Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டி.ஐ.ஜி விஜயகுமார்
 
படக்குறிப்பு,

டி.ஐ.ஜி விஜயகுமார், கோவை சரகம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மோகன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 7 ஜூலை 2023, 04:15 GMT
    புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்

கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர் பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு பணியிலிருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல

யார் இந்த டி.ஐ.ஜி. விஜயகுமார்?

தேனியை பூர்விகமாக கொண்ட விஜயகுமார் ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். அந்த பணியிலிருந்த போதே ஐ.பி.எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் சென்னையில் அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்தார். அதன் பின்னை டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கோவை சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஆறு மாதங்களாக கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்துள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது சொந்த ஊரான தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

நேற்றைய தினம் இரவு காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார்.

கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக சக அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு கோவை மேற்கு மண்டல காவக் துறை தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மற்றும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார்.

விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான தேனியில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,M K STALIN

விஜயகுமார் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்." என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகுமார் தற்கொலை

முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகுமார் தற்கொலை பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழ்நாடு துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

"தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ்

பட மூலாதாரம்,RAMDOSS

பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை." என்று கூறியுள்ளார்.

"அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பொதுவாகவே காவல் பணி என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது தான். காவல் அதிகாரிகள் மன அழுத்தத்தை வென்றெடுக்க வேண்டுமே தவிர, அதற்கு இரையாகி விடக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை தீர்வல்ல

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

https://www.bbc.com/tamil/articles/c519y2dmx8lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் முக்கிய பொலிஸ்அதிகாரி மெய்பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து தன்னைதானே சுட்டுதற்கொலை-அதிர்ச்சியில் தமிழ்நாடு பொலிஸ்

07 JUL, 2023 | 10:02 AM
image
 
கோவைபொலிஸ்அதிகாரி  விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கபப்ட்டுள்ளது

 டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர்  பணியாற்றியுள்ளார்

சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிசிஐடி எஸ் பி ஆக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார்.

டிஐஜியின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையாக காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியை பிடுங்கி தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனைவியுடன் கோவையில் தான் வசித்து வந்த அவர்  இன்று காலையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின்னர் தற்கொலை செய்துள்ளார். நேற்று சக அதிகாரி ஒருவரின் மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகுமார். இன்று காலையில் சுமார் 6.50 மணியளவில் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/159410

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது ஏன்? - முழு விவரம்

டி.ஐ.ஜி விஜயகுமார்
 
படக்குறிப்பு,

டி.ஐ.ஜி. விஜயகுமார், கோவை சரகம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மோகன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 7 ஜூலை 2023, 04:15 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர் பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு பணியிலிருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரான தேனிக்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது உடலைக் கண்ட டிஐஜி விஜயகுமாரின் தாயார், தன் மகன் காவல்துறையில் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்ததாகக் கூறி கதறி அழுதார்.

தற்கொலை தீர்வல்ல

அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை ஐந்து மணிக்கு மேல் நடைபெறக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அவரது உடலுக்கு காவல்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயகுமார் மறைவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவருடைய உடலுக்கு காவல்துறை இயக்குநர் அஞ்சலி செலுத்தினார். காவல்துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் தனது மகன் பணியாற்றியதாகக் கூறியபடி டிஐஜி விஜயகுமாரின் தாயார் கண்ணீர்விட்டுத் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

ஒரேயொரு பிள்ளையும் என்னை விட்டுச் சென்றுவிட்டார். என் மகனை எந்தத் தெய்வமும் காப்பாற்றவில்லையே,” என்று டிஐஜியின் தாயார் கதறி அழுதார்.

டி.ஐ.ஜி விஜயகுமார்

“என் மகனை இழந்து நிற்கிறேன். அவன் ஒரு துரும்புக்கூட தீங்கு நினைக்காத என் மகனை இழந்துவிட்டு நிற்கிறேனே!” என்று விஜய்குமாரின் தாயார் ஆறுதல் கூற வந்த டிஜிபி சங்கர் ஜிவாலிடம் கண்ணீருடன் பேசினார்.

