Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலகுமாரனின் ஆன்மீகக் கட்டுரைகள்

Featured Replies

நான் இணயத்திலிருந்து முன்பே இறக்கியவைகளில் சில தருகிறேன்.

கோனேரி ராஜபுரம்

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரியதிருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமான ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரி யென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றhன். இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது. முதன் முறை மூக்கில்லை. இரண்டாம் முறை விரல்களெல்லாம் மொத்தமாகி விட்டது. மூன்றhம் முறை இடுப்பு பக்கம் மிகப் பெரிய பள்ளம் விழுந்துவிட்டது, நான்காம் முறை காதுகள் காணமால் போய்விட்டன. ஐந்தாம் முறை பாதம் பாதியில் நின்றுவிட்டது. முழுவதும் மழு போகவில்லை.

இது ஆறாவது முறை, உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லே. ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.

நீ, இவ்விதம் இருக்கிறாய் என்பது என்னுடைய கலைக்கற்பனை, மனிதருள் சிறந்தனவாய் இறைவன் காட்சியளிப்பான், என்பது என் எண்ணம், அவன் ஆடல் கலையிலும், பாடல் கலையிலும், போரிலும், பேச்சிலும், வேதப் பயிற்சியிலும், விவேகத்திலும் மிகச்சிறந்தவனாக இருப்பான், என்பது என் எண்ணம், எங்களுள் சிறந்தவனாக இருக்கின்ற ஒருவனின் முகச்சாயலை மனதுக்குள் கொண்டு வந்து அது நீ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இது ஒரு குழந்தை விளையாட்டு. ஆனால், நீ எல்லா வற்றிலும் மேன்மையானவன், எல்லோரிலும் மேன்மையானவன், உனக்கு உருவமில்லை, நீ எங்கும் நிறைந்தவன், எப்படியும் இருப்பவன், உன்னை எந்த உருவத்திலும் அடக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு புரிவதற்காக என் மனம் நிறைவதற்காக என் கண்கள் நிறைவதற்காக, என் புத்தியின் அமைதிக்காக, என் மக்களின் நன்மைக்காக உன்னை நான் உருவமாக்கிறன்.

நீயே வந்து இதற்குள் உட்கார்ந்தாலொழிய உன்னை நான் உருவமாக்க முடியாது, எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடையகுரல் அவன் காதில் விழுந்தது.

வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய், கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன்

என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும் படியாக என்ன ஏற்பட்டது. தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்கவேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை. இது ஆறாவது சிலை.

நான்கு வருடமாக சிலை செய்து கொண்டிருக்கிறாய், ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விஷயம் பின்னமாகி கொண்டிருக்கிறது. அப்படி என்றhல் நீ வேலையை சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம்.

உனக்கு சிலை செய்கின்ற எண்ணமே இல்லை என்று அர்த்தம். சும்மா கண் துடைப்புக்காக ஏதோ செய்து விட்டு பின்னமாகி விட்டது என்று என்னை ஏமாற்றுகிறாய்

என்று அரசன் உரத்த குரலில் அவரை அதட்டியது, ஊர் மக்கள் முன்னால் தன்னை அவமானப்படுத்தியது ஞாபகம் வந்தது.

இப்பொழுது சொல்கிறேன் கேள் சிற்பியே. இன்னும் இரண்டு நாட்க்களுக்குள் நீ இந்த சிலையை செய்து முடிக்கவில்லை என்றால். உன் உயிர் உன்னிடம் இருக்காது.

என்று பயமுறுத்தி விட்டுபோயிருக்கிறார்.

இந்த சிற்பி முன்றாவது முறை சிலை தவறாக வந்தவுடனேயே தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலிருந்தான். ஆனால், அவன் மனைவி தான் காப்பாற்றினாள்.

ஏதோ ஒரு காரணத்திற்காக தான் இந்த விதமாய் பிழைகள் ஏற்படுகின்றன. மிக அற்புதமான சிலை நீங்கள செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டிருக்கிற ஈசன், உங்களை சோதிப்பதற்காக இந்த நாடகங்களை நடத்திக்கொணடிருக்கிறhர். எனவே எத்தனை முறை பழுது பட்டாலும் நீங்கள் மனம் தளரக்கூடாது. மறுபடி, மறுபடியும் நீங்கள் முயற்ச்சிக்க வேண்டும். இறையருள் உங்களில் பொங்கியெழுந்து நிற்கும் போது இந்த சிலையும், அற்புதமாக நிற்கும். இது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சோதனை.

