Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை | ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொலை செய்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 JUL, 2023 | 10:46 AM
image
 

மும்பை: ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 4 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓடும் ரயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார் காவலர்.

மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ரயில் நிலையம். உயிரிழந்த நால்வரில் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடக்கம். மற்ற மூவரும் ரயிலில் பயணித்த பயணிகள். துப்பாக்கிச் சூடு நடத்திய கான்ஸ்டபிள் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்கட்ட தகவலின்படி, ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் சேத்தன் சிங்க்கும், அவருடன் பயணித்த சப்-இன்ஸ்பெக்டரும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களை சமாதானம் செய்ய சக பயணிகள் முயன்ற சமயத்தில் கான்ஸ்டபிள் சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தாஹிசார் ஸ்டேஷன் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார் கான்ஸ்டபிள் சேத்தன் சிங். எனினும் அவரை விரைவாகவே ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/161307

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை ரயிலில் மூத்த அதிகாரி உள்பட 4 பேரை சுட்டுக் கொன்ற ரயில்வே போலீஸ் - என்ன நடந்தது?

ஆர்பிஎஃப்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

தனது மூத்த ஆர்பிஎஃப் அதிகாரி மற்றும் மூன்று பயணிகளைக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

31 ஜூலை 2023, 08:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்

மும்பை நகருக்கு அருகே ரயிலில் தனது மூத்த அதிகாரி உள்பட 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக் கொன்றார். அவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேத்தன் குமார் என்ற அந்தக் காவலர், தனது மூத்த ஆர்பிஎஃப் அதிகாரி மற்றும் மூன்று பயணிகளைக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும், இறந்த பயணிகளை அடையாளம் காண முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் உள்ள ரயில்வே பயணிகள், ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்கும் பணியில் ஆர்.பி.எஃப். ஈடுபடுகிறது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நகரை நோக்கிப் பயணித்த ரயிலில் காலை 5:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

 

ரயில்வே காவல்துறையின் அறிக்கைப்படி, சேத்தன் குமார் முதலில் ரயில்வே காவல்துறையின் துணை உதவி ஆய்வாளரான திகாரம் மீனா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதன் பிறகு மேலும் மூன்று பயணிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

மாநில தலைநகரான மும்பையில் இருந்து 96 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் நகரை ரயில் கடந்த சிறிது நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு அவசர காலங்களில் ரயில்களை நிறுத்தப் பயன்படும் சங்கிலியை இழுத்துவிட்டு தப்பிக்க முயன்றதாக மேற்கு ரயில்வேயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மும்பையின் புறநகர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

ரயில்வே

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

சண்டை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின

சண்டை காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததா?

சண்டை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை. இந்தச் சம்பவம் குறித்து அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு ரயில்வே பொது மேலாளர் நீரஜ் வர்மாவும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இது குறித்து அங்குள்ள அனைத்து மக்களிடமும் பேசி முழுமையான தகவல்களைப் பெற முயன்று வருகிறோம்,” என்றார்.

“துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு சேத்தன் குமாருக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த வாக்குவாதமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவரது உடல்நிலை சரியில்லை போல் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cpv77xnxrq9o

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சேத்தன் சிங்

Vs

37 minutes ago, ஏராளன் said:

சேத்தன் குமார்

 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஐயாவின் அடியாள் போல இருக்குது. ஐயாவின் பெயரை சொல்லி முஸ்லிம்களை சுட்டு தள்ளி இருக்கிறார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எரிக்கலாம் கொல்லலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற சேத்தன் சிங் யார்?

சேத்தன் சிங் யார்?

பட மூலாதாரம்,DHARMENDRA SINGH/BBC

 
படக்குறிப்பு,

ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு நடத்திய சேத்தன் சிங் மனநலப் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயிலில் ஆர்பிஎஃப் ஜவான் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆர்பிஎஃப் ஏஎஸ்ஐ திகாராம் மீனா மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.

