Jump to content

டுவிட்டருக்கு மாற்றாக புதிய செயலி நாளை மறுநாள் அறிமுகமாகிறது !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டருக்கு மாற்றாக நாளை மறுநாள் அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ்

டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது. இது டுவிட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் அந்த தளத்தில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்தார். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, ப்ளூ டிக் கட்டண சந்தா என அது நீள்கிறது. அண்மையில் டுவிட்டர் பயனர்கள் டுவீட்களை பார்ப்பதற்கு புதிய வரம்பு ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இது பயனர்களை விரக்தி அடைய செய்தது. அதே நேரத்தில் டுவிட்டருக்கு மாற்றாக தளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

 

1036314.jpg

 

கூ, ஸ்பில், ப்ளூ ஸ்கை என பல மாற்றுகள் உள்ளன. ஆனால் முதல் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் டுவிட்டருக்கு மாற்றை அறிவித்துள்ளது. மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூகர்பெர்க் 'த்ரெட்ஸ்' முயற்சியை முன்னெடுத்தார்.

இந்த தளம் டுவிட்டரை போலவே முற்றிலும் டெக்ஸ்ட்களை அடிப்படையாக வைத்து இயங்கும் தளம் என தெரிகிறது. பயனர்கள் தங்கள் எண்ணங்களை டெக்ஸ்ட்களாக பகிரலாம். இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் இந்த புதிய தளத்தின் முன்னோட்டம் மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிகிறது. வரும் 6ஆம் திகதி த்ரெட்ஸ் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. அதையடுத்து இந்தியா உட்பட உலகம் முழுவதும் 7ஆம் திகதி த்ரெட்ஸ் அறிமுகமாக உள்ளது.

இப்போதைக்கு apple போன் பயனர்கள் த்ரெட்ஸ் செயலியை தங்கள் போன்களில் பதிவிறக்கம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சூழலில் டுவிட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி இது குறித்து டுவீட் செய்துள்ளார். அதில் ‘உங்களது த்ரெட்ஸ் எங்களுக்கு சொந்தமானது’ என சொல்லியுள்ளார். இதில் ‘எப் பிரைவசி’ சார்ந்த தகவலையும் ஸ்க்ரீன் ஷோட்டாக பகிர்ந்துள்ளார். அதற்கு எலான் மஸ்க் ‘ஆம்’ என பதில் கொடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/261362

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த்ரெட்ஸ்: ட்விட்டருக்கு எதிரான ஃபேஸ்புக்கின் புதிய செயலி எப்படி இருக்கும்?

ட்விட்டருக்குப் போட்டியாக த்ரெட்ஸ்

பட மூலாதாரம்,META

 
படக்குறிப்பு,

த்ரெட்ஸ் செயலியின் தோற்றம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜேம்ஸ் க்ளெட்டன்
  • பதவி, வட அமெரிக்க தொழில்நுட்பச் செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீப காலமாக நிலையில்லாமல் தடுமாறி வரும் ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய செயலி ஒன்றை நாளை மறுநாள் அறிமுகப்படுத்துகிறது.

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலியின் பெயர் த்ரெட்ஸ் (Threads) என்பதாகும். இன்ஸ்டாகிராம் செயலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியை, ஐஃபோன் பயனர்கள் முன்பதிவு அடிப்படையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பெறலாம்.

த்ரெட்ஸ் செயலியின் பிரதான முன்பக்கம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது. 'எழுத்துகள் அடிப்படையில் உரையாடலுக்கான செயலி இது' என்கிறது மெட்டா நிறுவனம்.

ட்விட்டர் உரிமையாளர் ஈலோன் மஸ்க் - மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இடையே நீடிக்கும் போட்டியின் அடுத்தக்கட்டமாக இது பார்க்கப்படுகிறது.

 

கடந்த மாதம் இருவரும் நேரடியாக மோதிக் கொள்ள தயார் என்று கூறியிருந்தார்கள். உண்மையிலேயே அதனை நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களா என்பது தெரியவில்லை.

 
ட்விட்டருக்குப் போட்டியாக த்ரெட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் ஈலோன் மஸ்க்

ட்விட்டரை போன்ற தோற்றம்

'நல்லவேளை, அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறார்கள்' என்று த்ரெட்ஸ் குறித்த தனது கருத்தை ட்வீட் செய்திருந்தார் எலோன் மஸ்க்.

