Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புலிகள் பாசிசவாதிகளா? இலங்கை அரசை பார்த்துச் சொல்ல முடியுமா?

— 2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல், இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில் “புலிகள் பாசிஸ்ட்டுகள்” என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு.1947 இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது ஆர்.எஸ்.எஸ் ஏற்றிய கொடி எது?–

அ.நிக்ஸன்- 

1920 இலங்கைத் தேசிய இயக்கம் பிளவுபட்டு 1921 தமிழர் மகாசபை உருவாவதற்குக் காரணம் யார்? ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தில் ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பு 1948 இல் இருந்து 2009 மே மாதம் வரையும் நடந்து கொண்ட முறை சரியானதா? 2009 மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் அதாவது விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் செயற்பட்ட முறை நீதியானதா?

இங்கே நீதி தவறியது யார் புலிகளா? இலங்கை அரசா? வன்முறையை முதலில் ஆரம்பித்தது யார? புலிகளா? இலங்கை அரசா? தமிழ் முற்போக்குவாதிகளுக்கும் தமிழ் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் புத்தி எங்கிருந்து பிறக்கிறது? பாதிக்கப்பட்டவன் பக்கம் நின்று பேசாமல் பாதிப்புக்கு உட்படுத்தியவன் பக்கம் நின்று நியாயம் கற்பிக்க முற்படுவது மாற்றுக் கருத்தா?

‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்புச் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டுவதாக கூறி மாற்றுக் கருத்தாளர்கள் சிலவேளை தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தவும் கூடும்.

ஆனால் நீதி எங்கிருந்து தவறியது யாரால் தவறவிடப்பட்டது என்று மாற்றுக் கருத்தாளர்கள் எவரும் சிங்கள ஆட்சியாளர்களின்  நெஞ்சை நோக்கிக் கைநீட்டிச் சொல்லவில்லை. மாறாக புலிகளை மாத்திரமே “பாசிஸ்ட்டுகள்” என்று மிகச் சுலபமாகக் கூறித் தங்களுக்கு ஆங்கில மொழி தெரியும் என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இறுதிப் போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு 2010 இல் வெளியிட்ட அறிக்கைகூட, இலங்கைத்தீவில் நீதி எங்கிருந்து தவறியது என்பதை ஒப்பிட்டளவில் (Comparatively) காண்பிக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளைப் பாசிஸ்ட்டுகள் என்று அந்த நிபுணர்குழு அறிக்கை முத்திரை குத்தவில்லை.

ஆகவே தமிழ்ச் சமூகத்தில் பிறந்து தங்களை மாற்றுக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள் என்று மார்தட்டுவோர் புலிகளை ‘பாசிஸ்ட்’ என்று எந்த அடிப்படையில் வரையறை (Definition) செய்ய முடியும்?

“கருத்து” “மாற்றுக் கருத்து” என பல கருத்தாடல்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு இனத்தின் அரசியல் விடுதலைக்கான நியாயத்தை கொச்சைப்படுத்துவது, மலினப்படுத்துவது போன்ற தீங்கிழைக்கும் கருத்துக்களை மாற்றுக் கருத்து என்று வரைவிலக்கணம் கொடுக்க முடியாது.

ஆகவே “கொலை” “அடக்குமுறை” என்ற ஒற்றைக் காரணத்தையும் ஒருபக்க, வாததத்தையும் மையமாகக் கொண்டு புலிகள் ‘பாசிசவாதிகள’ என கற்பிதம் செய்ய முற்படுகின்றமை “தமிழ்த்தேசியம்” மீதான வன்மமே.

ஓன்றில் இருந்து மற்றொரு வகையான முன்னேற்றத்துக்குரிய உரையாடல்களை மாற்றுக் கருத்து என்று பொருள்கொள்ள முடியும். குறிப்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பில் நின்று கொண்டு திருத்தம் அல்லது சீர்திருத்தம் செய்ய முற்படுவது மாற்றுக் கருத்தாகும். மற்றொரு கோணத்தில் சிந்திப்பதையும் குறிக்கும்.

