Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்

பல் ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 மார்ச் 2023, 03:38 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள் இருக்கின்றன.

2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் தெரிவிக்கிறது.

குறிப்பாக மிகவும் பின்னடைந்திருக்கும் நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும்தான் மக்கள் அதிகமான பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அத்தகைய நாடுகளில் நான்கில் மூன்று பேருக்கு பல் சம்பந்தபட்ட நோய்கள் இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.

”மக்கள் சரியாக பல் துலக்காமல் இருப்பதே 99சதவீத பல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

பல் துலக்குவதில் செய்யும் தவறுகள்

பல் ஆரோக்கியம்

“நம்முடைய ஊர்களில் மக்களிடையே பல் ஆரோக்கியத்தின் மீது பொதுவாகவே ஓர் அலட்சிய மனபான்மை நிலவுகிறது. பற்களில் சிறு சிறு அசௌகரியங்கள் வரத் தொடங்கினாலும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால் அதை மக்கள் மிக எளிதாகக் கடந்து செல்கிறார்கள்,” என்கிறார் பல் மருத்துவர் கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "நம் ஊர்களில் மக்கள், பற்களை சரியான முறையில் துலக்காமல் இருப்பதே வாய் ஆரோக்கியம் தொடர்பான பெரும்பாலான பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மக்களுக்கு ஏற்படும் ஈறு தொடர்பான பிரச்னைகளும் (Gum disease), பல் சுத்திகளும் (Periodontal Disease) ஏற்படுவதற்கு 99% காரணம் நாம் பற்களைச் சரியாகத் துலக்காமல் இருப்பதுதான்.

பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு, அவர்கள் இரவு நேரங்களில் பல் துலக்குவது இல்லை. இரவு நேரங்களில் பல் துலக்குவது மிகவும் அவசியமான ஒன்று. அதேபோல் சிலர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பற்களை மிக வேகமாகத் துலக்கி விடுவார்கள். மற்ற சிலர் 10 நிமிடங்கள் வரை பல் துலக்குகிறார்கள். இது இரண்டுமே மிக தவறான விஷயம்.

நீண்ட நேரம் பல் துலக்குவதால் ஈறுகள் இறங்கிப் போவதற்கும், பற்கள் தேய்ந்து போவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சில நேரங்களில் பற்கள் உடைந்து போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை Dental Abrasion என்று கூறுவோம். இவை அனைத்தும் தவறான பல் துலக்கும் முறைகளால் வரக் கூடிய பிரச்னைகள். அதேபோல் பற்களில் மஞ்சள் நிறத்தில் படியக் கூடிய காரையும் தவறான பல் துலக்கும் முறைகளால்தான் ஏற்படுகிறது.

சரியான டூத் பிரஷ்களை தேர்ந்தெடுத்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பற்களைத் துலக்க வேண்டும். இரவு நேரங்களிலும் பல் துலக்கும் பழக்கத்தைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

டூத்பிரஷ்களின் வகைகள்

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டூத் பிரஷ்கள் தேர்ந்தெடுப்பதிலும், மக்களிடம் இங்கே நிறைய குழப்பங்கள் இருக்கின்றன என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

  • பொதுவாக நாம் பிரஷ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறோம். ஒன்று குழந்தைகளுக்கான Pedo Brush மற்றொன்று Adult Brush.
  • அடுத்ததாக வடிவமைப்பைப் பொருத்தவரை பற்களின் பின்பக்கங்களிலும் எளிமையாக சுத்தம் செய்யக்கூடிய வகையில் Flexible Toothbrush-கள் இருக்கின்றன.
  • பிரஷ்களுடைய நரம்புகளின் (bristles) வடிவமைப்பைப் பொருத்தவரை Straight மற்றும் Zigzag அல்லது Crisscross என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. இதுதவிர பற்களில் கிளிப் அணிந்திருப்பவர்களுக்காக Ortho Brush என்ற வடிவமைப்பும் இருக்கிறது.
  • பிரஷ்களின் தன்மைகளைப் பொறுத்தவரை Hard, Medium, soft, Ultra soft என நான்கு வகையிலான பிரஷ்கள் இருக்கின்றன.