அவரின் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்ட விஜயகுமாரின் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் ஏராளமான அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகுமார் ஐபிஎஸ் நெருங்கிய நண்பர்கள் ஆன காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகுமாரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டிஐஜி விஜயகுமாரின் தாயாரை நேரில் சந்தித்து திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்
 
படக்குறிப்பு,

டிஐஜி விஜயகுமாரின் தாயாரை நேரில் சந்தித்து திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்

21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம் தேனி மாவட்டம் ரத்தினம் நகரில் நடைபெற்றது.

ரத்தினம் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் காவல்துறையினர் கால்நடையாகப் பங்கேற்றனர்.

டிஐஜியின் உடலை அலங்கார வாகனத்தில், டிஜிபி சங்கர் திவால் உட்பட பல காவல்துறை உயரதிகாரிகளே சுமந்து சென்று வைத்தனர்.

பொதுமக்களும் ஊர்வலத்தில் ஆங்காங்கே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வழிநெடுக, டிஐஜியின் உடலம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்துடனேயே அனைத்து காவல்துறையினரும் நடந்து சென்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், இறுதிச்சடங்கின்போது காவலர்கள் வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க துப்பாக்கிச்சூடு நடத்தி மரியாதை செலுத்தினர்.

யார் இந்த டி.ஐ.ஜி. விஜயகுமார்?

தேனியை பூர்விகமாக கொண்ட விஜயகுமார் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு முன்பு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். அந்த பணியிலிருந்த போதே ஐ.பி.எஸ். தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் சென்னையில் அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்தார். அதைத் தொடர்ந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கோவை சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஆறு மாதங்களாக கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்துள்ளார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது சொந்த ஊரான தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

இன்று காலை நடைப்பயிற்சி முடித்த பிறகு முகாம் அலுவலகத்துக்கு வந்த பிறகு, தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நேற்றைய தினம் இரவு காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார்.

கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக சக அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு கோவை மேற்கு மண்டல காவக் துறை தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மற்றும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார்.

விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான தேனியில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,M K STALIN

விஜயகுமார் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்." என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகுமார் தற்கொலை

சிபிஐ விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

"காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே திரு.விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை தூண்டப்பட்டதா? - அண்ணாமலை கேள்வி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கையில் பாஜக சார்பாக டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

"கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் மறைவு அனைவருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் 9 ஆண்டுகள் காவல்துறையில் இருந்தேன் என்பதால் எனக்கு கூடுதல் துக்கம். காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரிடமும் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் பெற்றவர்,” என்று தெரிவித்தார்.

வேறு மாநிலத்தில் நடப்பது தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது என்று கூறிய அவர், “மத்திய பாதுகாப்புப் படைகளில் அதிகாரிகள் தற்கொலையை பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் இது நடப்பது முதல்முறை. காவல்துறையில் உச்சகட்ட மன அழுத்தம் உள்ளது.

உயர் அதிகாரிகளுக்கு வேறு மாதிரியான மன அழுத்தம் இருக்கும். காவல்துறையை முதலில் சீரமைக்க வேண்டும். தமிழ்நாடு அதில் முன்னோடியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். காவல்துறையின் அழுத்தத்தை குறைக்க வேண்டும்,” என்று கூறினார்.

டிஐஜி விஜயகுமார்
 
படக்குறிப்பு,

டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை தூண்டப்பட்டதா என விசாரணை நடத்த வேண்டுமென்று கூறுகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

மேற்கொண்டு பேசியவர், “திமுக அரசு முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் அறிக்கையை பொது வெளியில் வைத்து அதில் உள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

விஜயகுமார் அவர்களின் மரணத்தை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்தத் தற்கொலை தூண்டப்பட்டதா என்பது உட்பட அனைத்தையும் விசாரிக்க வேண்டும்,” என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

காவல்துறையினரின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதோடு சேர்த்து குடும்பத்தின் தனியுரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த அண்ணாமலை, ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரியின் மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் கூறுவது சரியாக இருக்காது என்றும் கூறினார்.