உங்களை இறைவன் கொதிக்க வைத்து கொண்டிருக்கிறhன். எனவே சற்றும் மனம் தளராதீர்கள். நன்கு கொதியுங்கள், நீர்த்த மழுவாய் மாறுங்கள். எல்லா இடமம் பரவுங்கள், ஒளியோடு பரவுங்கள் என்று அவள் அவனை உற்சாகப்படுத்தினாள். அவன் புரிந்து கொண்டான். ஆனால், அரசன் பயமுறுத்தல் அவனை அதிகம் நடுங்க வைத்தது.

அவன் சாவதற்கு பயப்படவில்லை. தண்டனை பெற்று சாகவேண்டுமா என்கிற வேதனையைத் தான் அவன் முதலில் அடைந்தான்.

ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது கள்மண் பூசி சரியான இடத்தில் ஒட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.

உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது. இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணும்மான வயதான அந்தணர்கள்.

அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றhகிவிட்டது. ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு என்று கேட்டார்.

சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னைப் போய் நீர் கேடகிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.

அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன், அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறிர்கள், எனவே, கோயிலுக்க பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் முழ்கினான். வந்தவன் கைதட்டி அழைத்து எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுரண்டு விடுவேன் என்று தோன்றுகிறது எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு

என்றhன்.

நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது ? கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்கிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்

என்று பதட்டத்தோடு சொல்ல.

சரி அதையே குடித்துக் கொள்கிறேன் என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்.

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஒ வென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்தவிட்டது

என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தில் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஒடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது பார்வதியும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுழு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.

கிழவரையும,; கிழவியையும் யாரும் தேடவில்லை. உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஒரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று யோசித்தார்கள், வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.

ஒடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கொவ்வைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாசியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள். ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஒடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்துப் பார்த்தான்.

உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடாகாரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன், என்று நான் ஆணையிட்டதனால் தானே உன்னால் இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தைச் செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் ‍தெளிவாக புரிந்து விட்டது பார் என்று சிரிப்போடும் கடுப்போடும்

மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், என்ன சொல்ல வருகிறாய் மன்னன் மறுபடியும் சீறினான்.

இது சிவானல் செய்ய பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை எந்திக் குடித்தார் மறைந்தார், என்று சொல்ல இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே என்று மறுபடியும் சீறினான்.

இல்லை அரசே இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறhன். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல, என்று பணிவாக சொல்ல, அரசன் கொக்கலித்து சிரித்தான். உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றhல் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான், பளிச்சென்று ரத்தம் பீச்சி அடித்தது, தரை நனைத்தது. மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்த போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.

இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடிக் மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேருந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும், வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.

கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானல் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும். உலகத்திலே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்லா, சிற்பக் கலைப்பற்றி தெரியதவர்கள் கூட அருகே போய் நின்றhர்கள் என்றhல் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகிவிடுவார்கள். கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறhன். அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில் , ராஜராஜனும், ராnஜந்திரனம், குந்தவையும் இரண்டாம் ராஜராஜனும், குலோத்துங்கனும் வந்து போயிருக்கிற விஷயம், கல்வெட்டுகளால் தெரிந்து கொள்ளலாம்.