இவ்வாறான மாற்றுச் சிந்தனைகளைத் தடுப்பதுதான் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடு என்று அர்த்தப்படும்.

ஆனால் இங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசுவோரின் மாற்றுக் கருத்து அல்லது மாற்றுச் சிந்தனை என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசை நியாயப்படுத்துவதாகவுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்ப கற்பிதம் செய்வதையும் வழமையாகக் கொண்டுள்ளது.

ஆனால் 1958 இல் இருந்து 2009 மே வரையும் இலங்கை அரசு என்ற ‘பௌத்த கட்டமைப்பு’ நடத்திய தமிழ் இன அழிப்பு மற்றும் ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் 1981 இல் யாழ் நூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டு நடந்தேறிய வன்முறைகள் பற்றியெல்லாம் இந்த மாற்றுக் கருத்தாளர்கள் ஏன் துணிவுடன் வாய்திறப்பதில்லை?

இன்று மட்டக்களப்பு மேய்ச்சல் நிலமான மயிலத்தன மாதவன்மடுவில் சிங்களக் குடியேற்றத்துக்காகப் பசுமாடுகளைக் குண்டு வைத்து கொலை செய்கிறார்கள். பௌத்த குருமார் ஒத்துழைக்கின்றனர். இது மாற்றுக் கருத்தாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

கொலைகளில் “நல்ல கொலை” “கெட்ட கொலை” என இரண்டு வகைகள் இல்லை. கொலை என்றால் அதனை யார் செய்தாலும் அது கொலைதான்.

ஆனால் இங்கே புலிகள் செய்ததுதான் கொலையென மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் கற்பிதம் செய்கின்றனர். இலங்கை அரசு செய்த தமிழ் இனக் கொலைகள் எல்லாம் நல்ல கொலைகள் என்ற தொனியில் நியாயம் கற்பிக்கப்படுகின்றது.

பாசிசம் என்பதற்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காலங்களில் பெரும்பாலும் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

spacer.png

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது  பாசிசம் என்ற கொள்கையை உறுதியாக ஆதரித்திருக்கிறது. பாசிசம் தான் இந்தியாவில் ‘இந்து இராஷ்டிரம்’ அதாவது “இந்துத்துவா”  என்ற கனவை நனவாக்கச் சரியான கொள்கை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1931 இல் கருதியது.

இத்தாலியில் முசோலினி உருவாக்கியதைப் போல, இந்தியாவில் ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்கி மக்களின் கருத்துரிமைகளைப் பறித்து இராணுவப் பயிற்சிக்கு இந்துக்களைத் தயார் செய்து இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற  நோக்கத்தோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாசிசத்தை வெளிப்படையாகவே ஆதரித்து.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ‘மூஞ்சே’ 1931 இல் இத்தாலிக்குச் சென்று அங்கே முசோலினி நடத்திய பாசிசக் கல்லூரிகள் இராணுவக் கல்லூரிகள்  அனைத்தையும் பார்வையிட்டிருக்கிறார்.

“இது ஒரு சிறப்பான கட்டமைப்பு. மக்களை தயார்படுத்தும் சிறப்பான முறை. இதேபோன்றுதான் இந்தியாவிலும் அமைக்க வேண்டும்” என்று அந்த கல்லூரிகளின் வருகைப் பதிவேடுகளில் மூஞ்சே குறிப்புகளை எழுதி வைத்துள்ளாதாக மார்சியோ காசலோரி (Marzia Casolari) என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர் கூறுகிறார்.

இந்தியாவில் இந்துத்துவா பற்றி பேசுகிற நிறுவனங்களின்  வெளிநாட்டு தொடர்புகளைப்  பற்றி ஆராய்ந்து “இந்திய தேசியத்திற்கும் நாஜி – பாசிசத்திற்கும் இடையிலான தெளிவற்ற உறவு” (Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) என்ற ஒரு ஆய்வு நூலை மார்சியோ காசலோரி 2000 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார்.