“அதிகாரிகள் மீது உச்சபட்ச மன அழுத்தம் இருக்கிறது. காவலர்களுக்கு உடல் அழுத்தம் இருக்கும். உயர் அதிகாரிகளுக்கு அரசியல் உள்ளிட்ட அழுத்தம்தான் இருக்கும். தூண்டுதல் என்னவென்பதை விசாரிக்க வேண்டும்," என்றார்.

முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

டிஐஜி விஜயகுமார்
 
படக்குறிப்பு,

தற்கொலை செய்துகொண்ட விஜயகுமாரின் தாயாருக்கு ஆறுதல் கூறிய திண்டுக்கல் ஐ.பெரியசாமி

விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயகுமார் தற்கொலை பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழ்நாடு துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

"தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ்

பட மூலாதாரம்,RAMDOSS

பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

விஜயகுமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை." என்று கூறியுள்ளார்.

"அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பொதுவாகவே காவல் பணி என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது தான். காவல் அதிகாரிகள் மன அழுத்தத்தை வென்றெடுக்க வேண்டுமே தவிர, அதற்கு இரையாகி விடக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"வைராக்கியத்துடன் ஐபிஎஸ் தேர்வுக்கு தயாரானவர்"

ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் கருணாநிதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "விஜயகுமார் தமிழ்நாடு காவல் பணியில் இருந்த காலத்தில் இருந்தே எனக்கு அவரை தெரியும். சின்ன விஷயங்களை கூட சென்சிடிவ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடிய நபர். ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என வைராக்கியத்தோடு பணியிலிருந்து விடுப்பு பெற்று ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகினார். நல்ல முறையில் பணியாற்றக் கூடிய அதிகாரி. ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

"காவல்துறையில் அனைத்து நிலையில் பணி செய்பவர்களுக்கும் அழுத்தம் இருப்பது உண்மைதான் என்றாலும் விசாரணை அதிகாரிக்கு உள்ள அளவிலான பணி அழுத்தம் உயர் அதிகாரிகளுக்கு இருக்காது." என்றும் அவர் கூறியுள்ளார்.

குடும்பமோ, பணியோ காரணமில்லை - ஏடிஜிபி

கூடுதல் டி.ஜி.பி அருண்
 
படக்குறிப்பு,

கூடுதல் டி.ஜி.பி அருண்

சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண் கோவை அரசு மருத்துவமனை வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "2009ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்படுவதற்கு முன் 6 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் பணியில் வேலை செய்துள்ளார். எனக்கு நன்கு தெரிந்த அதிகாரி. பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றியவர். அவர் கடந்த சில வருடங்களாகவே மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரின் மருத்துவரிடமும் நான் பேசினேன். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கூட மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

இதனால் தான் அவரின் குடும்பத்தினரும் நான்கு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்து அவருடன் இருந்துள்ளனர். மன அழுத்தத்தினால்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இதில் வேறு எந்த காரணமும் இல்லை. இதை அரசியல் செய்ய வேண்டாம். காவல் துறையில் கீழ் நிலையில் இருந்து உயர் அதிகாரிகள் வரை உள்ளவர்களுக்கு மன உளைச்சலை போக்க கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

மன உளைச்சல் என்பது வேறு மன அழுத்தம் என்பது வேறு. அழுத்தம் என்பது தனியாக சிகிச்சை பெற வேண்டியது. இவர் அதற்கான சிகிச்சையும் மருத்துவமும் பெற்றுள்ளார். அதையும் மீறி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்த வகையில் அவருக்கு குடும்ப பிரச்சனையும் பணி சிக்கலோ எதுவுமில்லை. மருத்துவ காரணங்களால் தான் இவ்வாறு செய்துள்ளார். அவர் சிகிச்சையில் இருந்தார் என்பது தான் தற்போது தான் எங்களுக்கு தெரியவந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி, காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரும் அவருடன் பேசியுள்ளனர். தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தனிப்பட்ட ஒரு மரணம் தான். மற்ற காரணங்களை விசாரணைக்குப் பிறகு தெரிவிக்கிறோம்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c519y2dmx8lo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு டி.ஐ.ஜி விஜயகுமார் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கையின் முக்கிய தகவல்கள் - முழு விவரம்

டி.ஐ.ஜி விஜயகுமார்
 
படக்குறிப்பு,

டி.ஐ.ஜி. விஜயகுமார், கோவை சரகம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மோகன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 7 ஜூலை 2023
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவரது மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், அவர் நீண்ட நாட்களாக தூக்க மாத்திரையைப் பயன்படுத்தி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நேரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும் விளக்கியுள்ளது.

