரை எவ்வாறு வரையறுப்பது? நீங்கள் உங்கள் நாட்டுக்கு அவசியமாக விளங்குவீர்களானால் நீங்கள் ஒரு தேசியவாதி என பெனடிக்ற் அன்டர்சன் கூறுகிறார். நான் என்னைச் ஷ்ரீலங்காத் தேசியவாதி எனக்கூறிக்கொள்கின்றேன். ஏனெனில், நான் சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றையிட்டு வெட்கப்படுகின்றேன். இந்த அடிப்படையில் நான் ஒரு தேசியவாதி.

உண்மையில் பெனடிக்ற் அண்டர்சன் ஒரு சந்தர்ப்பத்திலே தான் பிறந்த நாடான பிரித்தானியாவில் அவமானமாக மாறியதாகக் கூறினார். 1956 காலப் பகுதியில் தனது மாணவர்கள் சிலர் சிறிலங்கா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது தாக்கிய விவகாரத்தின் போதே இவ்வாறு கூறினார்.

ஜேர்மன் பேராசிரியரான கான்ட் தனது கட்டுரையில் பின்வருமாறு கூறினார். மற்றைய தரப்பினரை நீங்கள் மோசமாக நடத்தவில்லையானால் நீங்கள் ஒரு சரியான குடிமகன் அல்ல.

தேசியவாதம் வேறு- தேசியவாதி வேறு. இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். வன்முறையையும் தேசியவாதத்தையும் நீங்கள் இணைக்க முடியாது. ஏனெனில் பல இடங்களில் அது வெற்றிபெறவில்லை. உதாரணமாக சல்வடோர் நிக்கரகுவோ போன்ற நாடுகளைக் கூறமுடியும்.

இது இன்றைய உலகச் சூழ்நிலையிலும் ஓரளவு தங்கியுள்ளது. இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தேசங்களின் கூட்டமைப்பாக இல்லாமல் அரசாங்கங்களின் கூட்டமைப்பாகவே உள்ளது. ஏனெனில் உலகில் சுமார் 6,000 தேசிய இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிலர் 12,000 தேசிய இனங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஐ.நா.சபையில் எத்தனை நாடுகள் இருக்கின்றன. 200 நாடுகள் என வைத்துக்கொண்டால் சராசரியாக 30 தேசிய இனங்கள் ஒரு நாட்டில் இருப்பதாகக் கொள்ளவேண்டும். இதனால் யப்பானிலோ ஐஸ்லாந்திலோ 30 தேசிய இனங்கள் இருப்பதாகக் கொள்ளமுடியாது. ஆனால் இந்தியா, இந்தோனிசியா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளன.

எனவே இன்றைய சூழலில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகள் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதா

மாமனிதர் சிவராம் அவர்கள் சிங்களவருக்கு தமிழர் பிரச்சினையை புரிய வைக்க முடியாது எண்று எழுதி இருந்தார்.... நாங்கள் புரிய வைக்க முயலாத பட்ச்சத்தில் தாங்களாக புரிய முற்படுவார்கள் என்பது இப்போது புரிகிறது....!

தயா அண்ணா எல்லா சிங்களவருக்கும் புரிய வைக்க முடியாது அதற்கு காரனம் எம்மக்களின் பயம் சிங்களவருடன் கதைகும் போது தேவையில்லாத போர் என இனம் காட்டுகின்றனர் எம்மக்கள் இது பயத்தின் காரணமாக இதனால் சிங்களவரிடம் தமிழர் புலிகளை வெறுகின்றனர் என்னும் தோற்றப்பாடு வந்து விட்டது.என் நண்பர்கள் கூட என்னிடம் பிரபாகரனிடம் கூறு சண்டையை நிப்பாட்ட சொல்லி என சொல்லி இருகிறார்கள் நான் திரும்பி சொல்லுவேன் உங்கட ஆக்கள் சும்மா இருந்திருந்தால் ஒன்டுமே நடந்திருகாது என இதை என்னிடம் கேட்டவர் இலங்கை அமைச்சர் நாவின்னவின் மகன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.