சுற்றுப்பிரகார சுவர் முழுவதும் அரசர்கள் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறhர்கள். இந்த நடராஜர் முன்பு கைகூப்பி நின்றுவிட்டு போயிருக்கிறhர்கள். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர், தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால். வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறhர்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி, ஸ்தலமரம் அரசு, தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், திருஞான சம்மந்தரும், அப்பரும் பாடியிருக்கிறhர்கள். கோயிலுக்குள் போன உடனேயே கோயிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கும், குளம் தாண்டி சுற்றிக் கொண்டு போனால், கோயில் வாசல் சாதாரணமாக இருக்கும், உள்ளுக்குள்ளே அற்புதமான கோயில் தௌpவாக பார்க்கலாம். இந்த நடராஜச் சிலை மட்டுமல்ல, கல்யாண சுந்தரர் சிலை, திருமஞ்சனத்திற்கான நடராஜனர் சிலை, ஆருத்ர தரிசனத்திற்காக தனியே ஒரு சிலை என்று பல்வேறு சிலைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் கல்யாணசுந்தரருக்கு வடையில் தேன் தோய்த்து நைய்வேத்தியம் செய்தால் திருமணமாகிறது என்று நம்பப்படுகிறது.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கிவைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும் குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம் எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள் கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்கள்.

அந்த வணக்கம் சிலை செய்யசொன்ன அரசனுக்கா, செய்த சிற்பிக்கா, அல்லது இவர்கள் எல்லாவற்றையும் இயக்கி தன்னை உள்ளடக்கிக் கொண்டியிருக்கிற சிவனுக்கா யோசியுங்கள் திருநல்லம் ஒரு முறை போய்ப்பாருங்கள்.

---------------------------------------------------------

  • தொடங்கியவர்

சென்னைப்பட்டினத்தின் தொன்மையைச் சொல்லுகின்ற திருத்தலங்கள் இரண்டு. ஒன்று மயிலாப்பூர். இன்னொன்று திருவல்லிக்கேணி.

மயில்கள் ஆர்க்கும் ஊர் மயிலாப்பூர் என்றும்; அல்லி மலர்கள் நிறைந்த கேணி திருவல்லிக்கேணி என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டு ஊர்களைச் சேர்த்தே பழங்காலத்தில் மயிலைத் திருவல்லிக்கேணி கிராமங்கள் என்று அழைப்பார்கள். இந்தத் திருவல்லிக்கேணி முற்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா?

இரவியின் கதிர்கள் உட்புகமுடியாத அடர்ந்த சோலைகள் உள்ள ஊராக இருந்தது. அதுமட்டுமா? ஒப்பில்லாத மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் திருவல்லிக்கேணியாக இருந்தது. அதாவது அழகிய பெண்கள் வாழ்கின்ற மாடங்கள் நிறைந்த மயிலாப்பூர்த் திருவல்லிக்கேணியாக இருந்தது.

மயிலாப்பூரின் சிறப்பு, கபாலீஸ்வரர் கோவில். திருவல்லிக்கேணியின் சிறப்பு, பார்த்தசாரதி ஸ்வாமி கோவில்.

சுமதி என்கிற மன்னன் திருவேங்கடமுடையானை தரிசனம் செய்து வந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரேமை. ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த இடத்துக்குப் போக வேண்டுமென்றால் வடக்கே வெகுதொலைவு மலைகளையும், காடுகளையும் ஆறுகளையும் தாண்டிப் போகவேண்டுமே என்று கவலைப்பட்டான்.

சுமதி மன்னன் கனவில் வேங்கடவன் தோன்றி, தன்னை தரிசிக்க அவ்வளவு தொலைவு போக வேண்டியதில்லை. இங்கே பிருந்தாரண்யம் எனப்படுகின்ற (பிருந்தா _ துளசி; ஆரண்யம் _ காடு.) திருவல்லிக்கேணியில் தான் ஸ்ரீ கிருஷ்ணனாக எழுந்தருளியிருப்பதாய் விவரம் சொல்ல, சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான். கோவிலும் எழுப்பினான். திருவல்லிக்கேணிக்கருகே துளசி வனத்திற்கு நடுவே ஸ்ரீ கிருஷ்ணர் குடும்ப சமேதராகக் காட்சி தருகிறார்.

திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கம் ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, உயரமாய் அகலமாய், கம்பீரனாய் பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில் கத்தியோடு சாளக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார். வேங்கடவர் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் என்பதால், வேங்கடகிருஷ்ணன் என்று பெயர். வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். சன்னதிக்கு அருகே நின்று கைகூப்ப, மனம் கிரங்கும்.

