Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை சிங்கள பௌத்த நாடென்பதை முல்லைத்தீவு நீதிபதி மறந்து விடக்கூடாது - சரத் வீரசேகர எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

07 JUL, 2023 | 04:10 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.

அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள்.

ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற வானூர்திமூலம்  ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

தேசிய நல்லிணக்கத்துக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

இலங்கை சிங்கள பௌத்த நாடு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருடகால பழமையான தொல்பொருள் மரபுரிமைகள் பரவலாக காணப்படுகின்றன. குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் உள்ளன.

குருந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்த போது அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு குறிப்பிட்டார்.

அத்துடன் குருந்தூர் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வருகை தந்த பௌத்த தேரரையும் வெளியேறுமாறு குறிப்பிட்டார். நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

குருந்தூர் மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரம் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் குருந்தூர் மலையில் இருந்து வெளியேறுமாறு குறிப்பிடும் அதிகாரமும் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு ஒருசில நீதிபதிகளும் ஆதரவு வழங்குகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்பதையும் உயரிய சபை ஊடாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலம் உட்பட மத அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குருந்தூர் மலையிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றால் ஏன் பௌத்த மத மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலத்தை அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/159453

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியோடு தொடர்புடைய திரி.

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற சிறப்புரிமையை வைத்துக்கொண்டு நீதிபதிக்கு எதிராக பேசுகிறார் என்று நினைக்கிறேன். வெளியில் வந்து அப்படி பேச மாடடார். இருந்தாலும் வெளியில் அப்படி பேசினாலும் , தமிழ் நீதிபதி என்பதனால் சடடம் எந்தளவுக்கு நடவடிக்கை என்று கூறமுடியாது.

எப்படி இருந்தபோதும்  இவரது இந்த இனவாத கருத்துக்கள் எந்த காலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் நன்றாகவே எடுபடும். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.

சரத்  வீர சேகர ஒரு அறிவுகெட்ட, வெறி பிடிச்ச, அரசியல் இனவாதி. குருந்தூர் மலை விவகாரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அதனாலேயே நீதிபதி அங்கு சென்றார், சட்டத்தின் பிரகாரம் அங்கு சரத் வீரசேகரவுக்கு  என்ன வேலை? குழப்பத்தை உருவாக்க சென்ற ரவுடியை பிடித்து உள்ளுக்குள் போட்டிருக்கவேண்டும். இது கூடத்தெரியாமல் உளறுது.

19 hours ago, ஏராளன் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.

சரித்திரம் தெரியாத அறிவிலிகளின் கற்பனை!

19 hours ago, ஏராளன் said:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள்.

வழக்கொழிந்த தமிழரின் பௌத்த தொல்பொருட்களுக்கு சிங்களம் வலுக்கட்டாயமாக உரிமை கோரி நாட்டை அழிக்கிறார்கள்.

19 hours ago, ஏராளன் said:

பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

முதலாவது தடவை இனவாதம் பேசி இனக்கலவரத்தை ஏற்படுத்தி நாடு வங்குரோத்து அடைந்து பிச்சை எடுக்குது, காதானாயகர்கள் அடித்து விரட்டப்பட்டு விட்டார்கள். அதனால் பாதிப்படைந்தது பொது மக்களே. இப்போது மதவாதத்தை தூக்கி மீண்டும் மக்களை உசுப்பேற்றி மதக்கலவரத்தை ஏற்படுத்தி கொழுத்தி குளிர் காய கூவுகிறார். அப்படி சிங்கள மக்கள் தமிழருக்கெதிராக திரண்டால்; பௌத்தம் இலங்கையில் இல்லாது துடைத்தெறியப்படும். பிக்குகள்  இது சிங்கள பௌத்தநாடு, தமிழருக்கு உரிமை வழங்கினால் மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடும், கலவரம் வெடிக்கும், கொளுத்துவோம் என்கிறார்கள். அரசியல்வாதிகள்  எச்சரிக்கிறார்கள். இதிலிருந்து நாட்டில் என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதற்கான சகல ஆதாரங்களும் கொடுக்கிறார்கள். பிறகு எதற்கு இவர்களை விளக்கம்  கேட்பதும்  நடைமுறைப்படுத்துங்கள் என அவகாசம் கொடுத்து காத்திருக்கிறார்கள்? சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கினால் நாட்டில் நல்லிணக்கம் கெட்டுவிடுமாம். விசித்திரமான விளக்கம். நல்லிணக்கம் இருந்திருந்தால் ஏன் போராட்டம் நடைபெறுகிறது என கேள்வி கேட்க யாருக்கும் தெரியவில்லை, எதை நல்லிணக்கம் என்கிறீர்கள் என்று கேட்க யாருக்கும் தோன்றவில்லை, அச்சுறுத்தி அடிமைப்படுத்தி அவர்களது நிலங்களை உரிமைகளை பறிப்பதற்கு பெயர் நல்லிணக்கமா என கேட்க யாருக்கும் தைரியமில்லை, பின், எதற்கு கூடுகிறார்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? தமிழர் நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும்வரை கூடுவார்கள், அதை விரைவு படுத்துவதற்காக.

