Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
116648866_2348213962140149_2316908195554386898_n
 
எந்தப்படகு வெள்ளோட்டம் விடவேண்டும் என்றாலும் முதலில் உச்சரிக்கும் பெயர் இவனுடையதுதான். மிராஜ் வகைப் படகுகள் கட்டுமானத்தில் அதன் வெள்ளோட்டத்தின்போது அதில் எத்தனை போராளிகளை ஒரேதடவையில் ஏற்றிவரமுடியும் என தலைவர் பரீட்சித்துப்பார்க்கும்படி கூறியிருந்தார்.முதலில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு ஓடிப்பார்த்து பின்னர் மேலும் முப்பது போராளிகளை ஏற்றிப்பார்த்து ஓடிய எழிற்கண்ணன் ஒரேதடவையில் ஒரு போராளி தனது உடமை மற்றும் தனது சிறியரக AK வகை ஆயுதம் உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை ஏற்றியெடுக்க முடியும் என பரிந்துரைத்தான்.
 
அதுபோன்று முதன்முதலில் ஸ்ரெல்த் எனப்படும் சிறிய வேகப்படகுக்கான வெள்ளோட்டத்தை செய்து இவன் கொடுத்த தரவுகளையே தலைவருக்கு அனுப்பி வைத்தோம். 
 
அதுதான் எழிற்கண்ணன்.
 
பின்னாளில் அவன் ஒரு படகு கட்டளை அதிகாரியாகவும், பொறியியலாளனாகவும்,அதன்பின் படகு கட்டுமானத்துறை பொறுப்பாளனாகவும் அதன் பின்னர் மன்னார் மாவட்ட கடற்புலிகள் தளபதியுமாகவும் உயர்ந்து விளங்கினான். 
 
அந்தவீரனை போர்க்களத்தில் கொல்லமுடியாத சாவு வாகன விபத்தில் கொன்றுபோட்டது.
 
வீரவணக்கம் மாவீரனே.
 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் மாலை

 

https://vayavan.com/?p=11828

 

குடாரப்பு தரையிறக்கத்தில் பல நூறு போராளிகளை சில மணி நேரத்தில் தரையிறக்கிய பணியில் பங்கு கொண்டு சிறப்பான பணிதனை ஆற்றியவர்களை கடந்து ஆனையிறவு வெற்றியை பற்றி கதைக்க முடியாது.

அந்த வகையில் அலைகடலை தாண்டி தரைவேங்கைகளை பக்குவமாய் தரையிறக்கிவிட்ட கடல்வேங்கை
கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் பிரதான பங்கினை வகித்தார்.

படையணிகளை வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துவிட்டு தொடர்ச்சியாக வந்த நடைகளில் ஆயுத உணவு விநியோயகம் செய்திட தன்னால் இயன்றளவு முயற்சிகளை எடுத்தவர்.

வெற்றிகரமாக தரையிறக்கம் நடைபெற்ற இரண்டாவது_நாள் எதிரி எமது நடவடிக்கையினால் அதியுச்ச விழிப்பு நிலையினை அடைந்துவிட்டதால் ஸ்ரீ லங்கா கடற்படையினர் முழுமையான தமது பலத்தையும் மாங்கனித்தீவின் வடகிழக்கு திசையில் திருப்பிவிட்டிருந்தார்கள்.

நூறு கடல்மைல்களை துல்லியமாக அவதானிக்க கூடிய அதி நவீன இஷ்ரேல் தயாரிப்பான் “மிதக்கும்_கோட்டை”கள் போன்ற கப்பல்கள் உட்பட பல சுப்ப டோரா படகுகள்( Super Dvora)வடமராட்சி கிழக்கின் கடல் முழுவதையும் ஆக்கிரமித்தன.

காங்கேயன்துறை,திருகோணமலை கடற்படை தளங்களில் இருந்து விரைந்து வந்த எதிரியின் சுப்படோறாக்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பயங்கரத்தையும் விஞ்சியே நின்றன.

அத்தனை கடல் வியூகங்களையும் உடைத்துக் கொண்டு லெப்.கேணல் எழில்கண்ணன் தலைமையிலான படகுத் தொகுதி சுண்டிக்குளம் கடலோரம் இருந்து தன் பயணத்தை தொடர்ந்தது.

தாளையடியை அண்டிய கடலோரம் வரை வெற்றிகரமாக பெருமளவு உடன் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் ராங்கி எதிர்ப்பு ஆயுதமான எஸ்.பி. ஜி 9(SPG – 9) உட்பட சில கனரக ஆயுதம் உட்பட நடைபேசி(வோக்கி)களுக்கான மின்கலம் உட்பட அந்த களத்துக்கான அத்தியாவசிய பொருள்களுடன் அந்த படகுத் தொகுதி வந்து கொண்டிருந்தது.

அபிவிருத்துயடைந்த நாடுகளின் உயர் கடற்படை பயிற்சி மற்றும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கடலில் நின்று கொண்டிருந்த எதிரியின் தாக்குதல் வியூகத்தினுள் ஈற்றில் அந்தப் படகு அகப்பட்டுக்கொண்டது.

#கடற்சூரியன் என புகழப்படும் இந்த வீரன் அந்த நிலையிலும் தன்னையும் படகுத்தொகுதியையும் சம நிலைப்படுத்தி தனது படகினை விடுதலைப் புலிகளினால் தரையிறக்கத்தின் மூலம் புதிதாக தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த செம்பியன்பற்று கடற்கரையினை நோக்கி செலுத்திவிட்டிருந்தார்.

படகு தரைதட்டிய சில விநாடிகளில் மயக்க நிலையினை அடைந்தார். தலையில் ஏற்பட்ட பலமான காயமே இந்த வீரனை கோமா(Coma stage) நிலைக்கு இட்டுச் சென்றது.

படகு தொகுதிக் கொமாண்டரான லெப்.கேணல் எழில்கண்ணன் விழுப்புண் அடைந்த நிலையில் செம்பியன்பற்றில் அன்றிருந்த களமுனை வைத்தியசாலையில் எங்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார்.

அங்கேயே பராமரிக்கப்பட்ட எழில்க்கண்ணன் தரைப்பாதை பிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கட்டைக்காட்டில் அமைக்கப்பட்டிருந்த Dr.தூயவன் அவர்களின் கடமையிலிருந்த
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உடல் தேறிய பின்னரும் பல களங்களை கண்ட இந்த எங்கள் தங்கக் கடற்சூரியன் 07.08.2006 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில்
வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்”.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.