Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா

K800_URIE5095-300x200.jpgதமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரிய மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன், சிறுவர்களுக்கான மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது. விளையாட்டுத் திடல் தாயக நினைவுகளை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டதோடு , இல்லங்களும் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாணவச்செல்வங்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர். தமிழர் விளையாட்டு விழா விளையாட்டை மட்டும் அல்ல எமது தாயக உணர்வுகளை வெளிப்படுத்தி மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெறுவதற்கு தமது ஆதரவை தெரிவித்த நடுவர்களுக்கும், உதவியாளர்களுக்கும் பேர்லின் தமிழாலயம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

K800_FEYV9323.jpg
K800_HIZK7168.jpg
K800_TLEU7274.jpg
K800_LVUS0878.jpg
K800_XPME7458.jpg
K800_MLPV2296.jpg
K800_IDUW7787.jpg
K800_MITJ3081.jpg
K800_OHFA9265.jpg
K800_ECDS8760.jpg
K800_PKWG1877.jpg
K800_AEYM9972.jpg
K800_TXQC5421.jpg
K800_FJKJ8995.jpg
K800_AZCF7021.jpg
K800_BHEL1700.jpg
K800_CJAD4302.jpg
K800_COSE9089.jpg
K800_DMGH1311.jpg
K800_ENHY7922.jpg
K800_EVGM4711.jpg
K800_GAKD4937.jpg
K800_GMHP7191.jpg
K800_GPPG3883.jpg
K800_GQBD3892.jpg
K800_GVUS4254.jpg
K800_HICX4186.jpg
K800_HJYB6430.jpg
K800_HZGA8759.jpg
K800_HZVZ9004.jpg
K800_IMME0731.jpg
K800_JLLX4125.jpg
K800_KJKA1367.jpg
K800_KWNB0942.jpg
K800_MSZS3535.jpg
K800_MUUG8928.jpg
K800_NNGE4033.jpg
K800_NONH9689.jpg
K800_PISK6948.jpg
K800_PMGP4935.jpg
K800_PPOB3965.jpg
K800_PRRJ7338.jpg
K800_QHGR2748.jpg
K800_QMPW4313.jpg
K800_RRTG7929.jpg
K800_SJBC7003.jpg
K800_SOWQ5237.jpg
K800_SSQO5383.jpg
K800_TKUP2129.jpg
K800_UCPJ8139.jpg
K800_UMYS5296.jpg
K800_URIE5095.jpg
K800_VPAJ9293.jpg
K800_YCGU4427.jpg

பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா – குறியீடு (kuriyeedu.com)

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதாவது  இத்தனை வருடங்களாக நடந்த போராட்டத்தில் உங்களால் காண முடிந்த அல்லது தூக்கி காவ முடிந்த புலிகளின் தவறு இது தான். வெள்ளைத் துணியில் கறுப்பு பொட்டைத்தேடும் உங்களுக்குமாகத்தான் ஆயிரம் ஆயிரம் இளசுகள் தம்மை ஈகம் செய்தார்கள். தொடர்ந்து காவுங்கள். கொஞ்சம் கண்ணே மணியே என்றும் போட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்துங்கள். முகங்களை மறைக்க தேவை இல்லை. இனி அவர்கள் வந்து பதில் தரப்போவதில்லை. 
