Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

800 விமர்சனம்: முத்தையா முரளிதரன் வாழ்க்கையை படமாக்குவதில் வெற்றி பெற்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'800' திரைப்பட விமர்சனம் - முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா?

பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES/GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள '800' என்ற திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இந்தப் படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது.

படத்தின் கதை சுருக்கம்

முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES

இந்தியாவிலிருந்து, இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பலரும் குடிபெயர்ந்து சென்றனர். அப்படி இலங்கைக்குச் சென்ற குடும்பங்களில் முத்தையா முரளிதரனின் குடும்பமும் ஒன்று.

தமிழ் பாரம்பரியத்தைப் பின்புலமாகக் கொண்டு இலங்கையில் வளரும் முத்தையா முரளிதரனுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். அவரது ஆதீத ஆர்வத்தின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியில் சேர முயற்சி செய்யும்போது சந்தித்த சிக்கல்களையும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆன பிறகு பந்துவீச்சாளராக எதிர்கொண்ட சிக்கலான தருணங்களையும் எப்படி கடந்து வந்தார் என்பதை '800' திரைப்படத்தின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

 
முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைத் தமிழரான முத்தையா முரளிதரனுக்கு கிரிக்கெட் அணியிலும், இலங்கையின் அரசியல் களத்திலும் எழுந்த பிரச்னைகளைக் கடந்து சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மாறினார் என்பதே இந்தப் படத்தின் கதை.

'800' படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதற்கு முன்பு, ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம் டாக் மில்லினர்' திரைப்படத்தில் சிறுவனாக இவர் நடிந்த்துள்ளார். மேலும் ஒரு சில இந்தி படங்களில், இந்தி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.

முதலில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சி வெளியிடப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது என எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் படத்திலிருந்து விலகினார்.

இந்த படத்தில் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். நாசர், நரேன் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.

முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம்,MUTTIAH MURALITHARAN FB

முரளிதரனை துரத்திய கேள்வி

முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES

முத்தைய முரளிதரனின் வாழ்க்கை முழுவதும் அவரை இரண்டு கேள்விகள் துரத்தின.

“மைதானத்திற்கு வெளியே, நீ தமிழனா அல்லது இலங்கையைச் சேர்ந்தவனா?”

“விளையாடும்போது நீ சிறப்பாக பந்து வீசுகிறாயா அல்லது பந்தை எறிகிறாயா?”

இந்தக் கேள்விகளுக்குத் தனது '800' படத்தின் மூலம் இயக்குநர் ஸ்ரீபதி பதிலளிக்க முயன்றுள்ளார் என்று இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை உண்மையாக '800' திரைப்படம் பிரதிபலிப்பதாக அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது வாழ்க்கையில், சிறுவயது முதல் நடந்த இலங்கை உள்நாட்டு யுத்தம், பள்ளி, கல்லூரிகளில் எதிர்கொண்ட சிக்கல், கிரிக்கெட் போட்டிகளில் எதிர்கொண்ட சவால், பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கியது, தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800வது விக்கெட்டை கைப்பற்றியது எனப் பல சம்பவங்கள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.

 
முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜூன் ரணதுங்கா எப்படி முத்தையா முரளிதரனுக்கு ஆதரவாக இருந்தார் என்பது காட்சிகளாக விவரிக்கப்பட்டிருந்தாலும், அணியில் பிற வீரர்கள் முத்தையா முரளிதரனிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது கதையில் இடம்பெறவில்லை.

இலங்கை கிரிக்கெட் அணியில் ஒரே தமிழ் வீரராக இருந்த முத்தையா முரளிதரனுக்கு அணியில் பிற வீரர்கள் எப்படி ஆதரவளித்தனர் என்பது சரியாக விவரிக்கப்படவில்லை என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளம் விமர்சனம் எழுதியுள்ளது.