அதேநேரத்தில், ட்விட்டரில் பரவலாக பயன்படுத்தப்படும் டேஷ்போர்டான ட்வீட்டெக் (TweetDeck) வசதி அடுத்த 30 நாட்களுக்குள் பணம் செலுத்தி பெறும் ஒன்றாக மாறிவிடும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் பயனர்களை சந்தாதாரர்களாக மாற்ற ஈலோன் மஸ்க் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமையன்றுதான், ட்விட்டர் பயனர்கள் ஒரே நாளில் பார்க்கக் கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அவர் அறிவித்தார்.

அதேநேரத்தில், மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலியோ இலவசமாகவும், ட்விட்டர் போன்று பதிவுகளை பார்வையிடுவதில் எந்தவொரு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும் என்று தெரிகிறது.

"பல்வேறு சமூகத்தினரும் ஒரே இடத்தில் கூடி இன்றைய விஷயங்கள் குறித்தும் நாளைய ட்ரென்டிங் குறித்தும் விவாதிக்கும் இடமாக த்ரெட்ஸ் இருக்கும்" என்று ஐஃபோனில் உள்ள ஆப் ஸ்டோர் கூறுகிறது.

த்ரெட்ஸ் செயலியின் ஸ்க்ரீன்ஷாட்களை பார்க்கையில், அது கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே தென்படுகிறது.

இது மெட்டா நிறுவனத்தின் செயலி என்பதால், உங்கள் செல்போனின் தரவுகள், ப்ரவுசிங் ஹிஸ்டரி போன்றவற்றையும் த்ரெட்ஸ் பயன்படுத்திக் கொள்ளும்.

டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social), மஸ்டாடோன் (Mastodon) உள்பட அண்மைக் காலத்தில் ட்விட்டரைப் போன்றே தோற்றத்தில் ஒத்திருக்கும் பல செயலிகள் அறிமுகமாகியுள்ளன.

 
ட்விட்டருக்குப் போட்டியாக த்ரெட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்விட்டருக்கான மாற்றாக உருவெடுக்குமா த்ரெட்ஸ்?

ட்விட்டர் பயனர்களுக்கு ஈலோன் மஸ்க் கட்டுப்பாடுகளை அறிவித்த பின்னர், ப்ளூஸ்கை(Blusky) செயலியில் பயனர்களின் செயல்பாடு சாதனை அளவை எட்டியிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், ட்விட்டருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக த்ரெட்ஸ் உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.

மற்ற நிறுவனங்களின் யோசனைகளை வாங்கி அதனை மேம்படுத்தி வெற்றி பெறுவதில் மார்க் ஜூக்கர்பெர்க் கைதேர்ந்தர் என்பதை வரலாறு காட்டுகிறது.

மெட்டா நிறுவனத்தின் ரீல்ஸ் என்பது டிக்டாக் செயலியின் நகல் என்பது போல ஸ்நாப்சாட்டின் அப்பட்டமான நகலே ஸ்டோரிஸ் என்றும் பரவலாக கருதப்படுகிறது.

ட்விட்டருடன் போட்டியிடக் கூடிய அளவுக்கு மெட்டா நிறுவனத்திற்கு ஆதார வளம் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் ஒரு பகுதியாகவே த்ரெட்ஸ் இருக்கும். ஆகவே, இது பல கோடி பயனர்களுடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கும். ஆகவே, இது பூஜ்யத்தில் இருந்து தொடங்கப்படப் போவதில்லை. ட்விட்டருக்குப் போட்டியாக அண்மையில் தொடங்கப்பட்ட மற்ற செயலிகள் அந்த நிலையில்தான் இருந்தன.

பேச்சுரிமைக்கு குரல் கொடுத்தமைக்காக ஈலோன் மஸ்க் அண்மையில் புகழப்பட்டாலும், ட்விட்டரில் அவரது செயல்பாடுகள் அதற்கு மாறாகவே உள்ளன.

ட்விட்டரின் செயல்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த பயனர்களை இழுப்பதன் மூலம் ட்விட்டருக்கு சரியான மாற்றாக த்ரெட்ஸை உருவெடுக்கச் செய்ய முடியும் என்று ஜூக்கர்பெர்க் நம்புவதாக தெரிகிறது.

https://www.bbc.com/tamil/articles/cv28rv68ry6o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.