துப்பாக்கி சூடு நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதில் ஆர்பிஎஃப் வீரர் சேத்தன் சிங் சவுத்ரி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில், இந்த சம்பவம் வெறுப்பு வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்பு அந்த ஜவான் வெறுப்புணர்வுடன் எப்போதும் பேசியதில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சேத்தன் சிங் யார்?

பட மூலாதாரம்,DHARMENDRA SINGH/BBC

 
படக்குறிப்பு,

பணியில் இருந்த போது உடல் நிலை சரியில்லாததால் பணிநேரம் முடிவதற்கு முன்பே தன்னை விடுவிக்குமாறு உயரதிகாரியிடம் சேத்தன் சிங் வேண்டுகோள் விடுத்ததாக உடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சேத்தன் சிங் சவுத்ரி ஒரு ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் என்றும், சம்பவம் நடந்த போது ரயிலில் தனது பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ரயில்வே காவல் ஆணையர் பேசும் போது, "அவர் (சேத்தன் சிங்) உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இது குறித்து அவர் ஏற்கெனவே அவருடன் பணியாற்றுபவரிடம் தெரிவித்திருக்கிறார். அதிகாலை 5 மணியளவில் அவர் திகாராம் மீனா என்ற காவல் துணை உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர் கண்ணில் தென்பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்," என்று கூறியுள்ளார்.

சேத்தன் சிங்குடன் ரயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த அவரது சக ஊழியர் கன்ஷ்யாம் ஆச்சார்யாவும், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, சேத்தன் தனது உடல்நலக்குறைவு குறித்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

சேத்தன் சிங் யார்?

பட மூலாதாரம்,DHARMENDRA SINGH/BBC

 
படக்குறிப்பு,

வீட்டின் முன் கீழே விழுந்ததால் தலையில் ரத்தம் உறைந்திருந்ததாக சேத்தன் சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சேத்தனின் குடும்பத்தினர் என்ன சொல்கின்றனர்?

இந்த சம்பவம் குறித்து சேத்தன் சிங் சவுத்ரியின் குடும்பத்தினர் கூறுகையில், தொலைக்காட்சியில் செய்தி வெளியான பின்பு தான் இந்த துப்பாக்கி சூடு குறித்துத் தங்களுக்குத் தெரியவந்ததாகக் கூறியுள்ளனர். மேலும், இந்தத் தகவலைக் கேட்டதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் சிங்கின் சகோதரர் லோகேஷ் சவுத்ரியின் மனைவி ப்ரீத்தி, சேத்தன் சிங் சவுத்ரியின் உடல்நிலை குறித்து பிபிசிக்கு விரிவான தகவல்களை அளித்துள்ளார்.

ப்ரீத்தி சிங் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டின் வாசலில் தவறி விழுந்ததால் அவருக்கு (சேத்தன் சிங்) தலையில் காயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கடுமையான தலைவலி தொடங்கியது. தலையில் வீக்கம் இருந்திருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்தபோது தலையில் ரத்தக்கட்டிகள் உறைந்திருந்தது தெரியவந்தது," என்றார்.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் அவர் இந்த விஷயங்களை மறந்துவிட்டு, வழக்கமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துவந்துள்ளார். விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது, வீட்டில் யாருடனும் எதுவும் பேசுவதில்லை என்றும், அவருடைய உடல்நிலை சரியாகி விட்டது என்று கூறிவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

"அவருடைய உடல்நிலை சரியாகிவிட்டது என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நாங்கள் ஒருநாளும் எதிர்பார்க்கவில்லை. எப்போது என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்?" என்று ப்ரீத்தி கேள்வி எழுப்பினார்.

துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் சிங்கின் தந்தை பச்சு சிங் சவுத்ரி 2007 ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது உயிரிழந்ததால் சேத்தன் சிங்கிற்கு 2009 ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை கிடைத்தது.

ப்ரீத்தி சிங் கூறுகையில், "முன்பு அவரது குழந்தைகளும் குடும்பத்தினரும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியில் வசித்து வந்தனர். ஆனால் குஜராத்திற்கு அவர் மாற்றப்பட்டபின் குடும்பத்தை அவரால் அங்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் அவரது குடும்பத்தினர் மதுராவில் வசித்துவருகின்றனர்," என்றார்.