சாத்யகிக்கு நேரெதிரேயுள்ள ஒரு ஆசனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் எழுந்தருளியிருக்கிறார். இந்த உற்சவருக்குத்தான் பார்த்தசாரதி என்று பெயர்.

ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது.

என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செவிவழிச் செய்தி உண்டு.

ஒயில் நிறைந்த இந்த பார்த்தசாரதி சிலையில் மற்ற அங்கங்கள் மிக சுத்தமாக இருக்க, முகத்தில் மட்டும் தழும்புகள் இருப்பதைக் காணலாம். அது மட்டுமல்லாது இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள். பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள். மிகமிகத் தொன்மையான இந்தச் சிலைக்குக் கவசம் பூட்டி கண்ணும் கருத்துமாய் காப்பாற்றுகிறார்கள்.

சற்று தொலைவில் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து பார்க்க, ஒரு செவ்வக வாசல் முழுவதையும் அடைத்துக் கொண்டு, கருணை பொங்கும் பெரும் விழிகளும் வெள்ளை மீசையுமாய் மூலவரான வேங்கட கிருஷ்ணனைக் கண்குளிரக் காணலாம். உற்றுப் பார்க்க, அந்தக் கண்கள் இன்னும் அருகே வா என்றழைக்கும்.

சாரதி என்றால் யார்? தேரோட்டுபவன் மட்டுமா? இல்லை. இங்கு, கண்ணன் வழிகாட்டி. நம்மைப் போன்ற குடும்பிகளுக்கு பிரச்னையே, இனி அடுத்து என்ன செய்வது என்பதுதான். அடுத்து என்ன செய்வது என்று வழிகாட்டுபவன், பார்த்தசாரதி.

நல்லபுருஷன் வேண்டுமென்கிற பெண்ணுக்கு; நல்ல மனைவி வேண்டுமென்கிற ஆணுக்கு; நல்ல குடும்பம் அமைய வேண்டுமென்கிற தாபமுள்ள குடும்பிக்கு ஸ்ரீபார்த்தசாரதியே வழிகாட்டி. அதேபோல புத்திக்கு வழிகாட்டி. பார்த்தசாரதிக்கு நேர் பின்னே மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் யோக நரசிம்மர், புத்தியில் சிக்கல் ஏற்பட்டால் தெளிவுபடுத்த வழிகாட்டுவார். ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்வார். நாக்கு இல்லாத அலங்கார மணிகள் கொண்ட கதவினை உடைய வாசல். நிஷ்டையில் அமர்ந்திருக்கும் நரசிம்மருக்கு எதிரே தனி கொடிமரமும் பலிபீடமும் இருக்கின்றன. இந்த நரசிம்மரை, இங்குள்ள வைணவர்கள், பெரியவர் என்றும், தாத்தா என்றும் அழைக்கிறார்கள். இந்த நரசிம்மருக்கு முதல் பூஜை, முதல் கோஷ்டி ஆனபிறகு ஸ்ரீ பார்த்தசாரதிக்கு பூஜையும் கோஷ்டியும் ஆகும். மிக உக்கிரமாக இருந்த இந்த சன்னதி, காலப் போக்கில் பல்வேறு ஞானிகளால் உக்கிரம் குறைக்கப்பட்டு, சாந்த ஸ்வரூபியாக அஞ்சேல் என்று அபயம் அளிப்பவராக திருஷ்டி தோஷம் நீக்குபவராக காட்சியளிக்கிறார். இங்கே முகத்தில் அடிக்கப்படும் சங்கு தீர்த்தத்தால், பல்வேறு பயங்கள், தோஷங்கள் நீங்குகின்றன.

