Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புல்வாமா தாக்குதலுக்கு மோதி அரசின் கவனக் குறைவே காரணம்" - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புல்வாமா தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES/@SATYAPALMALIK6

15 ஏப்ரல் 2023, 15:18 GMT
புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2019இல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனம் மீதான தாக்குதல், நிர்வாக அமைப்பின் 'திறமையின்மை' மற்றும் 'கவனக்குறைவு' ஆகியவற்றின் விளைவாகும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, அவை உறுதியானவை என்றும் இதைக் கூறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்துத் தான் அஞ்சவில்லை என்றும் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

`ஊழல் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது’ என்ற பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கை குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள மாலிக், பிரதமருக்கு ஊழல் மீது அதிக வெறுப்பு இல்லை என்று கூறினார்.

'தி வயர்' செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள இந்த நேர்காணலில், 370-வது பிரிவின் நீக்கம், பாஜக தலைவர் ராம் மாதவ் தொடர்பான சர்ச்சைகள் குறித்தும் தனது கருத்தை வெளிப்படையாக மாலிக் தெரிவித்துள்ளார்.

சத்யபால் மாலிக் என்ன சொன்னார்?

2019 பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நிர்வாக அமைப்பின் 'திறமையின்மை' மற்றும் 'அலட்சியம்' ஆகியவற்றின் விளைவு என்று செய்தி இணையதளமான 'தி வயர்'க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

இதற்கு அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தார்.

சிஆர்பிஎஃப் தனது வீர்களை ஏற்றிச் செல்ல விமானத்தை வழங்குமாறு அரசிடம் கோரியதாகவும் ஆனால் உள்துறை அமைச்சகம் அதைச் செய்ய மறுத்ததாகவும் மாலிக் கூறினார்.

மேலும், சிஆர்பிஎஃப் வாகன அணி செல்லும் வழியில் அரசு, உரிய பாதுகாப்பு சோதனை நடத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புல்வாமா தாக்குதல்

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

'அமைதியாக இருங்கள்' என்று கூறிய பிரதமர் மோதி

தாக்குதலுக்குப் பிறகு ஜிம் கார்பெட் பூங்காவில் இருந்து பிரதமர் மோதி தன்னை அழைத்தபோது இந்த விவகாரங்களை அவரிடம் எழுப்பியதாக சத்யபால் மாலிக் பேட்டியில் கூறினார். இது குறித்து யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்குமாறு பிரதமர் மோதி தன்னைக் கேட்டுக் கொண்டார் என்றும் மாலிக் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதையே தன்னிடம் கூறியதாக மாலிக் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பொறுப்பைச் சுமத்தி, தேர்தல் ஆதாயம் பெறுவதே அரசின் நோக்கம் என்பதைத் தான் அப்போது உணர்ந்ததாக இந்தப் பேட்டியில் மாலிக் குறிப்பிட்டார்.

உளவுத்துறையின் தோல்வியே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் ஏற்றிய ஒரு டிரக் ஜம்மு காஷ்மீரில் 10 முதல் 15 நாட்களாகச் சுற்றித் திரிந்ததாகவும் ஆனால் உளவுத்துறைக்கு அதுகுறித்து துப்புகூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தலைவர் ராம் மாதவ் மீதான பழைய குற்றச்சாட்டை சத்யபால் மாலிக் மீண்டும் குறிப்பிட்டார்.

புல்வாமா தாக்குதல்

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

ஒரு நாள் காலை ஏழு மணிக்கு ராம் மாதவ் வந்து, ஒரு நீர்மின் திட்டத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு காப்பீட்டுத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தால் அதற்கு ஈடாக 300 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

`நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன்` என்று கூறி அதை நிராகரித்ததாக மாலிக் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீர் குறித்து பிரதமர் மோதி ’விஷயம் அறியாதவர்’ என்று கூறிய அவர், அந்த மாநிலம் குறித்து அவரிடம் தவறான தகவல்கள் இருப்பதாகத் தெரிவித்தார். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தவறு என்றும் மாலிக் கூறினார்.

’ஊழல் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது' என்ற பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கை குறித்தும் மாலிக் கடுமையான கேள்விகளை எழுப்பினார். பிரதமருக்கு ஊழல் மீது அதிக வெறுப்பு இல்லை என்று அவர் கூறினார்.

சத்யபால் மாலிக்கின் இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுடன் கூடவே வேறு பலரும் இந்தப் பேட்டியின் கிளிப்களை ட்வீட் செய்து சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

#corrupt Pradhan mantri (பிரதம மந்திரி) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்குப் பதிலடியாக #சத்யநாசி_காங்கிரஸும் ட்ரெண்டாகி வருகிறது.

புல்வாமா தாக்குதல்

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

காங்கிரஸ் என்ன சொன்னது

காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், புல்வாமா தாக்குதலும், அதில் துணிச்சல் மிக்க 40 வீர்கள் வீரமரணம் அடைந்ததும், அரசின் தவறால் நடந்ததாக பிரதமர் மோதி மீது குற்றம்சாட்டியுள்ளது.

இந்த ட்வீட்டில், “நரேந்திர மோதி ஜி, புல்வாமா தாக்குதல் மற்றும் அதில் 40 துணிச்சலான வீரர்கள் வீரமரணம் அடைந்தது உங்கள் அரசின் தவறால்தான் நடந்தது.

நமது ஜவான்களுக்கு விமானம் கிடைத்திருந்தால், பயங்கரவாத சதி தோல்வியடைந்திருக்கும். இந்தத் தவறுக்கு நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் இந்த விஷயத்தை நீங்கள் மூடி மறைத்தது மட்டுமல்லாமல் உங்கள் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தீர்கள்.

புல்வாமா தாக்குதல் குறித்து சத்யபால் மாலிக் கூறியதைக் கேட்டு நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது ட்வீட்டில், "மோதி அவர்கள் ’அவதூறுக்கு’ பயப்படும் அளவிற்கு 'தேசிய இழப்பு'க்கு பயப்படவில்லை என்பது ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துகளில் இருந்து தெளிவாகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அதே நேரத்தில், “பிரதமர் ஊழலை அவ்வளவு அதிகமாக வெறுப்பதில்லை” என்று ராகுல் காந்தி எழுதியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

காங்கிரஸ் மக்களவை எம்பி மனீஷ் திவாரி ஒரு ட்வீட்டில், “ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கரண் தாப்பருடன் மிகவும் கவனமாக உரையாடியதை நான் பார்த்தேன். மாண்புமிகு முன்னாள் ஆளுநர் கூறுவது உண்மையாக இருந்தால் அது மிகவும் கவலையளிக்கிறது. இது நாட்டிற்கு வெளியே மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்,” என்று எழுதியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

"மோதி அவர்களே, கேஜ்ரிவால் ஊழல் செய்பவர் என்றால் உலகில் நேர்மையானவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். மோதிக்கு ஊழல் மீது அதிக வெறுப்பு இல்லை என்று சத்யபால் மாலிக்கும் கூறியுள்ளார். யார் தலை முதல் கால் வரை ஊழலில் மூழ்கியிருக்கிறார்களோ அவருக்கு ஊழல் எப்படி ஒரு விஷயமாக இருக்க முடியும்,” என்று ஆம் ஆத்மி கட்சி ட்வீட் செய்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

பிரபல செய்தியாளர் சகரிகா கோஷ் ட்விட்டரில், "பலர் தனிப்பட்ட முறையில் கூறியதை ஜம்மு காஷ்மீரின் கடைசி ஆளுநர் சத்யபால் மாலிக் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். புல்வாமா தாக்குதல் சுதந்திர இந்தியாவின் மிக மோசமான பாதுகாப்பு குறைபாடு. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் இறந்தனர்,” என்று தெரிவித்துள்ளார்.

"ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் புல்வாமாவின் பின்னணியில் உள்ள பொய்களை மிகவும் நேர்மையான பேட்டியில் அம்பலப்படுத்தினார். ஆர்எஸ்எஸ்காரர், அதானிக்காக எப்படி லஞ்சம் கொடுக்கிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது,” என்று திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சில முக்கிய ஊடக நிறுவனங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளதாகக் கூறிய அவர், "இந்திய ஊடக அமைப்புகள் எப்போது வரை இப்படி பயந்து பயந்து செயல்படும்", என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் ஊடகங்களை கிண்டல் செய்து"புல்வாமா தாக்குதலின் உண்மை குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் பாஜக தலைவருமான சத்யபால் மாலிக் வெளியிட்ட உண்மைகளை இந்தியாவில் உள்ள எத்தனை தேசியவாத ஊடகங்கள் பிரைம் டைமில் விவாதிக்கின்றன? யாராவது இதைச் செய்கிறார்களா?'' என்று கேள்வியெழுப்பினார்.

சத்யபால் மாலிக்கின் மற்றொரு பேட்டியின்போது பாஜக தலைவர் ராம் மாதவ் மீது அவர் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து பிரபல பத்திரிகையாளர் ரவீஷ் குமார், ட்வீட் செய்துள்ளார்.

"நீங்கள் விழித்திருக்கிறீர்களா? நான் ஒன்று கேட்க வேண்டும். சத்யபால் மாலிக்கிற்கு ராம் மாதவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது எதற்காக? இந்த விவகாரத்தில் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள நிலையில் விசாரணைக்கு தயார் என்று அதற்கே கடிதம் எழுதியிருக்கலாம். உங்களால் கேட்க முடியவில்லை என்றால், நான் கேட்க வருகிறேன்!” அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்விட்டரில், "பரபரப்பானது! கட்டாயம் பாருங்கள்! மோதியுடனான அவரது அனுபவம் குறித்து மோதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஒரு அதிரடி நேர்காணல்” என்று எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதியை குறி வைத்து சுவாதி சதுர்வேதி, "காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் கூற்றுகளில் ஒரு துளி உண்மை இருந்தால்கூட, நீங்கள் நமது வரலாற்றில் மிகவும் 'தேசதுரோக' அரசை நடத்துகிறீர்கள்’. இதை ட்வீட் செய்யும்போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 7
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 7

ஸ்வீடனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அஷோக் ஸ்வைன் இந்த நேர்காணலின் ஒரு பகுதியை ட்வீட் செய்துள்ளார்.

“2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போர் போன்ற சூழ்நிலைக்கு மோதி இந்தியாவை அழைத்துச் செல்வார் என்று 2018 டிசம்பரில் நான் கணித்திருந்தேன். தேர்தலுக்கு முன் இப்படி நடந்தது. அது புல்வாமா.”

திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் அதிகாரியுமான ஜவஹர் சர்க்கார் தனது ட்வீட்டில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மோதியின் சொந்த ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமா துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுகிறார். மேலும் இது கவனக்குறைவின் காரணமாக நடந்தது. இந்தச் சம்பவம் 2019 தேர்தலில் வெற்றிபெற மோதிக்கு மிகவும் உதவியாக இருந்தது. இனி இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் சேவா தளம் தனது ட்விட்டர் பதிவில், “இங்கு மோதி அரசின் தவறை சத்யபால் மாலிக் அம்பலப்படுத்தியுள்ளார். ஆர்.டி.எக்ஸ் வருவதும் போவதும் பற்றிய தகவல்கள் இருந்தபோதிலும், மோதி அரசு ராணுவ வீரர்களை சாலை வழியாக அனுப்பியது. அவர் இந்தத் தீவிரவாத தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்தன,” என்று குறிப்பிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது பொய் என்று கூறும் பாஜக

பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, சத்யபால் மாலிக்கை குறிவைத்து பல ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.

தனது முதல் ட்வீட்டில், இந்த நேர்காணலின் ஒரு பகுதியை அவர் வெளியிட்டார், அதில் சத்யபால் மாலிக் அமித் ஷாவை பற்றிய தனது முந்தைய கூற்றுகளில் ஒன்று தவறானது என்று கூறினார். பிரதமர் மோதியை பற்றி ஷா அப்படிச் சொல்லவில்லை என்றும் மாலிக் கூறினார்.

இது குறித்து மாலிக்கை கடுமையாக சாடிய மாளவியா, “பிரதமர் நரேந்திர மோதி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது தொடர்பாக பொய் சொன்னதாகவும் ஆதாரமற்ற கதைகளைச் சொன்னதாகவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தியபோதும் யாரும் அதை நம்பவில்லை. ஆனால் இது அவரது நம்பகத்தன்மை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது,” என்று குறிப்பிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 8
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 8

அவர் மற்றொரு ட்வீட்டில், "உண்மையைச் சொல்வதில் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் கடைசியாகச் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை..." என்று கூறினார்

”காங்கிரஸ் தனது புதிய அன்பான சத்யபால் மாலிக்கை பற்றி உற்சாகமடைவதற்கு முன், ராகுல் காந்தியை பற்றி அவர் சொல்வதைக் கேளுங்கள்.”

"சத்யபால் மாலிக்கின் இந்த நேர்காணல், பிரதமரைப் பற்றி கதைகளை உருவாக்கியதை அவர் ஒப்புக்கொண்டபோது மோசமாகப் பின்வாங்கியது," என்று ரிஷி பாக்ரி என்ற பயனர் எழுதினார்.

மற்றொரு ட்வீட்டில் அவர், "இந்த வீடியோ ’தர்பார்’ பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவலாகப் பரப்பப்பட்டது. அறிக்கையை வாபஸ் பெறுவதாக அவர் கூறுகிறார். அவர் இப்போது மன்னிப்பு கேட்பாரா???” என்று எழுதியுள்ளார்.

”யஷ்வந்த் சின்ஹாவை சுற்றித் திரண்டவர்கள், இப்போது சத்யபால் மாலிக்கை சுற்றித் திரண்டிருக்கிறார்கள்” என்று பத்திரிகையாளர் ஷிவ் அரூர் விமர்சித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c2j7dvrn1rjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்யபால் மாலிக்: மோதிக்கு தலைவலி தரும் முன்னாள் ஆளுநர் - யார் இவர்?

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

செய்தி சேனல்கள் முதல் நாளழிதழ்களின் தலைப்புச் செய்திகள் வரை... ஃபேஸ்புக் முதல் ட்விட்டர் வரை.

கடந்த பல நாட்களாக, பெருமளவில் பேசுபொருளாகியிருப்பது ஒரு செய்தி. அது பிரயாக்ராஜ் அதீக் கொலை வழக்கு.

ஆனால் இதைத் தவிர, அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகக் கூர்ந்து நோக்கப்படுவது ஒரு நேர்காணல். இருப்பினும், இந்தச் செய்தி நாட்டின் முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் முக்கிய ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.

இதை வைத்துக்கொண்டு, மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு குறித்துக் கேள்வி எழுப்பும் பணியில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் சத்யபால் மாலிக் அளித்த பேட்டியை யூடியூப்பில் பார்த்துள்ளனர்.

நான்கு மாநிலங்களின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், 'த வயர்' என்ற செய்தி இணையதளத்தின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு இந்தப் பேட்டியை அளித்துள்ளார்.

அதில், புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசைக் குற்றம்சாட்டிய சத்யபால் மாலிக், ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக நேரடியாகப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பல முக்கிய பதவிகளில் இருப்பவருமான ஒருவர், பிரதமரை நேரடியாகத் தாக்குவது இதுவே முதல் முறை.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இந்தப் பேட்டிக்குப் பிறகு சத்யபால் மாலிக் மீதும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சத்யபால் மாலிக்கின் அறிக்கைகள் சலசலப்பு ஏற்படுத்துவது இது முதல் முறையன்று. இதற்கு முன்பும் கூட, அவரது அறிக்கைகளால் அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியே சங்கடங்களைச் சந்தித்த சந்தர்ப்பங்கள் அதிகம்.

