Jump to content

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

By VISHNU

19 OCT, 2022 | 05:57 PM
image

(எம்.மனோசித்ரா)

நுகர்வோரின் நலனைக் கருத்திற் கொண்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய உணவு பொருட்கள சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.

அதற்கமைய இன்று (18) புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள சகல சதொச விற்பனை நிலையங்களிலும் இப்புதிய விலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதன் புதிய விலை 490 ரூபாவாகும். மாவின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமைக்கமைய அதன் புதிய விலை 320 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமைக்கமைய அதன் புதிய விலை 1450 ரூபாவாகும். கடலைப்பருப்பின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 285 ரூபாவாகும்.

வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமைக்கமைய அதன் புதிய விலை 260 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.

https://www.virakesari.lk/article/138032

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

By T. SARANYA

03 NOV, 2022 | 04:02 PM
image

5 பொருட்களின் விலைகளை இன்று வியாழக்கிழமை (03) முதல் குறைத்துள்ளதாக சதொச நிறுவனம்  தெரிவித்துள்ளது.

அதன்படி, கோதுமை மா கிலோ 96 ரூபாவினாலும் டின் மீன் (உள்ளூர்) 105 ரூபாவினாலும் நெத்தலி 200  ரூபாவினாலும்  பருப்பு கிலோ 17 ரூபாவினாலும்  வெள்ளை சீனி 22  ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோதுமை மா கிலோவின் புதிய விலை 279 ரூபாவாகவும், டின் மீன் (உள்ளூர்) விலை 585 ரூபாவாகவும் நெத்தலி ஒரு கிலோ 1,300 ரூபாவாகவும் பருப்பு கிலோ 398 ரூபாவாகவும் வெள்ளை சீனி கிலோ 238 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/139035

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.