ஒரு ஊர் சிறப்பாவது அந்த ஊரின் கோவிலால். அந்தக் கோவில் சிறப்பாவது அந்த ஊர் மக்களால். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சமேத வேங்கட கிருஷ்ணனை திருவல்லிக்கேணி வைணவர்கள் மனமாரக் கொண்டாடுகிறார்கள். நாள் தவறாது கோஷ்டியாய் அமர்ந்து நாலாயிர திவ்யபிரபந்தயத்தை ஓதுகிறார்கள். வருடத்திற்கு ஐந்துமுறை நாலாயிரம் பாடல்களையும் முழுவதுமாய் குழுவாய் அமர்ந்து சொல்லுகின்ற ஒரு வழக்கம் இங்கு மட்டுமே வெகு கண்டிப்பாய் பின்பற்றப்படுகிறது. கெஞ்சிக் கூத்தாடியோ, காசு கொடுத்தோ பிரபந்தம் ஓதுபவர்களைக் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை. ஊரிலுள்ள வைணவர்களே பரம்பரை பரம்பரையாக மிகுந்த ஆர்வத்தோடு இங்கு பிரபந்தம் ஓதுதலைக் குறைவின்றி செய்கிறார்கள். இந்த ஒரு பெருமாள் மட்டும்தான் காதுகுளிரக் கேட்பதற்குண்டான வரத்தை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று, திருவல்லிக்கேணி வைணவர்கள் கம்பீரமாய்ச் சொல்லுகிறார்கள். மிகுந்த கட்டுப்பாட்டோடும், கவனத்தோடும், நூற்றுக்கும் மேற்பட்ட வைணவர்கள் அமர்ந்து தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் அந்த நாலாயிர திவ்யபிரபந்தம் ஓதுதலை மன நிறைவோடு செய்கிறார்கள்.

பெருமாளுக்கு நைவேத்தியத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. மிளகுதான் உபயோகம். எண்ணெய்ப் பண்டங்கள் இல்லை, நெய்தான் ஆதாரம்.

கோவில் மிகப் பழமையானது என்பதற்கு, ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முந்தைய கல்வெட்டொன்று சாட்சியாக இருக்கிறது.

அங்குள்ள நிலக்கிழார்கள் கோவிலுக்குச் சொந்தமான கருமாரிச் சேரிப் புலத்தை அடகு வைத்தபடியால் அங்கிருந்து வரும் நெல், ஸ்வாமிக்கு போஜனத்திற்கு இல்லாமல் போயிற்று. அதை விஜயன் அரையன் என்கிற பக்தன் ஒருவன் காசு கொடுத்து மீட்டு, சட்டி ஸர்மன், இளைய சட்டி ஸர்மன் என்ற இரண்டு அந்தணர்களிடம் கொடுத்து, ஸ்வாமிக்கு நாள் தவறாமல் திருவமுது படைக்கும்படியாய் கட்டளையிட்டு, அவர்கள் அவ்விதம் செய்வதற்கு உபயோகமாய் உலோகப்பானை ஒன்றும் தானமாகக் கொடுத்தான் என்று அந்தக் கல்வெட்டு சொல்கிறது. இப்படி பெருமாளுக்குத் தவறாது திருவமுது செய்து வரும் கைங்கர்யத்தை எவர் தொடர்ந்தாலும் அவருடைய பாதத்தில் என் சிரஸ§ என்று அந்தக் குறுநில மன்னன் வேண்டிக் கொண்டிருக்கிறான்.

அதுமட்டுமல்ல. மிகச் சமீபத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தாறில் கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூச வேண்டுமென்று தாமிரத் தகடு வாங்க, தங்கம் சேகரித்து பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், தங்கம் முழுவதுமாக வாங்க முடியவில்லை.

விமானத்தின் இரண்டு பக்கம் மட்டுமே தங்கமுலாம் பூசக்கூடிய அளவுக்கு தங்கம் கிடைத்தது. இன்னும் இரண்டாயிரம் தோலா தங்கம் கிடைத்தால் விமானம் முழுவதும் தங்க முலாம் பூசிவிடலாம். ஆகவே இந்த இரண்டாயிரம் தோலா கொடுப்பவர்கள் எவராயினும் அவர் பாதத்தின் மீது எங்கள் சிரஸ§ என்று தெலுங்கிலே ஒரு கல்வெட்டு இருக்கிறது. (ஒரு தோலா என்பது பன்னிரண்டு கிராம். இரண்டாயிரம் தோலா என்பது மூவாயிரம் சவரன்).