சேத்தன் சிங் யார்?

பட மூலாதாரம்,DHARMENDRA SINGH/BBC

 
படக்குறிப்பு,

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு முன் அதிகாரியிடம் சேத்தன் சிங் வாக்குவாதம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேத்தனின் சக ஊழியர் என்ன சொன்னார்?

சேத்தன் சிங்குடன் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு கான்ஸ்டபிள் கன்ஷ்யாம் ஆச்சார்யாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை அவர் விரிவாக விசாரணை அதிகாரிகளிடம் பகிர்ந்துகொண்டார். இது குறித்து என்டிடிவி விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.

சூரத் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 2:53 மணிக்கு மும்பை செல்லும் ரயிலில் சேத்தன் சிங் சவுத்ரி, ஏஎஸ்ஐ திகாரம் மீனா(58), கான்ஸ்டபிள் நரேந்திர பர்மர் (58) ஆகியோருடன் ஏறியதாக ஆச்சார்யா கூறியுள்ளார்.

சிங் மற்றும் மீனா ஆகியோருக்கு குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியில் பாதுகாப்புப் பணி வழங்கப்பட்டிருந்தது. பர்மரும், ஆச்சார்யாவும் ஸ்லீப்பர் கோச்சில் நியமிக்கப்பட்டனர்.

"ரயிலில் ஏறிய அரை மணி நேரம் கழித்து, ஏஎஸ்ஐ மீனாவைச் சந்திக்க அவர் பணியில் ஈடுபட்டிருந்த கோச்சிற்கு வந்தேன். அப்போது சேத்தன் சிங் மற்றும் மூன்று டிக்கெட் பரிசோதகர்கள் உடன் இருந்தனர். ஏஎஸ்ஐ மீனா, சேத்தன் சிங்குக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். காய்ச்சல் பாதிப்பு இருந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள நான் அவரைத் தொட்டுப்பார்த்தேன். ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும், சேத்தன் சிங் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க விரும்பினார். ஆனால் அதற்கு ஏஎஸ்ஐ திகாராம் மீனா அனுமதிக்கவில்லை. வேலை நேரம் முடிய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என்றும், அதை முடித்துவிட்டுச் செல்லுமாறும் கூறிக்கொண்டே இருந்தார்," என்று ஆச்சார்யா போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும், "சேத்தன் சிங் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. இதையடுத்து ஏஎஸ்ஐ திகாராம் மீனா தரப்பில், எங்கள் இன்ஸ்பெக்டர் வரவழைக்கப்பட்டு மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்," என அவர் கூறினார்.

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், சேத்தன் தனது பணியை முடித்துவிட்டு மும்பையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை திகாராம் மீனா சேத்தனுக்கு விளக்க முயன்றார். ஆனால் இதையெல்லாம் அவர் காது கொடுத்துக் கேட்கவில்லை.

இதற்கிடையே, சேத்தனுக்கு குளிர்பானம் கொடுக்க மீனா அழைத்தார் ஆனால் அவர் குளிர்பானம் குடிக்கவில்லை.

ஆச்சார்யா தொடர்ந்து பேசுகையில், "ஏஎஸ்ஐ மீனா சேத்தனின் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு அவரை ஓய்வெடுக்கச் சொன்னார். அதன் பின் நான் சேத்தனை B4 கோச்சுக்கு அழைத்துச் சென்று காலியான இருக்கையில் படுக்கச் சொன்னேன். மேலும், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஆனால் சேத்தன் சிங் சிறிது நேரம் மட்டும் தூங்கினார். அவரால் நீண்ட நேரம் தூங்கமுடியவில்லை," என்றார்.

"பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் எழுந்து நின்ற போது அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. எனது துப்பாக்கியைத் தருமாறு கேட்டார். நான் அதைத் தர மறுத்தபோது, அவர் எனது கழுத்தை நெரிக்க முயன்றார். பின்னர் என்னிடமிருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றார்."

சேத்தன் சிங் யார்?

