Jump to content

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது விசாரணை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது விசாரணை!

By VISHNU

13 NOV, 2022 | 03:32 PM
image

 

முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றையதினம் (13) மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தை ஆக்கிரமித்து படைமுகாம் அமைத்துள்ள 592 ஆவது பிரிகேட் முகாமின் கட்டளை அதிகாரி இராணுவ முகாமுக்கு அழைத்து விசாரணையில் மேற்கொண்டுள்ளார்.

GPTempDownload_1.jpg

இன்றுகாலை கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விஜிந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன் , ஜெகன் ஆகியோரும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அப்பகுதிக்கு வருகைதந்த இராணுவத்தினர் விசாரணைக்காக தமது  இராணுவ முகாமுக்கு வருகைதருமாறு ஏற்பாட்டாளர்களை  அழைத்து  சென்றிருந்தனர்.

IMG_2278.jpg

இதன்படி இராணுவ முகாமுக்கு சென்ற ஏற்பாட்டாளர்களை விசாரித்த  592 ஆவது பிரிகேட் முகாமின் அதிகாரி மாவீரர் நாளினை இப்பகுதியில் அனுஷ்டிக்க முடியாது என எச்சரித்ததோடு இப்பகுதி முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமான பகுதி எனவும் வேண்டும் என்றால் நீங்கள் துப்பரவு செய்யலாம் ஆனால் 27ஆம் திகதி சுடர் ஏற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

GPTempDownload.jpg

இதற்க்கு பதிலளித்த ஏற்பாட்டு குழுவினர் இப்பகுதி பிரதேச சபைக்கு சொந்தமான பகுதி அதனையே நாங்கள் துப்பரவு செய்கின்றோம். 

இறந்த எமது உறவுகளை  நினைவு  தடை எதுவும் இல்லை என அரசாங்கம் கூறியுள்ள போதிலும் இராணுவத்தினர் இவ்வாறு நடந்துகொள்கின்கிறீர்கள். 

IMG_2280.jpg

இருந்தாலும் எமது உறவினர்களை நினைத்து நாங்கள் அஞ்சலிப்பதை தடுக்க வேண்டாம் என கூறிவிட்டு மீண்டும் வந்து துயிலும் இல்ல வளாகத்தை துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவத்தினர் அப்பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளதோடு கல்லறைகள் இருந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றையும் அரச மரம் ஒன்றையும் நாட்டி வழிபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139901

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளுக்கு இராணுவம் தடை - புகைப்படம் எடுத்தும் அச்சுறுத்தல் !

By T. SARANYA

19 NOV, 2022 | 10:42 AM
image

(கே .குமணன்)

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (19) அதற்கான ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள 592 பிரிகேட் படைமுகாம் இராணுவத்தினர் நினைவு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து  துப்பரவாக்கும் செயற்பாடுகளை   நிறுத்துமாறும் அவ்வாறு இங்கு எந்தவிதமான நிகழ்வுகளையும் செய்ய முடியாது எனவும் அச்சுறுத்தியதோடு  ஏற்பாட்டு நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்களை ஒளிப்படம் எடுக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். 

படையினரோடு இணைந்து புலனாய்வாளர்களும் இந்த பகுதிக்கு வருகைதந்து புகைப்படம் எடுத்தும் விசாரணை மேற்கொண்டும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

படையினரின் இந்த  நடவடிக்கை காரணமாக ஏற்பட்டுகளில் ஈடுபட்டிருந்த மக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது. தொடர்ந்தும் அங்கு துப்பரவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க இராணுவத்தினர் தடை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார் நினைவேந்தல் குழுவிடம்  விசாரணைகளை மேற்கொண்டதோடு  இயந்திரங்களை பயன்படுத்தாமல் துப்பரவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவித்துள்ளனர். 

இதன்பின்னர் படையினர் அப்பகுதியிலிருந்து சென்றுள்ளதோடு அருகில் உள்ள இராணுவ முகாமிலிருந்து ஒளிப்பட கமெரா மூலம் தொடர்சியாக காணொளி பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/140501

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.