Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பிற்காகவா 30 திகதி விசேட விடுமுறை – வர்த்தக சமூகத்தினர் மத்தியில் குழப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

24 JUN, 2023 | 08:51 AM
image
 

அரசாங்கம் 30 ம் திகதி விசேட வங்கி விடுமுறையை அறிவித்துள்ளதை தொடர்ந்து 28 ம் திகதி உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிடவுள்ளதா என்ற சந்தேகம் வர்த்தக சமூகத்தினரிடையே எழுந்துள்ளது.

விசேட வங்கி விடுமுறை காரணமாக நாட்டின் நிதிசந்தைகள் ஐந்து நாட்களிற்கு தொடர்ச்சியாக மூடப்படும் .

ஜூன் 29 ம் திகதி மூன்றாம் திகதி முதல் வங்கிகள் மூடப்படவுள்ளதால் அரசாங்கம் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளது என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு என்பது எதிர்மறையான விடயமாக கருதப்படுகின்றது இதன் காரணமாக அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் ஆய்வாளர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடவுள்ளனர்.

எனினும் இந்த ஊகங்களை மறுத்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செகான்சேமசிங்க நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் உள்நாட்டு பொறிமுறை குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/158454

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு - அடுத்த வாரம் முக்கிய தீர்மானங்கள் - வங்கிகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என கருத்து

Published By: RAJEEBAN

25 JUN, 2023 | 10:18 AM
image
 

அரசாங்கம் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பை தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. 

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்ற முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் வாரம் அரசாங்கம் எடுக்கவுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கு முன்னர் இலங்கை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் என திறைசேரியின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நிலைமையின் பாரதூரதன்மை காரணமாக நிதியமைச்சு உள்நாட்டுமறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்புநடவடிக்கைகக்கு அங்கீகாரத்தை பெறுவதற்காக வாரஇறுதியில் நாடாளுமன்றத்தினைகூட்டுவது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சிதலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்நாட்டு வங்கிகள் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்காது  நாட்டின் நிதிநிலைமைக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தாது என திறைசேரி அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது முழுமையாக சுயவிருப்பத்தின் பேரில் இடம்பெறும் நடவடிக்கை நாங்கள் அழுத்தங்களை  கொடுக்க முடியாது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 30 ம் திகதி விசேட வங்கி விடுமுறையை அறிவித்துள்ளதை தொடர்ந்து 28 ம் திகதி உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிடவுள்ளதா என்ற சந்தேகம் வர்த்தக சமூகத்தினரிடையே எழுந்துள்ளது.

 

விசேட வங்கி விடுமுறை காரணமாக நாட்டின் நிதிசந்தைகள் ஐந்து நாட்களிற்கு தொடர்ச்சியாக மூடப்படும் .

ஜூன் 29 ம் திகதி மூன்றாம் திகதி முதல் வங்கிகள் மூடப்படவுள்ளதால் அரசாங்கம் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளது என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு என்பது எதிர்மறையான விடயமாக கருதப்படுகின்றது இதன் காரணமாக அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் ஆய்வாளர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடவுள்ளனர்.

எனினும் இந்த ஊகங்களை மறுத்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செகான்சேமசிங்க நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் உள்நாட்டு பொறிமுறை குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/158521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 30 வங்கி விடுமுறை எதற்கு ? : மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

25 JUN, 2023 | 09:15 PM
image
 

தேசிய கடன் மறுசீரமைப்பு பணிகளை எதிர்வரும் வாரத்துக்குள் நிறைவுபடுத்தவே ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கிக் கட்டமைப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாதெனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/158576

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும் - சம்பிக்க ரணவக்க

Published By: VISHNU

25 JUN, 2023 | 08:02 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும். மறுசீரமைப்புக்களின் பின்னர் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெறும் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளில்  சனிக்கிழமை (24) மாலை மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கம் தோல்வியா அல்லது சித்தியா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் அதற்கு தேர்தலை நடத்த வேண்டும்.தற்போதைய முன்னேற்றம் தற்காலிகமானதே சர்வதேச கடன்களை மாத்திரம் மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.

ஆனால் தற்போது தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தின் ஊடாக அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த வாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் போது திறைசேரி உண்டியல்களை பெற்றவர்கள்,திறைசேரி பிணைமுறியங்களை கொள்வனவு செய்தவர்கள் பாதிக்கப்படுவதுடன், வங்கி கட்டமைப்பு,ஊழியர் சேமலாப நிதியம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன நிதி நிலைமையில் பாதிக்கப்படும்.

ஆகவே தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் போது சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான செயற்திட்டங்களை ஐக்கிய குடியரசு முன்னணி சார்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.இருப்பினும் அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு எமது யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ராஜபக்ஷர்களின் இரண்டு ஆண்டுகால நிர்வாகத்தில் 12 சதவீதமாக காணப்பட்ட ஏழ்மை நிலை 26 சதவீதமாக சடுதியாக அதிகரித்துள்ளது. 

மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சர்வதேச மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ள நிலையில் 22 இலட்ச குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அஸ்வெசும செயற்திட்டம் தொடர்பில் ஆளும் தரப்பினர் பல குறைப்பாடுகளை முன்வைத்துள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தனது அரசியல் தேவைக்காக சமுர்த்தி நிவாரண வழங்கலை பயன்படுத்திக் கொண்டார்.நடுத்தர மக்களை ஏழ்மை நிலைக்கு தள்ளி அதனூடாக தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் ராஜபக்ஷர்களின் அரசியலை மக்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/158560

வீரகேசரியின் இந்த 4 செய்திகளிலும் கடன் மறுசீரமைப்பு என்ற சொல் பல தடவை பாவிக்கப்பட்டுள்ளது. முதலாவது செய்தியில் ஏறத்தாள ஒவ்வொரு வரியிலும் இச் சொல் உள்ளது. சாதாரண வாசகருக்குப் புரியும் வகையில் செய்தியை எழுதினால் என்ன ?

கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன ? ஏற்கவனே பெறப்பட்ட கடனின் வட்டி வீதத்தை அதிகரிப்பதா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

வீரகேசரியின் இந்த 4 செய்திகளிலும் கடன் மறுசீரமைப்பு என்ற சொல் பல தடவை பாவிக்கப்பட்டுள்ளது. முதலாவது செய்தியில் ஏறத்தாள ஒவ்வொரு வரியிலும் இச் சொல் உள்ளது. சாதாரண வாசகருக்குப் புரியும் வகையில் செய்தியை எழுதினால் என்ன ?

கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன ? ஏற்கவனே பெறப்பட்ட கடனின் வட்டி வீதத்தை அதிகரிப்பதா ?

உள்நாட்டில் அரசு/அரசு சார்ந்த நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை மறுசீரமைக்கப் போகிறார்கள். இதனால் மக்களின் வைப்புப் பணத்திற்கு ஆபத்தில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் காப்புறுதி, இபிஎவ், இரிஎவ் போன்றவற்றில் கைவைக்கப் போகிறார்கள் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முறையான தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் - பிரதான எதிர்க்கட்சி தெரிவிப்பு

Published By: VISHNU

25 JUN, 2023 | 08:29 PM
image
 

(எம்.மனோசித்ரா)

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமாகும். 

எனவே முறையான தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு நாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் முறைமை தொடர்பான வேலைத்திட்டம் தம்வசம் காணப்படுவதாக தெரிவித்த அவர் , அதற்கமைய கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டால் குறுகிய காலத்துக்குள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை இதுவரையில் நாம் பார்க்கவில்லை. ஆனால் இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு எமது ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு நிச்சயம் தேவை. தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் திருப்தியடைந்தால் மாத்திரமே எம்மால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.

நாம் இது தொடர்பில் ஆழமாக மதிப்பாய்வு செய்து பல மாற்று திட்டங்களை முன்வைத்துள்ளோம். ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்காது தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது எவ்வாறு என்பதை நாம் அறிவோம். எனவே இவ்விடயம் தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகள் சாதாரண மக்களுக்கு எதிர்மறையானதாகக் காணப்பட்டால் , அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எமக்கு மக்கள் சார்பில் முன்னிற்க வேண்டியேற்படும். காரணம் எதிர்க்கட்சியின் பிரதான கடமை மக்களுக்காக முன்னிற்பதாகும். இதிலிருந்து தப்பிச் செல்ல நாம் எண்ணவில்லை.

ஊழியர் சேமலாப நிதியத்துக்காகவும் , நிலையான பண வைப்பாளர்களுக்காகவும் , சாதாரண மக்களுக்காகவும் நாம் போராடுவோம். உண்மையில் தேசிய கடன் மறுசீரமைப்பை முறையாக நடைமுறைப்படுத்தினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரை பாதுகாக்க முடியும். எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு இதனை சரியான பாதையில் எம்மால் கொண்டு செல்ல முடியும். அத்தோடு இதனை சரியான முறையில் முன்னெடுத்துச் சென்றால் குறுகிய காலத்துக்குள் நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/158568

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்பை அரசாங்கம் தன்னிச்சையாக செய்ய முற்படுவது அரச பயங்கரவாதமாகும் - உதய கம்மன்பில

Published By: VISHNU

26 JUN, 2023 | 05:14 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு செய்வதாக இருந்தால் பாராளுமன்றம் மற்றும் கடன் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியே மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு இல்லாமல் தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் அதனை அரச பயங்கரவாத செயலாகவே நாங்கள் காண்கிறோம் என பாராளுமன்ற உறுப்பிர் உதய கம்மன்பில தெரிவித்தார்,

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதில்லை என்றே அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளது.

ஏனெனில் கடன் மறுசீரமைப்பு தொட்ர்பில்  தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவே அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அதனால் இதற்கு மாற்று வழி எடுத்த கடனை நீக்கிக்கொள்வதல்ல.

அத்துடன் அரசாங்கம் அவ்வாறு தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதாக இருந்தால் வங்கிகளுடன் கடன் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி எடுத்த கடனை செலுத்தும் கால எல்லையை நீடித்துக்கொள்ள முடியும். அல்லமு. வட்டி வீதத்தை குறைத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறான மாற்றுவழிகளை பயன்படுத்தாமல் கடன் உரிமையாளர்களுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ளாமல் கடன் மறுசீரமைப்பு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்து பலாத்காரமாக வங்கி மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் மீது சுமத்த முயற்சிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.

மேலும் வங்கிகள் அரசாங்கத்திற்கு கடன் வழங்குவது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையிலாகும். அரசாங்கம் பணம் இல்லாவிட்டால் பணம் அச்சிட்டாவது கடனை செலுத்தும் என்ற நம்பிக்கை வங்கிகளுக்கு இருக்கின்றன.

நாட்டில் இருக்கும் 5 வங்கிகள் மொத்த வருமானத்தில் 25வீதம் அரசாங்கத்துக்கு கடனாக வழங்கி இருக்கிறது.

அவ்வாறான நிலையில் அரசாங்கம் வங்கிகளுடன் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக செயற்பட முடியுமா?. அவ்வாறு செயற்படுவதை அரச பயங்கரவாதமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

அதேநேரம் ஊழியர் சேமலாப நிதியத்தில் 80 வீதம் அரசாங்கத்துக்கு கடன் வழங்கி இருப்பதாக எமக்கு உத்தியோக பூர்வமற்ற வகையில் தகவல் கிடைத்திருக்கிறது.

எனவே அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதாக இருந்தால் பாராளுமன்றம், வங்கிகள் மற்றும் கடன் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி மாத்திரமே மாத்திரமே இதனை செய்ய முடியும்.

