Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"அணியும் ஆடைகளே உறவுகளை அந்நியமாக்கிவிட்டன" - சமூக சங்கிலிகளை உடைத்த பெண் பாடி பில்டர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 12 பிப்ரவரி 2023
பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

"உடல் எடையை குறைக்கத்தான் ஜிம்முக்கு போனேன். ஆனால், நட்புகள், உறவுகளின் புறக்கணிப்பு தந்த வெறுமையும், குழந்தைகள் தந்த ஊக்கமும் என்னை ஜிம்மே கதியென கிடக்கச் செய்தது.

அதுவே, என்னை இன்று சர்வதேச அரங்கில் கால் பதிக்கச் செய்துள்ளது" என்கிறார் மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி.

 

மதுரையைச் சேர்ந்த வெரோனிகா அன்னமேரி, பெண்கள் நுழையவே தயங்கும் பாடி பில்டிங் துறையில் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு மத்தியில், மிகக் குறுகிய காலத்தில் அசாத்திய சாதனைகளைப் படைத்துள்ளார்.

 

41 வயதான அவருக்கு மணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். அண்மையில் ஓபன் ஆசியா பாடி பில்டிங் போட்டியில் ஆறாவது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

"சுடிதார் அணியக்கூட அஞ்சிய தலைமுறை என்னுடையது"

பிபிசி தமிழுக்காக வெரோனிகா அன்னமேரியிடம் பேசினோம். "1980-களில் மதுரையில் 2 சகோதரிகளுடன் சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். சமூகத்தின் விமர்சனப் பார்வைக்கு அஞ்சி சுடிதார்கூட அணியாமல் பாவாடை, சட்டையில் இளமையைக் கழித்த தலைமுறை என்னுடையது.

பொது வெளியில் விளையாடக்கூட அனுமதிக்காத சூழலில்தான் இருந்தேன். மதுரையைவிட்டு வெளியே சென்றிராத எனக்கு, 24 வயதில் மணமானதும்கூட அங்கேயேதான்.

சிறு வயதிலேயே கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு ஹீமோகுளோபின் அளவும் குறைவாக இருந்ததால் முதல் குழந்தைக்கு அதிக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இதனால், என் உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 62 கிலோவாக இருந்த என் உடல் எடை முதல் குழந்தை பிறந்த பிறகு ஒரு கட்டத்தில் 108 கிலோவாகக் கூடிவிட்டது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிப்பதைத் தவிர்க்க இயலாமல் போக, அடுத்த குழந்தையும் இதேபோல் மருந்து மாத்திரைகள், சிசேரியன் என்றே ஆனது," என்கிறார்.

"2 சிசேரியன், மருந்து, மாத்திரைகளால் உடல் எடை 108 கிலோவானது"

27 வயதிலேயே 2 குழந்தைகளுக்குத் தாயாகிவிட்ட வெரோனிகாவுக்கு உடல் எடைதான் பிரச்னையாக இருந்து வந்துள்ளது.

உடல் எடை 100 கிலோவுக்கு அதிகமாக இருந்ததால் 30 வயதிற்குப் பிறகு மூட்டு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. கழுத்து வலிக்கு கழுத்துப் பட்டை, மூட்டு வலிக்குத் தனி பட்டை அணிவது கட்டாயமாகிப் போயுள்ளது.

"அதிகரித்த உடல் உபாதைகளால் வீட்டில் மாடிப்படி ஏறுவதை வெகுவாகத் தவிர்த்துவிட்டேன். நடப்பதைக்கூட முடிந்த அளவுக்குக் குறைத்துவிட்டேன். இருசக்கர வாகனத்தில் செல்ல முடிந்த இடங்களுக்கு மட்டுமே சென்று வந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

"உறவுகள், நட்புகள் கிண்டல் - குழந்தைகள் ஊக்கம்"

அதிக உடல் எடை காரணமாக உறவினர்கள், நண்பர்களின் கேலிக்கு ஆளான வெரோனிகா, உடல் உபாதைகளும் அதிகரித்ததால் மருத்துவரின் ஆலோசனைப்படி, உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டி ஜிம்முக்கு செல்லத் தீர்மானித்தார்.

தொடக்கத்தில், கணவருடன் இணைந்தே ஜிம்முக்கு செல்லத் தொடங்கினார். அப்போது, பிரச்னை புதிய வடிவில் வந்துள்ளது.

"நான் ஜிம்முக்கு செல்வதைப் பார்த்து உறவினர்களும், நண்பர்களும் மீண்டும் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். சுமார் 3 மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

நாளடைவில் அது பெரிதாக, அவர் விலகிச் சென்றுவிட்டார். உறவுகள், நட்புகளின் கேலி, கிண்டல்கள், கணவரின் பிரிவு போன்றவற்றால் தனிமையில் உடைந்து அழுதிருக்கிறேன்.