கோவை மாநகர் பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு பணியிலிருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்

தற்கொலை தீர்வல்ல

டிஐஜி விஜயகுமார் மரணம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தூக்கம் வரவில்லை என்பதற்காக நீண்ட நாட்களாகவே விஜயக்குமார் தூக்க மாத்திரையை உட்கொண்டு வந்ததாக அவரது பாதுகாவலர் ரவிச்சந்திரன் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தான் தங்கியிருந்த அறைக்கு காலை 6.40 மணிக்கெல்லாம் வந்த விஜயகுமார், தன்னுடைய தூப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்துக் கேட்டார்.

பின்னர், துப்பாக்கியுடன் அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் ரவிச்சந்திரன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் வெளியே வந்து பார்த்தபோது விஜயகுமார் தலையில் ரத்தக் காயத்துடன் கிடந்ததாகக் கூறியுள்ள ரவிச்சந்திரன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, வரும் வழியிலேயே விஜயக்குமார் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஐஜி விஜயகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்திய காவல்துறையினர்
 
படக்குறிப்பு,

டிஐஜி விஜயகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்திய காவல்துறையினர்

டிஐஜி விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டபோது, அவரது தாயார், தன் மகன் காவல்துறையில் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்ததாகக் கூறி கதறி அழுதார்.

அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை ஐந்து மணிக்கு மேல் நடைபெறக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அவரது உடலுக்கு காவல்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயகுமார் மறைவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவருடைய உடலுக்கு காவல்துறை இயக்குநர் அஞ்சலி செலுத்தினார். காவல்துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் தனது மகன் பணியாற்றியதாகக் கூறியபடி டிஐஜி விஜயகுமாரின் தாயார் கண்ணீர்விட்டுத் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

ஒரேயொரு பிள்ளையும் என்னை விட்டுச் சென்றுவிட்டார். என் மகனை எந்தத் தெய்வமும் காப்பாற்றவில்லையே,” என்று டிஐஜியின் தாயார் கதறி அழுதார்.

டி.ஐ.ஜி விஜயகுமார்

“என் மகனை இழந்து நிற்கிறேன். அவன் ஒரு துரும்புக்கூட தீங்கு நினைக்காத என் மகனை இழந்துவிட்டு நிற்கிறேனே!” என்று விஜய்குமாரின் தாயார் ஆறுதல் கூற வந்த டிஜிபி சங்கர் ஜிவாலிடம் கண்ணீருடன் பேசினார்.

அவரின் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்ட விஜயகுமாரின் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் ஏராளமான அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகுமார் ஐபிஎஸ் நெருங்கிய நண்பர்கள் ஆன காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகுமாரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டிஐஜி விஜயகுமாரின் தாயாரை நேரில் சந்தித்து திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்
 
படக்குறிப்பு,

டிஐஜி விஜயகுமாரின் தாயாரை நேரில் சந்தித்து திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்

21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

டிஐஜி விஜயகுமாரின் இறுதி ஊர்வலம் தேனி மாவட்டம் ரத்தினம் நகரில் நடைபெற்றது.

ரத்தினம் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் காவல்துறையினர் கால்நடையாகப் பங்கேற்றனர்.

டிஐஜியின் உடலை அலங்கார வாகனத்தில், டிஜிபி சங்கர் திவால் உட்பட பல காவல்துறை உயரதிகாரிகளே சுமந்து சென்று வைத்தனர்.

பொதுமக்களும் ஊர்வலத்தில் ஆங்காங்கே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வழிநெடுக, டிஐஜியின் உடலம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்துடனேயே அனைத்து காவல்துறையினரும் நடந்து சென்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், இறுதிச்சடங்கின்போது காவலர்கள் வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க துப்பாக்கிச்சூடு நடத்தி மரியாதை செலுத்தினர்.

https://www.bbc.com/tamil/articles/c519y2dmx8lo

  • கருத்துக்கள உறவுகள்

அதிகார அழுத்தங்கள் தரும் மன உளைச்சல்கள்!