மாறாக அரசாங்கத்துக்கு நினைத்த பிரகாரம் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/158641

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு –மக்களின் தேவையற்ற அச்சத்தை போக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் - வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம்

Published By: RAJEEBAN

28 JUN, 2023 | 05:52 AM
image
 

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்த தகவல்களால் அச்சமடைந்துள்ள உள்நாட்டு வைப்பாளர்களின் நம்பிக்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என அகில இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ  எந்த பாதிப்பும் ஏற்படாது என அகில இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்கள் அச்சமடையத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு கடன் என்பது வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் வழங்கிய கடன் இவைகள் பிணைமுறிகள் போன்றவைகள்,என தெரிவித்துள்ள அவர் இந்த செயல்பாட்டை கையாள்வதற்கான  நடைமுறைகள் வங்கிகளிடம் உள்ளன இதன் காரணமாக வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்திற்கும் வைப்பிலிட்டவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் வைப்பிலிட்டவர்கள் வங்கி அமைப்பு முறைமீது நம்பிக்கை இழக்கவேண்டிய அவசியமில்லை இதனால் வங்கி அமைப்பு முறைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158729

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசு பொருளாதாரத்தைப் போலவே வங்கித் துறையையும் திவாலாக்க முயற்சிக்கிறது: சுனில் ஹதுன்நெத்தி

மூன்று நாள் வங்கி விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி அவர்கள் பொருளாதாரத்தை திவாலாக்கியதைப் போல வங்கித்துறையை திவாலாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

நிதித்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது உள்நாட்டுக் கடனைக் குறைக்கச் செல்வதை விட அதிகமான பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறை என வர்த்தமானியில் வெளியிட்டு மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்படாத பாரம்பரியத்தை அரசு உடைத்துவிட்டது. இந்த வங்கி விடுமுறைகள் ஏன் கொடுக்கப்பட்டது என வங்கித் தலைவர்கள் கூட அறியவில்லை. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரம் வங்கித் தலைவர்களுடன் விவாதிக்கப்படவில்லை. .பிரான்ஸ் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியவுடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்கித் துறையை பணயம் வைத்து நிதி ஸ்திரமின்மையை உருவாக்குவது இன்றைய காலத்தை விட எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் வணிக சமூகத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/260277

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டின்நிதி ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது- மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பிற்கு இலங்கையின் வங்கிகள் பாராட்டு

28 JUN, 2023 | 12:00 PM
image
 

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டின்நிதி ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை  இலங்கையின் வங்கிகள் வரவேற்றுள்ளன.

இலங்கைவங்கிகளின் சங்கம் அறிக்கையொன்றில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை வரவேற்றுள்ளன.

 

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் அறிவிப்பு உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை நிதிஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது வங்கி மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களில் வைப்பிடப்பட்டுள்ள பணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற உறுதியான உத்தரவாதத்தை வரவேற்பதாக வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மறுசீரமைப்பு குறித்து அரசாங்கத்திற்குள் போதியளவு விவாதம் இடம்பெற அனுமதிப்பதற்காகவும் பொதுமக்கள் மற்றும் சந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவுமே  ஐந்து நாள் விடுமுறை வங்கிதுறைக்கு  வழங்கப்பட்டுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார் என இலங்கை வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிக்கவேண்டும் அதற்கு அமைச்சரவை பொதுநிதிக்குழு நாடாளுமன்றம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.

ஐந்துநாள் வங்கி விடுமுறையின் போது ஏடிஎம் ஒன்லைன் மற்றும் ஏனைய டிஜிட்டல் வழிமுறைகளை பயன்படுத்தி பொதுமக்கள் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/158756

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு: ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை, நிச்சயமற்ற நிலைமையை உருவாக்குமா?

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கான நாடாளுமன்ற விவாதத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், வார இறுதி விடுமுறை நாளில் நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு விசேட அமைச்சரவை கூட்டமொன்றிற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

 

இதன்படி, இந்த விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜூன் 28) மாலை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாட இருக்கிறார்.

கடன் மறுசீரமைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,WASANTHA SAMARASINGE FB

 
படக்குறிப்பு,

அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 6 பேரினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், திரும்பச் செலுத்தாதிருப்பதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 6 பேரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என்பதை முன்கூட்டியே அறிந்தமையினால், நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம். எமது நிதியத்தில் கைகளை வைக்க வேண்டாம் என்ற இடைகால தடையுத்தரவொன்றை பெற்றுத் தருமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளோம்,” என அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,CBSL

 
படக்குறிப்பு,

தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சந்தை மூடப்படுவதன் ஊடாக, இந்த திட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்

இந்த மாதம் 30ம் தேதி விசேட வங்கி விடுமுறையொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, அன்றைய தினம் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 29ம் தேதி ஆரம்பமாகும் விடுமுறையானது, தொடர்ச்சியாக ஐந்து தினங்களுக்கு விடுமுறையாக காணப்படுகின்றது.

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு 29ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 30ம் தேதி விசேட விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் வார இறுதி விடுமுறை தினங்களாகும்.

மூன்றாம் தேதி பூரணை தின விடுமுறை காணப்படுகின்றது.

 

இதன்படி, தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் விடுமுறை காணப்படுகின்ற நிலையில், இந்த ஐந்து தினங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே இந்த மாதம் 30ம் தேதியை வங்கி விடுமுறை தினமாக அறிவித்துள்ளோம்,” என்கிறார் அவர்.

மேலும் இத்திட்டத்தை அமல்படுத்த குறிப்பிட்ட கால எல்லையொன்று தேவைப்படுகின்றது எனவும், அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுதல், நாடாளுமன்றத்திற்கு அதனை சமர்ப்பித்தல், நாடாளுமன்றத்தில் நிதி செயற்குழு உள்ளிட்ட குழுக்கள் கலந்துரையாடுவதற்கு ஒரு சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சந்தை மூடப்படுவதன் ஊடாக, இந்த திட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்புகின்றது,” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

இந்த காலப் பகுதியில் வங்கி, இணைய வழி பணக் கொடுக்கல் வாங்கல்கள், ஏ.டி.எம் பணப்பரிமாற்று நடவடிக்கைகள், வார இறுதி வங்கி சேவைகள் என அனைத்து வங்கி சேவைகளும் வழமை போன்று செயற்படும் என அவர் அறிவித்துள்ளார்.

'மக்களின் பணத்திற்கு பாதிப்பு இல்லை'

வங்கிகளில் பணத்தை வைப்பு செய்துள்ள எந்தவொரு நபருக்கும், இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிக்கின்றார்.

