Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புலிகள்” என்று மனுஷ பாராளுமன்றில் விழித்ததால் சபையில் ஏற்பட்ட குழப்பம் - வழிமுறைகளை அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என சுமந்திரன் காட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: T. SARANYA

25 APR, 2023 | 02:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும் தரப்பு அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை நோக்கி குறிப்பிட்டார்.

அமைச்சர் ஆற்றிய உரையில் 'புலிகள்' என குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அந்த சொல்லை ஹென்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை  மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளில் பாலம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இனவாதி, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலனாக தன்னை நினைத்துக் கொண்டு ஒருதலை பட்சமாக செயற்படுகிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு தேவைகள் நெருக்கடி நிலையில் காணப்படுகிறது.

தெற்கு மாகாணத்தில் தேவையற்ற வீதி அபிவிருத்திகளும்,பாலம் நிர்மாணிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்ற.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை.

ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி குறிப்பிட்டார்.

சாணக்கியன் இராசமாணிக்கம் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னர் அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

இதற்கு சாணக்கியன் இராசமாணிக்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உங்களின் கேள்வி ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவில்லை.

இருப்பினும் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீங்கள் சத்தமாக உரையாற்றுவதற்கு நான் அச்சமடைய போவதில்லை என்றார்.

இதனை தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு கேள்விக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது சாணக்கியன் ராசமாணிக்கம் தொடர்ந்து உரையாட முற்பட்டு கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் போது உரிமை மறுக்கப்படுகிறது  என்றார்.

இதன்போது உரையாற்றிய மனுஷ நாணக்கார புலிகளின் உண்மை முகம் வெளிப்படுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இவர்கள் தான் தடையாக உள்ளார்கள் என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாவட்டங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த அமைச்சர் அரசியலில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சபையில் உரையாற்றும் வழிமுறையை அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சரவை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய  சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் ஆற்றிய உரையில் புலிகள் என்ற சொற்பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/153715

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.