அரசியல் பயணத்தில் பல கட்சிகள் தாவல்

சத்யபால் மாலிக், அஜித் தோவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சத்யபால் மாலிக் தன்னை 'லோஹியாவாதி' என்று அழைத்துக் கொள்கிறார். லோஹியாவின் சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்ட அவர், மீரட் கல்லூரி மாணவர் சங்கத்தில் மாணவர் தலைவராகத் தம் பயணத்தைத் தொடங்கினார்.

1946 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி உத்தரப்பிரதேசம், பாக்பத்தில் உள்ள ஹிசாவதா கிராமத்தில் பிறந்தார். அவர் தனது இரண்டு வயதில் தந்தையை இழந்துவிட்டதாகக் கூறுகிறார்.

சத்யபால் மாலிக்கை அரசியலுக்குக் கொண்டுவரும் பணியை சௌத்ரி சரண் சிங் செய்ததாக மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறுகிறார். 1974 இல், சௌத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் சார்பில், பாக்பத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 28 வயதில் சட்டமன்ற உறுப்பினரானார்.

முதல் சட்டமன்றத் தேர்தலில் சத்யபால் மாலிக் சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1980 இல், அவர் லோக் தளம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர், எந்தக் கட்சியின் அவசரநிலையை எதிர்த்துச் சிறை சென்றாரோ அதே காங்கிரஸில் சேர்ந்தார்.

1987 இல், ராஜீவ் காந்தி போஃபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டார், அதற்கு எதிராக வி.பி. சிங் ஒரு முன்னணியைத் தொடங்கினார். அவருக்கு சத்யபால் மாலிக் ஆதரவளித்தார். காங்கிரசை விட்டு வெளியேறிய சத்யபால் மாலிக், ஜன் மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். 1988ல் அக்கட்சியை ஜனதா தளத்துடன் இணைத்தார்.

1989 இல், நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. சத்யபால் மாலிக் உ.பி.யின் அலிகார் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996ல் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து அலிகார் தொகுதியில் போட்டியிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, "ஒரு ஜாட் தலைவராக இருந்த சத்யபால் அலிகாரில், வெறும் நாற்பதாயிரம் வாக்குகள் பெற்று, நான்காவது இடத்தைப் பிடித்துப் படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற வேட்பாளர் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஜாட் தலைவராக சத்யபால் செல்வாக்கை இழந்ததாக கருதப்பட்ட தேர்தல் ஆக அது ஆனது," என்கிறார்.

மோதி மீதான தீவிர குற்றச்சாட்டு

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

சத்யபால் மாலிக் பல ஆண்டுகளாக அரசாங்கத்துடன் ஒத்துப்போகாமல் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று த வயர் என்ற செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், மத்திய பாஜக அரசுக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் சிக்கலை உருவாக்கக்கூடிய சில சம்பவங்களை விரிவாக விவரித்தார்.

14 பிப்ரவரி 2019 அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சி ஆர் பி எஃப் -ன் 70 பேருந்துகளின் தொடரணியில் ஒரு பேருந்தின் மீது வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மோதியது. இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று சத்யபால் மாலிக் இப்போது குற்றம் சாட்டியுள்ளார். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்ல, சி ஆர் பி எஃப்-க்கு ஐந்து விமானங்கள் தேவைப்பட்டன என்றும் அதைத் தாம் உள்துறை அமைச்சகத்திடம் கோரியதாகவும் ஆனால் விமானங்கள் வழப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விமானம் மூலம் சென்றிருந்தால், இந்தச் சாலை வழித் தாக்குதல் நடந்திருக்காது என்பது அவரது வாதம்.

சத்யபால் மாலிக் பேட்டியில் கூறியதாவது: “இந்த தகவலைப் பிரதமரிடம் கூறி, குற்றத்தைச் சுட்டிகாட்டியதும் பிரதமர் இது குறித்து அமைதி காக்கும்படி எனக்கு அறிவுறுத்தினார்”

பிப்ரவரி 17 அன்று, தைனிக் பாஸ்கர் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரியும் தனது செய்தியறிக்கையில் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர், "பிப்ரவரி 4 முதலே, பனிப்பொழிவு காரணமாக ஜம்முவில் சிக்கித் தவிக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் விமானம் மூலம் ஸ்ரீநகர் செல்ல அனுமதி கோரப்பட்டது. சிஆர்பிஎஃப் இந்தக் கோரிக்கையைத் தலைமையகத்திற்கு அனுப்பியது.

அங்கிருந்து அது உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது, ஆனால் எந்தப் பதிலும் கிடைக்காததால், சிஆர்பிஎஃப் கான்வாய் பிப்ரவரி 14 அன்று பிற்பகல் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குப் பேருந்தில் புறப்பட்டு 3.15 மணிக்கு பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “புல்வாமா சம்பவத்தின் போது சத்யபால் மாலிக் துணிச்சலுடன் செயல்பட்டு இதையெல்லாம் வெளிப்படுத்தியிருந்தால், வி.பி.சிங் போல ஒரு சக்தியாக உருவாகியிருப்பார். ஆனால் இரண்டு தலைவர்களின் ஆணைகளை வாய் மூடி மௌனியாக ஏற்றுச் செயல்பட்டதன் விலையை நாடு இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.” என்றார்.

மேலும் அவர், "புல்வாமா தாக்குதலின் போது, இணைக்கும் சாலையில், ஜவான்கள் நிறுத்தப்படவில்லை என்று அவர் கூறுகிறார். அப்போது காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவருக்கு ஏன் இது தெரியவில்லை? தெரிந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்தார்? அதன் மீது என்ன விசாரணையை ஏற்பாடு செய்தார்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்.

‘பாகிஸ்தான் மீது குற்றச்சாடு மடை மாற்றம்’

“இந்தப் பழி அனைத்தும் பாகிஸ்தானை நோக்கிச் செல்ல வேண்டும், எனவே அமைதியாக இருங்கள்” என்றார்.

11 நாட்களுக்குப் பிறகு, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பின் 'பயிற்சி முகாம்கள்' மீது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, தொடர் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தியதாக இந்திய அரசு கூறியது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 2019 இல், நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், பாலகோட் தாக்குதலை ஒரு முக்கிய தேர்தல் பிரச்சார ஆயுதமாக மாற்றியது பாஜக. பாலகோட் தாக்குதல் குறித்த பிரச்சாரம் வலுவடைந்தது.

மே 2019 இல் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்தபோது, பாரதிய ஜனதா கட்சி, மீண்டும் வெற்றி பெற்று, 300 தொகுதிகள் என்ற இலக்கையும் தாண்டி, பெரும்பான்மையுடன் மத்தியில் தனது அரசாங்கத்தை அமைத்தது.

தனது பேட்டியின் போது சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதலை பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டது என்று பூடகமாகக் குறிப்பிட்டார்.

படகு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொலைநோக்கு பார்வை குறைவு

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கியது.

முந்தைய தினம் தான் இவ்வளவு பெரிய முடிவு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. "எனக்கு எதுவும் தெரியாது, ஒரு நாள் முன்னர், மாலை உள்துறை அமைச்சரிடமிருந்து ‘சத்யபால், நான் ஒரு கடிதம் அனுப்புகிறேன், அதற்கு உங்கள் கமிட்டியில் ஒப்புதல் பெற்றுக் காலை11 மணிக்கு முன் அனுப்பவும்’ என்று எனக்கு அழைப்பு வந்தது." என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மூத்த அரசியல் பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத் கூறுகையில், "சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுகள் ஒருதலைப்பட்சமானது, ஆனால் மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறை கவலை அளிக்கிறது. அவர்கள் தங்கள் மூத்த தலைவருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்.” என்றார்.

ஊழல் குறித்துப் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கோவா கவர்னராக இருந்தபோது, பிரதமரிடம் பலமுறை ஊழல் பிரச்னையை எழுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

பிரதமருக்கு நெருக்கமானவர்கள் ஜம்மு காஷ்மீரில் இடைத் தரகர் வேலையைத் தன்னிடம் கொண்டு வந்ததாகவும் அதில் தனக்கு ரூ.300 கோடி தருவதாகக் கூறியதாகவும் சத்யபால் மாலிக் கூறினார். இதற்கு உடன்பட மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சத்யபால் மாலிக், “பிரதமருக்கு ஊழல் குறித்த எந்த வெறுப்பும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.

