Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இந்தியா vs சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராகவேந்திர ராவ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 அக்டோபர் 2023, 03:06 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இது இன்னும் ஆழமடைந்துள்ளது.

இரு நாடுகளும் இந்திய பெங்கடல் பகுதியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புவதால் இந்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, சீனா தனது கடற்படையை நவீனமயமாக்கியுள்ளது. ஏராளமான விமான தாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டு கடற்படை கொண்டுள்ளது.

இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, “கடந்த 20-25 ஆண்டுகளாக, இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் இருப்பு மற்றும் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீன கடற்படையின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, உங்கள் சுற்றுப்புறத்தில் இவ்வளவு பெரிய கடற்படை இருக்கும் போது, அதன் செயல்பாடுகள் உங்கள் பக்கத்தில் அவ்வப்போது தெரியும்.” என குறிப்பிட்டார்.

சீன துறைமுக நடவடிக்கைகளை குறிப்பிடும்போது, குவாதர் மற்றும் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் பேசிய ஜெய்சங்கர், இந்தியாவின் முந்தைய அரசுகள் மீதும் விமர்சனத்தை வைத்தார்.

“இதன் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் இந்த துறைமுகங்கள் எவ்வாறு செயல்படும் என்பதையும் அன்றைய அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். எனவே, அவை நம் நாட்டின் பாதுகாப்பில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் இப்போது உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ” என்றார்.

இந்தியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது , முன்பை விட மிகப் பெரிய அளவில் இருக்கும் சீனாவின் இருப்புக்கு ஏற்ப இந்தியா தயாராவது சரியாக இருக்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘முத்துச்சரம்’ உத்தி

இந்தியப் பெருங்கடலில் சீனா உருவாக்கி வரும் உத்தி “முத்துச் சரம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த மூலோபாயம், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் மூலோபாய துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் கட்டமைத்து பாதுகாப்பதை உள்ளடக்கியது. தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் இந்த துறைமுகங்களை பயன்படுத்தலாம்.

சீனா தனது எரிசக்தி நலன்கள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களைப் பாதுகாக்க மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையிலான கடல் வழிகளில் பல நாடுகளுடன் மூலோபாய உறவுகளை உருவாக்க உதவும் வகையில் இந்த "முத்துக்கள்" உருவாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

ஆப்ரிக்க கண்டத்தில் எத்தியோப்பியா, சோமாலியா, ஜிபூட்டி, எரித்திரியா ஆகியவை உள்ள பகுதி கொம்பு போன்ற் இருப்பதால் இவை ஹார்ன் ஆப் ஆப்ரிக்கா ( Horn of Africa) என்று அழைக்கப்படுகின்றன. இங்குள்ள ஜிபூட்டி மற்றும் பாகிஸ்தானில் உள்ள குவாடாரில் சீனா துறைமுகங்களை கட்டி வருகிறது. இதுதவிர, இலங்கையின் ஹம்பாந்தோட்டையை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் கடற்படை செயல்பாடுகளையும் செல்வாக்கையும் அதிகரிக்க இந்தத் துறைமுகங்கள் உதவியாக உள்ளன.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,AFP

'சீனா நிரந்தர சவால்'

பாதுகாப்பு நிபுணர் சி. உதய் பாஸ்கர் இந்திய கடற்படையில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது டெல்லியில் உள்ள சொசைட்டி ஃபார் பாலிசி ஸ்டடீஸின் இயக்குநராக உள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சீனா கடற்படையின் இருப்பு அதிகரித்து வருவதால் இந்தியா எதிர்கொள்ளும் ஆபத்து என்ன என்று அவரிடம் கேட்டோம்.

இதற்கு அவர், “அச்சுறுத்தல் என்பதை விட, இது ஒரு நிரந்தர சவால் என்று நான் கூறுவேன். இந்தியப் பெருங்கடல் பகுதியில், தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்குவதன் மூலம், அந்த பகுதியில் தனது இருப்பைத் தக்கவைக்கும் திறன் இப்போது சீனாவிடம் உள்ளது. சீனா மிகவும் வலுவான கடல்சார் இருப்பைக் கொண்டுள்ளது, இது அதிகரித்து வருகிறது. அதில் கடற்படை ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.

சீனாவின் கடற்படை மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பு குறித்து பேசிய அவர், “அவர்களின் நோக்கம் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அதை என்ன செய்வார்கள்? இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவற்றை பயன்படுத்துவார்களா? போன்றவற்றை நாம் கவனமாக கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார்.

சரி சீனாவின் எண்ணம்தான் என்ன? “இந்தியப் பெருங்கடலில் சீனா எப்போதும் தனது வலுவான இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது” என்றும் உதய் பாஸ்கர் கூறுகிறார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?

சீன கடற்படையின் செல்வாக்கு ஒருபக்கம் அதிகரித்துவரும் சூழலில், இது இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சீன கடற்படையுடன் ஒப்பிடும்போது இந்திய கடற்படையின் வலிமை எந்த நிலையில் உள்ளது என்றும் கேள்வி எழுகிறது.

சீன கடற்படையுடன் ஒப்பிடும்போது இந்திய கடற்படையின் வலிமை தற்போது சுமாராகவே உள்ளது என்கிறார் உதய் பாஸ்கர்.

