Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

செவ்வாயில் பெரும் தாக்கங்களை ஆவணப்படுத்தும் நாசாவின் விண்வெளி ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

செவ்வாயில் பெரும் தாக்கங்களை ஆவணப்படுத்தும் நாசாவின் விண்வெளி ஆய்வு

  • ஜொனாதன் அமோஸ்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பதிவான படம்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

 

படக்குறிப்பு,

பதிவான படம்

விண்வெளி ஆய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சாட்சியாக செவ்வாய்கிரகத்தில் பெரிய பள்ளம் தோன்றியுள்ளது. இது பெரிய சூரிய குடும்பமான செவ்வாயில், ஆய்வின் போது முன் எப்போதும் இல்லாத வகையில் கண்டறியப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் 150 மீட்டர் அகலமான ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது வேன் அளவுக்கு பெரியதான பொருள் ஒன்று. மேலும் இந்த பள்ளம் உருவானதில் 35 கி.மீக்கு அப்பால் கழிவுகள் தூக்கி எறியப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி முகமையின் இன்சைட் லேண்டரில் நில‍ அதிர்வு மானியை உபயோகித்து இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு சுற்றுப்பாதை (எம்ஆர்ஓ)-வில் இருந்து கிடைக்கப்பெற்ற படங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை கோளானது செவ்வாய்கிரகத்தை தொடர்ந்து படம் எடுத்து வருகிறது. செவ்வாய் வெளியில் முக்கியமான அதிர்வுகள் நேரிடுவதற்கு முன்பும், பின்பும் படங்களை இது உருவாக்குகிறது. இன்சைட்டில் இருந்து குறிப்பிட்ட நேரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கோணம் மற்றும் தூரம் (3500 கி.மீ)ஆகியவற்றையும் தருகிறது.

 

"முன் எப்போது அறிந்ததையும் விடவும் இது பெரிய புதிய பள்ளமாக இருக்கிறது," என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்க்ரிட் டௌபர்."இது 500 அடி அகலமாக உள்ளது. விண்கற்கள் இந்த கிரத்தை அனைத்து நேரங்களிலும் தாக்கிக் கொண்டே இருந்தாலும், செவ்வாயில் உருவான இதற்கு முன்பு நாம் பார்த்த வழக்கமான புதிய பள்ளங்களை விட இந்த பள்ளமானது 10 மடங்கு பெரியதாகும்.

"இவ்வளவு பெரிய அளவுடன் கூடிய பள்ளம், ஒவ்வொரு சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, இந்த செவ்வாய்கிரகத்தில் எங்கேனும் ஒரு பகுதியில் தோன்றும் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஒரு தலைமுறைக்கு ஒருமுறையாகக்கூட அது இருக்கலாம். எனவே இந்த நிகழ்வைக் காண முடிந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது." என்கிறார் இங்க்ரிட் டௌபர்.

இந்த தாக்கத்துக்கு பின்னதான ஆய்வில், பெரிய துண்டுகளாக புதையுண்டிருந்த தண்ணீர் ஐஸ் கட்டிகள் கண்டறியப்பட்டது. பள்ளத்தை சுற்றிலும் உள்ள விளிம்புகளில் அவை வீசப்பட்டிருந்தன. செவ்வாய்கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக முன் ஒருபோதும் இது போல புதையுண்ட தண்ணீர் ஐஸ் கட்டிகள் கண்டறியப்பட்டதில்லை.

இது எதிர்காலத்தில் மனிதர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

"இந்த ஐஸ்கட்டிகள் தண்ணீர், ஆக்ஸிஜன் அல்லது ஹைட்ரஜன் ஆக மாறக்கூடும். அது உண்மையிலேயே உபயோகமாக இருக்கும்," என நாசாவின் கிரக அறிவியல் இயக்குனர் டாக்டர் லோரி கிளேஸ் கூறுகிறார்.