மூத்த அரசியல் பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத், "இவை பாஜக மூத்த தலைவர் ஒருவரால் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். நிர்வாக அமைப்பின் அங்கமாக நான்கு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர் அவர். ஐரோப்பாவில் இப்படி ஒரு பேட்டி வந்திருந்தால், பிரதமர் ராஜிநாமா செய்திருப்பார்." என்று கூறினார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, "சத்யபால் மாலிக் இதை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை.” என்று குற்றம்சாட்டுகிறார்.

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

சர்ச்சை கருத்து தெரிவிப்பது புதிதல்ல

22 ஆகஸ்ட் 2022- அப்போது சத்யபால் மாலிக் மேகாலயா ஆளுநராக இருந்தார்.

பாக்பத், கேக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் தொழிலாளர் கூட்டத்தில், "டெல்லியின் எல்லையில் 700 விவசாயிகள் இறந்துள்ளனர், ஒரு நாய்க்குட்டி இறந்தால் கூட இரங்கல் செய்தி வெளியிடும் பிரதமர், 700 விவசாயிகளின் இறப்புக்கு ஒரு இரங்கல் செய்தி வெளியிடவில்லை.

அவருக்கு விவரம் புரியக் கால தாமதம் ஆனது. அதன் பிறகு மன்னிப்பு கோரி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். ஆனாலும் அவரது செயலில் ஒரு நேர்மை இல்லை” என்று உரையாற்றினார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனவரி 2022- "விவசாயிகள் விஷயத்தில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, ஐந்து நிமிடங்களில் வாக்குவாதம் தொடங்கிவிட்டது. எங்கள் தரப்பில் ஐநூறு பேர் இறந்துவிட்டார்கள் என்று நான் அவரிடம் சொன்னபோது அவர் மிகவும் ஆணவத்துடன் இருந்தார்.

"ஒரு நாய்க்குட்டி இறந்தால் கூட இரங்கல் செய்தி அனுப்புகிறீர்களே என்று நான் கேட்டபோது, எனக்காகவா இறந்தார்கள் என்றார். அவர்களால் தானே அரசு நடத்துகிறீர்கள் என்று நான் கேட்டேன். அவர் என்னை அமித்ஷாவைச் சந்திக்கச் சொன்னார். நான் அமித் ஷாவைச் சந்தித்தேன். மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருங்கள். ஒரு நாள் புரியும் என்றார்.” என்று அவர் பேசினார்.

ஆனால், இறுதியில் தனது கருத்தைத் திரும்பப் பெற்றார்.

கரண் தாபருடனான நேர்காணலில் கூட, "அமித் ஷா குறித்த விஷயம் நான் முற்றிலும் தவறாகக் கூறியுள்ளேன். அவர் அப்படி எதுவும் கூறவில்லை. எனது பேச்சை நான் திரும்பப் பெறுகிறேன். அது என் தவறு" என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

ஜனவரி 2019- "ஜம்மு-காஷ்மீரும் நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல் தான். இங்கு ஆணவக் கொலைகள் நடக்கவில்லை. இங்கு ஒரு வாரத்தில் எத்தனை மரணங்கள் நடக்கின்றனவோ, அத்தனை கொலைகள் பாட்னாவில் ஒரு நாளில் நடக்கின்றன. இப்போது காஷ்மீரில் கல் வீச்சு மற்றும் பயங்கரவாத அமைப்புகளில் சேர்வதை இளைஞர்கள் நிறுத்திவிட்டார்கள்."

"இங்குள்ள சிறுவர்கள் ஆயுதங்களுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள், மாநிலக் காவல்துறையினரைக் கொல்கிறார்கள். ஏன் அவர்களைத் தாக்குகிறீர்கள். கொல்ல வேண்டும் என்றால் உங்கள் நாட்டையும் காஷ்மீரையும் சூறையாடியவர்களைக் கொல்லுங்கள். அப்படிப்பட்டவரைக் கொன்றதுண்டா?"

ஜூன் 2022-ல் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக

"அக்னிபத் திட்டம் நமது ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் தான் அமையும். அது அவர்களின் வாழ்க்கையை முடித்துவிடும். நான்கு ஆண்டுகளில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிப்பார்கள். ஆறு மாதங்கள் விடுமுறையில் இருப்பார்கள். மூணு ஆண்டுகள் மட்டும் வேலை செய்துவிட்டு அதன் பிறகு எங்கு செல்வார்கள்? திருமணமும் ஆகியிருக்காது. அவர்களுக்கு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் உணர்வு எப்படி வரும். இது மிகவும் தவறான திட்டம், இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மார்ச், 2020- மது அருந்துகிறார் ஆளுநர்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் நகருக்கு வருகை தந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஆளுநருக்கு வேலை இல்லை, காஷ்மீரில் உள்ள ஆளுநர் மது அருந்திவிட்டு கோல்ப் விளையாடுகிறார்,” என்றார்.

தாக்குதலுக்கு என்ன காரணம்?

சத்யபால் மாலிக்கின் அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்கள், அவர் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றும், மனதில் பட்டதைச் சொல்லக்கூடியவர் என்றும் கூறுகிறார்கள்.

மூத்த பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத், "அவர் கேமரா முன்னிலையில் கருத்து கூறுவது இது முதல் முறையன்று. கோவா ஆளுநராகப் பதவியில் இருந்தபோதே, ஊழல் பிரச்னையை எழுப்பினார்" என்கிறார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, "இன்று தகவலறியும் உரிமையுள்ள காலம். சத்யபால் மாலிக் பதவியில் இருந்தபோது, அவர் இந்த விஷயங்களை எங்காவது பதிவு செய்திருக்கலாம். வரும் காலங்களில் அவரிடம் விசாரணை செய்திருக்கலாம், ஆனால் அப்படி ஒரு முறை கூடச் செய்யவில்லை. 300 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது, அந்த நபர்களை அவர் அங்கேயே கைது செய்திருக்கலாம்." என்று கூறுகிறார்.

“ஊழலுக்கு எதிராக அவர் போராட வேண்டும் என்று அவர் விரும்பியதாகத் தான் நான் கருதுகிறேன். ஆனால் யாரும் அவரது பேச்சைப் பொருட்படுத்தவில்லை. ராஜ் பவனில் ஏற்பட்ட தலையீட்டால் அவருக்கு அந்தப் பதவியின் மீதே ஆசை போய்விட்டது.” என்று மேலும் அவர் தெரிவிக்கிறார்.

சத்யபால் மாலிக்கின் செல்வாக்கு

சத்யபால் மாலிக், ஜாட் சமூகத்தினரும் ஏராளமான விவசாயிகளும் தனக்குப் பின்னால் நிற்கிறார்கள் என்றும், பாஜக தனக்கு இடையூறு செய்தால், கட்சி அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.

அது உண்மையா? மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக், களத்தில் எந்த அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கிறார்?

இது குறித்து, மூத்த பத்திரிகையாளர் பிரிஜேஷ் சுக்லா கூறுகையில், "விவசாயிகள் போராட்டத்தின் போது, மேற்கு உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் மறுசீரமைப்பு நடக்கும் என்று அவர் கூறியிருந்தார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, சமாஜ்வாதி கட்சிக்கும் விவசாயிகளின் கட்சி என்று அறியப்பட்ட ராஷ்ட்ரிய லோக்தள் கட்சிக்கும் இடையே வலுவான கூட்டணி இருந்தது” என்கிறார்.

மேலும் அவர், "சத்யபால் மாலிக் தன்னை ஒரு ஜாட் மற்றும் விவசாயிகள் தலைவர் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்." என்று கூறுகிறார்.

