Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை

10-11.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அரசியல்வாதிகள் அரசியல் மேடையாக்க வேண்டாம் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சகாதேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் செய்யும் இடம்

முள்ளிவாய்க்கால் என்பது அரசியல் செய்யும் இடமாக மாறி உள்ளது.

2009 ஆம் ஆண்டு கால பகுதியில் இவர்கள் எங்கிருந்தார்கள் என்றால் உண்மையிலேயே மிகவும் ஒரு ஆச்சரியமான விடயம்.

இவர்கள் இவ்வளவு பேரும் இருந்தார்களா என்று கூட கேட்க தோன்றும் உண்மையில் அவர்கள் அனைவரும் தலைமறைவாக இருந்தார்கள்.

2009 ஆம் ஆண்டு இந்த முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்ற போது இப்போது இருக்கின்ற தலைவர்கள் எவரும் இந்த யுத்தத்தை நிறுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் இப்பொழுது இந்த வாகன ஊர்திகளை கொண்டு திரிகிறார்கள்.

ஒருவேளை கஞ்சி

மக்கள் தங்கள் வீடுகளில் இதனை அனுஸ்டிக்க வேண்டும். இந்த முள்ளிவாய்க்காலில் சிரட்டை வியாபார பொருளாகி இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, தமிழர் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும், உணர்வுள்ள தமிழர் கூடும் இடங்கள், வீடுகள் ஒவ்வொன்றிலும் நிகழவேண்டிய நிகழ்வாகும்.

இது சாதி, சமய, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாக அனுஷ்டிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நிறைய பாடங்களை நமக்கு கற்றுத் தந்துள்ளது.

சிங்கள மக்கள் பாற்சோறு கொண்டாடுவதை விடுத்து இந்த துயர நிகழ்வில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும். புத்தரின் போதனையில் மிக முக்கிய அத்தியாயமாக உள்ள கர்மா பற்றி ஒவ்வொரு பௌத்த மதத்தவரும் சிந்திக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் மே 17 அன்று உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவரும் உணவை தவிர்ப்போம். மே 18 அன்று உணர்வுள்ள தமிழர் வீடுகள் ஒவ்வொன்றிலும் அறுசுவை உணவை தவிர்ப்போம்.

அன்றைய தினம் மதியத்திற்குப் பிறகு ஒருவேளைக் கஞ்சியோடு அந்த நாளை நிறைவு செய்வோம்.

அன்று மாலை விளக்கேற்றி உணர்வோடு ஒன்றி நிற்போம். சகல உணவகங்களிலும் உணர்வோடு ஒரு சாதாரண கஞ்சியை இலவசமாக வழங்குவோம்.

அரசியல்வாதிகளின் ஒன்று கூடல்

முள்ளிவாய்க்காலில் அரசியல்வாதிகளின் ஒன்று கூடலை முற்றாக நிராகரிப்போம். முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடும் எந்த ஒரு அரசியல்வாதியும், முள்ளிவாய்க்காலில் மக்களின் உணர்வுக்கு தலைமை தாங்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக மக்களுக்கு சத்தியம் செய்து தர வேண்டும்.

அவர்கள் மட்டுமே அந்த மண்ணில் தலைமை தாங்க பொருத்தமானவர்கள். முள்ளிவாய்க்கால் எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் என்ன? நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன? அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.

இன மோதலுக்கும். சாதி, சமய, மத வேறுபாட்டிற்கும், வர்க்க, பிரதேச வேறுபாட்டிற்கும் முடிவு கட்டுவோம். உணர்வுகளை அரசியலாக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என தெரிவித்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=245682

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறக்குமா மே18 - தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடத்திய இனவெறித் தாக்குதலின் இறுதிநாள்!

Vhg மே 18, 2023
Photo_1684369289743.jpg

2009 மே 18 "தமிழர் தாயகம்" எனும் மூச்சுக் காற்று முற்றாய் முடங்கிப் போன நாள்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நுழையும் போதெல்லாம் எமது உறவுகளின் கதறல்கள் இன்று வரை கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

14 ஆண்டுகள் கடந்தபோதும் எம் இனத்தின் வலிகள் துளி அளவும் குறையவில்லை.

