Jump to content

தமிழ் சமூக ஆர்வலரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சமூக ஆர்வலரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

ThivaSeptember 29, 2023
369555855_122108311568007572_33186305889
ezgif.com-gif-maker.gif

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பை மீள கட்டியெழுப்ப பாடுபடுகிறீர்களா என கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் சமூக ஆர்வலர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் நீண்ட நேரம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்காமல் வியாழன் 21 ஆம் திகதி காலை 9 மணிக்கு திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் பால்ராஜ் ராஜ்குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (CTID) வாக்குமூலம் அளித்த பின்னர்இ பால்ராஜ் ராஜ்குமார் தனது பேஸ்புக் பதிவில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதாக தன் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. நான் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை தொடர்ந்து ஆதரித்துத்து பேசுவதாகவும்இ அதை மீள் உருவாக்கம் செய்ய முனைவதாகவும் பிரதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அத்துடன் தொடர்ந்து அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதுடன் மக்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டுவதாகவும் இன்னும் பல குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார்கள்.

அதை அரசின் முக்கிய பாதுகாப்பு பிரிவே முன்வைத்துள்ளது.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராஜ்குமார் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களில் ஒன்றையாவது நிரூபிக்க முடியுமா என அவர்களிடம் கேள்வி எழுப்பியதாக பேஸ்புக்கில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘நான் அவர்களின் பல குற்றச்சாட்டுகளை மறுத்தேன் மேலும் இந்த குற்றச்சாட்டுகளில் ஏதேனும் ஒன்றை நிரூபிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு கோவையை அனுப்பி இது குறித்து அவர்களுக்கு தெரிவிப்பதாக கூறினர்.’

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக பால்ராஜ் ராஜ்குமார் குரல் எழுப்பி வருவதாக தெரிய வருகின்றது.

ctid-300x225.jpeg


 

https://thinakaran.com/?p=10276

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவித்தல் தமிழில். அறிவித்தல் பேப்பரில்.. தமிழே இல்லை. தமிழ் தெரிந்த கூலிகளுக்கு இது உறைக்கவில்லை. தின்ன வழியில்லை.. இதெல்லாம் ஒரு கேடு... சொறீலங்காவுக்கு. 

சொறீலங்காவை இன்னும் சனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டிருப்பவைக்கு தான்.. இது சமர்ப்பிக்கப்படனும்... சான்றாக. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.