Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் களமிறக்கப்படும் எஃப்-7 தாக்குதல் விமானம்

Featured Replies

19-08-2007

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சலசலப்புக்கள் மக்களின் எதிர்பார்ப்பைப் போல் சத்தமின்றி அடங்கிவிட இந்த வார அரசியலில் ஆவலை அதிகரிக்கும் திருப்பங்களாக ரணில் - மங்கள கூட்டணியின் பேரணிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வரவு என்பவற்றை குறிப்பிடலாம்.

அதாவது அரசிற்கு எதிரான அணியினது பலம் விரிவடைகின்றதா? என்ற ஒரு தோற்றப்பாடு தென்னிலங்கையில் வலுப்பெற்றுக்கொண்டு செல்கின்றது. இந்த சலசலப்புக்களுக்கு மத்தியில் மனிதநேய பணியாளர்கள் பணியாற்றுவதற்கு இலங்கை உகந்த இடம் அல்ல, அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்த கருத்தின் மீது மிகவும் கடுமையான சாடல்களை அரச தரப்பு மேற்கொண்டு வருகின்றது.

அரசின் இந்த சீற்றத்திற்கான காரணம் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடிய இந்த அறிக்கை அரசின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்பதுதான்.

அரசின் கடன்களை தாம் அதிகாரத்திற்கு வரும் போது பொறுப்பேற்க முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஏற்கனவே தெரிவித்து வரும் நிலையில் அனைத்துலக மட்டத்தில் தனிமைப்படுத்தும் செயலாக ஜோன் ஹோம்ஸின் கருத்து இருக்கலாம் என அரசு அச்சமடைந்துள்ளது.

ஏனெனில் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அரசு தனது செல்வாக்கை தென்னிலங்கையில் இழந்து வருகின்றது என்பது வெளிப்படை.

பிரகடனப்படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போர், போர்க்களத்தை விட பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சேதங்களும் அதன் தொடர்ச்சியாக அரசியலில் ஏற்படுத்திவரும் தாக்கங்களும் அதிகம்.

நாட்டின் பணவீக்கம் இந்த தசாப்தத்தின் அதிஉயர் நிலையான 20.5 வீதத்தை அடைந்துள்ளதுடன், டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியும் 111.97 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. வாழ்க்கைச் செலவும் 17.6 வீதத்தை அடைந்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு நிதிக்கான ஒதுக்கீடுகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன.

அரசின் பிரதான அந்நியச் செலாவணியை ஈட்டும் தொழில்துறையான உல்லாசப்பயணத்துறையும் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்பிரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் 14.8 வீத இழப்பை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டை விட 44 வீத அதிகரிப்பு செய்யப்பட்ட பாதுகாப்புச் செலவினம் (139 பில்லியன் ரூபாக்கள்) விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள், கிழக்கு படை நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுத மற்றும் வெடிபொருள் பிரயோகங்களை தொடர்ந்து 200 பில்லியன்களை கடந்துள்ளதுடன், அதனை தாங்க முடியாத நிலையிலும் அரசு உள்ளது.

எனவே மிக்-29 ரக தாக்குதல் விமானங்களின் கொள்வனவுகளை நிறுத்தி அதற்கு பதிலாக எஃப்-7 ரக சீன தயாரிப்பான தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்யும் நிலைக்கு வான்படை தள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 15 தொடக்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மிக்-29 விமானங்களை பொறுத்த வரையில், அதற்கான பராமரிப்புச் செலவு, வான் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள் என்பவற்றுடன் 50 மில்லியன் டொலர்களை தொட்டு விடும் என கணிக்கப்படுகின்றது.

எனவேதான் வான்படையினர் மிக்-29 தாக்குதல் விமானங்களை விடுத்து ஒவ்வொன்றும் 11 தொடக்கம் 15 மில்லியன் டொலர்களை உடைய நவீன எஃ.ப்-7 ரக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ய முயன்று வருகின்றனர்.

மேலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ரஷ்யா நீண்டகால கடன் அடிப்படையில் நவீன விமானங்களை வழங்குவதும் சாத்தியமற்றது. ஏனெனில் அதன் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டுவது இலகுவானது அல்ல. ஆனால் சீனாவின் நிலைமை அப்படியல்ல. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவினாலும், சீனாவின் பிரதான ஆயுத கொள்வனவு நாடாக இலங்கை தொடர்ந்து விளங்குவதனாலும், இலங்கைக்கு சீனா நீண்டகால கடன் அடிப்படையில் ஆயுதங்களை வழங்குவதற்கு முன்வரலாம். இதுவே இலங்கை சீனாவின் விமானங்களை நாடியதற்கான மற்றும் ஒரு காரணமாகும்.