சத்யபால் மாலிக் ஆர்எல்டியின் உதவியின்றி பாக்பத்தில் போட்டியிட்டால் அவருக்குச் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “அவரது உரையை மக்கள் நிச்சயம் கேட்பார்கள், ஆனால், அவையனைத்தும் வாக்குகளாக மாறுவது கடினம்” என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/ce5z0xnl4nzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ நோட்டீஸ் - "சிலரது பாவங்களை அம்பலப்படுத்தினேன், பயப்பட மாட்டேன்"

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

21 ஏப்ரல் 2023

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காப்பீடு ஊழல் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் தேவைப்படுவதால் அது தொடர்பான விசாரணைக்கு வரும்படி அவருக்கு இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் அவர் த வயர் செய்தி இணையதளத்துக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தனியார் நிறுவன ஊழல் முறைகேடு தொடர்பான தகவல்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், "சில தெளிவுபடுத்தல்களுக்காக" அக்பர் சாலையில் உள்ள சிபிஐ விருந்தினர் மாளிகைக்கு வரும்படி தன்னை சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது என்று சத்யபால் மாலிக் பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து சில சத்யபால் மாலிக் த வயர் செய்தி இணையதளத்துக்கு அளித்த நேர்காணல் காரணமாக அவர் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். காரணம், அந்த தாக்குதல் விவகாரத்தில் அவரை அமைதி காக்கும்படி பிரதமர் மோதி கூறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், ஜம்மு-காஷ்மீரில் கிரு நீர்மின்சார திட்டத்துடன் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் மற்றும் ₹2,200 கோடி மதிப்பிலான சிவில் பணிக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் ஊழல் முறைகேடு நடந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக சிபிஐ இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை ஏற்கெனவே பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

சத்யபால் மாலிக் முன்பு ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது இரண்டு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கான கோப்புகள் அவை. இந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் டிரினிட்டி ரீ-இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

முன்னதாக வெள்ளிக்கிழமை மாலையில், சிபிஐ சம்மனுக்கு பதிலளித்த மாலிக் ஒரு ட்வீட்டில், “உண்மையைப் பேசியதன் மூலம் சிலரின் பாவங்களை நான் அம்பலப்படுத்திவிட்டேன். நான் ஒரு விவசாயியின் மகன். பயப்பட மாட்டேன். நான் உண்மையின் பக்கம் நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, சத்யபால் மாலிக்கின் செயல்பாடுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

செய்தி சேனல்கள் முதல் நாளழிதழ்களின் தலைப்புச் செய்திகள் வரை... ஃபேஸ்புக் முதல் ட்விட்டர் வரை.

கடந்த பல நாட்களாக, பெருமளவில் பேசுபொருளாகியிருப்பது ஒரு செய்தி. அது பிரயாக்ராஜ் அதீக் கொலை வழக்கு.

ஆனால் இதைத் தவிர, அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகக் கூர்ந்து நோக்கப்படுவது ஒரு நேர்காணல். இருப்பினும், இந்தச் செய்தி நாட்டின் முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் முக்கிய ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.

இதை வைத்துக்கொண்டு, மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு குறித்துக் கேள்வி எழுப்பும் பணியில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் சத்யபால் மாலிக் அளித்த பேட்டியை யூடியூப்பில் பார்த்துள்ளனர்.

நான்கு மாநிலங்களின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், 'த வயர்' என்ற செய்தி இணையதளத்தின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு இந்தப் பேட்டியை அளித்துள்ளார்.

அதில், புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசைக் குற்றம்சாட்டிய சத்யபால் மாலிக், ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக நேரடியாகப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பல முக்கிய பதவிகளில் இருப்பவருமான ஒருவர், பிரதமரை நேரடியாகத் தாக்குவது இதுவே முதல் முறை.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இந்தப் பேட்டிக்குப் பிறகு சத்யபால் மாலிக் மீதும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சத்யபால் மாலிக்கின் அறிக்கைகள் சலசலப்பு ஏற்படுத்துவது இது முதல் முறையன்று. இதற்கு முன்பும் கூட, அவரது அறிக்கைகளால் அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியே சங்கடங்களைச் சந்தித்த சந்தர்ப்பங்கள் அதிகம்.

அரசியல் பயணத்தில் பல கட்சிகள் தாவல்

சத்யபால் மாலிக், அஜித் தோவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சத்யபால் மாலிக் தன்னை 'லோஹியாவாதி' என்று அழைத்துக் கொள்கிறார். லோஹியாவின் சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்ட அவர், மீரட் கல்லூரி மாணவர் சங்கத்தில் மாணவர் தலைவராகத் தம் பயணத்தைத் தொடங்கினார்.

1946 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி உத்தரப்பிரதேசம், பாக்பத்தில் உள்ள ஹிசாவதா கிராமத்தில் பிறந்தார். அவர் தனது இரண்டு வயதில் தந்தையை இழந்துவிட்டதாகக் கூறுகிறார்.

சத்யபால் மாலிக்கை அரசியலுக்குக் கொண்டுவரும் பணியை சௌத்ரி சரண் சிங் செய்ததாக மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறுகிறார். 1974 இல், சௌத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் சார்பில், பாக்பத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 28 வயதில் சட்டமன்ற உறுப்பினரானார்.

முதல் சட்டமன்றத் தேர்தலில் சத்யபால் மாலிக் சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1980 இல், அவர் லோக் தளம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர், எந்தக் கட்சியின் அவசரநிலையை எதிர்த்துச் சிறை சென்றாரோ அதே காங்கிரஸில் சேர்ந்தார்.

1987 இல், ராஜீவ் காந்தி போஃபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டார், அதற்கு எதிராக வி.பி. சிங் ஒரு முன்னணியைத் தொடங்கினார். அவருக்கு சத்யபால் மாலிக் ஆதரவளித்தார். காங்கிரசை விட்டு வெளியேறிய சத்யபால் மாலிக், ஜன் மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். 1988ல் அக்கட்சியை ஜனதா தளத்துடன் இணைத்தார்.

1989 இல், நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. சத்யபால் மாலிக் உ.பி.யின் அலிகார் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996ல் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து அலிகார் தொகுதியில் போட்டியிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, "ஒரு ஜாட் தலைவராக இருந்த சத்யபால் அலிகாரில், வெறும் நாற்பதாயிரம் வாக்குகள் பெற்று, நான்காவது இடத்தைப் பிடித்துப் படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற வேட்பாளர் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஜாட் தலைவராக சத்யபால் செல்வாக்கை இழந்ததாக கருதப்பட்ட தேர்தல் ஆக அது ஆனது," என்கிறார்.

மோதி மீதான தீவிர குற்றச்சாட்டு

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

சத்யபால் மாலிக் பல ஆண்டுகளாக அரசாங்கத்துடன் ஒத்துப்போகாமல் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று த வயர் என்ற செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், மத்திய பாஜக அரசுக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் சிக்கலை உருவாக்கக்கூடிய சில சம்பவங்களை விரிவாக விவரித்தார்.

14 பிப்ரவரி 2019 அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சி ஆர் பி எஃப் -ன் 70 பேருந்துகளின் தொடரணியில் ஒரு பேருந்தின் மீது வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மோதியது. இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று சத்யபால் மாலிக் இப்போது குற்றம் சாட்டியுள்ளார். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்ல, சி ஆர் பி எஃப்-க்கு ஐந்து விமானங்கள் தேவைப்பட்டன என்றும் அதைத் தாம் உள்துறை அமைச்சகத்திடம் கோரியதாகவும் ஆனால் விமானங்கள் வழப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விமானம் மூலம் சென்றிருந்தால், இந்தச் சாலை வழித் தாக்குதல் நடந்திருக்காது என்பது அவரது வாதம்.

சத்யபால் மாலிக் பேட்டியில் கூறியதாவது: “இந்த தகவலைப் பிரதமரிடம் கூறி, குற்றத்தைச் சுட்டிகாட்டியதும் பிரதமர் இது குறித்து அமைதி காக்கும்படி எனக்கு அறிவுறுத்தினார்”

பிப்ரவரி 17 அன்று, தைனிக் பாஸ்கர் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரியும் தனது செய்தியறிக்கையில் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர், "பிப்ரவரி 4 முதலே, பனிப்பொழிவு காரணமாக ஜம்முவில் சிக்கித் தவிக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் விமானம் மூலம் ஸ்ரீநகர் செல்ல அனுமதி கோரப்பட்டது. சிஆர்பிஎஃப் இந்தக் கோரிக்கையைத் தலைமையகத்திற்கு அனுப்பியது.