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

 
படக்குறிப்பு,

சேத்தன் சிங்கின் உடல்நலப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு அவர் ஓய்வெடுக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்ஷியாம் ஆச்சார்யாவின் துப்பாக்கியை சேத்தன் சிங் எடுத்துச் சென்றது பற்றி, உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, ஏஎஸ்ஐ மீனா மற்றும் கன்ஷ்யாம் ஆச்சார்யா ஆகியோர் சேத்தன் சிங் சவுத்ரியிடம் சென்று, துப்பாக்கியை மாற்றியது பற்றித் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சேத்தன் சிங் சவுத்ரி, ஆச்சார்யாவின் துப்பாக்கியை திருப்பிக் கொடுத்தார்.

பின்னர், "சேத்தன் சிங்கின் முகம் கோபத்தில் சிவந்தது. ஏஎஸ்ஐ மீனா அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரிடம் சேத்தன் சிங் வாக்குவாதம் செய்தார். நாங்கள் பேசியதை அவர் கொஞ்சம் கூட காது கொடுத்துக் கேட்கவில்லை. அதனால் நான் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டேன்.

ஆனால் அப்போது சேத்தன் சிங், அவரது துப்பாக்கியின் பாதுகாப்பு அமைப்பை மாற்றியதைப் பார்த்தேன். அவர் துப்பாக்கியால் சுடப்போகிறார் என்பது அப்போதே நன்றாகத் தெரிந்தது. உடனே, இதை நான் ஏஎஸ்ஐ திகாராம் மீனாவிடம் தெரிவித்தேன். இதையடுத்து, அவர் சேத்தன் சிங்கை அமைதிப்படுத்த முயன்றார்," என்கிறார் கன்ஸ்யாம் ஆச்சார்யா.

இதைத் தொடர்ந்து, அதிகாலை 5:25 மணிக்கு வைதர்ணா நிலையத்துக்கு ரயில் வந்தவுடன், ஏஎஸ்ஐ மீனா சுடப்பட்டதாக ஆச்சார்யாவுக்கு ஆர்பிஎஃப்-ல் பணிபுரியும் மற்றொரு நபரிடமிருந்து வந்த அழைப்பில் பதற்றத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டது.

"ஏஎஸ்ஐ மீனா சுடப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், நான் பி 5 கோச்சை நோக்கி ஓடினேன். ஆனால் ரயில் பயணிகள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் அந்த ரயில் பெட்டியிலிருந்து தப்பி ஓட முயன்றனர். சேத்தன் சிங் ஏஎஸ்ஐ மீனாவை சுட்டுக் கொன்றதாக என்னிடம் சொன்னார்கள். நான் நரேந்திர பர்மரை அழைத்தேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது," என்கிறார் ஆச்சார்யா.

துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி எழும் சந்தேகங்கள் என்னென்ன?

ஒருபுறம், சேத்தன் சிங் சவுத்ரியின் மனநிலை மற்றும் நோய் பாதிப்பு குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் தகவல் அளித்து வருகின்றனர்.

சேத்தன் சிங்கின் பழக்கவழக்கங்கள் பற்றியும் பல கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ரயில்வே அதிகாரிகள் அவருக்கு உதவும் வகையில் ஓய்வளிக்கவோ, சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை எடுக்கவோ தவறினார்களா என்பதுதான் இதில் மிகப்பெரிய கேள்வி.

ரயில்வே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், ஏன் இது வரை அவர்களிடமிருந்து இருந்து எந்த விளக்கமும் வரவில்லை?

சேத்தன் சிங் சவுகான் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தார் என்பது ரயில்வேக்கு தெரிந்திருந்தால், எந்த அடிப்படையில் அவருக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

B 5 கோச்சில் என்ன நடந்தது என்பதை நேரடியாக கண்களால் பார்த்த அனைத்து பயணிகளும், அங்கே என்ன நடந்தது என்பது குறித்துப் பேச ஏன் இது வரை முன்வரவில்லை என்பது இந்த முழு சம்பவத்தைச் சுற்றிலும் தீர்க்கப்படாத கேள்வியாக உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c97pqp19vp1o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.