அதேபோல முத்தையா முரளிதரன் மீது பந்தை எறிகிறார் என எழுந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் விளக்கமான காட்சிப்படுத்தல் இருந்திருக்கலாம் என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையைப் படமாக்க முயற்சி செய்ததில், படத்தின் முதல் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் ஏதும் இல்லாமல், இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையை மட்டுமே வைத்துக்கொண்டு முதல் பாதி படம் நகர்கிறது என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விமர்சித்துள்ளது.

ஆனால் இரண்டாவது பாதியில் ஒரு சில காட்சிகள் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக முரளிதரனின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் காட்சிகள் நல்ல அனுபவத்தைத் தருவதாக ‘டைம்ஸ் அஃப் இந்தியா’ விமர்சனம் வழங்கியுள்ளது.

பலம் சேர்க்கும் இசை

முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம்,800 MOVIE CREW

'800' படம் குறித்து மாலை மலர் இணையதளம் எழுதியுள்ள விமர்சனத்தில் படத்தின் நாயகனான மதுர் மிட்டல், முடிந்தவரை முத்தையா முரளிதரனாக நடிக்க முயன்றுள்ளார். அவரது உடல் மொழி, முகத்தோற்றம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

நாயகி மகிமா நம்பியார் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும்படி நடித்துள்ளார் என்று மாலை மலர் இணையதளம் விமர்சனம் எழுதியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தோற்றத்தில் நரேன் நடித்துள்ளார். அந்தக் காட்சிகள் வரும்போது திரையரங்கில் விசில் பறப்பதாக அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

பலருக்கும் தெரியாத முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதையை இயக்குநர் ஸ்ரீபதி அழகாக படமாக்கியுள்ளதாக மாலை மலர் எழுதியுள்ளது.

இலங்கை அணியில் சேர்வதற்கும், சேர்ந்த பிறகும் அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து திரைக்கதையில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்திற்கு பெரிய பலமாக ஜிப்ரானின் இசை உள்ளதாக மாலை மலர் விமர்சனம் வழங்கியுள்ளது.

பலவீனமாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள்

முத்தையா முரளிதரன்

பட மூலாதாரம்,800 MOVIE CREW

விளையாட்டு வீரர்கள் குறித்து எடுக்கப்படும் படங்கள் எப்போதுமே உணர்ச்சிபூர்வமாக இருக்கும். அந்த வரிசையில் இயக்குநர் ஸ்ரீபதியின் ’800' திரைப்படமும் இணைந்திருக்கிறது என இந்தியா டுடே விமர்சனம் எழுதியிருக்கிறது.

இலங்கையில், தமிழர்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து ’800' திரைப்படம் அலசியிருக்கிறது. இந்த பிரச்னை முத்தையா முரளிதரனின் வாழ்வில் எப்படி பிரதிபலித்தது, அரசியல் ரீதியாக அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள் எனப் பல அடுக்குகளாக ’800' படம் விரிகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல், கிரிக்கெட் என இரண்டு தளங்களிலும் முத்தையா முரளிதரன் எதிர்கொண்ட சிக்கல்களை ’800' திரைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மதுர் மிட்டலின் கண்களின் வழியே வெளிப்படும் நடிப்பு அபாரமானது என்றும், முத்தையா முரளிதரனாக திரையில் வாழ்ந்துள்ளார் என்றும் இந்தியா டுடே எழுதியுள்ளது.

’800' திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக இசையும், ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று இந்தியா டுடே தனது விமர்சனத்தில் எழுதியுள்ளது.

சில குறைகள் இருந்தாலும், ஒரு முழுநீள விளையாட்டுப் படத்தை தியேட்டரில் பார்க்கும்போது கிடைக்கும் நல்ல அனுபவத்தை ’800' திரைப்படம் வழங்கும் என இந்தியா டுடே இணையதளம் விமர்சனம் வழங்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c88ejyd52xyo

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் புலிகளை சந்தித்தது போல காட்சி அமைக்கப்பட்டுள்ள்தாக கூறப்படுகிறது இதன் உண்மை தன்மை பற்றி விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நான் தமிழனும் இல்லை; சிங்களவனும் இல்லை; நான் ஒரு கிரிக்கட்டர்...!"