“கடற்படையில் திறனை அடைவது என்பது மிகவும் மெதுவான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்முறையாகும். ஒன்றிரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வாங்கினால் மட்டும் போதாது. நீர்மூழ்கி திறன்கள், வான்வழி கண்காணிப்பு என பலவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். ”

வைஸ் அட்மிரல் அனுப் சிங், இந்தியாவின் கிழக்கு கடற்படையின் முன்னாள் தலைமைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

இந்த விவகாரம் குறித்து அவர் பேசும்போது, “சீனாவிடம் 500 கப்பல்கள் கொண்ட கடற்படை உள்ளது என்பது முக்கியமில்லை. கடல்வழி விநியோகம், மக்களிடையே, குறிப்பாக மாலுமிகளிடையே தொழில்முறையை வளர்ப்பதிலும் சீனா இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஏவுகணைகளின் எண்ணிக்கைதான் கடைசியில் முக்கியமானது என்பது மறுப்பதற்கில்லை. அதேநேரம், கடற்படையின் தொழில்நேர்த்தி, தளவாட உதவி ஆகியவையும் முக்கியம். இந்தியப் பெருங்கடலில் தளவாட ஆதரவு மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.

சீனா அதிக எண்ணிக்கையில் பயணக் கப்பல்களை உருவாக்கியுள்ளது, ஆனால் எண்ணெய், உணவுப் பொருட்கள், நீர் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் துணைக் கப்பல்கள் அவர்களிடம் இல்லை என்றும் அனுப் சிங் கூறுகிறார்.

“இந்தியாவின் கடற்படை 138 கப்பல்களைக் கொண்டிருந்தாலும், புதிய கப்பல்களை கடற்படையில் இணைத்துக்கொள்வதை விட பழைய கப்பல்களை படையில் இருந்து நீக்கும் விகிதம் அதிகமாக இருப்பதால் தீபகற்ப நாடாக நம்மிடம் இன்னும் அதிக எண்ணிக்கையில் கப்பல்கள் உள்ளன. இது இந்தியா தன்னை சுற்றியுள்ள கடல் பகுதிகளை கட்டுப்படுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் உதவுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது

நீர்மூழ்கி கப்பலாக இருந்தாலும் கூட, இந்திய கடல் பகுதியில் எதுவும் இந்திய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் அனூப் சிங் கூறுகிறார்.

“நீர்மூழ்கிக் கப்பல் ஒரு ஜலசந்தியைக் கடந்த பின்பு, அது நீரின் மேற்பரப்பிற்கு வரவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில் (UNCLOS)தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சீன இதை செய்வதில்லை. எனினும் நாம் அவர்களை கண்டுபிடித்து விடுகிறோம். அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் விட்டுக்கொடுப்பதில்லை” என்றார்.

அனூப் சிங்கின் கூற்றுப்படி, “ஜிபூட்டியில் காலூன்ற சீனாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, எதிர்காலத்தில் அவர்கள் குவாடாருக்கும் வரலாம், ஆனால் அவர்கள் இன்னும் தீபகற்ப இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர்.”

மேலும், சீன கடற்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள பல மாலுமிகள் கட்டாய சேவையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். எனவே, அவர்களிடம் தொழில்முறை திறன் குறைவாகவே இருக்கும் என்றும் அனூப் சிங் கூறுகிறார்.

“அவர்களின் மூத்த மாலுமிகள் மட்டுமே ஓரளவு தொழில்முறை வல்லுநர்கள். ஆனால், அவர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

 
இந்தியா - சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

உளவு பார்ப்பதாக அச்சம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படைக்கு சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்து சுமார் ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்தது.

அப்போது, இந்தக் கப்பல் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கப்பல் மேற்கொள்ளும் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான பணிகள் சர்வதேச சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் சீனா கூறியிருந்தது.

எனினும், இது மற்ற நாடுகளை உளவு பார்ப்பதையே வேலையாக கொண்ட“உளவுக் கப்பல்”என்று இந்தியாவில் கவலை எழுந்தது.

அப்போது, மற்ற நாடுகளை உளவு பார்ப்பதையே தொழிலாகக் கொண்ட “உளவுக் கப்பல்” என்ற கவலை இந்தியாவில் எழுந்தது. யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏழு நாட்கள் நிறுத்தப்பட்டு இருப்பது இந்தியாவை அருகில் இருந்து உளவு பார்க்க அந்த கப்பலுக்கு வாய்ப்பை ஏற்படுத்துமா என்றும் இதனால் இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குமா என்றும் கேள்விகள் எழுந்தன.

ஹம்பாந்தோட்டையில் இருந்து வெறும் 900 கி.மீ முதல் 1500 கி.மீ வரையிலான தூரத்தில் சென்னை, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் உள்ளதும் இந்தியாவின் கவலைக்கு முக்கிய காரணமாகும். மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம், ஹம்பாந்தோட்டையில் இருந்து 1100 கி.மீ தூரத்தில் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் எண்ணிக்கையும் செயல்பாடுகளும் அதிகரித்து வருவதால், அவை உளவு பார்ப்பதில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் கவலையாக உள்ளது.

ஆராய்ச்சிக்கும் உளவு பார்ப்பதற்கும் இடையே மிக நுண்ணிய கோடு இருப்பதாக சி உதய் பாஸ்கர், விளக்குகிறார். மேலும் அவர் “இவை அனைத்தும் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் (UNCLOS) கீழ் அனுமதிக்கப்பட்ட முறையான ஆராய்ச்சி நடவடிக்கைகளாகவும் வகைப்படுத்தப்படலாம். எனவே இது தொடர்பாக எவ்வித முடிவுக்கும் வரமுடியாது. கண்காணிக்க கூடிய வசதி உள்ள அனைத்து நாடுகளும் இதில் ஈடுபடுகின்றன.” என்று தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c3g3q0d8wl4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை.

வாயால வடை சுடல் மட்டுமே..😰

அதனால் தான், அமெரிக்கா களம் இறங்கி உள்ளது.🤦‍♂️



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன.  எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது.  இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும்.  13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.  ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.  இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.  இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.  இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.  எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.   https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை  
    • உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது. செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள். செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣
    • செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து.... 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.