    • புதிய சபாநாயகர் தெரிவு எப்போது? December 14, 2024  08:41 am அசோக ரங்வலவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197262
    • தொடரும் சுற்றிவளைப்பு - வீழ்ச்சியடைந்த அரிசி விலை! December 14, 2024  08:47 am நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு,  சில பிரதேசங்களில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில், அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் 5,200 மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197263
    • வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மெதுவாக சரியத் தொடங்குகிறதா? - ஓர் ஆய்வு   Getty Images ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது சௌதிக் பிஸ்வாஸ் இந்திய நிருபர்   இந்தியாவின் சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகள் மோசமான அளவில் சரிவை சந்தித்துள்ளன.  ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையில், இந்தியாவின் பொருளாதாரம் 5.4% என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த ஏழு காலாண்டுகளின் மதிப்பிலேயே இதுதான் குறைவான மதிப்பாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 7 சதவீதத்தை விட மிகக் குறைவு. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த சதவீதம் வலுவாக இருந்தாலும், இது மந்தநிலையைக் குறிக்கிறது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பல காரணிகளால் ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.  நுகர்வோர் தேவை பலவீனமடைந்துள்ளது, தனியார் முதலீடு பல ஆண்டுகளாக மந்தமாக நடைபெறுகிறது மற்றும் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சியின் முக்கிய தூண்டுகோலாக இருந்த அரசாங்க செலவுகள் குறைந்துள்ளன. மேலும் உலகளாவியப் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. 2023 இல் 2 சதவீதம் மட்டுமே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.     பொருளாதார சரிவு குறித்து நிதி அமைச்சர் கூறுவது என்ன?   பொருளாதார நிபுணர் ராஜேஸ்வரி சென்குப்தா, சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன, இதனால் சில காலமாக பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.  பொருளாதார மந்தநிலை மற்றும் தேவையின் அளவில் குறிப்பிடத்தக்க பிரச்னை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதை வேறு மாதிரியாக அணுகுகிறார். கடந்த வாரம், 'இந்த பொருளாதார சரிவு முறையாக ஏற்படவில்லை' என்று அவர் விளக்கினார். மேலும் தேர்தலை மையமாகக் கொண்ட காலாண்டில் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதால் இந்த சரிவு ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். மூன்றாவது காலாண்டின் வளர்ச்சி, சமீபத்திய சரிவுக்கு ஈடுசெய்யும் என்றும் அவர் எதிர்பார்த்தார். உள்நாட்டு நுகர்வு, உலகளாவிய தேவை குறைதல் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் காலநிலை சீர்குலைவுகள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.  மத்திய அரசின் மூத்த அமைச்சர், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் உட்பட சிலர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கியின் கவனம், அதிகப்படியான கட்டுப்படுத்தப்பட்ட வட்டி விகிதங்களுக்கு வழிவகுத்தது, அது வளர்ச்சியைத் தடுக்கிறது என்று வாதிடுகின்றனர். அதிக வட்டி விகிதங்கள், வணிகங்கள் மற்றும் நுகர்வோர் கடன்களை அதிக செலவு கொண்டதாக மாற்றுகின்றன. இது குறைந்த முதலீடுகள் மற்றும் குறைந்த செலவினங்களுக்கு வழிவகுக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இரண்டு காரணிகளும் முக்கியமானவை. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிர்வகிக்க வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது. இந்தியாவின் பணவீக்கம் அக்டோபரில் 6.2% ஆக உயர்ந்தது. இது, மத்திய வங்கி இலக்காக வைத்திருந்த உச்சவரம்பை (4%) மீறியது மற்றும் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி 14 மாத உயர்வை எட்டியது. நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலையேற்றமே இதற்கு முக்கியக் காரணம். உதாரணமாக, காய்கறி விலைகள், அக்டோபர் மாதத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மற்ற அன்றாடச் செலவுகளைப் பாதிப்பது அல்லது பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால் வளர்ச்சி குறைவதை, அதிக வட்டி விகிதங்கள் மட்டும் முழுமையாக விளக்க முடியாது.   