-சாவித்திரி கண்ணன்

358560458_6153595904749279_4284580176490

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது! அரசாங்க வேலைகள் என்பவை மன உளைச்சல் தரும் வேலையாக மாறி வருகிறது. அதீத பணிச் சுமை, அதிகார அழுத்தங்கள், பணி இடமாறுதல்கள், மேலிட நெருக்குதல்கள்..என அரசுப் பணி என்பது  ஏன் மன நிம்மதியை இழக்க வைக்கிறது..?

விஜயகுமாரின் கடைசி வீடியோ உரை திருவாரூர் மாவட்டத்தை பிரிய மனமில்லாமல் அவர் பிய்த்து கோவை கொண்டு வரப்பட்டுள்ளரோ… என்ற ஐயத்தை ஏற்ப்படுத்துகிறது. ஜனவரி மாதம் தான் கோவை சரகத்தில் அவர் வேலை சேர்ந்துள்ளார். அது முதல் தான் அவருக்கு மன உளைச்சல் எனத் தெரிய வருகிறது. தூக்க மாத்திரை உட்கொண்டு தான் தினமும்  உறங்க வேண்டியவராக இருந்துள்ளார். நேர்மையான அதிகாரியாக செயல்பட்ட அவர் சாவுக்கான உண்மையான காரணம் வெளிப்படுமா? அல்லது ஊமையாக்கப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும்.

காவல்துறையை பொறுத்த வரை அது விடுமுறை இல்லாத பணியாகவே உள்ளது. மேலதிகாரி கீழ் நிலையில் உள்ள வரை அடக்கி ஆளும் துறையாகவே உள்ளது. மனித உரிமைகளை பேச முடியாதவர்களாகவே காவல்துறையினர் உழல்கிறார்கள். காவல் துறையில் தற்போதும் கூட, சுமார் 20,000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன. காவல்துறை சீர்திருத்தம் குறித்து நீதியரசர் சி.டி.செல்வம் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அதை தூசிதட்டி எடுக்க வேண்டிய தருணத்தை அரசு உணர வேண்டும்.

இன்றைக்கு அரசு பணியில் உள்ள பலர் இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்! மேலதிகாரிகள் தரும் அதிகார அழுத்தங்கள், கூடுதல் பணிச்சுமை, உழைப்பையும், திறமையையும் மதியாத சூழல், தேவையில்லாத பணி இடமாறுதல் போன்றவற்றால் அரசு ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் மன உளைச்சலிலேயே உழன்று கொண்டுள்ளனர்.

1019378-office.jpg

இத்துடன் தற்போது அரசுத் துறைகளில் சுமார் 30 முதல் 40 சதவிகித பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் கூடுதல் பணிச் சுமையை இருப்பவர்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது! இப்படி தங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களின் வேலை நெருக்கடியை உணராமல் வேலையை உடனே செய்யச் சொல்லி வற்புறுத்தி காலக்கெடு நிர்ணயிப்பதும் நடக்கிறது. இதனால், எட்டு மணி நேரப் பணி 12 மணி நேரமாக அதிகரிக்கிறது! அலுவலகமே கதி என வேலை செய்யும் சூழலில் குடும்பத்தில் பல பிரச்சினைகளுக்கும் இது வழி வகுக்கிறது.

இப்படி கூடுதல் வேலை செய்யும் அப்பாவிகளின் வலியை உணராமல், ‘காலி பணியிடங்களை நிரப்ப வேண்டியதில்லை. ..அது தான் வேலை நடக்கிறதே.. பிறகெதற்கு?’ என்ற போக்குள்ளவர்களாக உயர் அதிகாரிகள் மாறிவிடுகிறர்கள்!

அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களின் பணிச் சுமைகள் சொல்லி மாளாது. கட்டுக்கடங்கா எளியோர் கூட்டம் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறது! இந்தக் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் மருத்துவமனைகளையோ, பணி இடங்களையோ அதிகப்படுத்தாத நிலை நிலவுகிறது. பயிற்சி மருத்துவராக பணிக்கு வரும் போதே இளம் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைக்கு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இந்தச் சூழல் காரணமாக சமீபத்தில் நான்கு இளம் மருத்துவர்கள் அதீதப் பணிச் சுமையால் உயிர் இழந்த விவகாரம் போதுமான கவனம் தராமல் கடக்கப்பட்டுவிட்டது.

Hospitals.jpg

தங்கள் சக்திக்கு மீறிய கூடுதல் வேலைகள் செய்யும் போது பல தவறுகள் ஏற்பட வாய்ப்பாகிறது! அதன் வலியை நோயாளிகள் தான் சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. சமீபத்தில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு பச்சிளம் குழந்தையின் கை அகற்றப்பட்டது! இதற்கு ஏதேதோ பல காரணங்களை சொல்லி அரசு சமாளித்தது.

அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை ரொம்ப அதிகமாகவே உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து இறுதியில் போதுமான மாணவர் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படுவதும் நடக்கிறது.மேலும் ஆர்சு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத நிர்வாக வேலைகளும் திணிக்கப்படுகிறது. அரசு புதுப் புது திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்கேற்ப மேன்பவர் வேண்டுமே என்ம்பதைப் பற்றி துளியும் யோசிக்க மறுத்து இருப்பவர்களைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்கிறது. இதனால் மாணவர்களுக்கான ஆசிரியர் அங்கு அதிகாரிகளுக்கான ஆசிரியராகிப் போகிறார். இதனால், மாணவர்களின் கல்வி உரிமையே கேள்விக்கு உள்ளாகிறது.

மற்றொரு சமீபத்திய பிரச்சினை ஓய்வு பெறும் வயதைக் கூடுதலாக்கியது. பொதுவாக தற்போது ஐம்பத்தைந்து வயதிலேயே பலருக்கு ஒரு தளர்வு வந்துவிடுகிறது! மாத்திரை, மருந்துகளுடன் தான் அலுவலகம் வருகின்றனர். வயதை அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டு வேலையையும் சரியாக செய்வதில்லை. அதுவும் பள்ளியாக இருந்தால், மாணவர்களுக்கு உற்சாகமாக பாடம் எடுக்க முடியாமல், ”நீங்களாக படிங்க, சந்தேகம் வந்தால் கேளுங்க..” என்று சொல்லி சும்மா அமர்ந்து விடுகின்றனர். பலபேர் அடிக்கடி ‘மெடிகல் லீவ்’ எடுக்கின்றனர். 55 வயதிற்கு மேல் இன்றைய மனிதர்கள் தங்களுக்கு தாங்களே சுமையாகிவிடுகின்றனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 என சரியாகத் தான் இருந்தது. கொரானா காலகட்டத்தில் இந்த ஓய்வு வயதை அதிமுக அரசு ஓய்வூதிய பணம்,செட்டில்மெண்ட் தரமுடியாமல் 59 ஆக மாற்றியது. திமுக அரசோ ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திவிட்டது. இதை மறுபடியும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் சுமார் ஒன்றேகால் கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

தமிழக அரசை பொறுத்த வரை சமூக நலத்திட்டங்கள் என்ற போர்வையில் ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக எக்கசக்க திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு வருமானத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் இந்த இலவச திட்டங்களுக்கு செலவாகி விடுகிறது. இதனால், தேவையான அடிப்படை வேலைகளுக்கு கூட ஆட்கள் நியமனமின்றி, ஒப்பந்தக் கூலி முறையில் பல வேலைகளை உருவாக்குகிறார்கள். இது மிகவும் தவறாகும். அரசியல்வாதிகளின் அதிகார ஆசைக்கு அரசு நிர்வாக கட்டமைப்பே பலியாகியுள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/14161/power-pressure-in-govt-jobs/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Coimbatore DIG Vijayakumar Death: யார் இவர்? என்ன நடந்தது? தமிழகத்தில் பரபரப்பு ஏன்?

கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படும் நிகழ்வு  அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருவதோடு, இறப்புக்கான காரணத்தை அறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.