பிரஷ்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

”இங்கே சிலருக்கு அழுத்தமாகப் பல் தேய்த்தால்தான் பல் துலக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். அதற்காக கடினமான நார்களைக் (Hard brush) கொண்ட பிரஷ்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மென்மையான பிரஷ்களை பயன்படுத்துவதுதான் எப்போதும் நல்லது. ஆனால் நிறைய பேர் இங்கே சரியான முறையில் பல் துலக்குவது இல்லை. அவ்வாறு இருப்பவர்கள் Medium பிரஷ்களை பயன்படுத்தலாம்.

ஏனெனில் சரியாகப் பல் துலக்காமல் இருந்தாலும், Medium பிரஷ்களை பயன்படுத்தும்போது அது அவர்களுடைய பற்களில் உள்ள கறைகளை நீக்குவதற்கு உதவி செய்கிறது. ஆனால் அதேநேரம் Hard & Medium பிரஷ்களை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் பற்கள் சேதமடையும் என்பதையும் நாம் நினைவுகொள்ள வேண்டும்.

பற்கள் நேரான வரிசையில் இருக்கும் நபர்களுக்கு Straight பிரஷ்களை தேர்ந்தெடுத்தாலே போதும். ஆனால் அதுவே பல் வரிசை சீராக இல்லாமல் இருப்பவர்கள் Criss Cross பிரஷ்களை தேர்ந்தெடுக்கலாம்.

வயதானவர்கள் அல்லது பற்களில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்கள், பற்கூச்சம் உடையவர்கள் Ultra soft பிரஷ்களை உபயோகித்தால் நல்லது.

இதில் நமக்கு எந்த வகையான பிரஷ்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குழப்பமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். அதேபோல் ஒரு டூத்பிரஷை இரண்டு மாதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் ஒரே பிரஷை பயன்படுத்துவதில் எந்த பலனும் இல்லை,” என்று விளக்குகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எலக்ட்ரானிக் டூத் பிரஷ்கள் அவசியமா?

இன்றைக்கு நிறைய இளைஞர்கள் எலக்ட்ரானிக் டூத்பிரஷ் பயன்படுத்துவதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர். உண்மையிலேயே எலக்ட்ரானிக் டூத்பிரஷ் பயன்படுத்துவது பற்களுக்கு நல்ல பலன்களை அளிக்கிறதா என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன்வைத்தபோது, அதற்கு இல்லை என்றே பதில் கூறுகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.

”சாதாரண பிரஷ்களை விட எலக்ட்ரானிக் டூத்பிரஷ்கள் சிறந்தது என இதுவரை எந்த ஆய்விலும் நிரூபனம் ஆகவில்லை” என்று அவர் கூறுகிறார்.

அவர் மேலும் கூறும்போது, “சாதாரண டூத் பிரஷ்களைவிட எலக்ட்ரானிக் டூத் பிரஷ் உபயோகிப்பது நல்ல பலன்களை அளிக்கிறது என அதன் நிறுவனங்கள் மட்டுமே கூறி வருகின்றன. ஆனால் மற்ற ஆய்வுகள் எதுவும் அப்படி கூறவில்லை. சாதாரண டூத்பிரஷ்கள் உபயோகிப்பதே எப்போதும் நல்லது. ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வேண்டுமானால் நாம் எலக்ட்ரானிக் டூத் பிரஷ்களை பரிந்துரைக்கலாம்,” என்று தெரிவித்தார்

பல் தழுவுதல் முறை

”நம்முடைய ஊர்களில் இன்னும் மக்களுக்கு பரீட்சியம் ஆகாத பல் பராமரிப்பு முறைகளில் ஒன்று பல் தழுவுதல் முறை (Flossing). சாதாரணமாக பல் துலக்கும்போது, நாம் பற்களின் முன்பக்கத்திலும், உள் பக்கத்திலும்தான் சுத்தம் செய்கிறோம்.

ஆனால் மீதமுள்ள பற்களின் 40சதவீத இடைபட்ட இடங்களை நாம் கவனிப்பது இல்லை. அந்த நுண்ணிய இடங்களிலும் சுத்தம் செய்வதற்குப் பல் தழுவுதல் முறை பயன்படுகிறது. இந்த பல் தழுவுதல் முறை நாம் எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய ஒன்றுதான்,” என்று கூறுகிறார் மருத்துவர்.

