Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

429 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நெடுந்தீவில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

429 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நெடுந்தீவில் கைது

By VISHNU

10 NOV, 2022 | 03:12 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

காங்கேசன்துறை கடற்படை பிரிவினரால் நெடுந்தீவு பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகொன்றில் இருந்து 429 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் 09 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல் பகுதியில் காங்கேசன்துறை கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே  மீன்பிடி படகொன்றிலிருந்து 429 கிலோ 40 நிறையுள்ள கேரள கஞ்சா  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் முழங்காவில் மற்றும்  மண்டதீவு  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் காங்கேன்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139641

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக  கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் : அமைச்சர் அலிசப்ரி 

By DIGITAL DESK 2

10 NOV, 2022 | 04:04 PM
image

 

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம் )

 

போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது மாத்திரம் முழுமையான அவதானம் செலுத்தாமல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவும்  கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பேரிழப்பினை பாடசாலை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

2019ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது நீதிமன்றத்தில் நிலுவையில் காணப்பட்ட பல இலட்ச வழக்குகளை துரிதமான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.

அத்துடன் காலத்திற்கு தேவையான பல சட்டங்களை இயற்றினோம், பழமையான பல சட்டங்களை திருத்தம் செய்தோம்.

எதிர்காலத்தில் பெருமளவான சட்டங்கள் திருத்தம் செய்யப்படும் - வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி - News View

எமது நாட்டில் ஒரு மில்லியனுக்கு 15 நீதிபதிகள் உள்ளார்கள்.நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலுவையில் உள்ள வழக்குகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நீதித்துறையில் கட்டமைப்பில் உள்ள சிறப்பு விடயங்களை இலங்கையில் செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் ஹெரோய்ன் உட்பட அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

சிறு வயதினை உடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றி வளைப்பதை இலக்காக கொண்டுள்ளோம், ஆனால் உலக நாடுகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுகாதார கோணத்தில் பார்க்கப்படுகிறார்கள்.

Baseless allegations, mudslinging - Ali Sabry | Daily News

போதைப்பொருள் பாவனையுடன் கைது செய்தப்படுபவர்களின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைகிறது, ஆகவே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை துரிதப்படுத்த வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகள் தான் நாட்டை இல்லாதொழிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளுடன் அரசியல்வாதிகள், முக்கிய தரப்பினர் உட்பட பலர் தொடர்புப்பட்டுள்ளார்கள்.

ஆகவே போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு போதைப்பொருள் உள்வருவதை தடுக்கவும்,விநியோகத்தையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அறியவில்லை. ஆகவே போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளை பாடசாலைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள சிறுவர்களுக்கு புனர்வாழ்வு உட்பட மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/139652

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியர் நெடுந்தீவை சிங்கப்பூராக்கவில்லை.. கஞ்சாத்தாவாக்கி இருக்கிறார். இதுதான் தீவகம் எங்கும் நிலைமை. வீணை ஒட்டுக்குழுவின் புதிய வருமானம்.. மணல் கடத்தல் போய் கஞ்சா வியாபாரமாக்கும். 

சொறீலங்கா கடற்படையின் அனுசரணை இல்லாமல் இந்த வியாபாரம் நடக்கவே முடியாது. அந்தளவுக்கு சொறீலங்கா கடற்படை தீவகத்தை ஆக்கிமிச்சு நிற்குது. அதற்கு தமிழ் ஒற்றர்களும் அங்கு அதிகம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

By DIGITAL DESK 5

12 NOV, 2022 | 12:16 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பாணந்துறை பிரதேசத்தில் 2 கிலோ 45 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரத்வத்த, விகாரைக்கு அருகில்  பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 2 கிலோ 45 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர் 26 வயதுடைய ஒருவர் எனவும் அவர் வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139790

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

39 ஆயிரம் சுற்றிவளைப்புக்களில் 2 மெட்ரிக் தொன் போதைப்பொருள் மீட்பு

By DIGITAL DESK 5

13 NOV, 2022 | 02:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  39671  சுற்றிவளைப்புக்களில் சுமார் இரண்டு மெட்ரிக் தொன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ,  இதன்போது   39428 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் 145 கிலோ ஹெரோயின், 370 கிலோ கொக்கெய்ன், 103 கிலோ ஐஸ் மற்றும் 38 கிலோ ஹஷிஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .

சந்தேக நபர்களில் 6,345 பெண்கள் மற்றும் 1290 பாடசாலை  மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

 மேலும் கைது செய்யப்பட்டவர்களில்  பலர் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாவர்.  

சுமார் 1,345 பேர் நாசகாரவேலை, புதையல் தோண்டுதல் மற்றும்வீடுகளை உடைத்தல் மற்றும் பெரிய அளவிலான கொள்ளைகளில் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் பாடசாலை மாணவிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 782 சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் பலர் போதைப்பொருள் போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவும்  பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக நாட்டுக்கே இது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139887

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஹெரோயின், கசிப்புடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது!

By VISHNU

15 NOV, 2022 | 01:32 PM
image

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சுமார் 21 லீற்றர் கசிப்புடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே கசிப்புடன் 27 வயது மற்றும் 42 வயதான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை அச்சுவேலி பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், திருநெல்வேலி, குட்டியப்புலம் மற்றும் இணுவில் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் 60 மில்லிகிராம், 55 மில்லிகிராம் மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, அச்சுவேலி பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/140081

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.