பிரான்ஸ், பிரிட்டன் கட்டமைத்த தன்னுடைய நில அதிர்வு அளவீட்டு கருவியை உபயோகித்து நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாயில் 2018ஆம் ஆண்டு நவம்பரில் களம் இறங்கியது முதல் 1,300க்கும் மேற்பட்ட அதிர்வுகளை கண்டறிந்துள்ளது. இந்த குறிப்பிட்ட அதிர்வுகள் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது. இது 2021ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நேரிட்டுள்ளது. அது மேற்பரப்பு அலைகள் என்று அழைக்கப்படுபவற்றின் ஒரு கூறுகளைக் கொண்டிருப்பதால், விஞ்ஞானிகளின் ஆர்வத்தை உடனடியாகத் தூண்டியது.

இன்சைட் பதிவு செய்த பெரும்பாலான அதிர்வுகள், செவ்வாயின் ஆழமான பாறை அசைவுகளுடன் தொடர்புடைய பாரம்பரிய முதன்மையான மற்றும் இரண்டாம் நிலை அலைகளை உற்பத்தி செய்தன.

புதிதாக கண்டறியப்பட்ட இந்த சிற்றலைகள் செவ்வாய் கிரகத்தின் மேல்பகுதியில் மேலோட்டமாக பயணித்துக்கொண்டிருந்தன.

 

2021 டிசம்பர் 24க்கு முன்பு இருந்த படமும் தற்போதைய படமும்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

 

படக்குறிப்பு,

2021 டிசம்பர் 24க்கு முன்பு இருந்த படமும் தற்போதைய படமும்

"பூமியைத் தவிர இன்னொரு கிரகத்தில் மேற்பரப்பு அதிர்வு அலைகள் கண்டறியப்படுவது முதன்முறையாகும். நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ பயணங்களிலும் கூட இது நிர்வகிக்கப்படவில்லை," என ETH சூரிச்சின் புவி இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த டோயோன் கிம் கூறியுள்ளார். இவர் இந்த வாரம் ஆங்கில அறிவியல் இதழில் வெளிவரும் கட்டுரையின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

அங்கீகரிக்கப்பட்ட மேற்பரப்பு அலைகளானது இரண்டாவது விண்கல் தாக்குதலாக ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்துவதற்கு உதவியது. இது கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தோராயமாக இன்சைட்டில் இருந்து 7500 கி.மீ தொலைவில் நேரிட்டது. இது ஒரு சற்றே மாறுபட்ட நிகழ்வாகும். பள்ளங்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்கி உள்ளது. அதில் பெரிதாக இருக்கும் ஒன்று 130மீ விட்டம் கொண்டதாகும்.

இரண்டு தாக்கங்களும் செவ்வாயின் உட்கட்டமைப்பை கண்டறிவதில் புதிய அறிவை கொடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அங்கே ஆழமான மூலத்தில் நேரிட்ட நிலநடுக்கம், கிரகத்தின் மேலடுக்கு மற்றும் மையப்பகுதியின் உள்ளடக்கம் மற்றும் கட்டமைப்பை விஞ்ஞானிகளுக்கு கூறின. அதன் மேல் பரவியுள்ள மேலோட்டம் பற்றிய புதிய தகவல்களை மேற்பரப்பு அலைகள் கூறின.

இன்சைட் லேண்டர் மற்றும் தளங்களின் தாக்கம் ஆகியவற்றுக்கு இடையே மேலோட்டம் மிகவும் ஒரே மாதிரியான கட்டமைப்பு மற்றும் உயர் அடர்த்தியானதாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்ல முடியும். இதற்கு மாறாக இன்சைட்க்கு கீழே நேரடியான மேலோட்டம் குறைந்த அடர்த்தி மற்றும் மூன்று அடுக்குகளைக் கொண்டதாக முன்பு பதிவாகி இருந்தது.

 

செவ்வாயின் பெரும் தாக்கங்களை ஆவணப்படுத்தும் நாசாவின் விண்வெளி ஆய்வு

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

முழுமையாக அறிந்து கொள்வது, புகழ்வாய்ந்த செவ்வாயின் இருநிலைகளைப் பற்றி ஏதேனும் கூட சொல்லக் கூடும். வடக்கில் உள்ள அரைக்கோளம் குறைவாக தட்டையானதோடு தொடர்புடையதாக ஆய்வில் தெரியவந்தது. அதேசமயம் கிரகத்தின் தெற்கு அரைக்கோளம் உயரமானது மற்றும் மலைப்பாங்கானதாக ஆய்வில் தெரியவந்தது.