அங்கிருந்து அது உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது, ஆனால் எந்தப் பதிலும் கிடைக்காததால், சிஆர்பிஎஃப் கான்வாய் பிப்ரவரி 14 அன்று பிற்பகல் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குப் பேருந்தில் புறப்பட்டு 3.15 மணிக்கு பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “புல்வாமா சம்பவத்தின் போது சத்யபால் மாலிக் துணிச்சலுடன் செயல்பட்டு இதையெல்லாம் வெளிப்படுத்தியிருந்தால், வி.பி.சிங் போல ஒரு சக்தியாக உருவாகியிருப்பார். ஆனால் இரண்டு தலைவர்களின் ஆணைகளை வாய் மூடி மௌனியாக ஏற்றுச் செயல்பட்டதன் விலையை நாடு இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.” என்றார்.

மேலும் அவர், "புல்வாமா தாக்குதலின் போது, இணைக்கும் சாலையில், ஜவான்கள் நிறுத்தப்படவில்லை என்று அவர் கூறுகிறார். அப்போது காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவருக்கு ஏன் இது தெரியவில்லை? தெரிந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்தார்? அதன் மீது என்ன விசாரணையை ஏற்பாடு செய்தார்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்.

‘பாகிஸ்தான் மீது குற்றச்சாடு மடை மாற்றம்’

“இந்தப் பழி அனைத்தும் பாகிஸ்தானை நோக்கிச் செல்ல வேண்டும், எனவே அமைதியாக இருங்கள்” என்றார்.

11 நாட்களுக்குப் பிறகு, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பின் 'பயிற்சி முகாம்கள்' மீது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, தொடர் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தியதாக இந்திய அரசு கூறியது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 2019 இல், நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், பாலகோட் தாக்குதலை ஒரு முக்கிய தேர்தல் பிரச்சார ஆயுதமாக மாற்றியது பாஜக. பாலகோட் தாக்குதல் குறித்த பிரச்சாரம் வலுவடைந்தது.

மே 2019 இல் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்தபோது, பாரதிய ஜனதா கட்சி, மீண்டும் வெற்றி பெற்று, 300 தொகுதிகள் என்ற இலக்கையும் தாண்டி, பெரும்பான்மையுடன் மத்தியில் தனது அரசாங்கத்தை அமைத்தது.

தனது பேட்டியின் போது சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதலை பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டது என்று பூடகமாகக் குறிப்பிட்டார்.

படகு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொலைநோக்கு பார்வை குறைவு

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கியது.

முந்தைய தினம் தான் இவ்வளவு பெரிய முடிவு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. "எனக்கு எதுவும் தெரியாது, ஒரு நாள் முன்னர், மாலை உள்துறை அமைச்சரிடமிருந்து ‘சத்யபால், நான் ஒரு கடிதம் அனுப்புகிறேன், அதற்கு உங்கள் கமிட்டியில் ஒப்புதல் பெற்றுக் காலை11 மணிக்கு முன் அனுப்பவும்’ என்று எனக்கு அழைப்பு வந்தது." என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மூத்த அரசியல் பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத் கூறுகையில், "சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுகள் ஒருதலைப்பட்சமானது, ஆனால் மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறை கவலை அளிக்கிறது. அவர்கள் தங்கள் மூத்த தலைவருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்.” என்றார்.

ஊழல் குறித்துப் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கோவா கவர்னராக இருந்தபோது, பிரதமரிடம் பலமுறை ஊழல் பிரச்னையை எழுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

பிரதமருக்கு நெருக்கமானவர்கள் ஜம்மு காஷ்மீரில் இடைத் தரகர் வேலையைத் தன்னிடம் கொண்டு வந்ததாகவும் அதில் தனக்கு ரூ.300 கோடி தருவதாகக் கூறியதாகவும் சத்யபால் மாலிக் கூறினார். இதற்கு உடன்பட மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சத்யபால் மாலிக், “பிரதமருக்கு ஊழல் குறித்த எந்த வெறுப்பும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.

மூத்த அரசியல் பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத், "இவை பாஜக மூத்த தலைவர் ஒருவரால் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். நிர்வாக அமைப்பின் அங்கமாக நான்கு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர் அவர். ஐரோப்பாவில் இப்படி ஒரு பேட்டி வந்திருந்தால், பிரதமர் ராஜிநாமா செய்திருப்பார்." என்று கூறினார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, "சத்யபால் மாலிக் இதை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை.” என்று குற்றம்சாட்டுகிறார்.

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

சர்ச்சை கருத்து தெரிவிப்பது புதிதல்ல

22 ஆகஸ்ட் 2022- அப்போது சத்யபால் மாலிக் மேகாலயா ஆளுநராக இருந்தார்.

பாக்பத், கேக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் தொழிலாளர் கூட்டத்தில், "டெல்லியின் எல்லையில் 700 விவசாயிகள் இறந்துள்ளனர், ஒரு நாய்க்குட்டி இறந்தால் கூட இரங்கல் செய்தி வெளியிடும் பிரதமர், 700 விவசாயிகளின் இறப்புக்கு ஒரு இரங்கல் செய்தி வெளியிடவில்லை.

அவருக்கு விவரம் புரியக் கால தாமதம் ஆனது. அதன் பிறகு மன்னிப்பு கோரி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். ஆனாலும் அவரது செயலில் ஒரு நேர்மை இல்லை” என்று உரையாற்றினார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனவரி 2022- "விவசாயிகள் விஷயத்தில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, ஐந்து நிமிடங்களில் வாக்குவாதம் தொடங்கிவிட்டது. எங்கள் தரப்பில் ஐநூறு பேர் இறந்துவிட்டார்கள் என்று நான் அவரிடம் சொன்னபோது அவர் மிகவும் ஆணவத்துடன் இருந்தார்.

"ஒரு நாய்க்குட்டி இறந்தால் கூட இரங்கல் செய்தி அனுப்புகிறீர்களே என்று நான் கேட்டபோது, எனக்காகவா இறந்தார்கள் என்றார். அவர்களால் தானே அரசு நடத்துகிறீர்கள் என்று நான் கேட்டேன். அவர் என்னை அமித்ஷாவைச் சந்திக்கச் சொன்னார். நான் அமித் ஷாவைச் சந்தித்தேன். மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருங்கள். ஒரு நாள் புரியும் என்றார்.” என்று அவர் பேசினார்.

ஆனால், இறுதியில் தனது கருத்தைத் திரும்பப் பெற்றார்.

கரண் தாபருடனான நேர்காணலில் கூட, "அமித் ஷா குறித்த விஷயம் நான் முற்றிலும் தவறாகக் கூறியுள்ளேன். அவர் அப்படி எதுவும் கூறவில்லை. எனது பேச்சை நான் திரும்பப் பெறுகிறேன். அது என் தவறு" என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

ஜனவரி 2019- "ஜம்மு-காஷ்மீரும் நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல் தான். இங்கு ஆணவக் கொலைகள் நடக்கவில்லை. இங்கு ஒரு வாரத்தில் எத்தனை மரணங்கள் நடக்கின்றனவோ, அத்தனை கொலைகள் பாட்னாவில் ஒரு நாளில் நடக்கின்றன. இப்போது காஷ்மீரில் கல் வீச்சு மற்றும் பயங்கரவாத அமைப்புகளில் சேர்வதை இளைஞர்கள் நிறுத்திவிட்டார்கள்."

"இங்குள்ள சிறுவர்கள் ஆயுதங்களுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள், மாநிலக் காவல்துறையினரைக் கொல்கிறார்கள். ஏன் அவர்களைத் தாக்குகிறீர்கள். கொல்ல வேண்டும் என்றால் உங்கள் நாட்டையும் காஷ்மீரையும் சூறையாடியவர்களைக் கொல்லுங்கள். அப்படிப்பட்டவரைக் கொன்றதுண்டா?"