“வங்கிகளில் வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கு ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என சிலர் கட்டுக் கதைகளை முன்வைத்து வருகின்றார்கள்,” என்றார் அவர்.

மேலும், உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் போது, உள்நாட்டு வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வைப்பு செய்துள்ள பணம் மற்றும் அதற்காக தற்போது கிடைக்கின்ற வட்டி ஆகியவற்றில் எந்தவொரு குறைவும் ஏற்படாது என மத்திய வங்கி என்ற விதத்தில் உறுதியாக கூற முடியும், என்று கூறினார்.

“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் வங்கி கட்டமைப்பு மற்றும் வங்கிகளில் வைப்பு செய்துள்ள மக்களின் பணம் ஆகியவற்றின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்கின்றது,” எனவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகின்றார்.

உள்நாட்டுக் கடன் சீரமைப்பு என்றால் என்ன, ஐந்து நாட்கள் விடுமுறை ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் பிபிசி தமிழ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தியை தொடர்புக்கொண்டு வினவியது.

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க
 
படக்குறிப்பு,

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன?

"கடன் மறுசீரமைப்பு என்பது வேறொன்றும் கிடையாது. வங்கிகளிடமிருந்து அரசாங்கம் கடனை பெற்றுக்கொண்டுள்ளது. அதேபோன்று, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றிலிருந்தும் அரசாங்கம் கடனை பெற்றுக்கொண்டுள்ளது. அந்தக் கடன்களின் ஒரு பகுதியை எப்படி பதிவளிப்பு செய்யலாம் என்பதே இதன் நோக்கம்.

"அரசாங்கத்திற்கு வழங்கிய கடனை, இந்த நிறுவனங்கள் பதிவளிப்பு செய்ய வேண்டும். அப்படியென்றால், குறைக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எப்படி கடன் கொடுத்திருக்கும்? யாருடைய பணம்? இது பொதுமக்களின் பணம். பொதுமக்கள் வைப்பு செய்யும் பணத்தை திறைசேரி (Treasury) முறி, திறைசேரி (Treasury) உண்டியல் ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கும். அதிலிருந்து கிடைக்கும் லாபத்தில் வங்கி ஒரு வருவாய் லாபத்தை அனுபவிக்கும். அதில் ஒரு சிறிய பகுதியை வட்டி என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு கொடுக்கும்.

"திறைசேரி வட்டி வீதம் 30, 32 வீதமாக இருந்தது. ஆனால் வைப்பாளர்களுக்கு கொடுத்த வட்டி வீதம் அண்மைக் காலமாக மிகக் குறைவு. அதேபோன்று ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியன திறைசேரி ஊடாகவே அரசாங்கத்திற்கு கடனை வழங்கியுள்ளது. இப்படி வழங்கப்பட்ட கடனில் ஒரு பகுதியை பதிவளிப்பு செய்யலாமா என்றே பார்க்கின்றார்கள்.

"நேரடியாகப் பார்க்கும் போது, பொதுமக்கள் வைப்பு செய்த பணத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற ஒரு பார்வையும் இருக்கின்றது. அதேபோன்று, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றில் ஒரு பகுதியை இழக்க வேண்டி ஏற்படும் என்ற பார்வையும் இருக்கின்றது. வைப்பு செய்தவர்களின் பணம் ஒருபோதும் எடுக்கப்படாது என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகிய பணத்திற்கும் எந்தவித பாதிப்பும் வராது என அரசாங்கம் கூறுகின்றது.

"இந்த இரண்டிலும் கைவைக்காமல், அரசாங்கம் எப்படி கடன் மறுசீரமைப்பை செய்ய முடியும் என்று பார்த்தால், வங்கிகளில் செய்யப்படும் வைப்புக்களின் ஊடாக வருகின்ற லாபத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் வெட்டி விடலாம். அதாவது ஒரு பகுதியை தருமாறு கேட்கலாம்."

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஏன் நீண்ட விடுமுறை தேவைப்படுகின்றது?

"கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் இந்தக் காலப் பகுதியில் வங்கி நடவடிக்கைகள் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கைகள் செய்யப்படாமல் இருப்பது அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும். ஏனென்று சொன்னால், அடுத்து வரும் நாட்கள் மிகவும் சர்ச்சைக்குரிய நாட்களாக காணப்படுகின்றன.

"இந்தக் காலப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற நிலைமைக்கு மத்தியில், எங்களுடைய பணத்தை மீள தாருங்கள் என மக்கள் வங்கிக்கு சென்று கேட்டால் என்ன நடக்கும்? அதேபோன்று, பங்குச் சந்தையிலுள்ள அனைவரும், பங்குகளை விற்க தொடங்கினால் என்ன நடக்கும்? இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதே இந்த விடுமுறை வழங்கப்பட்டமைக்கான நோக்கமாகும்."

‘ஏதோ ஒரு பெரிய பாதிப்பு வரக்கூடும்’

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் அடுத்து வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் கடன் மறுசீரமைப்பு திட்டமானது, வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொடர்புப்படாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இது உள்நாட்டு கடன் வழங்குநர்களுக்கே தாக்கத்தை செலுத்தும் என கூறிய அவர், வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கடனை மீள செலுத்த முடியாது எனவும், தம்மால் குறிப்பிட்டளவு தொகையையே மீள செலுத்த முடியும் எனவும் கூறுவதே இந்த கடன் மறுசீரமைப்பு திட்டம் என அவர் தெளிவூட்டினார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளினால், ஏதோ ஒரு வகையான பெரிய பாதிப்பு வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவே தான் கருதுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c512zxe0kqxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்புத் திட்டம் இப்போது பொது நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

பொது நிதிக் குழு இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.

இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் சனிக்கிழமை கூடவுள்ளது.

https://thinakkural.lk/article/260385

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்கிகளில் வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - மத்திய வங்கி ஆளுநர்

Published By: RAJEEBAN

29 JUN, 2023 | 11:13 AM
image
 

இலங்கையின் வங்கி அமைப்பின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வங்கிகளில் வைப்பு செய்த 57 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் ஏற்கனவே 50 வீதத்திற்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்துள்ளதால் அவற்றின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர்சேமலாப நிதி மீது அரசாங்கம் கைவக்காது என உறுதியளித்துள்ள மத்திய வங்கி ஆளுநர்ஊழியர்சேமலாப நிதியத்திற்கு 9 வீத வட்டிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பிற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும்வரை ஊகங்களை தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் வெள்ளிக்கிழமையை வங்கி விடுமுறையாக அறிவித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158815

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரம் ; மத்திய வங்கி ஆளுநரின் கருத்து முரண்பாடானது - நாலக கொடஹேவா

29 JUN, 2023 | 07:54 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்களிடம்  உண்மையை குறிப்பிடாமல்  தன்னிச்சையாக செயற்பட அரசாங்கம் முயற்சிக்கிறது. தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்களிடம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிடுகிறார் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்களின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நித்திரையில் இருந்து எழுந்ததை போல் பாராளுமன்றத்தை கூட்டி தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உலகில் எந்த நாடும் இயற்றிக் கொள்ளவில்லை. இலங்கையை போன்று பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும் தேசிய கடன்களை மறுசீரமைக்கவில்லை.

தேசிய கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சிறந்த தீர்மானத்தை முன்வையுங்கள் என்ற ஆலோசனையை மாத்திரம் நாணய நிதியம் முன்வைத்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன்களை நீண்டகால கடனாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் நிதிய வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சாதாரண தொழில் துறை முதலீட்டாளர்கள் கூட நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை  கூட்டத்தில்  தேசிய கடன்கள் மறுசீரமைக்கப்படும்போது  வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மக்கள் மத்தியில் வங்கி கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிடுகிறார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி ஜனாதிபதிக்கு சார்பாக செயற்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/158844

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு கோப் குழு அனுமதி

அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு கோப் குழு அனுமதி அளித்துள்ளது.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைகளை பரிசீலிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு இரண்டு நாட்கள் கூடியது.

நீண்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்ற பின்னர், கோப் குழு ஆவணங்களை அங்கீகரித்துள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் உள்நாட்டு கடனை மேம்படுத்தும் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்து விவாதம் செய்வதற்காக பாராளுமன்றம் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை விசேட அமர்வை நடத்த உள்ளது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை இரவு 7.30 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற அலுவல் குழு கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/260856

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஏற்க மாட்டோம் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: VISHNU

30 JUN, 2023 | 07:58 PM
image
 

(எம்.மனோசித்ரா)

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்காது தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

 எனவே தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மத்திய வங்கி ஆளுனர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் உள்நாட்டு கடன் மறுசீரமைக்கப்பட மாட்டாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்தனர். 

ஆனால் தற்போது தேசிய கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று , அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றில் என்னுமில்லாதவாறு முதன்முறையாக இதற்காக ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

உண்மையில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை கிடையாது. இதன் மூலம் கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். 

எவ்வாறிருப்பினும் தேசிய கடன் மறுசீரமைப்பு எனக் கூறி ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப்பட்டுள்ளமையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்காமல் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. 

சனிக்கிழமை இந்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதிலுள்ள விடயங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியம் இதனைக் கோரவுமில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/158899

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்களுக்கான கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு

30 JUN, 2023 | 09:28 PM
image
 

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதார நிலைமை செப்டெம்பர் மாதத்துக்குள் ஸ்திரமடையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்களுக்கான கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வர்த்தக சபை உறுப்பினர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்றுவியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ,

இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துக்குள் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரதன்மையை அடையும் என்று நம்புகின்றோம். இதற்கிடையில், தனிநபர்கள் மற்றும் தொழில்துறையினர் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யும் வகையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

பரவலான விளக்கங்களை வழங்குவதன் மூலம், வர்த்தக பங்குதாரர்களுக்கு மறுசீரமைப்பின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்த மறுசீரமைப்பு முயற்சியின் முதன்மையான விளைவாக எதிர்பார்க்கப்படுமளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்க முடியும். இதற்காக குறிப்பிட்டவொரு காலப்பகுதியைக் குறிப்பிட்ட முடியாது என்ற போதிலும் , சில மாதங்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்த முடியும்.

எனவே நீங்கள் அனைவரும் தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த உங்களின் பணியாளர்களுக்கும், மக்களுக்கும் விளக்குவது சிறந்தது. இது நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும் ஊக்கமளிக்கும். அதே போன்று முற்றாக சரிவடைந்துள்ள நிர்மாணத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும். அது வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், ஒட்டுமொத்த பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைக்கப்படாவிட்டால் சிறு தொழில்கள் மூலம் பெறப்படும் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  ரூபாவின் பெறுமதி வலுவடைதலுடன், டொலர் பெறுமதியின் மீள் எழுச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். இதனை சமநிலைப்படுத்துவதற்கு வெளிநாட்டுக் கடன் மறுசீரமைத்தலுடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் 9 சதவீத வருடாந்த வட்டியை தொடர்வதற்கு சட்ட ரீதியாக உத்தரவாதமளிக்கின்றோம். நாட்டின் எதிர்காலம் குறித்து எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/158936

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேதனைமிக்கது; 13 ட்ரில்லியன் ரூபாயை கடனாக உள்நாட்டில் அரசாங்கம் பெற்றுள்ளது ! - அட்வகாட்டா

Published By: NANTHINI

24 APR, 2023 | 06:00 PM
image
 

 

(நேர்கண்டவர் : ரொபட் அன்டனி) 

ங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணிக்கொண்டு மறுசீரமைப்பை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.  அதனால்தான் வங்கிக் கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்தால், அதில் வட்டி வீதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்ற ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டாவின் முகாமைத்துவ பணிப்பாளர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை 13 ட்ரில்லியன் கடன்களை உள்நாட்டில் பெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டில் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான அவசியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இது தொடர்பாக உறுதியான முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த பின்னணியிலேயே அட்வகாட்டா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இந்த விடயத்தை கூறுகின்றார்.