அப்போதெல்லாம் என் குழந்தைகள்தான் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் ஓராண்டுக்குப் பின்னர் நான் மீண்டும் ஜிம்முக்கு செல்லத் தொடங்கினேன்," என்றார் வெரோனிகா.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்
 
படக்குறிப்பு,

தந்தை, மகன் சந்தோஷூடன் வெரோனிகா அன்னமேரி

"ஒரே ஆண்டில் உடல் எடை 30 கிலோ குறைந்தது"

மன உறுதியுடன் ஜிம்முக்கு செல்லத் தொடங்கியதும் வெரோனிகா அன்னமேரியிடம் இருந்து உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தனிமை கொடுத்த வெறுமையும், குழந்தைகள் தந்த ஊக்கமும் வெரோனிகாவை ஜிம்மே கதியென கிடக்கச் செய்துள்ளன. அப்போதெல்லாம்கூட பாடி பில்டிங் குறித்த எண்ணம் அவருக்கு உதிக்கவில்லை.

சரியான நேரத்தில் சரிவிகித உணவு, முறையான பயிற்சி என்பன போன்ற பயிற்சியாளரின் ஆலோசனைகளை சரிவரக் கடைபிடித்த வெரோனிகாவுக்கு அடுத்த 6 மாதங்களிலேயே பலன் தெரிய ஆரம்பித்தது.

இதனால், கழுத்துப் பட்டை, மூட்டு வலிக்கான பட்டை போன்றவற்றை அணியத் தேவையில்லாமல் போய்விட்டது. இதுவே அவரது நம்பிக்கையை அதிகரிக்க, ஒருநாள்கூட விடாமல் பயிற்சியைத் தொடர்ந்திருக்கிறார். அதன் பலனாக, ஒரே ஆண்டில் உடல் எடையை 30 கிலோ வரை அவர் குறைத்திருக்கிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்
 
படக்குறிப்பு,

WFF-இன் தமிழ்நாடு தலைவர் மோகன்குமாருடன் வெரோனிகா

"வாழ்க்கையில் திருப்புமுனை தந்த சென்னை பயணம்"

அப்போதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையான அந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. ஜிம்மில் பயிற்சி பெற்ற ஆண் பாடி பில்டர் ஒருவர், தேசிய போட்டி ஒன்றில் பங்கேற்க சென்னை வர, அவரது உதவியாளர்களில் ஒருவராகவே வெரோனிகாவும் சென்னை சென்றுள்ளார்.

அங்கு, அவரைக் கண்ட World Fitness Federation அமைப்பின் தமிழ்நாடு தலைவர் மோகன்குமார் ஊக்கப்படுத்த, அந்தத் தேசிய பாடி பில்டர் போட்டியின் மகளிர் பிரிவில் பங்கேற்றுள்ளார் வெரோனிகா. அந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் போட்டியாளர் வெரோனிகாதான். முதல் போட்டியிலேயே தேசிய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்து முத்திரை பதித்துள்ளார் அவர்.

அந்த தேசிய மகளிர் பாடி பில்டர் போட்டியில் பங்கேற்ற மற்ற அனைத்து வீராங்கனைகளுமே 19, 20 வயது என மிகவும் இளம் வயதினராக இருந்தனர். வெரோனிகாவின் வயதோ 39.

"வயதைப் பற்றிக் கவலைப்படாமல் உன் திறமையை வெளிப்படுத்து. உன்னால் சாதிக்க முடியும். ஏனெனில், பாடி பில்டிங் போட்டியில் இருக்கும் மற்ற வீராங்கனைகள் இளம் வயதினர் என்பதால் திருமணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

ஆனால், மணமாகி, 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துவிட்ட உன்னால் விரும்பியபடி தொடர்ந்து இத்துறையில் கவனம் செலுத்த முடியும்," என்று மோகன்குமார் உற்சாகமூட்டியதாகக் கூறுகிறார் வெரோனிகா.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்
 
படக்குறிப்பு,

IFF பொதுச் செயலாளர் ஜெகநாதனுடன் வெரோனிகா

ஓபன் ஆசியா பாடி பில்டிங் போட்டியில் 6-வது இடம்

பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய வெரோனிகாவுக்கு காலப்போக்கில் பளு தூக்குதலிலும் ஆர்வம் வந்துள்ளது.

இதையடுத்து, முறையான பயிற்சிக்குப் பின்னர் பளு தூக்கும் போட்டிகளிலும் அவர் கவனம் செலுத்தி வந்துள்ளார். பாடி பில்டிங்கோ, பளு தூக்குதலோ எந்தப் போட்டியானாலும் வெரோனிகா பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.

மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தொடர்ச்சியாகப் பரிசுகளை வென்று வந்துள்ளார். அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஓபன் ஆசியா பாடி பில்டிங் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

Indian Fitness Federation நிறுவனரும் அதன் பொதுச் செயலாளருமான ஜெகநாதனும் வெகுவாக ஊக்கப்படுத்தியதாக வெரோனிகா கூறுகிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்
 
படக்குறிப்பு,

ஓபன் ஆசியா பாடி பில்டிங் போட்டியில் ஆறாவது இடம்

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்
 
படக்குறிப்பு,

வெரோனிகா வென்ற கோப்பைகள்

வீட்டில் பொறுப்புள்ள தாய், விளையாட்டிலும் கவனம்

பாடி பில்டிங் துறையில் நுழைந்த நான்கே ஆண்டுகளில் வெகுவாக கவனம் ஈர்த்துவிட்ட வெரோனிகா அன்னமேரி, தனது வீட்டில் பொறுப்புள்ள தாயாக இருப்பதில் தவறியதே இல்லை. பிளஸ்டூ படிக்கும் மகள் தன அட்சயா, 9-வது வகுப்பு படிக்கும் மகன் கெவின் சந்தோஷ் ஆகியோரின் படிப்புக்காக தனது ஜிம் வேலையை அவர் விட்டுள்ளார்.

ஜிம்மில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வந்த அவர், குழந்தைகளின் படிப்புக்காக அந்தப் பணியில் இருந்து விலகியுள்ளார்.

காலை 5 முதல் 9 மணி, மாலை 5 முதல் 9 மணி என்ற ஜிம் பணி நேரம், தனது குழந்தைகளின் படிப்பு, டியூஷன் போன்றவற்றுடன் குறுக்கிடுவதால் அந்த வேலையை விட்டுள்ளார்.

தற்போது, அவரைப் போல உடல் எடையைக் குறைக்க வேண்டி பயிற்சி செய்வோருக்கு வீட்டிற்கே சென்று பயிற்சி அளிக்கும் வேலையை வெரோனிகா செய்து வருகிறார். இதன்மூலம் ஈட்டும் வருவாயைக் கொண்டே அவர் குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

திருச்சியில் நடக்கவுள்ள போட்டிக்காகத் தயாராகிறார்

ஜிம் பயிற்சியாளர் வேலையை விட்டு வெரோனிகா ஏற்றிருக்கும் புதிய பணி, அவருக்கு உற்சாகமூட்டும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அவர்கள் ஊக்கம் தருவதோடு, பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான பண உதவிகளையும் செய்திருப்பதாக அவர் கூறுகிறார். ஓபன் ஆசிய மகளிர் பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றதில் அவர்களின் பேருதவியும் இருந்ததாகத் தெரிவித்தார்.

எலும்பு பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்ததால் கடந்த 3 மாதங்களாக கைவிட்டிருந்த பயிற்சியை, தற்போது அவர் மீண்டும் தொடங்கியுள்ளார். திருச்சியில் வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேசிய பாடி பில்டர் போட்டியில் சாதிக்கத் தயாராகி வருகிறார் வெரோனிகா அன்னமேரி.

பாடி பில்டிங்கில் சாதிக்கும் மதுரை பெண்

வெரோனிகா வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட 4 ஆண்டுகள்

 

 

 

 

 

 

 

 

பாடி பில்டிங் துறையில் சாதிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் வெரோனிகா, 4 ஆண்டுகளுக்கு முன்பு இதுகுறித்து நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

தீராத உடல் உபாதைகளை ஏற்படுத்தும் உடல் எடையைக் குறைக்க வேண்டி ஜிம்முக்கு போகத் தொடங்கிய அவர், அதன் தொடர்ச்சியாக தனிப்பட்ட வாழ்க்கை தந்த வெறுமையால் ஜிம்மே கதியாக இருக்க, இன்று சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் பெண்ணாக மாறியுள்ளார்.

"ஜிம்மிலும், பாடி பில்டிங் போட்டிகளிலும் அணியும் ஆடைகளே உறவுகள், நட்புகள் மத்தியில் என்னை அந்நியமாக்கிவிட்டன. சேலை அணியாத பெண்ணை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அவர்களிடம் இருந்து நானும் விலகிவிட்டேன்.

ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. தொடக்கத்தில் உறுதுணையாக இருந்த கணவரே, ஒரு கட்டத்தில் விலகிச் செல்ல உடைந்துவிட்டேன்.

இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்டிருந்த நான், 2 குழந்தைகளுடன் தனிமரமாகிவிட்டதால் சுய பாதுகாப்புக்காக மொட்டை அடித்துக் கொண்டேன்.

பின்னர் ஆண்களைப் போலவே முடி திருத்திக் கொண்டேன். பெண்ணுக்கான அடையாளங்களாக சமூகம் கற்பித்திருந்த தளைகளில் இருந்து விடுபட்டதே என்னை படிப்படியாக தைரியசாலியாக மாற்றியது. பின்னாளில், சமூகத்தின் விமர்சனப் பார்வைகளை அலட்சியப்படுத்தி என் லட்சியத்தில் கவனம் செலுத்த அதுவே உதவியது," என்கிறார் வெரோனிகா அன்னமேரி.

https://www.bbc.com/tamil/articles/cd130zepgjpo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.