Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்

–தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும். இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். பேரம் பேசும் பலத்தை இது அதிகரிக்கும்–

அ.நிக்ஸன்-

2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது.

ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்டமைப்புகள் ஒழுங்கான முறையில் இல்லை.

குறிப்பாக ரசிய – உக்ரெயின் போர், இஸ்ரேல் பலஸ்தீனியப் போர் ஆகிய புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் ஈழத் தமிழர்கள் மிக நுட்பமாகக் கையாள வேண்டிய திட்டங்கள் பல உண்டு. தற்போதைய உலக அரசியல் ஒழுங்குக் குழப்ப நிலைமையை இலங்கை உரிய முறையில் பயன்படுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேதான் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்து காணப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகப் பல கேள்விகள் எழுகின்றன.

குறிப்பாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், ரெலோ. ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய இயக்கங்களை மையப்படுத்திய புதிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் எவ்வாறு எந்தப் புள்ளியில் ஒன்று சேர்ந்து பயணிக்கவுள்ளன என்ற கேள்விகளும் நம்பிக்கையீனங்களும் விஞ்சியுள்ளன.

தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விகள் பல சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டிவிடுகின்றன.

கொழும்பை மையமாகக் கொண்ட எந்த ஒரு பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகரங்களில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது பட்டறிவு.

அதுவும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் இனப் பிரச்சினை என ஒன்று இல்லை என்ற நிலைப்பாடு சிங்கள கட்சிகள் அனைத்திடமும் உண்டு. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சிங்கள ஊடகங்களும் அவ்வாறான கருத்துக்களையே முன்வைத்தும் வருகின்றன.

இது “சிங்கள நாடு“ என ஒரு பகுதியும் இது ”சிங்கள பௌத்த நாடு” என பெரும்பான்மையான சிங்கள மக்களும் கருதுகின்ற சூழல் சிங்களப் பிரதேசங்களில் மேலோங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து முரண்பாட்டிலும் உடன்பாடாகப் ”பொது வேட்பாளர்” ஒருவரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

spacer.png

அனைத்துத் தமிழ் மக்களும் குறித்த தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரமும் அதன் தேர்தல் முறையின் மூலமாகவும் வெற்றிபெற முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொது வேட்பாளருக்குக் கிடைக்குமானால் ”தமிழ்த்தேசியம்” என்ற நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் நிறுவ முடியும்.

அத்துடன் பிரதான சிங்கள வேட்பாளர்களில் எவரும் ஜனாதிபதியாவதற்குரிய ஆகக் குறைந்தது ஐம்பத்து ஒரு சதவீத வாக்குகளை பெறமுடியாத நிலை ஏற்பட்டால் தமிழ்ப் பொது வேட்பாளரின் வாக்குப் பலத்தினாலோயே இந்த நிலை ஏற்பட்டது என்றும் அதன் மூலம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் காண்பிக்க முடியும். பேரம் பேசவும் முடியும்.

ஆகவே இதனைப் புரிந்துகொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தமிழ் ஊடகங்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஒருமித்த குரலில் இப்போதிருந்தே செயலாற்ற வேண்டும்.

1994 ஆம் ஆண்டு சந்திரிகாவில் இருந்து 2010 இல் சரத் பொன்சேகா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2020 இல் ரணில் – சஜித் கூட்டு என தொடர்ச்சியாக நம்பி வாக்களித்துத் தமிழர்கள் எதுவும் கண்டதேயில்லை.

கடந்த எண்பது வருட அரசியல் போராட்டத்தில் தமிழர்களுக்கு அழிவுகளும் ஏமாற்றங்களும் விஞ்சியுள்ள பின்னணியில் அவற்றைப் படிப்பினையாக எடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் சிங்களக் கட்சிகள் மீதான நம்பிகையீனங்களையும் உலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டிய நேரமிது.

பொய்யான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கும் பிரதான சிங்களக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

மாறாக ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதாலோ அல்லது யாரேனும் ஒரு சிங்கள வேட்பாளரை ஆதாரிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை.

தமிழ் மக்கள் தங்கள் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் அவருக்குரிய வாக்குகள் நேரடியாகவே எண்ணப்படும்.