19 hours ago, ஏராளன் said:

தேசிய நல்லிணக்கத்துக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

குருந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்த போது அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு குறிப்பிட்டார்.

  அப்போ நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என விதண்டாவாதம் பண்ணுவது? அவரின்  சட்ட  அறிவின்மைக்கு தக்க சான்று அவர் வாயாலேயே வந்துள்ளது. அது கூட புரியாமல் அலப்பறை பண்ணுது. 

19 hours ago, ஏராளன் said:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றால் ஏன் பௌத்த மத மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலத்தை அமைக்க வேண்டும்.

தமக்கு விரும்பியதை  ஏற்கவும், கைவிடவும் அந்த பிரதேச மக்களுக்கு உரிமை உண்டு. அதை கேள்வி கேட்கவோ, தடுக்கவோ இவருக்கு  அதிகாரமுமில்லை உரிமையுமில்லை. இதுகூட  தெரியாமல் சர்வாதிகாரம் பண்ணிக்கொண்டு ஜனநாயகம், நல்லிணக்கம் பேசும்  இது போன்ற முட்டாள்கள் அரசியலில் இருப்பதாலேயே நாடு அழிகிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரவின் கருத்துக்கள் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் - தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடும் கண்டனம் 

Published By: NANTHINI

08 JUL, 2023 | 05:08 PM
image
 

(நா.தனுஜா)

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கையை சிங்கள பௌத்த நாடு என்று கூறும் அவர் முதலில் சரித்திரத்தை சரியாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் சாடியுள்ளனர்.

'குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது. 

தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும். 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகின்றார்கள். ஆகவே, பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணையவேண்டும்' என வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்தை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சரத் வீரசேகர எப்போதும் இனவாத கருத்துக்களையே வெளியிட்டுவருவதாக சுட்டிக்காட்டினார். 

MA-Sumanthiran-720x450-1.jpg

அத்தோடு, 'குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னணியிலேயே, அதனை பார்வையிடுவதற்காக நீதிபதி அங்கு பிரசன்னமானார். 

அவ்வாறிருக்கையில், தனது பணியைச் செய்த நீதிபதியொருவரை பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி இவ்வாறு விமர்சிப்பது ஏற்புடையதல்ல' என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

C.V._Vigneswaran.jpg

அதேவேளை இதுபற்றி கருத்து வெளியிட்ட முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தன்னை ஒரு சிங்கள அபிமானியாகவும், சிங்கள தேசியவாதியாகவும் காண்பித்துக்கொள்ளும் சரத் வீரசேகர கூறுகின்ற கருத்துக்களை தாம் ஏற்றுக்கொள்வதில்லை என்றும், சரித்திரத்தை அறிந்துகொள்ளாமல் 'இலங்கை சிங்கள பௌத்த நாடு' என்று அவர் கூறுவது அவரது அறியாமையையே காண்பிக்கிறது என்றும் தெரிவித்தார்.

'சரத் வீரசேகரவுக்கு தன்னை ஒரு சண்டியர் போன்று காண்பித்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்ற அவர், முதலில் சரித்திரத்தை அறிந்துகொள்ளவேண்டும். துட்டகைமுனு சிங்களவர் அல்ல என்பதை அவர் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரே விடயத்தை நூறு முறை கூறுவதால் அது உண்மையாகிவிடாது. அதேபோன்று நீதிபதியை அவமதிக்கும் விதமாக சரத் வீரசேகர கூறியிருக்கும் கருத்துக்கள் மிக மிகக் கேவலமானவையாகும்' என்றும் விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டார்.

மேலும், 'பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள இனவெறிக்கருத்தை கடுமையாக கண்டிக்கிறோம்' என்று குறிப்பிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் இதுபற்றி மேலும் கூறியதாவது:

Selvaraja-Kajendran-400x240.jpg

குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதியொருவரின் தலையீட்டை வாய்ப்பாக பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை தூண்டிவிடுவதற்கே சரத் வீரசேகர முயற்சிக்கின்றார். 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகை தந்திருந்த அன்று நானும் அவ்விடத்தில் இருந்தேன். அன்றைய தினம் நீதிபதி சரத் வீரசேகரவை அப்பகுதியிலிருந்து வெளியேற்றவோ அல்லது பார்வையிட தடை விதிக்கவோ இல்லை. மாறாக, அங்கிருந்து வெளியே வந்து கருத்துக்களை வெளியிடுவதற்கு மாத்திரமே அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில் இத்தகைய கருத்தை வெளியிடுவது என்பது நீதிபதியை அச்சுறுத்தி, அவர் சுயாதீனமாக செயற்படுவதை தடுப்பதுடன் இவ்வழக்கு விசாரணைகளிலிருந்து அவரை விலகச்செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். 