Getty Images காய்கறி விலைகள், அக்டோபர் மாதத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது   பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையேயான சமநிலை   டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் ஹிமான்ஷு கூறுகையில், "நுகர்வுத் தேவை வலுவாக இல்லாவிட்டால், வட்டி விகிதங்களைக் குறைப்பது வளர்ச்சியைத் தூண்டாது. முதலீட்டாளர்கள், தேவை இருக்கும்போது மட்டுமே கடன் வாங்கி முதலீடு செய்கிறார்கள், இப்போது அப்படி இல்லை" என்கிறார். இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு தனது பதவி காலத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சக்திகாந்த தாஸ், இந்தியாவின் "வளர்ச்சி அப்படியே உள்ளது" என்று நம்புகிறார், மேலும் "பணவீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையே சமநிலை நன்றாக உள்ளது" என்று நம்பிக்கைத் தெரிவிக்கின்றார். உயர்ந்த சில்லறைக் கடன் மற்றும் பாதுகாப்பற்ற கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை, அதிக வட்டி விகிதங்களுக்கு மத்தியிலும் தங்கள் தேவைகளுக்காக மக்கள் கடன் வாங்குவதைக் காட்டுகிறது. நகர்புறங்களில் கடன் தேவை பலவீனமடைந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நல்ல பருவமழை மற்றும் அதிகரித்துள்ள உணவுப் பொருட்களின் விலைகளின் மூலம் கிராமப்புற தேவை பிரகாசமாக உள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட இந்திரா காந்தி வளர்ச்சிப் பொருளாதார நிறுவனத்தின் இணைப் பேராசிரியரான சென்குப்தா, பிபிசியிடம் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாரம், 'பழைய பொருளாதாரம் மற்றும் புதிய பொருளாதாரம் எனப்படும் இரண்டு வழிப் பாதையில்' இயங்கி வருவதால், தற்போதைய நெருக்கடியை வெளிப்படுத்துகிறது என்றார். நடுத்தர மற்றும் சிறு தொழில்கள், விவசாயம் மற்றும் பாரம்பரிய தனியார் துறை உட்பட பரந்த முறைசாரா துறையை உள்ளடக்கிய பழைய பொருளாதாரம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களுக்காக இன்னும் காத்திருக்கிறது. மறுபுறம், புதிய பொருளாதாரம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, சேவைகள் ஏற்றுமதியில் 2022-23 இல் வலுவான வளர்ச்சியைக் கண்டது. அவுட்சோர்சிங் 2.0 அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணியாகும். மேலும் உலகளாவிய திறன் மையத்திற்கான (GCCs) ஒரு முக்கிய இடமாக இந்தியா மாறியுள்ளது.இது வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் முக்கிய சேவைகளை கையாளுவதாகும்.   AFP பணவீக்க அபாயங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவின் ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது   வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான கோரிக்கைகள்   உலகின் 50% உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) இப்போது இந்தியாவில் அமைந்துள்ளதாக Deloitte எனும் ஆலோசனை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொறியியல் வடிவமைப்பு மற்றும் ஆலோசனை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றவை.  அந்த மையங்கள் 46 பில்லியன் டாலர் (36 பில்லியன் பவுண்டு ) வருவாயை ஈட்டுகிறது மற்றும் 2 மில்லியன் உயர் திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றது. "உலகளாவிய திறன் மையங்களின் இந்த வருகையானது ஆடம்பர பொருட்கள், ரியல் எஸ்டேட் மற்றும் எஸ்யுவி கார்களின் தேவையை ஆதரிப்பதன் மூலம் நகர்ப்புற நுகர்வுக்கு ஊக்கமளித்தது. மேலும் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2-2.5 ஆண்டுகளுக்கு, நகர்ப்புற செலவினங்களில் ஒரு உயர்வை ஏற்படுத்தியது. அது தற்போது மறைந்து கொண்டிருக்கிறது" என்கிறார் சென்குப்தா. எனவே புதிய பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் அதே வேளையில், விவசாயம் உள்ளிட்ட பழைய பொருளாதாரத் துறைகள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. தனியார் முதலீடு முக்கியமானது, ஆனால் வலுவான நுகர்வு தேவை இல்லாமல், நிறுவனங்கள் முதலீடு செய்யாது. வேலைகளை உருவாக்க மற்றும் வருமானத்தை அதிகரிக்க முதலீடு இல்லாமல், நுகர்வுத் தேவையை மீட்டெடுக்க முடியாது. "இது மோசமான சுழற்சி முறை" என்கிறார் சென்குப்தா. மேலும், வேறு சில குழப்பமான அறிகுறிகளும் உள்ளன. 2013-14ல் 5% ஆக இருந்த இந்தியாவின் சராசரி இறக்குமதி வரி இப்போது 17% ஆக உயர்ந்துள்ளது, இது அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்ற ஆசிய நாடுகளை விட அதிகம். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் இறக்குமதியை நம்பியிருக்கின்றன.  இந்த உலக வர்த்தக சங்கிலியில், பொருட்களின் மீது விதிக்கப்படும் அதிக வரி, அதன் விலையை அதிகப்படுத்தி, உலகளாவிய சந்தையில் நிறுவனங்களுக்கு போட்டியை கடினமாக்குகின்றன. பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் "கதையில் ஒரு புதிய திருப்பம்" என்று இதனைக் கூறுகிறார். வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கும் கோரிக்கைகள் வளர்ந்தாலும் கூட, மத்திய வங்கி டாலர்களை விற்பதன் மூலம் ரூபாய் வீழ்ச்சியடைவதிலிருந்து தடுத்து வருகிறது, இதுவே பணப்புழக்கம் இறுக்கமடைவதற்கும் காரணமாகிறது.   