Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம்: யாழ். அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (16.07.2023) நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது முக்கியமான அவசியமான பணியாகவுள்ளது.

சமகால வரலாற்று நிகழ்வுகளை அது நிகழ்ந்த நாட்டிலே பேணிக்கொள்ள முடியாத நிலையில் அயல் நாட்டிலும் வெளிநாட்டிலும் நினைவகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றாம்.

வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம்: யாழ். அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு | Historical Landmarks In Sri Lanka

பாதுகாக்க தவறி விட்டோம்

இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே எமது சின்னங்களை பாதுகாத்தால் தான் எதிர்காலச் சந்ததிகளுக்கு கடத்த முடியும்.

அண்மையில் காலிக் கோட்டையில் இருக்கும் அடையாளச் சின்னங்களை பார்வையிட்டேன், அங்கு நயினாதீவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கல்வெட்டொன்று காணப்பட்டது.

அப்போது நான் நாம் அதை பாதுகாக்க தவறி விட்டோம் என எண்ணினேன்.

வீதியோரங்களில் காணப்படும் கட்டடங்கள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் போன்றன அபிவிருத்திகளின் போது அகற்றப்பட்டுவிட்டன. பல அகற்றப்படத் தயாராகவுள்ளன.

வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம்: யாழ். அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு | Historical Landmarks In Sri Lanka

விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்

வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் எமது வரலாறு எமது சந்ததிக்கு எந்தளவு பொறிக்கப்படுகின்றது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் கவலையான விடயம்.

கல்விப் புலம் சார்ந்தவர்கள் எமது சந்ததிக்கு இதை அறிய உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தக் காரியங்களை செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கடந்த ஆறு மாத காலத்தில் அறிந்து கொண்டேன்.

எது எவ்வாறாயினும் இவ்வாறான மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம்: யாழ். அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு | Historical Landmarks In Sri Lanka

மன்னர்கள் கட்டிய கோயில்கள்

மேலும் இந்த நிகழ்வில், வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலங்கள் பற்றி எமக்கிருக்கின்ற சான்றாதாரங்களாக இலக்கியங்களும் தோரண வாயில் போன்ற சான்றுகளும் இன்றும் எம் கண்முன்னே இருக்கின்றன.

யாழ்ப்பாண வைபவ மாலையில் ஆண்ட மன்னர்கள் கோயில்களை எவ்வாறு கட்டினார்கள் என்பதை ஆராய்வதற்கு உதவியாக உள்ளது.

வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம்: யாழ். அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு | Historical Landmarks In Sri Lanka

வரலாற்று அடையாளச் சின்னங்கள்

கடைசி மன்னனான சங்கிலி மன்னன் வீழ்ந்த காலத்திலிருந்து நாம் இடப்பெயர்வுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மன்னன் என்று வீழ்ந்தானோ அன்று முதல் எங்கள் இனம் சுதந்திரமின்றி விடிவின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது.

மொழிக்காக இனத்திற்காக பண்பாட்டிற்காக பலர் தமது உயிரையும் வாழ்வையும் அர்ப்பணித்தனர். எனவே அடையாளச் சின்னங்களை நாம் காப்பாற்றவில்லையெனின் அது துர்ப்பாக்கிய நிலைக்குரியது.

எம் மத்தியில் பல வரலாற்று அடையாளச் சின்னங்கள் காணப்பட்டாலும் அதை அறியாமல் பலருள்ளனர். யமுனா ஏரிக்கு அண்மையிலே நல்லூர் ஆலய அத்திவாரம் காணப்பட்டது. ஆனாலும் இன்று அங்கு தேவாலயம் எழுந்து நிற்கின்றது.

வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம்: யாழ். அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு | Historical Landmarks In Sri Lanka

நாவற்குழியில் அரும்பொருட்காட்சியகம்

35 ஆண்டுகளாக சேர்த்த தொன்மைப் பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகங்களை அமைக்க அரசியல் தலைவர்கள் உட்பட பலரிடம் உதவி கோரிய போதும் யாரும் முன்வரவில்லை.

இறுதியில் பாரிய முயற்சியில் நாவற்குழியில் அரும்பொருட்காட்சியகம் அமைக்கப்பட்டது. அங்கு 23 தமிழ் மன்னர்களுக்கு சிலை வைத்து வரலாறுகளைப் பொறித்தோம்.

அதற்காக பல முறை யார் அந்த மன்னர்கள் எனவும் எங்கிருந்து நிதி பெறப்பட்டதென விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

மரபுரிமைச் சொத்து அரசியலுக்கானதல்ல இனத்திற்கானது. வரலாற்று அடையாளங்களை சரியாகப் பேணாவிட்டால் அதை புனைவதற்கு ஒரு அணி தயாராகவுள்ளது.

எனவே வரலாற்று தொன்மைகளைப் பாதுகாக்க அனைத்து கல்விமான்களும் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/historical-landmarks-in-sri-lanka-1689559424

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படும் நிலை - ஆறு திருமுருகன் எச்சரிக்கை

தமிழர்களின் வரலாற்று அடையாளச் சின்னங்கள் பறி போய்க்கொண்டிருக்கின்ற சூழலில் அதனைப் பாதுகாக்க வேண்டியது அவசியமெனவும், தவறினால் வரலாறுகள் புனையப்பட்டு அழிக்கப்படும் நிலைமை ஏற்படுமெனவும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் (செஞ்சொற்செல்வன்)  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நேற்று (16) மாலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சங்கிலியன் தோரண வாசல் 

தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படும் நிலை - ஆறு திருமுருகன் எச்சரிக்கை | The Identity Symbols Of Tamils Are Disappearing

அவர் மேலும் தெரிவிக்கயைில் 

''நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டது போன்று ஏனைய வரலாற்று மரபுரிமைச் சின்னங்களும் புனரமைக்கப்பட்டு அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இங்குள்ள மந்திரி மனையை அடையாளப்படுத்தி காப்பாற்றுவது போன்று ஏனைய வரலாற்று அடையாளச் சின்னங்களையும் அடையாளப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் எல்லாம் பறிபோகின்றது, எனவே வரலாற்று அடையாளங்களை நாங்கள் சரியாகப் பேணாவிட்டால், அதைப் புனைந்து அழிக்க நெருங்கி விடுவார்கள்.