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவின் இக்கருத்துக்கள், இலங்கையின் அரச இயந்திரம் எந்தளவுக்கு இனவெறிப்போக்கில் இயங்குகிறது என்பதற்கான பிந்திய உதாரணமாகும். 

எனவே, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படும் சரத் வீரசேகர உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும் என்பதுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/159533

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக வாழப் பழக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக வாழப் பழக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார்.

மஹிந்தானந்த அப்படி பேசி இருந்தாலும், அதட்கு காரணம் இருக்கின்றது. சரத் வீரசேகரா பேசியதைப்போல சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் (மனோ , சாணக்கியன் etc )  பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அதே கோணத்தில் பேசி விடடால் பெரிய பிரச்சினையாக முடிந்து விடும். எனவே இதனை சமாளிக்கத்தான் இந்த பேசிச்சுக்கள். சரத் வீரசேகராவால் வெளியில் அப்படி பேச முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

Published By: VISHNU

11 JUL, 2023 | 02:42 PM
image
 

அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (11)  ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் சுலோகங்களில் பல்வேறு வாசகங்களை எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

qadf__23_.jpg

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

qadf__8_.jpg

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தேவையில்லாமல் மூக்கை  நுழைத்து வாங்கிக் கட்டினார்.

அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து அகற்றினார்.

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களிற்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

https://www.virakesari.lk/article/159739

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே ” - சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக அணிதிரண்ட சட்டத்தரணிகள்

Published By: VISHNU

11 JUL, 2023 | 04:10 PM
image
 

பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டண போராட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) காலை  முன்னெடுத்தனர்.

 

 

received_1016991373004800.jpeg

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 04.07.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்த போது அங்கு அங்கு வருகை தந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

received_1614330792407580.jpeg

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சரத் வீரசேகர கடந்த 07.07.2023 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ் நீதிபதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

received_1402429793933378.jpeg

இவ்வாறான பின்னணியில்  தமிழ் நீதிபதிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

received_1286775855293863.jpeg

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கினுடைய ஏனைய மாவட்டங்கள்  கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள்  இணைந்து முல்லைத்தீவு  மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

received_669232601742147.jpeg

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பாராளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே!, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக!, கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே!, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே !, தலையிடாதே! தலையிடாதே! நீதித்துறையின் சுதந்திரத்தில்!, நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?,  சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட ! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

received_934325667867736.jpeg

இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

received_832473818214452.jpeg

received_665065681710567.jpeg

received_581006347293782.jpeg

received_651905873230038.jpeg

received_589067750067112.jpeg

received_305066681953660.jpeg

received_288259190427675.jpeg

received_300041242444869.jpeg

received_270388092349868.jpeg

received_211227661481668.jpeg

https://www.virakesari.lk/article/159749

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரவின் கருத்து நீதிமன்றத்தின் மீதான மிகமோசமான தாக்குதல் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

Published By: VISHNU

11 JUL, 2023 | 04:20 PM
image
 

(நா.தனுஜா)

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து நாட்டின் மிகமுக்கிய அடிப்படைக்கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிகமோசமான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்றத்தை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிப்பதென்பது துடிப்பான ஜனநாயகத்தின் நிலைத்திருப்புக்கு அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய சரத் வீரசேகர எம்.பி, 'குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது.

தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள, பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ளவேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகின்றார்கள்.

ஆகவே பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணையவேண்டும்' என்று அழைப்புவிடுத்திருந்தார். அவரது கருத்து பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தோற்றுவித்திருந்த பின்னணியிலேயே, சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் ஊடாக மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுடன் நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றோம்.

இருப்பினும் அண்மையகாலங்களில் அதிகரித்துவரும் நீதிமன்றத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கும் போக்கு, மேற்கூறப்பட்ட முக்கிய கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதில் அச்சறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.

அண்மையகாலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமக்குரிய பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் கருத்து வெளியிடும் போக்கு மேலோங்கிவருவது குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகின்றோம்.

குறிப்பாகக் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்தை நாட்டின் மிகமுக்கிய அடிப்படைக்கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிகமோசமான தாக்குதலாகவே நாம் கருதுகின்றோம்.

நீதிமன்றக்கட்டமைப்பை எவ்வித வெளியக அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும், தலையீடுகளுமின்றி சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிப்பதென்பது துடிப்பான ஜனநாயகத்தின் நிலைத்திருப்புக்கு இன்றியமையாதது என்பதே எமது நிலைப்பாடாகும். நீதிமன்ற சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக்கோட்பாடுகளும் அதனையே பிரதிபலிக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத்தின் சுதந்திரத்துக்கு இடமளிப்பதும், மதிப்பளிப்பதும் அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்பு ஆகியவற்றின் கடமை என்பதுடன் நீதிமன்ற செயற்பாடுகள் மீதான எந்தவொரு தலையீடும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/159756

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.