உதாரணமாக தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதாக இருந்தால் 1 என்ற இலக்கத்துக்கு முன்பாக அல்லது (X) வாக்களித்தால் மட்டும் போதும். வேறு வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிப்பது பற்றித் தமிழ் மக்கள் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும்.

இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

spacer.png

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் வடக்குக் கிழக்கில் தத்தமது கட்சிகளின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவர்.

அத்துடன் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைச் சிதைத்து தமிழ் மக்கள், சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அல்லது இலங்கை இராணுவத்துடன் சேரந்து இயங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களின் தவறான வியூகங்களுக்கு ஏற்ப வாக்குகள் சிதறும் முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கபடக்கூடிய ஆபத்துக்களும் உண்டு.

இவற்றையெல்லாம் முறியடித்து ஒருமித்த குரலாகத் தமிழ்த் தேசிய அரசியலை நிலை நிறுத்தக்கூடிய அளவுக்குப் பொது வேட்பாளா் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

அந்தப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினராக அல்லது ஏதேனும் ஒரு தமிழ்க் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருக்கக் கூடாது.

கட்சி அரசியல் சார்பில்லாத, தமிழ்த்தேசியத்தை ஒருமித்த குரலில் செயற்படுத்தக்கூடிய மற்றும் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஒருவரையே பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும்.

கிழக்கில் இருந்து பொதுவேட்பாளர் தெரிவாவது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மேலும் ஆரோக்கியமானதாக அமையும்.

பொது வேட்பாளர் நியமனத்தின் மூலம் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரே கட்சியாக இயங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அவசியமற்றவை. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தங்கள் நிலைப்பாட்டுடன் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படலாம்.

தற்போதைய உலக புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிச் சூழலுக்குள் தேர்தல் அரசியலும் முக்கியமானது என்ற கருத்தை மறுக்க முடியாது.

இருந்தாலும் கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை ஒருமித்த குரலாக முன்னெடுக்கக்கூடிய பொதுப் பொறிமுறை அல்லது தேசிய இயக்கம் போன்ற செயற்பாடுகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றித்துச் செயலாற்றக்கூடிய வியூகங்களை வகுக்க வேண்டும்.

மாறாக இனஅழிப்பு விசாரணைக் கோரிக்கைகள் மற்றும் சர்வதேச போர்க் குற்ற விசாரணை பற்றிய அழுத்தங்கள் கட்சி அரசியலுக்குள்ளும் தனிப்பட்ட கருத்துக்கள், அறிக்கைகள் அல்லது தனிப்படக் கடிதம் எழுதுதல் என்ற ஒருமித்த குரல் அற்ற வியூகங்களுக்குள் அமுங்கி விடக்கூடாது

2009 இற்குப் பின்னர் பதின் நான்கு வருடங்கள் கடந்துவிட்ட சூழலில் கூட்டுச் செயற்பாடும் கூட்டுப் பொறிமுறையும் அவசியம் என்பதைத் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியின் மூலம் தமிழ்த்தரப்பு உறுதிப்படுத்த வேண்டும்.

இப் பின்புலத்துடன் ”தமிழ்ப் பொதுவேட்பாளர்” என்ற முடிவு உறுதியானால், சிங்களக் கட்சிகளுக்கும் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலருக்கும் அது கசப்பாக இருக்கும்.

இதனால் பிரித்தாளும் தந்திரோபாயங்கள் கொழும்பில் இருந்து கையாளப்படக்கூடிய ஆபத்துகள் உண்டு.

வெளிநாட்டு தூதுவர்கள் அடிக்கடி வடக்குக் கிழக்குக்குச் சென்று வரும் நிலையும் உண்டு. யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகம் ஒன்றும் வியூகங்களை வகுக்கலாம்.

ஆகவே இவ்வாறான தந்திரோபாயங்களுக்குள் சிக்குப்படாமல், தற் துணிவோடும் சுயமரியாதையுடனும் ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்பட வேண்டும்.

இல்லையேல் ”தமிழ் பொது வேட்பாளர்“ என்ற சிந்தனையைக் கைவிடுவது நல்லது. ஏனெனில் தமிழ்த்தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள பலவீனங்களை அது மேலும் விரிவுபடுத்திவிடும் ஆபத்தும் இல்லாமலில்லை.
 

 

http://www.samakalam.com/ஜனாதிபதித்-தேர்தலில்-தம-3/



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.