14 OCT, 2023 | 10:03 AM
image

சி.சி.என்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘800’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பும் அதற்குப் பின்னரும் முரளியை மையமாகக் கொண்ட சர்ச்சைகள் தொடர்கின்றன.  

இதற்கு முன்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான கபில்தேவ், மொகமட் அசாருதீன், டோனி, பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர் மிட்டாலி ராஜ், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த திரைப்படங்கள் ஏற்படுத்தாத சர்ச்சைகளை முரளியின் '800' ஏற்படுத்தி வருகின்றது. 

இதற்கு பிரதான காரணமாக இருப்பது முரளியின் சர்ச்சைக்குரிய கருத்துகளாகும். ஆரம்பத்தில் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. எனினும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது முரளிதரன் அரசாங்கத்தின் சார்பாக தெரிவித்த கருத்துகள் காரணமாக இலங்கை தமிழர்கள் அவர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதை முரளி ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்று கூறியிருந்தார். மேலும் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் ஊடகங்களிலும் ஏனையோர் மத்தியிலும் தமிழில் கதைப்பதை தவிர்த்தே வந்தார். கூடுதலாக அவர் சிங்கள மக்கள் மத்தியிலேயே வலம் வந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரது வேடத்தில் தென்னிந்திய சினிமா கலைஞர்களில் தமிழர்கள் எவரும் நடிக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியதால் விஜய் சேதுபதி அதிலிருந்து விலகினார்.

பின்னர் மதூர் மிட்டல் அவரது வேடத்தை ஏற்று நடிக்க திரைப்படமானது கடந்த 6 ஆம் திகதி வெளியானது. எனினும் அதற்கு முன்பதாக வெளிவந்த முன்னோட்ட காட்சியில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகம் இடம்பெறுவது சுட்டிக்காட்டப்பட்டு மீண்டும் முரளி மீது கண்டனங்கள் கிளம்பின. பிறகு அதை மாற்றுவதாக படக்குழு அறிவித்தது.

திரைப்பட முன்னோட்ட நிகழ்வுகள் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற போது முரளிதரனுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக அதில் கலந்து கொண்டிருந்தனர். எனினும் நிகழ்வுகளில் ஊடகங்கள் முரளிதரனிடம் பல கேள்விகளை முன்வைத்த போது அதில் பலவற்றிற்கு பதில் கூற அவர் விரும்பியிருக்கவில்லை. பல கேள்விகளை அவர் தவிர்த்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவரிடம் தமிழக ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது அதை அரசியல்வாதிகளிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அரசியல் செய்யவில்லையே நான் ஒரு கிரிக்கட்டர் என்றார். 

யுத்த காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களைப் பற்றி கேட்டபோது  அனைத்துத் தரப்பினரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர் என்று கூறிய அவர் எனக்கு ஒரு பிரச்சினை வந்த போது அனைவருமே எனக்காக குரல் கொடுத்தனர். ஆகையால் நான் இலங்கையில் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. நான் அனைவருக்குமான கிரிக்கட்டர் என்று சமாளித்தார்.

அடுத்தடுத்த இடம்பெற்ற நிகழ்வுகளில் அரசியலைப் பற்றி கேள்விகள் கேட்க வேண்டாம் என்றார். நீங்கள் யாருக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு அவர் நான் தமிழனும் இல்லை சிங்களவனும் இல்லை நான் ஒரு கிரிக்கெட்டர்… நான் ஒரு விளையாட்டு வீரன். என்னை அப்படியே விட்டு விடுங்கள் என்று கூறி முடித்து விட்டார். இந்த பதில் இப்போது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

முரளிதரன் பிறப்பால் ஒரு தமிழனாக இருந்தாலும் ஏன் தனது அடையாளத்தை மறைத்து செயற்படுகின்றார் என்பது பலரினதும் கேள்வியாக உள்ளது. அவர் யாருக்கு பயப்படுகின்றார் என்பதும் புரியவில்லை. மேலும் தனது வாழ்க்கையை கூறும் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் அதில் பல கேள்விகளுக்கு விடைகள் உள்ளன என்றும் அவர் கூறி வருகின்றார்.