சென்னை நகர மக்கள் நினைத்தால் இரண்டாயிரம் தோலா தங்கத்தை ஒரே வருடத்தில் பார்த்தசாரதி பெருமாளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட முடியும். அறுபத்து எட்டு வருட தவம் பூர்த்தியாகும். அன்று பல பெரியவர்கள் முயன்று முடியாத அக்கைங்கர்யம் எளிதாக நிறைவேறும். அப்படி விமானம் முழுதும் தங்க முலாம் பூசப்பெற்றால் சென்னை நகரம் மேன்மேலும் வளமாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

சிறிதும் இல்லாது பெரிதும் இல்லாத கோவில். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுவித மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கொடிமரத்துக்கருகேயுள்ள ஒரு மண்டபம், ஒரு தேவரடியார் தன்னுடைய சொந்தக் காசிலிருந்து கட்டியதாய் சொல்லப்படுகிறது. அந்த மண்டபத் தூண்களிலுள்ள புடைப்புச் சிற்பங்கள் மிக நேர்த்தியானவை.

ஹிரண்யனை நரசிம்மர் நின்றவாக்கிலே அவன் இரண்டு கால்களையும் தலைமயிரையும் இரண்டு கைகளால் பற்றி முழங்காலை உயர்த்தி அவன் முதுகெலும்பை உடைத்துப் போடுவதாய் ஒரு வேகமுள்ள சிற்பம் இருக்கிறது. அதுமட்டுமல்லாது பார்த்தசாரதி சன்னதிக்கருகே ஸ்ரீமந்நாதர் என்கிற பெயரோடு அனந்தசயனப் பெருமாளின் சன்னதி இருக்கிறது. சதுர்புஜங்களோடு ஆதிசேஷன்மீது நாராயணன் சயனித்திருக்கிறார்.

ஒரு கை பாம்பணை மீதும், ஒரு கை முத்திரையாகவும், இன்னொரு கை தொடை மீதும் இருக்க, நான்காவது கை உயர்ந்து ஒரு விரலை வளைத்து, அருகே வா என்று அழைப்பது போல காட்சியளிக்கிறது. ஸ்ரீதேவியும் பூதேவியும் அருகே இருக்க, நாபியிலிருந்து தாமரை மலர்ந்து அதன் மேலே பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். அந்த அனந்த சயனப் பெருமாளுக்கருகே, உள்ளே மறைவாக, சிரித்தபடி நரசிம்மரும் சிந்தனை மிக்க வராகரும் அமர்ந்திருக்கிறார்கள்.

அனந்த சயனப் பெருமாளுக்கு அருகே ஸ்ரீ ராமருடைய சன்னதி இருக்கிறது. சீதை, லட்சுமணரோடு மட்டுமல்லாமல், பரதரோடும் சத்ருக்னரோடும் ஸ்ரீராமர் காட்சியளிக்கிறார். அவருக்கு நேரெதிரே ஹனுமான் கூப்பிய கரங்களோடு நிற்கிறார்.

தாயாரின் பெயர் ஸ்ரீ வேதவல்லி. தனி சன்னதியும் அவருக்கருகே ஸ்ரீ கஜேந்திர வரதரின் சன்னதியும் இருக்கின்றன.

கீதை படித்து கண்ணனை ஆழ்ந்து நேசிக்கிற அத்தனை பேரும் இந்த இடத்திற்கு வந்து கண்குளிர வேங்கடகிருஷ்ணனையும் பார்த்தசாரதியையும் பார்த்து வணங்க வேண்டும்.

குடும்பம் சுமுகமாக இருக்க கண்ணனை வழிபட வேண்டும். மனம் அமைதியாக இருக்க யோக நரசிம்மர் முன் கைகட்டி நிற்க வேண்டும். வீட்டில் நிம்மதியும், மனசில் அமைதியும் இருந்தால் அதைவிடச் சிறப்பான வாழ்க்கை வேறென்ன உண்டு?