தற்போது இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்படும் எஃப்-7 பலநோக்கு தாக்குதல் விமானங்கள் 1991 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை வான்படையின் பாவனையில் இருப்பவையை விட சற்று நவீனமானவை. இலங்கை வான்படையானது ஏற்கனவே 06 எஃப்-7 மற்றும் எஃப்-5 ரக விமானங்களை கொண்டுள்ளது. இவற்றை வான்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய 1991 ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்திருந்தது.

இந்த தொகுதியில் 02 ளூநலெயபெ குவு-5 து? ஊரiணாழர குவு-7இ 04 ஊhநபெனர கு-7டீளு (இது மிக்-21 வகையின் பிரதி வடிவமாகும்) ஆகிய மிகை ஒலி விமானங்கள் அடங்கும்.

புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானங்களை கொண்டு ஐந்தாவது ஸ்குவான்ரன் பிரிவு 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி அமைக்கப்பட்டதுடன், கொழும்பின் வடக்கில் உள்ள கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் அது நிறுத்தப்பட்டிருந்தது.

1995 ஆம் ஆண்டு ஜூலையில் விடுதலைப் புலிகளின் ஏவுகணைக்கு இலங்கை விமானப் படையின் புக்காரா குண்டுவீச்சு விமானம் உட்பட்டதைத் தொடர்ந்து அவை களமுனைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ள, எஃப்-7 விமானங்களின் பயன்பாடு மேலும் அதிகரித்திருந்தது.

எனினும் இவற்றின் அதீத பாவனையால் அவை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தமது ஓய்வு நிலையை அடைந்து விட்டன. 1990 களின் இறுதிப் பகுதியில் அவை பயன்படுத்த முடியாத நிலையில் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் மேலதிக மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

1996 ஆம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து கிபீர் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் வரை இந்த விமானங்களே சமர்க்களங்களிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சுக்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன.

எனினும் வான்தாக்குதல் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்கள் தரைத்தாக்குதலில் அதிக அனுகூலங்களை ஏற்படுத்தவில்லை என்பதனாலும், களத்தின் தீவிரத்தை தொடர்ந்தும் அரசின் பார்வை தரைத்தாக்குதலில் அதிக பயனுடைய கிபீர், மிக்-27 ரக தாக்குதல் விமானங்களின் பக்கம் திரும்பியது.

மேலும் 1991 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 07 எஃப்-7 விமானங்களில் ஒன்று கட்டுநாயக்க வான்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 2000 ஆம் ஆண்டு வீழ்ந்து நொருங்கியிருந்தது.

பொதுவாக குவு-5 ரக விமானங்கள் 500 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 5 வருடங்களுக்கு பின்னரும், குவு-7 ரக விமானங்கள் 800 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 8 வருடங்களுக்கு பின்னரும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

போர்நிறுத்த காலத்தில் தனது படைக்கட்டமைப்புக்களை புனரமைப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்ட அரசு வான்படையின் நவீனமயப்படுத்தல்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தது. எனவே தரையில் பாவனையற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஃப்-7 தாக்குதல் விமானங்களை புனரமைத்து மீளவும் போரில் பயன்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதற்காக எஃப்-7 ரக தாக்குதல் விமானங்களை அதன் தயாரிப்பு நாடான சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் வான்படையை கொண்ட நாடான பாகிஸ்தானின் உதவி நாடப்பட்டது. இலங்கை அரசு பாகிஸ்தான் அரசுடன் மேற்கொண்ட உடன்பாட்டை தொடர்ந்து இந்த விமானங்களை மறுசீரமைக்கும் பணிகள் பாகிஸ்தானின் Pயமளைவயn யுநசழ யெரவiஉயட ஊழஅpடநஒ (Pயுஊ) இற்கு வழங்கப்பட்டது.

மறுசீரமைப்பு வேலைகளுக்காக முதலாவது எஃப்-7 விமானம் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் ஏனைய விமானங்களையும் வான்படையினர் பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தனர் 03 கு-7டீளுஇ 01 குவு-7இ 02 குவு-5 ஆகிய அனைத்து விமானங்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதுடன், மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்து செப்டெம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு அவற்றை மீண்டும் இலங்கையிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இறுதியாக மறுசீரமைப்பு வேலைகளுக்காக பாகிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்ட எல்லா விமானங்களும் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசிடம் பாகிஸ்தானின் வான்படையின் பிரதம அதிகாரியான ஏயர் சீப் மார்ஷல் கலீம் சடற் (யுசை ஊhநைக ஆயசளாயட முயடநநஅ ளுயயனயவ) இனால் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

ஐந்து வருடங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விமானங்கள் தற்போது கிபீர் விமானங்களுடன் ஆதரவு தாக்குதல் விமானங்களாக தரைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதுடன், பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

எனினும் வான் தாக்குதலில் வலிமையுள்ள இந்த விமானங்களின் வான்தாக்குதல் பயன்பாடுகள் அன்று இலங்கை வான்படையின் முக்கிய கவனத்தை பெறவில்லை. 1990 களின் முற்பகுதியில் அதனை பிரதான தரைத்தாக்குதல் விமானமாகவே வான்படை பயன்படுத்தி வந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலின் பின்னர் வான்படையினரின் தாக்குதல் உத்திகளை விட வான் பாதுகாப்பு உத்திகளில் அதிக நவீனத்துவத்தை மேற்கொள்ளவேண்டியதே வான் படையினரின் முக்கிய தேவையாகியது.

