Jump to content

மின்னல் தாக்கி ஒருவர் பலி : இருவர் காயம் : நவகத்தேகம பகுதியில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் தாக்கி ஒருவர் பலி : இருவர் காயம் : நவகத்தேகம பகுதியில் சம்பவம்

By DIGITAL DESK 2

14 NOV, 2022 | 12:25 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

புத்தளம், நவகத்தேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நவகத்தேகம - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது.

 இதன் போது காயமடைந்த மூவரும் அம்புலன்ஸ் மூலம் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இடி மின்னல் தாக்கி இருவர் பலி; மூவர் படுகாயம்... | nakkheeran

இவ்வாறு உயிரிழந்தவர் 39 வயதுடைய ஒருவர் எனவும் அவர் கிரிமெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடப்பில் மின்னல் தாக்கி 15 மீனவர்கள் பாதிப்பு: ஒருவர் பலி; மூவர் கவலைக்கிடம்!

By DIGITAL DESK 2

15 NOV, 2022 | 10:53 AM
image

வலைகளை இழுத்துக்கொண்டிருந்த 15 மீனவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை ( நவ.14) இடம்பெற்றுள்ளது.

உடப்பு புனப்பிட்டிய, பரிபாடு பகுதியில் வலைகளை இழுத்துக்கொண்டிருந்தபோதே  15 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்துக்கு  இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Lightning.jpg

இந்தச் சம்பவத்தில் 28 வயதுடைய  இளைஞரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாரிபாடு கடற்கரையில் உழவு இயந்திரத்தின்  மூலம் வலையை இழுத்துக் கொண்டிருந்தபோதே தம்மை மின்னல் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த அதிர்ச்சியடைந்து உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/140061

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.