இந்த பிராந்தியங்களில் உள்ள மேலோட்டம் வெவ்வேறு வித்தியாசமான பொருட்களை கொண்டிருப்பதன் காரணமாக இவ்வாறு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். ஆனால், புதிய மேற்பரப்பு அலைகளின் தரவு, மேலோட்டத்தில் பரவலான சீரான அதன் பரிந்துரை, இந்த கோட்பாடு ஒருவேளை சிறந்த விளக்கம் அல்ல என்பதைக் குறிக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பென் பெர்னாண்டோ இன்சைட் மிஷன் விஞ்ஞானி ஆக உள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு இடையேயான மாறுதல் மண்டலத்தின் இன்சைட் ஆய்வுகள், கிரகத்தின் அந்த பிராந்தியங்களில் மிகவும் வித்தியாசமான வழிகளில் மேலோட்டம் தெளிவாக மதிப்பிடப்பட்டிருப்பதன் காரணமாக உண்மையில் இது மிகவும் மதிப்பு வாய்ந்தது," என பிபிசி செய்தியிடம் அவர் கூறினார்.

" எவ்வாறு, ஏன் இந்த வழியை முன்னெடுத்தனர், இன்னும் அவர்கள் அதனை ஏன் செய்கின்றனர் என்பது ஒரு திறந்த கேள்வியாகும். இந்த மிஷினில் இதுவரை ஏதேனும் ஒன்றை நாங்கள் செய்தோம் என்பதை விட, இந்த விஷயத்தில் இந்த தாக்கத்துடன் கூடிய இந்த நிகழ்வுகள் ஒரு வேளை அதிக புரிதலை வழங்கலாம் என்று நான் கருதுகின்றேன்."

செவ்வாய் கிரகத்தில் பல பள்ளங்கள் இருக்கின்றன. பாறைகள் இடைவெளிகளுக்கு இடையே நகர்வதில் இருந்து பல்லாயிரகணக்கான ஆண்டுகள் வெடிப்புகளின் காரணமாக இவை நேரிட்டுள்ளன. சில உண்மையில் பெரிதாக இருக்கின்றன. சூரிய குடும்பமான செவ்வாய் கிரகத்தில் நேரிட்ட நான்காவது பள்ளமான Hellas Basin 2000 கிமீ விட்டம் கொண்டதாக இருந்தது.

ஆனால், 2021ஆம் ஆண்டு நேரிட்ட தாக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் விஞ்ஞானிகள் தங்களின் உருவாக்கத்தின் தருணத்தை பதிவு செய்வதற்கான கருவி தரவுகளை வைத்துள்ளனர்.

"ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இது போன்று(டிசம்பர் 24ஆம் தேதி நேரிட்ட தாக்கம்) பூமி தாக்கப்படும். ஆனால், வளி மண்டலத்தில் பாதுகாப்பாக எரிகிறது அல்லது சில விண்கற்கள் விழுகின்றன. இன்சைட் இயக்கத்தி இருந்ததால், இதனை பதிவு செய்திருக்கிறது. எனவே, நாம் வியக்கத்தக்க வகையில் அதிர்ஷ்டசாலிகள்," என லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் கரேத் காலின்ஸ் விமர்சித்துள்ளார்.

இன்சைட் மிஷின் ஏறக்குறையை முடியப்போகிறது. அதன் சோலார் தகடுகளில் தூசிகள் சேர்ந்திருப்பதால் அவை அதன் செயல் திறனை குறைக்கின்றன.

"அடுத்த குறுகிய காலத்தில், ஒருவேளை நான்கு மற்றும் எட்டு வாரங்களுக்கு இடையில் எங்காவது நாம் கணிக்க முடியும், லேண்டருக்கு இனி இயங்குவதற்கு போதுமான சக்தி இருக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று மிஷனின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் புரூஸ் பானெர்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-63432650

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். இராணுவமும் அதே நிலைகளில் இருக்கும். பல அனாவசிய அரச செலவுகளை அதிரடியாக குறைத்துக்கொண்டிருக்கும் அனுர தேவையில்லாத இராணுவ செலவுகளை குறைப்பாரா என அடுத்த வருடத்தில் பார்க்கலாம்.
    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.