அண்மையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க திறைசேரி மத்திய வங்கியிடம் பெற்றுள்ள கடன்களுக்கு மட்டும் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் ஏனைய தரப்புக்களிடம் பெறப்பட்ட கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட மாட்டாது என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உள்நாட்டில் கடன் மறுசீரமைப்பு  செய்யப்படுமா? அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,  தனனாத் பெர்னாண்டோ கேசரிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய விடயங்கள் வருமாறு:  

உள்நாட்டில் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பை செய்துகொள்வது தொடர்பாக தற்போது பேசப்படுகிறதா?

திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இணையம் ஊடாக சர்வதேச கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.  அதில் அவர்கள் இருவரும் முன்வைத்த சமர்ப்பணம் நிதி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படுகிறது. அதில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. 

இங்கு உள்நாட்டு கடன் எனும்போது திறைசேரி   பல்வேறு தரப்பினரிடம் கடன்களை பெறும்.  மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகள்,  ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பல தரப்பிடம் திறைசேரி கடன்களை பெறும்.  அவ்வாறு கடன்கள் பெறப்பட்டுள்ளன.  

இந்நிலையில், அண்மையில் மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.  அதாவது திறைசேரி மத்திய வங்கியிடம் பெற்றிருக்கின்ற கடன்களுக்காக மட்டுமே கடன் மறுசீரமைப்பு செய்யப்படலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவும் அரசாங்கத்துக்கு கடன் வழங்கியுள்ளன. 

அந்த நிறுவனங்கள் விருப்பப்பட்டால் கடன் மறுசீரமைப்பு செய்யலாம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இதுதான் நிலைமையாக இருக்கிறது. 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு எந்த  முறையில் முன்னெடுக்கப்படும்?

அந்த பொறிமுறை இன்னும் வெளியிடப்படவில்லை. இதில் ஒரு சில முறைகள் காணப்படுகின்றன. முதலாவதாக பெற்ற கடனில் ஒரு தொகையை கழித்துவிடலாம். இதனை ஹேர்கட் என்று கூறுவார்கள். உதாரணமாக, திறைசேரி மத்திய வங்கியிடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தால், அதில் 50 இலட்சத்தை தர முடியாது. அதனை இரத்து செய்துவிடுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்படும். அதனையே ஹேர்கட் என்று கூறுவார்கள். 

இதில், மேலும் ஒரு முறை காணப்படுகிறது. ஏற்கனவே இந்த கடன்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்தை குறைத்தலே அந்த முறையாகும். 

மூன்றாவதாக, இந்த கடன்களை மீள்செலுத்தும் காலப்பகுதியை நீடித்துக்கொள்ளுதலாகும்.  உதாரணமாக, 10 வருடங்களுக்கு மீள்செலுத்தும் நோக்கில் கடன் பெறப்பட்டிருந்தால், அதனை 20 வருடங்களுக்குள் மீள்செலுத்துவோம் என்று கூறப்படும். அத்துடன், இன்று மூன்று முறையையும் ஒன்றிணைத்ததாக ஒரு முறை முன்னெடுக்கப்படும். 

உள்நாட்டு கடன்களை விபரிக்க முடியுமா? 

உள்நாட்டு கடன்கள் என்பது அதிகமாக திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள் என்பனவற்றை வழங்கி பெற்றுக்கொண்ட கடன்களை குறிக்கின்றது. ஆனால், இங்கு ஒரு பிரச்சினை ஏற்படும். அதாவது திறைசேரி வழங்கிய ஒரு திறைசேரி உண்டியலுக்காக பெற்றுக்கொண்ட கடனை ஒரு வருடத்தில் மீள்செலுத்த வேண்டும். அதனை ஒரு வருடம் தாண்டி மீள்செலுத்த முற்பட்டால், அது பிணைமுறியாக மாறிவிடும்.  

திறைசேரி உண்டியல்கள் என்பது மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் மீள்செலுத்தப்பட வேண்டும்.  வங்கிக் கட்டமைப்பிடமும் திறைசேரியானது திறைசேரி உண்டியல்களையும் பிணைமுறிகளையும் கொடுத்து கடன்  பெற்றிருக்கிறது. வங்கிகளுக்கு வருகின்ற இலாபத்தில் 60 வீதமானவை உண்டியல் மற்றும் பிணைமுறிகளில் உள்ள வட்டியில் இருந்தே கிடைக்கிறது.  

எனவே, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில் வங்கிகளிடம் பெற்ற கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்க முயற்சித்தால், அது வங்கி கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

இங்கே ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், தற்போது ஏற்கனவே ஒரு வகையில் திறைசேரி பெற்றிருக்கின்ற கடன்கள் மறுசீரமைப்புக்குட்பட்டு இருக்கின்றன. காரணம், அந்தளவு தூரம் பணவீக்கம் அதிகரித்து இருக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக முன்னர் பெற்ற பணத்தின் பெறுமதி தற்போது இல்லை. இதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.  

நீங்கள் சரியான இடத்துக்கு வந்துவிட்டீர்கள். அரசாங்கம் வங்கி கட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களுக்கு மறுசீரமைப்பு  செய்தால் அல்லது வட்டி வீதத்தை குறைத்தால் அது மக்களின் வைப்புப் பணத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? காரணம், மக்களின் வைப்புப் பணத்தை கொண்டுதானே வங்கிகள் திறைசேரிக்கு கடன் வழங்குகின்றன? எனவே, கடன் மறுசீரமைப்பு  உள்நாட்டில் செய்தால் அது வங்கி கட்டமைப்பில் மக்களின் நிதி வைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துமா? 

இது பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட வேண்டிய விடயம். நீங்கள் அதனை சரியாக குறிப்பிட்டீர்கள். வங்கிகள் திறைசேரியிடமிருந்து உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளை நாம் வைப்பில் இட்டிருக்கின்ற பணத்தை கொண்டே  வாங்கியிருக்கின்றன. அதன்மூலமே கடன் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் எமது பணத்தில் திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்யுமாறு கூறவில்லை.  

எனவே, நமது வைப்புகளுக்கு எந்த தாக்கமும் ஏற்படுத்தப்படக்கூடாது. இதுவே கோட்பாடு.  ஆனால், செயற்பாட்டு ரீதியாக இந்த இடத்தில் ஒரு பிரச்சினை ஏற்படும். அதாவது உங்கள் கேள்விக்கு நேரடியான பதில் இல்லை. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இங்கு ஒரு தாக்கம் இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியது. 

