Jump to content

தமிழர்களிடம்... 900 கிலோ மீற்றர் அளவில், கடல் பகுதி இருந்தும்... மற்றவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டி உள்ளமை ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
May be an image of 6 people, people sitting, people standing and outdoors
 
தமிழர்களிடம்... 900 கிலோ மீற்றர் அளவில், கடல் பகுதி இருந்தும்... 
மற்றவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டி உள்ளமை ஏன்?
 
இலங்கையினுடைய மொத்த கடல் பரப்பு 5 இலட்சத்து 17,000 சதுர கிலோமீற்றர்.
இதில் கடற்கரையின் நீளம் 1,925 கிலோமீற்றர்.
இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு கடற்க்கரை வடக்கு கிழக்கிற்கு சொந்தமானதாக இருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால்
கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் அளவில் எங்கள் கடற்கரை இருக்கின்றது.
 
அதே போல எங்களை சுற்றிவர அகலமான கண்டத்திட்டு கண்டமேடை இருக்கின்றது.
உலகப் பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்கயுளுடைய கையில் தான் இருக்கின்றது.
தரையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரம் வரையிலான பிரத்தியேக பொருளாதார வலயம் இருக்கின்றது.
பருத்தித்துறையில் இருந்து கிழக்காலை 200 கிலோமீற்றர் முல்லைத்தீவு வரை நாங்கள் ஆழ்கடல் போகலாம்.
 
உண்மையில் எங்களுடைய வடக்கு கிழக்கு பொருளாதாரத்தில்
விவசாயத்திற்கு அடுத்ததாக அமைவது இந்த கடல் வளமே.
விதையாமலே பயன் தருகின்ற மிக பெரிய கடல் வளம் எம்மிடம் இருக்கின்றது
அதே போல கடல் அட்டை, நண்டு, இறால் போன்றவை கூட வளர்க்கலாம்.
 
இங்கு அதற்கு சரியான இடம் இருக்கின்றது. ஆனால் சரியான ஆளணி இல்லை,
முதலீடில்லை, பாதுகாப்பு இல்லை அவ்வாறாக நிறைய பிரச்சனை இருக்கின்றது.
அது பற்றிய ஆய்வும் இல்லை அக்கறையும் இல்லை.
 
ஆனால் கடல் சம்பந்தமான முழு அதிகாரமும் மத்திய ஒற்றையாட்சி அரசிடமும்
இருப்பதால் வளப்பயன்பாடு எங்களுடைய கரையில் இருக்கின்ற மக்களைவிட
தென்பகுதி சிங்களவர்களும், அந்நிய இந்திய வியாபாரிகளும், சீன வியாபாரிகளும்...
பங்கு போட்டு அனுபவித்து கொண்டு இருக்கின்றார்கள்
 
குறிப்பாக முதலீட்டு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை செய்ய வேண்டிய அரசாங்கம்
அக்கறை இல்லாமல்இயற்கையாகவே மேய்ச்சலுக்காகவும், இருப்புக்காகவும்,
விருத்திக்காகவும் மீன்கள் வந்து நடமாடும் பகுதிகளை... கடலட்டை பண்ணை என்கிற பெயரில்
தென்பகுதி வியாபாரிகள், சீனா வியாபாரிகள் மற்றும் இந்திய வியாபாரிகள் என
பல வியாபாரிகளுக்கு விற்று கொண்டு இருக்கின்றது
 
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் சிங்கள நபரொருவருக்கு
முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது .
சீனா வடபகுதி கடற்பரப்புக்களில் குறிப்பாக தீவகப்பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில்
கடல் அட்டை பண்ணை அமைக்கப் போவதாக சொல்லப்படுகின்றது
 
சீனர்களுக்கு போட்டியாக இந்திய வியாபாரிகளும் கடலட்டை பண்ணை என படையெடுத்து வருகின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்கள்இயங்குகின்ற நிலையில்
எந்த சங்கத்திலும் அங்கத்தவராக இல்லாதவர்களுக்கு கூட
கடல் அட்டைப் பண்ணை அமைக்க அனுமதி வழங்குகின்றார்கள்
 
இதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது
குறிப்பாக நிறைய அரசியல் ஓடுகின்றது
 
உண்மையில் பிரதேச மீனவர்களில் பலர் கடலட்டை பண்ணை  முதலாளிகளுக்கு
கூலிக்கு அட்டை பிடிச்சு கொடுக்கிற சூழ்நிலையை தான் உருவாகின்றார்கள்
 
படம் : கடலட்டை பண்ணைக்காக வந்து இருக்கும் இந்திய வியாபாரிகளோடு டக்ளஸ் தேவானந்தா கும்பல்
1: டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தயானந்தா (வடமாகாண டயலொக் முகவர்)
2: டக்ளஸ் தேவானந்தா
3. கமலேந்திரன் : ஈ பி டி பியை சேர்ந்த இவர் அதே கட்சியை சேர்ந்த முன்னாள்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் திரு டேனியல் றெக்சிகன் அவர்க்ளின் மனைவியை
திருமணம் செய்யும் நோக்கில் திரு டேனியல் றெக்சிகன் அவர்களை
2013 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்து இருந்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு Published By: Vishnu 23 Dec, 2024 | 04:05 AM   நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை,  ஹெட்டிபொல,  கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.   எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.    
    • கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி Published By: Vishnu 23 Dec, 2024 | 02:57 AM   தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் பிரதான செயற்பாட்டு பங்குதாரராக ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்படுவது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையின் தேசிய அபிவிருத்தியின் முதற் கட்டமாக புதிய கல்வி முறைமை மறுசீரமைப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல் புதிய கல்வி கொள்கையை வெற்றிகரமான முறையில் செயற்படுத்துவதற்காக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு,ஆசிரியர் - அதிபர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த கலந்துரையாடலின் போது எடுத்துரைத்துள்ளார். தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர்.    
    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
    • அது வேற ஒன்றுமில்லை இந்த இரண்டு தரப்பும் குளிர்காய நாங்கள் சாக வேண்டியிருந்தது, அதனால இந்த இரண்டு தரப்பினையும் கோர்த்டுவிடுவம் என்று ஒரு முயற்சிதான்.😁
    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.