Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் அரசுக்கு ஏற்பட்டுள்ள `திடீர்காதல்' பலத்த சந்தேகத்துக்குரியது என்கிறார் சம்பந்தன்

Featured Replies

ஆவணி 18,2007

இலங்கை அரசாங்கத்துக்கு கிழக்கின் மீது ஏற்பட்டிருக்கும் `திடீர்காதல்' தமக்கு பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான மக்கள் ஆணை இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் `சமாதானத்துக்கான வணிகம்' (Business for peace Forum) எனும் கருத்தமர்வு நேற்று முன் தினம் வியாழக்கிழமை ஜெய் கில்டன் ஹோட்டலில் நடைபெற்றபொழுது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இதனை தெரிவித்தார்.

கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள அரசாங்கம், அப்பகுதி மக்களின் பிரதிநிதிகளென்ற வகையில் இதுகுறித்து எம்முடன் எந்தவிதமான ஆலோசனைகளையும் ஏன் நடத்தவில்லையெனவும் கேள்வியெழுப்பினார்.

இலங்கையின் இனக்குழும முரண்பாட்டின் தோற்றம் மற்றும் அது உக்கிரமடைந்ததற்கான காரணங்கள் குறித்தும் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்கள் நழுவவிடப்பட்டமை பற்றியும் ஆணித்தரமாக சான்றுகளுடன் விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், இன்று இலங்கை உலகிலேயே இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக விளக்குவதாகவும் தெரிவித்தார்.

"2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2007 ஆம் ஆண்டுக்கான இராணுவச் செலவீனம் இரு மடங்காகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்கப்போவதாக கூறி இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை அரசாங்கம், தற்பொழுது தாம் கிழக்கை பிடித்து விட்டதாக கூறுகின்றது. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர முடியவில்லை.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பாரிய பிரதேசம் தமிழ் மக்கள் செல்ல முடியாத பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 28 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக பூமியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதாக கூறிய அரசாங்கம் இன்று அதே மக்களை மீளக்குடியமர்த்த மறுத்துள்ளது.

கட்டுநாயக்காவிலும் கொலன்னாவையிலும் உயர் பாதுகாப்பு வலயமுள்ளது. அங்கு சிங்கள மக்கள் வசிக்கின்றனர். ஆனால், திருகோணமலையில் இவ்வாறான வலயத்துக்குள் தமிழ் மக்கள் வசிக்க முடியாதது ஏன்?" என அவர் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை, சர்வகட்சி மகாநாடு வாசற்படியில் இறந்துபோய் கிடப்பதாக வர்ணித்த அவர், இந்த சர்வகட்சி மகாநாட்டினால் எவ்வித பலனுமில்லையெனவும் தெரிவித்தார்.

"வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. அதை மீளவும் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் நிர்வாக ரீதியாகவும் பிரிக்கின்ற முயற்சிகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்துக்கு கிழக்கு மீது திடீர் காதல் ஏற்பட்டுள்ளது. இது எமக்கு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

எமது மக்கள் இந்த அரசாங்கத்துக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான ஆணையை வழங்கவில்லை" என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

-நன்றி தமிழ்ப்பிரியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.