ஜூன் 2022-ல் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக

"அக்னிபத் திட்டம் நமது ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் தான் அமையும். அது அவர்களின் வாழ்க்கையை முடித்துவிடும். நான்கு ஆண்டுகளில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிப்பார்கள். ஆறு மாதங்கள் விடுமுறையில் இருப்பார்கள். மூணு ஆண்டுகள் மட்டும் வேலை செய்துவிட்டு அதன் பிறகு எங்கு செல்வார்கள்? திருமணமும் ஆகியிருக்காது. அவர்களுக்கு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் உணர்வு எப்படி வரும். இது மிகவும் தவறான திட்டம், இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மார்ச், 2020- மது அருந்துகிறார் ஆளுநர்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் நகருக்கு வருகை தந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஆளுநருக்கு வேலை இல்லை, காஷ்மீரில் உள்ள ஆளுநர் மது அருந்திவிட்டு கோல்ப் விளையாடுகிறார்,” என்றார்.

தாக்குதலுக்கு என்ன காரணம்?

சத்யபால் மாலிக்கின் அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்கள், அவர் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றும், மனதில் பட்டதைச் சொல்லக்கூடியவர் என்றும் கூறுகிறார்கள்.

மூத்த பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத், "அவர் கேமரா முன்னிலையில் கருத்து கூறுவது இது முதல் முறையன்று. கோவா ஆளுநராகப் பதவியில் இருந்தபோதே, ஊழல் பிரச்னையை எழுப்பினார்" என்கிறார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, "இன்று தகவலறியும் உரிமையுள்ள காலம். சத்யபால் மாலிக் பதவியில் இருந்தபோது, அவர் இந்த விஷயங்களை எங்காவது பதிவு செய்திருக்கலாம். வரும் காலங்களில் அவரிடம் விசாரணை செய்திருக்கலாம், ஆனால் அப்படி ஒரு முறை கூடச் செய்யவில்லை. 300 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது, அந்த நபர்களை அவர் அங்கேயே கைது செய்திருக்கலாம்." என்று கூறுகிறார்.

“ஊழலுக்கு எதிராக அவர் போராட வேண்டும் என்று அவர் விரும்பியதாகத் தான் நான் கருதுகிறேன். ஆனால் யாரும் அவரது பேச்சைப் பொருட்படுத்தவில்லை. ராஜ் பவனில் ஏற்பட்ட தலையீட்டால் அவருக்கு அந்தப் பதவியின் மீதே ஆசை போய்விட்டது.” என்று மேலும் அவர் தெரிவிக்கிறார்.

சத்யபால் மாலிக்கின் செல்வாக்கு

சத்யபால் மாலிக், ஜாட் சமூகத்தினரும் ஏராளமான விவசாயிகளும் தனக்குப் பின்னால் நிற்கிறார்கள் என்றும், பாஜக தனக்கு இடையூறு செய்தால், கட்சி அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.

அது உண்மையா? மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக், களத்தில் எந்த அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கிறார்?

இது குறித்து, மூத்த பத்திரிகையாளர் பிரிஜேஷ் சுக்லா கூறுகையில், "விவசாயிகள் போராட்டத்தின் போது, மேற்கு உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் மறுசீரமைப்பு நடக்கும் என்று அவர் கூறியிருந்தார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, சமாஜ்வாதி கட்சிக்கும் விவசாயிகளின் கட்சி என்று அறியப்பட்ட ராஷ்ட்ரிய லோக்தள் கட்சிக்கும் இடையே வலுவான கூட்டணி இருந்தது” என்கிறார்.

மேலும் அவர், "சத்யபால் மாலிக் தன்னை ஒரு ஜாட் மற்றும் விவசாயிகள் தலைவர் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்." என்று கூறுகிறார்.

சத்யபால் மாலிக் ஆர்எல்டியின் உதவியின்றி பாக்பத்தில் போட்டியிட்டால் அவருக்குச் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “அவரது உரையை மக்கள் நிச்சயம் கேட்பார்கள், ஆனால், அவையனைத்தும் வாக்குகளாக மாறுவது கடினம்” என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/ce5z0xnl4nzo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"புல்வாமா விவகாரத்தை பாகிஸ்தான் திசையில் கொண்டு செல்வது எனக்கு தெரிந்தது"- சத்யபால் மாலிக் சிறப்பு நேர்காணல்

சத்யபால் மாலிக் - பிரதமர் மோதி

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சர்வப்ரியா சாங்வான்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 5 மே 2023, 09:17 GMT
    புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

“அசாதுதீன் ஒவைசிக்கு விஷயம் தெரியாது. அந்த நேரத்திலும் நான் புல்வாமா விவகாரம் பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். நம்முடைய தவறே இதற்குக் காரணம் என்று சொன்னேன்.

இதுகுறித்து விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். விசாரணை நடத்தப்படும் என்று நினைத்தேன். எனவே அந்த நேரத்தில் நான் ராஜினாமா செய்ய எந்த முகாந்திரமும் இல்லை,” என்று கூறுகிறார் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்.

புல்வாமா சம்பவத்திற்கு உள்துறை அமைச்சகம்தான் பொறுப்பு என்று பிபிசிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறினார்.

எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துக் கூறியதாகவும் மாலிக் தெரிவித்தார். எனவே உள்துறை அமைச்சர் ஏதாவது செய்திருக்க வேண்டும். இதற்கு யார் பொறுப்போ அவர்கள்தான் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறினார்.

சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், 2019 புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்பது உட்பட பல பரபரப்பான கூற்றுகளை சத்யபால் மாலிக் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு பல எதிர்வினைகள் இருந்தன. அவர் மீதும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன.

அவர் அந்த நேரத்திலேயே ஆளுநர் பதவியைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். தொடர்ந்து ஆளுநர் பதவியில் இருந்துவிட்டு, நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேசுகிறார் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.

இதே கருத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். “எங்களிடமிருந்து பிரிந்த பிறகு மட்டும் ஏன் இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன என்று செய்தியாளர்கள் கேட்க வேண்டும்,” என்று அமித் ஷா கூறினார்.

அப்படியென்றால் உறவு முறிந்த பிறகு இப்படியெல்லாம் செய்யும் சத்யபால் மாலிக் சந்தர்ப்பவாதியா?

"புல்வாமாவில் தாக்குதல் நடந்த அன்றே, இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன். ஆனால் அமைதியாக இருக்குமாறு என்னிடம் கூறப்பட்டது. அப்போதுதான் அவர்கள் பாகிஸ்தானை நோக்கிய திசையில் கொண்டு செல்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்தது.

அந்த நேரத்தில் அவர்களை எதிர்ப்பது ஆபத்தான வேலை. ஏனென்றால் அவர்கள் என்னை தேசத்துரோகி என்று அறிவித்திருப்பார்கள். விவசாயி இயக்கத்தின்போது இவர்கள் விவசாயிகளைப் புறக்கணிப்பதைப் பார்த்தபோதுகூட நான்தான் பிரச்னையை எழுப்பினேன்,” என்று பிபிசியிடம் பேசிய சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.

சத்யபால் மாலிக் - பிரதமர் மோதி

புதிய மற்றும் பழைய அறிக்கைக்கு இடையே முரண்பாடு?

பிரதமர் நரேந்திர மோதிக்கு ஊழலால் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்று கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் சத்யபால் மாலிக் மற்றொரு கூற்றைத் தெரிவித்திருந்தார்.

ஆனால் மேகாலயா ஆளுநராக இருந்தபோது சத்யபால் மாலிக், ராஜஸ்தானில் அவர் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் தான் காஷ்மீரில் பதவி வகித்த காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் தன்னிடம் இரண்டு கோப்புகள் வந்ததாகவும், ஆர்.எஸ்.எஸ்-இன் பெரிய நபர் ஒரு திட்டத்திலும், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றொரு திட்டத்திலும் தொடர்புடையவர்களாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களில் முறைகேடு நடப்பதாக இந்தத் துறைகளின் செயலர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சத்யபால் மாலிக் இந்தத் திட்டங்களை ரத்து செய்தார்.