தமிழினத்தின் மீது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனவெறித் தாக்குதலின் இறுதிநாள் அது.

 

எமது போராட்டங்கள்

பல போராட்டங்களை கடந்து விட்டோம், பல ஆட்சியாளர்களை பார்த்து விட்டோம், ஆனாலும் இன்னும் தீரவில்லை எமது இன்னல்கள்.

நாட்டிலும் போராடிப்பார்த்து விட்டோம், நாடு கடந்த, கடல் கடந்த தேசங்களிலும் போராடிப்பார்த்து விட்டோம்.

அன்று தமிழன் திட்டமிட்டு அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தாராளமாய் இருந்தும் சர்வதேசமும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை.

தமிழினம் தமது தாயக மண்ணில் சுதந்திரமாய் வாழவே அன்று தொடங்கி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் தமிழனை சொந்த மண்ணிலே அடிமைகளாய் வைத்திருக்கவே எத்தணிக்கிறது சிங்களப் பேரினவாதம்.

இலங்கையில் ஆட்சிகள் பல மாறினாலும் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அப்படியேதான் இருக்கிறது.

ஈழ தேசத்தில் எத்தனையோ ஆயிரம் உயிர்களை பலி எடுத்தும் பேரினவாதத்தின் வெறி இன்னும் அடங்கவில்லை.

அதற்காகவே எமது தாயகத்தில் நடக்கிறது நில அபகரிப்புக்களும், ஆக்கிரமிப்புக்களும்.

எமது நிலங்கள் பறிக்கப்பட்டு ஆங்காங்கே பெளத்த விகாரைகள் முளைக்கின்றன.

எம் வரலாற்றை சிதைத்து, இது சிங்கள, பௌத்த தேசம் எனக் காட்டுவதற்கு போராடுகிறது தென்னிலங்கை அரசு.

மே 18 இறுதி யுத்தத்தில் தமிழினத்தை வென்று விட்டதாய் சிங்கள அரசு மார்தட்டிக் கொண்டாலும், அன்று முற்றுப்பெற்றது ஆயுதப்போராட்டம் மட்டுமே, எங்களின் அகிம்சைப் போராட்டங்கள் இன்றுவரை தொடர்கிறது.

எமது தேசத்தில் சுதந்திரமாய் வாழவும், எம் இனத்தின் இருப்பையும், வரலாற்றுத் தொன்மையையும் பாதுகாக்க இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறோம்.

எமது தாயகத்தில் சுதந்திரமாய் வாழும்வரை தமிழினத்தின் போராட்டங்கள் முற்றுப்பெறப் போவதில்லை என்பதை சிறிலங்கா பேரினவாத அரசு எப்போது புரிந்து கொள்ளப்போகிறது.

எம் இனம் விடிவை நோக்கி நகர தென்னிலங்கை அரசியல் மட்டும் தடையல்ல, தமிழர்களாகிய நாமும் சில தவறுகளை செய்கிறோம்.

எமது இனம் இத்தனை இழப்புக்களை சந்தித்திருக்கிறது, ஆனாலும் இன்றைய தமிழ் சமுதாயம் அதை எல்லாம் மறந்து போகும் நிலமைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் / மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சுயநலவாதிகளாக, ஒற்றுமையற்றவர்களாக உருவாகிக்கொண்டிருக்கிறோம்.

இனத்தால் ஒன்றுபட்டு போராடி இறுதியில் முள்ளிவாய்க்காலில் நாதியற்றுக் கிடந்த தமிழினம் இன்று மதத்தை முன்னிறுத்தி போராடுகிறதோ என்ற ஐயம் உருவாகிறது.

மறுபுறம் தமிழ் அரசியல்வாதிகளும் தமது தமது அரசியல் சுயநலத்திற்காக பிளவுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது இலக்கு என்ன என்பது அவர்களுக்கே புரியாதபோது, சிங்களப் பேரினவாத அரசாங்கம் எப்படிப் புரிந்துகொள்ளும்.

இன்றைய இளையவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலர் இன்னும் உணர்வோடும், விடுதலைப் பற்றோடும் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பலர் திசைமாறிப் பயணிக்கும் அவலத்தை கண்முன்னே காண்கிறோம்.