உன்னை சகல துன்பங்களிலிருந்தும் காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று ஸ்ரீ பார்த்தசாரதியான வேங்கடகிருஷ்ணன் உயரமாய் அகலமாய் பெரும் விழிகளோடும், சிரித்த முகத்தோடும், நல்ல வீரமான மீசையோடும், கம்பீரத்தோடும், வா வா என்று கருணையோடு உங்களை அருகே அழைக்கிறான். எட்டி விலகி நின்று பார்க்கும்போதே அவன் அருகே போக வேண்டுமென்கிற ஆவலும், ஏக்கமும் நிச்சயம் ஏற்படும். இடையறாது அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் உள்ளுக்குள் மாற்றங்கள் நிச்சயம் நிகழும். வேண்டுவன கிடைக்கும். //

DEVAPRIYA

  • 1 month later...
  • தொடங்கியவர்

ராமேஸ்வரம்

தேவர்கள் அக்னி வடிவமானவர்கள். அவர்களுக்கு உபசாரம் செய்வது அக்னி மூலமாகத்தான்.

அவர்களுக்கு உணவான நைவேத்யம் வழங்குவது அக்னியின் மூலமாகத்தான். பித்ருக்கள் அதாவது இறந்துபோன நம் முன்னோர்கள் இருப்பது ஜல ரூபமாக. அந்த ஜலக்கரையில் ஆவிகளாக அலையும் பித்ருக்களுக்கு ஜலம் வழியேதான் அர்க்யம் விட வேண்டும். அந்த ஜலம்தான் அவர்களுக்கு உணவு.

மனிதர்கள் மண் வடிவானவர்கள். மண்ணில் விளைந்தவைகள்தான் மனிதர்களுக்கு உணவு, உபசாரம். ஜல வடிவிலான பித்ருக்களை திருப்திபடுத்த நல்லதொரு ஜலக்கரைக்குச் சென்று அங்கு அவர்களை வணங்குதல் உயர்வு தரும். தேவர்களின் ஆசிர்வாதத்தைவிட, கடவுளின் அனுக்கிரகத்தை விட, பித்ருக்களின் அனுக்கிரகம் உடனடியான பலன் தரும். நம்முடைய முன்னோர்கள், நம்மீது மாறாத காதலுடையவர்கள். அந்த சூட்சுமரூபம் பெற்றபிறகு நம்மீது அதிகமான அக்கறையும், அன்பும், நம் வளர்ச்சியின் மீது கவனமும் கொண்டவர்கள். பதிலுக்கு நம்மிடமிருந்தும் ஒரு கை ஜலத்தைதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது இந்துமத சம்பிரதாயம் சொல்கின்ற வழி.

எந்த தீர்த்தக்கரையில் பித்ருக்களுக்கு நீர் வார்க்கலாம் என்றால், தமிழ்நாட்டிலுள்ள மிக அற்புதமான இடம் ராமேஸ்வரம்.

கடலால் சூழப்பட்ட தீவு போன்ற இடம். அந்த இடத்தில்தான் ராமபிரான் தன்னுடைய கைகளால் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். அந்த இடத்தில்தான் ராவணனைக் கொன்ற பாபம் போவதற்காக தீர்த்தத்தில் மூழ்கி தன்னுடைய சடையை கழுவிக் கொண்டார். ராவணனைக் கொல்வதற்கு முன்பு ஆலோசித்த இடமான கந்தமான பர்வதம், இன்று ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. ராமரின் பாதம் பட்டதால் புனிதமான அந்த இடம், ராமர், சிவனை வழிபட்டதால் வைஷ்ணவ_சிவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஒரு கூரைக் கொட்டகையாக இருந்த அந்த இடம், மெல்ல மெல்ல பல்வேறு மன்னர்களால் கோவிலாக உருவெடுத்தது. உலகப் புகழ் பெற்ற இரண்டாம் பிராகாரத்தையும், மூன்றாம் பிராகாரத்தையும் சேதுபதி பரம்பரையில் வந்த மன்னர்கள் சிறப்பாகக் கட்டிக்கொடுத்திருக்கிறார்க

யார் இந்த பாலகுமாரன் ? ஜீன்ஸ் திரைப்படத்தில் விபரமில்லாதவனுக்கு பொண்டாட்டியா இருப்பதை காட்டிலும் விபரமானவனுக்கு வைப்பாட்டியா இருக்கலாம் என்று வசனம் எழுதிய பாலகுமாரனா அல்லது வேறு யாருமா? முடிந்தால் இந்த பாலகுமாரன் பற்றிய சிறு குறிப்பும் எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.