ஆனால், இதுபற்றி பிரதமரிடம் தெரிவித்தபோது, 'ஊழலில் எந்த சமரசமும் செய்யத் தேவையில்லை' என பிரதமர் கூறியதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

அப்படியானால் அவரின் தற்போதைய அறிக்கைக்கும் பழைய அறிக்கைக்கும் இடையே முரண்பாடு இல்லையா?

இதற்குப் பதிலளித்த சத்யபால் மாலிக், "ஆம். ஊழல் குறித்து அவருக்கு பிரச்னை எதுவும் இல்லை. உண்மையில் ஊழல் புகாருக்குப் பிறகுதான் அவர் என்னை கோவாவில் இருந்து நீக்கினார்.

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் என்னை இடமாற்றம் செய்தார். காஷ்மீரில் திட்டங்களை ரத்து செய்த பிறகுதான் நான் அவரை சந்திக்கச் சென்றேன். நான் ரத்து செய்துவிட்டேன், நீங்கள் விரும்பினால் என்னை நீக்குங்கள் என்று சொன்னேன். ஆனால் ஊழலில் எந்த சமரசமும் இல்லை என்று அவர் சொன்னார்,” என்று குறிப்பிட்டார்.

சத்யபால் மாலிக் - பிரதமர் மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார்

ஊழலுக்கு எதிராக நாட்டில் வேறு ஒரு முகம் அவருக்குத் தெரிகிறதா?

ஒருவரல்ல, பலர் எஞ்சியிருக்கிறார்கள், நிதீஷ் குமார் போல என்று மாலிக் பதில் அளித்தார்.

ஆனால் பிகாரில் நீண்ட காலமாக நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். பிகார் ஆளுநராக இருந்தபோது சத்யபால் மாலிக், பிகார் கல்வி முறை சீர்கெட்டுள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு எப்படி நிதிஷ்குமாருக்கு க்ளீன் இமேஜ் இருக்கிறது என்று அவரால் சொல்ல முடியும்?

அவர் சிரித்துக்கொண்டே, 'இருந்தபோதிலும் ஒப்பீட்டளவில் மற்றவர்களைவிட அவர் மேம்பட்டவர்' என்றார்.

அரவிந்த் கேஜ்ரிவாலும், மாலிக் எழுப்பிய கேள்விகளை தனது பிரச்னையாக ஆக்கிக்கொள்கிறாரா?

இதற்கு பதிலளித்த அவர் “அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒப்பீட்டளவில் சிறந்தவர்” என்று கூறினார்.

ஆனால் கேஜ்ரிவாலின் அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?

"தேர்தலுக்கு முன் அவர் கைது செய்யப்படுவார் என்று நான் நூறு சதவிகிதம் நினைக்கிறேன்," என்று மாலிக் பதிலளித்தார்.

அப்படியானால் அரவிந்த் கேஜ்ரிவால் நரேந்திர மோதியின் போட்டி முகமாக இருக்க முடியுமா?

"மோதிக்கு போட்டி முகமாக நான் யாரையும் சொல்லவில்லை. பொது மக்கள்தான் மோதிக்கு எதிரான முகமாக இருக்க வேண்டும். பொது மக்களுக்கும் மோதிக்கும் இடையே தேர்தல் நடக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.

சத்யபால் மாலிக் - பிரதமர் மோதி

பட மூலாதாரம்,@RAHULGANDHI

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா?

சத்யபால் மாலிக்கின் அரசியல் இன்னிங்ஸும் நீண்டது.

1974இல், அவர் சௌத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளம் கட்சியின் சீட்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1980-இல் மாநிலங்களவை எம்பி ஆனார். ஆனால் 1984-இல் காங்கிரசில் சேர்ந்து 1986-இல் மீண்டும் மாநிலங்களவை எம்பி ஆனார்.

போஃபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது எம்பி பதவிக்காலம் முடிவதற்கு முன்பே காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

பின்னர் 1989இல் ஜனதா தளம் டிக்கெட்டில் மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், 2004இல் பாஜகவில் இணைந்தார்.

2012இல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2017இல் பிகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, ஜம்மு-காஷ்மீர், கோவாவின் ஆளுநராகப் பொறுப்பேற்ற அவர், மேகாலயாவின் ஆளுநராக இருந்து 2022 அக்டோபரில் ஓய்வு பெற்றார்.

சத்யபால் மல்லிக் புதிய அரசியல் இன்னிங்ஸ் தொடங்குகிறாரா?

இதற்குப் பதிலளித்த அவர், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

அவர் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க விரும்புகிறார், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸை ஒன்றிணைக்க முயல்கிறார். எனவே அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பாத்திரத்தை வகிக்கிறாரா?

"என் அனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளேன். நான் வி.பி.சிங் அவர்களுடன் இருந்தபோது அந்த நாட்களில் ஒற்றுமை சாத்தியமாக இருக்கவில்லை.

எனவே அவர் "ஒருவருக்கு எதிராக ஒருவர்" என்ற சூத்திரத்தை வழங்கினார் அதாவது ஒரு வேட்பாளருக்கு எதிராக ஒரு வேட்பாளர். யார் தலைவராக ஆவார், யார் இல்லை என்ற நுணுக்கங்கள் எல்லாம் இதில் அடங்காது. ஏறக்குறைய எல்லா கட்சிகளும் இதை ஒப்புக் கொள்கின்றன,” என்று அவர் பதில் கூறினார்.

சத்யபால் மாலிக் - பிரதமர் மோதி

பட மூலாதாரம்,@SATYAPALMALIK6

பாஜகவில் சேர்ந்தது ஏன்?

"நான் பாஜகவுக்கு மிகவும் தாமதமாகவே வந்தேன். நான் லோஹியாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவனாக இருந்தேன். இது என் கட்சி அல்ல என்று நான் நினைத்தேன். ஆனால் ஒட்டுமொத்த அமைப்பும் முடிவுக்கு வந்தது.

எல்லா கட்சிகளும் உடைந்து, லோக்தளம் நான்கு துண்டுகளாக உடைந்தது. வேறு வழியின்றி நான் பாஜகவில் சேர்ந்தேன். என்னுடைய பேச்சு பாஜகவினர் பேசுவதைப் போல இருக்காது. சரண் சிங், லோஹியாவின் தொண்டர் போலவே எனது பேச்சு இருக்கும்,” என்றார் அவர்.

நரேந்திர மோதியின் பிரபலத்திற்கு என்ன காரணம் என்று சத்யபால் மாலிக் நினைக்கிறார்?

"அந்த பிரபலம் நிர்வகிக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது. அவரது புகழ் இந்து-முஸ்லிம் தொடர்பானது. நான் பார்த்த வரையில் 2024இல் இவையெல்லாம் வேலை செய்யாது. மக்கள் அவரது விளையாட்டைப் புரிந்து கொண்டுவிட்டனர்.

வேலையின்மை, பணவீக்கம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 8 முதல் 10 பொதுக்கூட்டங்களை நான் நடத்துகிறேன். இப்போது மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்," என்று அவர் பதில் அளித்தார்.

'சிறைக்குச் செல்ல வேண்டும் என்றால் செல்வேன்'

76 வயதான சத்யபால் மாலிக் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருடைய பாதுகாப்புக்காக ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு சிபிஐயும் விசாரணைக்காக அவரது வீட்டிற்குச் சென்றது.

தன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்று சத்யபால் மாலிக் அஞ்சவில்லையா?

“நான் இதற்கு முன்பு பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். நான் சரியான பக்கத்தில் இருக்கிறேன், சரியான கேள்வியில் நிற்கிறேன் என்ற எனது உறுதிப்பாட்டிலிருந்து எனது தன்னம்பிக்கை வருகிறது. இதற்காக நான் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், நான் போவேன்,” என்று அவர் பதில் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c841e5ze5l0o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.