Getty Images நவம்பர் மாதத்தில் கார் விற்பனை 14% குறைந்துள்ளது, இது பலவீனமான தேவையின் மற்றொரு சமிக்ஞை   'பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதிக்கு ஆபத்தான கொள்கைகள்'   கடந்த அக்டோபர் முதல் ரூபாய் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி தனது அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. டாலர்களை வாங்குபவர்கள் ரூபாயில் பணம் செலுத்த வேண்டும், இது சந்தையில் பணப்புழக்கத்தை குறைக்கிறது. வலுவான ரூபாய் மதிப்பை பராமரிக்க ரிசர்வ் வங்கியின் தலையீடு, உலகச் சந்தையில் இந்திய பொருட்களின் மதிப்பை அதிகரித்து போட்டித்தன்மையை குறைக்கிறது. இது ஏற்றுமதிக்கான தேவை குறைவதற்கு வழிவகுக்கிறது. "மத்திய வங்கி ஏன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்கிறது? இங்குள்ள கொள்கைகள் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதிக்கு ஆபத்தானது. ஒருவேளை இந்திய ரூபாய் குறித்து நேர்மறையான பிம்பத்தை காட்டுவதற்காக அவர்கள் இப்படி செய்யலாம். அவர்கள் இந்திய ரூபாய் பலவீனமாக இருப்பதாக காட்ட விரும்பவில்லை" என்று பிபிசியிடம் பேசிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கூறினார். இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற 'கதையாடலை அதிகமாக நிகழ்த்துவது' முதலீடு, ஏற்றுமதி மற்றும் வேலை உருவாக்கத்தை அதிகரிப்பதற்கான அத்தியாவசிய சீர்திருத்தங்களுக்கு இடையூறாக இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். "நாம் இன்னும் ஒரு ஏழை நாடாகவே இருக்கிறோம். நமது தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது, அதே சமயம் அமெரிக்காவில் இது 86,000 டாலராக உள்ளது. நாம் அவர்களை விட வேகமாக வளர்ந்து வருகிறோம் என்று நீங்கள் சொன்னால், அதில் எந்த அர்த்தமும் இல்லை" என்கிறார் சென்குப்தா. வேறு விதமாகக் கூறுவதானால், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வருமானத்தை உயர்த்தவும் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்த மற்றும் நீடித்த வளர்ச்சி விகிதம் தேவைப்படுகிறது.   Getty Images இந்தியாவின் வளர்ச்சி குறித்து அரசு நேர்மறையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது வளர்ச்சி மற்றும் நுகர்வை அதிகரிப்பது குறுகிய காலத்தில் எளிதானது அல்ல.  தனியார் முதலீடு போதுமான அளவு இல்லாத நிலையில், வருமானத்தை அதிகரிக்கவும், நுகர்வைத் தூண்டவும், அரசு வேலைவாய்ப்புத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் ஊதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஹிமான்ஷு பரிந்துரைக்கிறார். சென்குப்தா போன்றவர்கள் வரிகளைக் குறைப்பதன் மூலம், சீனாவிலிருந்து வியட்நாமிற்கு மடைமாறி வரும் முதலீடுகளை நாம் ஈர்க்க முடியும் என்று வாதிடுகின்றனர். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அரசு நேர்மறையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. நாட்டில் வங்கிகள், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் நிதி நிலை ஆகியவை வலுவாக உள்ளன. தீவிர வறுமையும் குறைந்துள்ளது. தலைமைப் பொருளாதார ஆலோசகர், வி ஆனந்த நாகேஸ்வரன், சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை மிகைப்படுத்தக் கூடாது என்கிறார்.  சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு உறுதியாக இருக்கும்போது, ஒரு சில காரணங்களை முன்னிறுத்தி ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிராகரிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி போதுமான வேகத்தில் முன்னேறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறும் சென்குப்தா, "இந்தியா வளர்ச்சியடைவதற்கான இலக்குகள் இருந்தாலும் கூட அவற்றை நிறைவேற்றப் போதுமான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கவில்லை" என்பதை சுட்டிக்காட்டுகிறார். "இதற்கிடையில், நிகழ்கால வளர்ச்சியின் அடையாளமாக இந்தியா பல்வேறு ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் வேளையில், உண்மையில் அந்த வளர்ச்சியைக் காண காத்திருக்கிறேன்" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு   https://www.bbc.com/tamil/articles/c4g2ep2l3eyo  
    • அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் - இலங்கை சொல்லும் செய்தி என்ன?   PMD MEDIA ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கை    இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இதன்படி, அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 17-ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்திப்பார்." என அவர் கூறுகின்றார்.   இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்தப்படும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து, விஜயத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். ''இந்த விஜயத்தின் இறுதியின் இரு தரப்புக்களும் கருத்துக்கள் வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். இந்த விஜயத்தின் நேர அட்டவணையை வெளிவிவகார அமைச்சு வெளியிடும். இந்த தீர்மானங்கள் குறித்து இந்த விஜயத்தின் பின்னர் நாம் வெளியிடுகின்றோம்." என அவர் குறிப்பிடுகின்றார்.   இந்தியாவிற்கு முதலாவது விஜயம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன?   இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தனது முதலாவது விஜயமாக அயலாக நாடான இந்தியாவையே தெரிவு செய்வது வழக்கமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நிலையில், அயல் நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திஸாநாயக்கவும், தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இலங்கை, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைக் கடைபிடித்துவந்தாலும், அயல்நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி வருகிறது.  இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக அரியணையேறும் அரச தலைவர்கள் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது வழமை. ஆட்சிகள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையென்பது முழு அளவில் பெரும்பாலான நாடுகளில் மாறாது. அந்தவகையிலேயே தனது முதல் விஜயம் பற்றிய ஜனாதிபதி அநுரவின் தேர்வும் இடம்பெற்றுள்ளது.  ஜே.வி.பியினர் (ஜனதா விமுக்தி பெரமுன கட்சியினர்) இந்திய எதிர்ப்புக் கொள்கையை ஆரம்ப காலப்பகுதியில் கடைபிடித்திருந்ததாலும், சீனாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாலும் இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறும் என்ற அச்சத்தை இந்திய ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன.  எனவே தமது ஆட்சியிலும் இந்தியாவுக்குரிய முக்கியத்துவம் மாறாது என்ற செய்தி அநுரவின் பயணத்தில் உள்ளடங்கி இருப்பது எனது பார்வையில் ஒரு விசேட அம்சமாகும்." என ஆர்.சனத் குறிப்பிடுகின்றார்.   PMD MEDIA அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15ம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் (கோப்புப்படம்) ''ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே திஸாநாயக்க டெல்லி சென்று பேச்சு நடந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறி வைத்துள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. எனவே அது சார்ந்த விடயங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்தப்படக்கூடும்.'' என்கிறார் ஆர்.சனத்   PMD MEDIA ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது(கோப்புப்படம்)   உற்று நோக்கப்படும் அநுரவின் விஜயம்!    திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் உற்று அவதானித்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில், இது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார். "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. டெல்லி விஜயம் முடிந்த கையோடு ஜனவரியில் திஸாநாயக்க பெய்ஜிங் செல்கிறார். இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டாலும் சீனாவுடனான நட்புறவிலும் மாற்றம் வராது என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்படுகின்றது.  இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் கவனம் செலுத்திவரும் நிலையில், அந்த தரப்புகள் பக்கம் இலங்கை முழுமையாக சாய்வதை தடுப்பதற்குரிய தேவைப்பாடு சீனாவுக்கு உள்ளது." என பத்திரிகையாளர் ஆர்.சனத் சுட்டிக்காட்டினார்.    Sanath பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத்   பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு விஜயம் செய்வது முக்கியம்!    "பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை முன்னெடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இன்றைய உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது. பொருளாதார பலமும் உள்ளது.  எனவே, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு தமது முதல் இரு வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதி மேற்கொள்வது இலங்கைக்கு கூடுதல் பயனை தரக்கூடும். கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடங்களில் அது கைகொடுக்கக்கூடும்." என பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றமானது, உலக அரசியல் அரங்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தனது முதலாவது விஜயத்தை அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்வதோடு, அதனை தொடர்ந்து, சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.     https://www.bbc.com/tamil/articles/c0kvx05mgldo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.