போதைப் பாவனை, கலாசாரத்திற்கு புறம்பான விடயங்கள், உல்லாச வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் எனும் இலக்கு, அதைவிட தன்னம்பிக்கையற்ற மனநிலையோடு இலக்கின்றி வாழ்கிறார்கள்.

எமது வரலாற்று வலிகளை நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். எம் இனத்தின் வீழ்ச்சியை இந்த இளையவர்களே எழுச்சியாக்க வேண்டும், அதற்கான பணியை நாம் முன்னெடுக்க வேண்டும்.

எம் வரலாற்று தொன்மைகள், எம் வரலாறுகள் எம் இனத்தின் வலிமையை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அவற்றை எம் எதிர்கால சந்ததிக்கு கொண்டு சேர்ப்போம், நாம் வீழ்ந்த இனமல்ல என்பதை வலிகளோடு சேர்த்து வலிமையோடு கடத்துவோம்.

பல உயிர்களை இழந்து, யுத்த வடுக்களை சுமந்து, இன்றுவரை மீள முடியாத வலிகளுடன் இருக்கும் எம் உறவுகளும் தமது ஆதங்கங்கள் சிலவற்றை முன்வைக்கின்றனர்.

"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, தமிழர் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும், உணர்வுள்ள தமிழர் கூடும் இடங்களிலும், வீடுகள் ஒவ்வொன்றிலும் அனுஸ்டிக்கப்பட வேண்டும்.

மே 17 அன்று உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவரும் உணவை தவிர்ப்போம்.

மே 18 அன்று உணர்வுள்ள தமிழர் வீடுகள் ஒவ்வொன்றிலும் அறுசுவை உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அன்றைய தினம், மதியத்திற்குப் பிறகு ஒருவேளைக் கஞ்சியோடு அந்த நாளை நிறைவு செய்ய வேண்டும்.

அன்றையதினம் மாலை விளக்கேற்றி உணர்வோடு ஒன்றி நிற்க வேண்டும்.

சகல உணவகங்களிலும் உணர்வோடு ஒரு சாதாரண கஞ்சியை இலவசமாக வழங்கும் மனநிலை ஏற்பட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் ஏராளமான பாடங்களை எமக்கு அள்ளித் தந்துள்ளது.

இந்த உணர்வுபூர்வமான நிகழ்வு சாதி, சமய, மத, இன பேதங்களற்று அனுஸ்டிக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களும் பாற்சோறு காய்ச்சி கொண்டாடுவதை தவிர்த்து, இந்த துயர நிகழ்வில் தாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை மற்றும் சிந்தனை ஏற்படும் விதத்தில் இந்த நிகழ்வு மாற்றப்பட வேண்டும்.

புத்தரின் போதனையில் மிக முக்கிய அத்தியாயமாக உள்ள "கர்மா" பற்றி ஒவ்வொரு பௌத்தர்களும் சிந்திக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அரசியல்வாதிகளின் ஒன்று கூடலை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடும் எந்த ஒரு அரசியல்வாதியும், முள்ளிவாய்க்காலில் மக்களின் உணர்வுக்கு தலைமை தாங்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக மக்களுக்கு சத்தியம் செய்து தர வேண்டும்.

அப்பிடி இருப்பவர்கள் மட்டுமே அந்த புனித இடத்தில் தலைமை தாங்க பொருத்தமானவர்கள்."

இவை எல்லாம் நடக்குமாக இருந்தால், இறுதி யுத்தத்தில் தம் இன்னுயிரை இழந்த எங்கள் உறவுகளின் ஆத்மா ஓரளவேணும் நிம்மதி கொள்ளும்.

முள்ளிவாய்க்கால் எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் என்ன? நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன? அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.

இன மோதலுக்கும், சாதி, சமய வேறுபாட்டிற்கும், வர்க்க, பிரதேச வேறுபாட்டிற்கும் முடிவு கட்டுவோம்.

உணர்வுகளை அரசியலாக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.
 

 

https://www.battinatham.com/2023/05/18_18.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.