எனவே தான் வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணிக்கொண்டு மறுசீரமைப்பை செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அதனால்தான் வங்கிக் கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்தால், அதில் வட்டி வீதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்ற ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.     

வங்கிகள் திறைசேரிக்கு கடன் கொடுக்கும்போது அது 100 வீத உத்தரவாதத்தை கொண்டிருக்கும்.  அந்த நிதி மீண்டும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருக்கும். ஆனால், ஒரு தனி மனிதனுக்கு அவ்வாறு கடன் வழங்கும்போது அந்த 100 வீத உத்தரவாதம் இருக்காது.  அதனால் இப்படி மறுசீரமைப்பு வரும்போது இதில் சிக்கல்கள் வரலாம். எனவே, இதில் சட்டதிட்ட மாற்றங்களும் அவசியமாகின்றன.

இலங்கையில் உள்நாட்டு கடன்கள் எவ்வளவு காணப்படுகின்றன? 

புள்ளிவிபரங்களின் பிரகாரம், அரசாங்கம் உள்நாட்டில் 13 ட்ரில்லியன் ரூபாயை கடன்களாக அரசாங்கம் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன்களை குறிக்கும். ஒரு பில்லியன் என்பது 100 கோடிகளை குறிக்கும். இங்கு 13 ட்ரில்லியன் கடன்களை அரசாங்கம் உள்நாட்டில் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனை டொலர்களில் மாற்றீடு செய்தால் இலங்கை  உள்நாட்டில் 36 பில்லியன் டொலர்களை  கடனாக கொண்டுள்ளது. 

பொருளாதார ஆய்வுகளை செய்கின்ற உங்கள் நிறுவனம் இந்த விடயத்தில் மக்களுக்கு கூறும் செய்தி என்ன? 

இங்கு கலவரமடைந்து நாம் எதையும் சாதிக்க முடியாது. இங்கே கடன் மறுசீரமைப்பு என்பது மிக அத்தியாவசியமானதாகும். மறுசீரமைப்பு செய்யாமல் நாடு என்ற ரீதியில், அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்செல்ல முடியாது.  ஆனால், அது மிகவும் வேதனை மிக்க ஒரு விடயமாகும். மறுசீரமைப்பு என்பது இனிமையான விடயம் அல்ல. அது மிகவும் வேதனையான, கடினமான செயற்பாடு.   

எமக்கு கடன் வழங்கியவர்களிடம் உங்கள் கடனை முழுமையாக என்னால் வழங்க முடியாது என்று நாம் கூறுகிறோம். அது எந்தளவு தூரம் ஒரு வேதனையான விடயம் என்பதை உணர்ந்து பாருங்கள். இனிமையான ஓர் அனுபவமாக அது அமையாது. அதனால்  இங்கு கலவரமடைந்து எந்த பயனும் இல்லை.  கடன் மறுசீரமைப்பு செய்யாவிடின், நாம் மீண்டும் நெருக்கடியை சந்திப்போம். ஆனால், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/153612

ஏப்ரலில் வந்த கட்டுரை, தற்போதைய சூழலை ஒட்டி இணைக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்பு குறித்து வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை - பிரதமர்

01 JUL, 2023 | 04:18 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களுக்கு  57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. கடன் மறுசீரமைப்பின் மூலம் அந்த அனைத்து வங்கிக் கணக்குகளுக்குமான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் சந்தேகப்பட தேவையில்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய நெருக்கடி நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி குறுகிய நோக்கங்களுக்காக செயற்படுவதை விடுத்து  பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விமர்சனங்களுக்கு நாம் எப்போதும் இடமளித்துள்ளோம்.  என்றாலும் மக்களை திசை திருப்பும் எதிர்க்கட்சி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. 57 மில்லியன் வங்கி வாடிக்கையாளர்களை அவர்கள் அச்சத்திற்குள்ளாக்கினர்.

வங்கிகளை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர் அதுவும் கைகூடவில்லை. ஊழியர் சேமலாப நிதி அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை திசை திருப்பும் அவர்களது திட்டமும்  பயனளிக்கவில்லை. 

அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னெடுத்துள்ள இந்த செயற்பாடுகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய வங்கி கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாட்டின் பிரதமர் என்ற வகையில் நான் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். 

தற்போது நாட்டில் மூன்று பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவு உல்லாச பிரயாணிகள் நாட்டுக்கு வருகை  தரும் நிலையில்  சுற்றுலாத்துறை மூலமான வருமானம் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் அளவுக்கு எமது வங்கிக் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எமது வங்கித் துறை சீர்குலைந்திருந்ததை பலரும் மறந்து விட்டனர். எனினும் தற்போது சர்வதேச வங்கிகளுடன் தொடர்புகளை முன்னெடுக்கும் வகையில் அது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி மற்றும் எமக்கு உதவும் கடன் வழங்குனர்கள் மற்றும் ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நாம் செயல்படுகின்றோம். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவற்றை வெளிப்படையாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

நாடு தள்ளப்பட்டிருந்த மோசமான வீழ்ச்சியிலிருந்து அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மக்களுக்கான வாழ்க்கைச் செலவு அதிகரித்திருந்தாலும் அதற்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் உற்பத்தித் துறைகள் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீர்குலைந்துள்ள சில நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் கைத்தொழில் துறையில் அரசாங்கத்தின் தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.

எமது நிதித் துறையில் முக்கிய நிறுவனமாக மத்திய வங்கி செயல்படுகிறது. கடந்த சில வாரங்களாக அந்த வங்கியை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி மேற்கொண்டு வருகிறது. 

மக்களை திசைதிருப்பும் வகையில்  பல்வேறு கூற்றுக்களை அவர்கள் முன் வைத்தனர். வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளிலிருந்து விலகி விடுவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தனர். எதிர்க்கட்சி அவ்வாறு செயற்படுகின்றமை தொடர்பில் கவலையடைகிறேன்.

நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களுக்கு  57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. சிறந்த செயற்பாட்டின் மூலம் அந்த அனைத்து வங்கிக் கணக்குகளுக்குமான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி,அமைச்சரவை மற்றும் மத்திய வங்கியின் மூலம் அதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதனால்  வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. போலியாக முன்னெடுக்கப்பட்ட  அத்தனை பிரசாரங்களும் காற்றில் அடித்துச் சென்று விட்டன. 

அந்த வகையில் அரச வங்கிகளுக்கு மட்டுமின்றி அனைத்து வங்கிகளுக்கும் அரசாங்கம் அந்த நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.  மக்களின் அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களும் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது. பல்வேறு கூற்றுக்களை முன்வைத்து ஏமாற்று செயற்பாடுகளை எவர் முன்னெடுத்தாலும் அரசாங்கம் வங்கி கட்டமைப்புக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/158999

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

01 JUL, 2023 | 07:51 PM
image
 

கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மருதப்பாண்டி ராமேஸ்வரன், ஏ.எல்.எம். அதாவுல்லா, வடிவேல் சுரேஷ், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/159016

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் ; இல்லையேல் நிதி ஸ்திரத்தன்மையற்ற நிலை உருவாகும் - கலாநிதி எம். கணேசமூர்த்தி

02 JUL, 2023 | 10:39 AM
image
 

(எம்.வை.எம்.சியாம்)

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் கடன் மறுசீரமைப்பு மக்களிடையே வீண் குழப்பத்தை தோற்றுவித்து அது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை  விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி  தெரிவித்தார். 

நேர்காணலொன்றில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  

கடன் மறுசீரமைப்பு நாட்டு மக்களிடையே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் தேசிய கடன் மறுசீரமைப்பு நாட்டின் நிதி நிலைமை உறுதிப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

குறிப்பாக, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் நிச்சயமற்ற தன்மை அல்லது பீதி நிலைமை ஏற்படுமாயின், அது நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்ததல்ல. எவ்வாறாயினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்களிடத்தில் ஏற்படும் பீதி நிலை இவ்வாறான சூழலை ஏற்படுத்தலாம். தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விடயங்களை கட்டாயமாக அரசாங்கம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்களிடத்தில் பீதி ஏற்படாத வண்ணம் இருக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதனை எங்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

மேலும் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை குறைக்க வேண்டும் என்பது நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக நாட்டின் மொத்த கடன் அளவு 83.6  பில்லியனாக காணப்படுகின்றது. அவற்றுள் 42 பில்லியன் உள்நாட்டு கடனாகும். மிகுதி  வெளிநாட்டு கடன்களாகும்.

நாணய நிதியம் இந்த கடனில் 17 பில்லியனை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதன் அடிப்படையில் இந்த 17 பில்லியன் ரூபாவினை உள்நாட்டு கடனில் குறைப்பதா அல்லது வெளிநாட்டு கடனில் குறைப்பதா என்பது தொடர்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளது.

கடந்த காலங்களில் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முட்டாள்தனமான தீர்மானங்கள், பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணற்ற கடன்கள், ஊழல் மற்றும் மோசடி என இவை அனைத்தையும் தற்போது நாட்டு மக்கள் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே வறுமை அவர்களின் கழுத்தை நெரிக்கும் நிலையில் தற்போது கடன் மறுசீரமைப்பு காரணமாக நிதி ஸ்திரத்தன்மையற்ற நிலை தோன்றுமாயின், மேலும் இவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஆட்சியாளர்கள் செய்த தவறுகள் காரணமாக நாட்டு மக்கள் தண்டனை அனுபவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/159024

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் செயற்படுகிறார் ; எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் - எதிர்க்கட்சித் தலைவர்

02 JUL, 2023 | 12:37 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார். சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,  

தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இரு நாள் விவாதத்தை கோரினோம். தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்து நாட்டு மக்கள் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தெரியாமல் மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இருநாள் விவாதம் கோரினோம்.

இருநாள் விவாதம் அவசியமில்லை. சனிக்கிழமை (01) முழு நாள் விவாதத்தை நடத்தலாம். தேவையாயின் விவாதத்துக்கான காலத்தை நீடித்துக் கொள்ளலாம் என கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் உரையாற்ற இருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் தன்னிச்சையாக செயற்திட்டம் மீதான வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினார். வாய்ப்பு கோரியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை புறக்கணித்து ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். பாராளுமன்றம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு சபாநாயகர் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார்.

சபாநாயகர் ஒருவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுகிறார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/159042

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் பிறிதொரு மோசடிக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் - உதய கம்மன்பில

02 JUL, 2023 | 02:50 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் பிறிதொரு மோசடிக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் சட்டமா அதிபர் திறைசேரிக்கு முன்வைத்த பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடன் மறுசீரமைப்பு தொடர்பான சகல அதிகாரங்களும் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளன என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய கடன் மறுசீரமைப்பு தீர்மானத்துக்கு தாம் ஏன் வாக்களித்தோம் என்பதை பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அறியாமல் உள்ளார்கள். பாராளுமன்ற பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுகிறார்கள்.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கான தீர்மானங்கள் எடுக்கும் சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. தேசிய கடன்  எந்த வகையில் மறுசீரமைக்கப்படும் என்பது தொடர்பான திட்டம் அமைச்சரவை கொள்கை பத்திரத்தில் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் என சட்டமா அதிபர் கடந்த மாதம் 27ஆம் திகதி திறைசேரியின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.

அரசாங்கத்தின் பிறிதொரு மோசடிக்கு அமைச்சரவை ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய வளங்களை பாதுகாக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கையை ஜனாதிபதி இல்லாதொழிக்கிறார். நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பு எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றம் ஏற்படுத்தும் என்றார்.

https://www.virakesari.lk/article/159050

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

04 JUL, 2023 | 11:40 AM
image
 

(எம்.மனோசித்ரா)

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி , பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44 ஆவது உறுப்புரையின் கீழ் பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளை சட்டத்தின் 55ஆம் பிரிவின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய தேசிய கடன் மறுசீரமைப்புக்கான சகல நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், திங்கட்கிழமை (02) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/159168

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.