எனினும் 1990 களின் இறுதியில் வான்படையினரால் கைவிடப்பட்ட எஃப்-7 ரக பல்நோக்கு தாக்குதல் விமானங்களை மீண்டும் தூசுதட்டி வான்தாக்குதலுக்கு பயன்படுத்துவது வான்படையினரிடம் உளவியலில் தாக்கங்களை உண்டுபண்ணுவதுடன், அதனை ஏன் முன்னர் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கலாம் என்பதனால் மிக்-29 வான் தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வது என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் போரினால் சீரழிந்த பொருளாதாரத்தில் விடுதலைப் புலிகளின் வான்படை ஏற்படுத்திய மேலதிக சேதம் மிக்-29 போன்ற நான்காம் தலைமுறை விமானங்களின் கொள்வனவை நாட்டின் பொருளாதாரம் தாங்கமாட்டாது என்ற யதார்த்தத்தை தாமதமாக உணர்த்தியிருந்தது. மேலும் அதிக விலையை உடைய நவீனரக ராடார்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையையும் வான்படைக்கு அது ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நிகழ்ந்து முன்று மாதங்களின் பின்னரே நவீன முப்பரிமாண ராடார்களான ஜேவை - ஐஐ (துலு-ஐஐ) ராடார்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், ராடார் மூலம் வழிநடத்தப்படும் சுவீடன் நாட்டு போபோஸ் விமான எதிர்ப்பு பீரங்கிகளும் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வான் பாதுகாப்பு பொறிமுறைகளின் செலவுகளுக்கு அப்பால் மிக்-29 விமானங்களின் கொள்வனவுகளையும் அதன் தேவைகளையும் பூர்த்தி செய்வது என்பது பொருளாதாரத்தில் கடுமையாக தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதனால் தற்போது அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன.

எனினும் சீனாவின் தயாரிப்பான நவீன எஃப்-7 எம் (கு-7P யுசைபரயசன) அல்லது எஃப்-7 பி (கு-7P யுசைபரயசன) போன்ற நவீன வான் தாக்குதல் வலிமையுள்ள நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசு முயன்று வருகின்றது.

செலவுகள் குறைந்த இந்த விமானங்களை சீனாவிடம் கடன் அடிப்படையில் பெறலாம் என்பதுடன், அவற்றை பாகிஸ்தானிடம் மறுசீரமைப்பு செய்து கொள்வதும் செலவு குறைந்தது என்பது அரசின் கணிப்பு.

வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகளையும் (Pடு-7 யுசை-வழ-யுசை ஆளைளடைநள) உந்துகணைகளையும் (ழுநெ 18-வரடிந pழன ழக வுலிந 57-2 (57 அஅ) யுசை-வழ-யுசை யனெ யுசை-வழ-புசழரனெ சுழஉமநவள) செலுத்தக்கூடிய இந்த விமானங்களுடன் அரசிடம் தற்போதுள்ள எஃப்-7 விமானங்களும் வான் தாக்குதலில் இணைந்து கொள்ளலாம்.

ஆனால் மற்றுமொரு வான்தாக்குதலை விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டால் தற்போதைய இந்த வான்காப்பு உத்திகளையும் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

எனினும் போரினால் பொருளாதாரத்தின் மீது ஏற்படும் சேதம் படை நடவடிக்கைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதனை ஒரு சிறு உதாரணமாக கொள்ளலாம்.

எனவே இலங்கை அரசின் மீது அனைத்துலக மட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் ஏற்படுமாக இருந்தால் அது போரின் போக்கில் கடுமையான நெருக்கடியை உண்டு பண்ணலாம் என்பது வெளிப்படையான உண்மை. இதனால் தான் அனைத்துலக மட்டத்தில் தனது பெயரை தக்கவைப்பதற்கு அரசு எல்லா வழிகளிலும் போராடி வருகின்றது. ஜோன் ஹோம்ஸின் கருத்திற்கு அரச தரப்பில் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புக்களுக்கும் இதுவே பிரதான காரணமாகும்.

-நன்றி வீரககேசரி வாரவெளியீட்டுக்காக வேல்சிலிருந்து அருஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.