முரளியின் இந்த சமாளிப்புகள் மற்றும் தனது படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற கருத்துகள்  குறித்து இலங்கை வாழ் தமிழ் மக்கள்  தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் அவரின் மீது பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் எப்போதும் சிங்கள மக்களை திருப்திபடுத்தும் ஒருவர் என்பதே அனைவரினதும் வாதமாக உள்ளது. அதே வேளை தான் எப்போதும் அரசியல் செய்யவில்லையென தெரிவித்த அவர் மலையக அரசியல் குறித்து தெரிவித்த கருத்தும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தான் கடந்த பல  வருடங்களாக நற்குண அமைப்பு என்ற பெயரில், வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரக் கூடிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் ஆனால் அதற்கு மலையக அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாகவும் அவர் தலைநகரில் இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர்கள்  சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதாவது மலையக மக்களுக்கு உதவ அரசியல்வாதிகள் முன்வராத அதே வேளை அவர்களுக்கு வேறு எவராவது உதவ வந்தாலும் விடுவதில்லை. 

மலையகப் பிரதேசங்களில் உள்ள ஏதாவதொரு பொது இடத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க அதற்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அனுமதி வழங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் மலையகத்தின் ஏதாவதொரு அரசியல் கட்சியின் கையாளாக இருக்கின்றனர். உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள ஒரு மைதானத்தைக் கூட அவர்களின் அனுமதியின்றி பெற முடியாது. அனுமதி வழங்க இழுத்தடிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டார். கண்டியைச் சேர்ந்த அவர் ஏன் நுவரெலியாவில் வாக்கு கேட்க வேண்டும் என பல விமர்சனங்கள் அப்போதே கிளம்பின. அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்க முரளிதரனும் நுவரெலியா வந்தார். ஆனால் அவரது சகோதரர் அத்தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகளை எடுத்து தோல்வியுற்றார். இதன் காரணமாக சில ஆயிரம் வாக்குகளால் மலையகத்தின் பிரதான கட்சியொன்றின் வேட்பாளர் எம்.பியாவதற்குரிய வாய்ப்பை இழந்தார். இவ்வாறான செயற்பாடுகளே அவர் மீது அரசியல்வாதிகளும் மலையக வாக்காளர்களும் கோபமாக இருப்பதற்குக் காரணம்.

மேலும் முரளிதரன் இலங்கையணியில் இருந்த போது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தார். அக்காலங்களில் முரளியின் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். ஆனால் அக்காலகட்டங்களில் அவர் மலையக சமூகத்துக்கு எந்த உதவிகளையும் செய்ய முன்வரவில்லை. தனக்குப்பிறகு எந்த தமிழ் கிரிக்கட் வீரரும் அணியில் இடம்பிடிக்க அவர் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லையென்பது முக்கிய விடயம். 

அவர் கல்வி கற்ற கண்டி புனித அந்தோணியார் கல்லூரியிலும் கூட அவரால் ஒருவரை கிரிக்கெட் வீரராக உருவாவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. அதாவது தனக்குப்பிறகு ஒரு சுழற்பந்து வீச்சாளரை உருவாக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. மாறாக சென்னையில் பயிற்சி அமைப்பொன்றை உருவாக்கி அங்கேயே தங்கி விட்டார். 

இவ்வாறான பல காரணங்களால் முரளிதரன் ஒரு தமிழராக இருந்தாலும் தமிழர்களால் விரும்பப்படாத ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதன் காரணமாக அவரது வாழ்க்கையை க;றும் 800 படத்தை பார்ப்பதற்கும் பெரிதாக எவரும் ஆர்வம் காட்டவில்லை போன்று தெரிகின்றது. 

https://www.virakesari.lk/article/166820

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.