"மெல்லிய நைலான் நூலை பயன்படுத்தி அனைத்து பல் இடுக்குகளிலும் நாம் சுத்தம் செய்துகொள்ளும் முறையே பல் தழுவுதல் எனக் கூறப்படுகிறது.

நைலான் நூல் பயன்படுத்தும் முறையைத் தவிர்த்து, யுனி ஃப்லாஸ் (Younifloss), வாட்டர் ஃப்லாஸ் (water floss) என மற்ற இரண்டு பல் தழுவுதல் வகைகளும் இருக்கின்றன. பல் இடுக்குகளில் வரக்கூடிய சொத்தைகளைத் தடுப்பதற்கு இந்த பல் தழுவுதல் முறை உதவுகிறது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

பற்களுக்கு இடையே சுத்தம் செய்யும் முறை

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பற்களுக்கு இடையே சிக்கும் உணவுத் துணுக்குகளை நீக்குவதற்கு பல்லிடைத் துலக்கி (Interdental Cleaning Brush) உதவும் என்கிறார் கார்த்திகேயன்.

”பொதுவாக பற்களுக்கு இடையில் உணவுகள் சிக்கும்போது, அதை நீக்குவதற்கு நாம் ஊக்குகளையோ அல்லது டூத்பிக்குகளையோ (Tooth pick) உபயோகிப்போம். ஆனால் அவ்வாறு தொடர்ச்சியாகச் செய்வது பற்களை பாதிக்கலாம்.

எனவே Interdental Cleaning பிரஷ்களை உபயோகித்து பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துணுக்குகளை அகற்ற வேண்டும். பற்களுக்கு இடையே சிக்கும் உணவுகளை அகற்றுவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரஷ்கள் இவை. இது உபயோகிப்பதற்கும் மிகவும் எளிமையான ஒன்றுதான். அனைத்து மருந்தகங்களிலும் மிகவும் மலிவான விலையிலேயே இந்த Interdental பிரஷ்கள் கிடைக்கின்றன,” என்று அவர் கூறுகிறார்.

சிறு அலட்சியங்களால் ஏற்படும் பெரும் பாதிப்புகள்

பல், அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

”பல் மருத்துவ சிகிச்சை என்பது இங்கே அதிகமான பொருட்செலவை ஏற்படுத்துவது உண்மை என்றாலும், மக்கள் தங்களுடைய பற்கள் பாதிக்கப்படும் ஆரம்பகட்டங்களிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஏற்படும் பெரும் செலவுகளைக் குறைக்கலாம்,” என்கிறார் மருத்துவர் கார்த்திக்கேயன்.

"சான்றாகச் சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரது பற்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்திருந்தது. அவருக்கு பல் சுத்தி (Periodontal Disease) ஏற்பட்டிருந்தது.

இது சரியாக பற்களைத் துலக்காததால் ஏற்படும் ஒருவகையான பாக்டீரியா பாதிப்பு. இந்த பாதிப்பில் பெரிதாக வலி இருக்காது, ஆனால் ஈறுகளில் ரத்தம் கசிவது, வீக்கம் ஏற்படுவது போன்ற தொந்தரவுகள் அவருக்கு ஏற்பட்டிருக்கும்.

அதை அவர் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து, மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் வெறும் ஆயிரம் ரூபாய்களில் சரிசெய்திருக்க முடியும். ஆனால் அவர் அதை அப்படியே விட்டு, பற்கள் முழுவதும் சேதமடைந்தப் பிறகு சிகிச்சைக்கு வந்திருந்தார். அப்போது பாக்டீரியா பாதிப்புகள் அதிகரித்து, அவரது பற்கள் முற்றிலும் அகற்றக்கூடிய நிலையை எட்டிவிட்டன. எனவே பற்களை எடுத்துவிட்டு, முற்றிலும் செயற்கையான பற்களை பொருத்தினோம். அதற்கு சில லட்சங்கள் வரை அவருக்கு செலவு ஏற்பட்டது.

எனவேதான் சொல்கிறோம், எந்தவொரு பல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறை பற்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதுதான் பற்களை பாதுகாப்பதுடன், பெரும் மருத்துவ செலவுகளில் இருந்தும் நம்மை காக்கும்,” என்று அவர் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cd1qv79vgexo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.