Jump to content

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2023 | 10:34 AM
image
 

(எம்.நியூட்டன்)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நெடுந்தீவு அருகே திங்கட்கிழமை  இரவு இந்திய மீனவர்களின் படகு இருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/158124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள்

இந்திய கடற்றொழிலாளர்கள் 9 பேர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த படகு, இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

https://thinakkural.lk/article/259106

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது

Published By: DIGITAL DESK 3

22 JUN, 2023 | 09:55 AM
image
 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (21) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/158287

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

21 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 5 வருட சிறைத்தண்டனை

Published By: DIGITAL DESK 3

05 JUL, 2023 | 05:14 PM
image
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 இந்திய கடற்தொழிலாளர்களில் 21 பேருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

மற்றைய கடற்தொழிலாளி 16 வயதிற்கு உட்பட்ட சிறுவனாக காணப்பட்டமையால், சிறுவனின் எதிர்காலத்தை மன்று கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைக்காது 10 ஆயிரம் ரூபாய் நன்னடத்தை பிணையில் விடுத்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இந்திய கடற்தொழிலாளர்கள்  22 பேரும் கைது செய்யப்பட்டனர்.   

கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர்களை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார். 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, 22 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். 

அதன் போது 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்த நீதவான், மற்றையவருக்கு நன்னடத்தை பிணையில் விடுவித்தார். 

மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளில் இரு படகுகளை அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மற்றைய இரு படகுகளுக்கான உரிமையாளர் இல்லாமையால், படகு உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

https://www.virakesari.lk/article/159288

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களையும் கைது செய்யப்பட்டதுடன், 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையின் பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், நீதிபதி குழு ஜூலை 5 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

காவல் முடிந்ததும், மீனவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், பின்னர் நீதிபதி உரிய நடவடிக்கைக்குப் பின்னர் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/261910

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 தமிழக மீனவர்கள் கைது !

09 JUL, 2023 | 09:39 AM
image
 

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

01.jpg

https://www.virakesari.lk/article/159548

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”: இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

10 JUL, 2023 | 01:21 PM
image
 

15 தமிழக மீனவர்களை விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள்  கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு

அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள் இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதைவெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் நன்கு அறிவார் என்றும் தங்களது குடும்பத்தையும் சமூகத்தையும் பராமரிக்க மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் துரதிர்ஷ்டவசமாக இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும் நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும்  அரசு இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தற்போது இந்தியாவுக்கும்இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில் தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும் சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாண்புமிகு  வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159660

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

9 இந்திய மீனவர்கள் கைது !

25 JUL, 2023 | 09:20 AM
image
 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் திங்கட்கிழமை (24) இரவு தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்துச்சென்ற கடற்படையினர் விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/160840

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

Published By: DIGITAL DESK 3

08 AUG, 2023 | 09:32 AM
image
 

நாயாறு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய டோலர் மீன்பிடி படகில் இருந்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு கடல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் திருகோணமலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நாயாற்று கடல்பகுதியில் டோலர் மீன்பிடி படகு ஒன்று நிற்பதனை அவதானித்துள்ளனர். 

பின்னர் குறித்த நபர்களிடம் விசாரணை செய்தபோது இந்தியாவில் இருந்து மீன்பிடிக்கு வந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/161844

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 9 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் 09 பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 09 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவைமடி பயன்பாடு, கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இலங்கை கடலில் தொழிலில் ஈடுபட்டமை, அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளில் இரு படகுகளுக்கான உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 09 பேரும் கைது செய்யப்பட்டனர்.

https://thinakkural.lk/article/267458

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 3

14 SEP, 2023 | 11:38 AM
image
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (14) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/164543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக சுமார் 800 மீன்பிடி படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும் என 17 மீனவர்களை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, இலங்கை கடற்படையினர் இந்த ஆண்டில் இதுவரையில் 17 இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 110 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/273451

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.