அடையாளச் சின்னங்கள்

தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படும் நிலை - ஆறு திருமுருகன் எச்சரிக்கை | The Identity Symbols Of Tamils Are Disappearing

இவ்வாறு எமது பாரம்பரிய வரலாற்று அடையாள சின்னங்களை பாதுகாக்க யாழ் பல்கலைக்கழக சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எங்கள் அடையாளச் சின்னங்கள் எங்கிருந்தாலும் கல்வெட்டுக்கள் போடுங்கள், அதைவிடுத்து எதுவும் இல்லாமல் அது இது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பாரம்பரிய அடையாளங்களை சொல்வதற்கு எம்மவர்களிடத்தே பொறுமை இல்லை. அந்தப் பொறுமையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என அவர் மேலும் தெரிவித்தார்.

https://ibctamil.com/article/the-identity-symbols-of-tamils-are-disappearing-1689563188

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறப்பு

11-6.jpg

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரணவாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தால் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது .

மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அந்த மரபுரிமை சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயல் திட்டம் இதுவாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தனது சொந்த நிதியில் தோரண வாசலை புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

14-2-300x200.jpg12-4-300x200.jpg

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரதீப், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், சிவபூமி அறக் கட்டளை நிறுவுநர் ஆறு.திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் யு.ஏ.பந்துல ஜீவவும் கௌரவ விருந்தினர்களாக யாழ் மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

13-1.jpg

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், அரசியல் தலைவர்கள், மூத்த கல்விமான்கள், தொல்லியல் துறை உத்தியோகத்தர்கள், தொல்லியல் மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவை தொடர்ந்து மந்திரி மனை வாளகத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றன.

https://thinakkural.lk/article/263605

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் முதலாவது பணியை நிறைவு செய்துள்ளோம் - முன்னாள் முதல்வர் மணிவண்ணன் பெருமிதம்

Published By: VISHNU

18 JUL, 2023 | 03:44 PM
image
 

மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில்  வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் யாழ். மரபுரிமை  மையத்தின்  உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை ஞாயிற்றுக்கிழமை (16) மாலை திறந்து வைத்து தலைமை உரையை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்காக மரபுரிமைகளை பாதுகாக்கும் மையத்தை  இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிறுவியிருந்தோம்.

எமது அமைப்பினை நிறுவும்போது பலர் யோசித்தார்கள் இந்த அமைப்பு நிறுவியதுடன் அதன் செயற்பாடுகளும் முடிந்து விடும் என நினைத்தவர்களுக்கு எமது  வரலாற்றின் முதல் பணியை செய்து முடித்துக் காட்டியுள்ளோம்.

சங்கிலியன் தோரணை வாயிலை யாழ். மரபுரிமை மையம் புனரமைக்க வேண்டும் என யோசித்தபோது யாரிடம் நிதி கேட்பது எம்மை நம்பி நிதி தருவார்களா என்ற சந்தேகங்கள் இருந்தது.

வைத்திய கலாநிதி ரவிராஜ் மரபுரிமை பாதுகாப்பு அமைப்பின் உப தலைவராக இருக்கின்ற நிலையில் நாங்களே முன் உதாரணமாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைப்போம் அதற்கு நான் நிதி தருகிறேன் என்றார்.

அவரின் பெருந்தன்மையும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் தமிழர் வரலாற்றின் எச்சமான சங்கிலியன் தோரண வாயிலை  புனரமைக்க முடிந்தது.

வைத்திய கலாநிதி ரவிராஜ் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் எமது மண்ணிலே நின்று மக்களுக்கு சேவையை வழங்கிய ஒருவர்.

எமது மண்மீதும் எமது வரலாறுகள் மீதும் ஆழ்ந்த சிந்தனை உள்ள ஒருவர் என்ற நீதியில் அவரின் விடாத முயற்சியும் அர்ப்பணிப்பும் சங்கிலியன் தோரண வாயிலை பொதுமக்கள் பார்வையிடக் கூடிய வகையில் திறந்து வைப்பதற்கு உதவியாக இருந்தது.

அதேபோன்று மந்திரிமனை யமுனா ஏரி ஆகியவற்றையும் புனரமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது  மரபுரிமை மையம் திட்டங்களை வகுத்துள்ள நிலையில் அதற்கு பாரிய நிதி பங்களிப்புத் தேவை.

மந்திரி மனையைப் புனரமைக்க வேண்டுமானால் சுமார் ஆறு தொடக்கம் எட்டு கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிதியினை பெறுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன் வர வேண்டும்.

அரசாங்கம் செலவழிப்பதற்கு நிதி பற்றாக்குறை என்கிற நிலையில் எமது மரபுரிமைகளை நாமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை  ஏற்பட்டுள்ள நிலையில் எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு எடுத்த செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரன் , இந்தியத் துணைத்தூதரக அதிகாரி பிரவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன், தொல்பொருட் திணைக்களத்தின் யாழ்ப்பாணத்துக்கான உதவிப் பணிப்பாளர் பந்துலஜீவ   யாழ். மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் நல்லூர் பிரதேச செயளாளர் எழிலரசி உற்பட  அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/160308

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.