எக்கனமிக் பொலிற்றிகல் வீக்லி (Economic and political weekly) என்ற ஆங்கிலப் வார இதழில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்திரண்டாம் திகதி இந்த நூல் குறித்த விமர்சனம் வெளியாகியிருக்கிறது.

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் தேசியக் கொடி ஏற்றப்படடது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1947 ஓகஸ்ட் பதினைந்தாம் திகதி “சுவஸ்திகா” கொடியை நாக்பூரில் ஏற்றியது. அப்போது காவிக் கொடியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தவில்லை.

இப் பின்புலத்திலேதான் நரேந்திர மோடியின் ஆட்சியை பாசிச ஆட்சி என்று தற்போது பலரும் விமர்சிக்கின்றனர். 2002 இல் மோடி குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை ஒப்பிட்டும் பேசுகின்றனர்.

இங்கே நாசிசம் – பாசிசம் மட்டுமில்லாமல் ஜியோனிசம் (Zionism) என்ற சித்தாந்தம் பற்றியும் நோக்க வேண்டும். ஜியோனிசம் – யூதர்கள் சட்ட விரோதமாக பலஸ்தீனர்களிடமிருந்து அபகரித்து உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல் என்ற யூத நாட்டுக்கான மதம்.

“ஜியோனிசம்” என்ற சொற்றொடரை வியட்னாம் நாட்டைச் சேர்ந்த பிர்ன்பவும் (Nathan Birnbaum) என்ற யூதர் 1855 இல் உருவாக்கினார்.

இப்போது இஸ்ரேல் – பலஸ்தீன போரில் என்ன நடக்கிறது? போர், என்றால் போர் என்றுதான் இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்கா கனடா போன்ற மேற்கு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் கமாஸ் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுக்கே இடமில்லை என்கின்றன.

ஆகவே இந்த நாடுகள் பாசிசக் கொள்கையைத் பலஸ்தீன விவகாரத்தில் கையாளுகின்றன என்று அர்த்தப்படுத்த முடியுமா?

ஏன் 1983 இல் இஸ்ரேலின் ஆதரவுடன் ஈழத்தமிழ் போராளிகளை அழிக்கத் திட்டமிட்டபோது சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லையென அன்று ஜே.ஆர் மார்தட்டினார் அல்லவா?

1990 இல் பிரேமதாச என்ன சொன்னார்? போர் என்றால் போர்தான். இராணுவ தேவைகளுக்காக சாக்குகளையும் உரப் பைகளையும் வீட்டுக்கு வீடு சென்று சிங்கள மக்கள் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டு போர்ப் பிரகடணம் செய்தார் அல்லவா?

சமதானத்துக்கான போர் என்று 1995 இல் சந்திரிகாவும் பகிரங்கமாகக் கூறினார் அல்லவா?

இனப்பிரச்சினையென ஒன்று இல்லை என்றும் புலிகள்தான் பிரச்சினை எனவும் 2005 இல் கூறிய மகிந்த ராஜபக்ச, தனது மகனையும் போருக்கு அனுப்பி போர் பிரகடனம் செய்தார் அல்லவா?

ஆகவே இலங்கை மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா. பிரித்தானியா போன்ற நாடுகளிடம் ‘பாசிசவாதத் தன்மை’ ‘அரச பயங்கரவாதம்’ ஒழிந்திருக்கின்றது என்பதை தமிழ் மாற்றுக் கருத்தாளர்களினால் துணிவுடன் வெளிப்படுத்த முடியுமா?

ஆனால் புலிகள் பாசிஸ்ட்டுகள் என்று அன்றில் இருந்து இன்றுவரையும் அதுவும் 2009 இற்குப் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களிலும் தொடராகச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் கூறும் பாசிசம் என்பது இத்தாலியில் இருந்த பாசிசத்தை போன்றதா என்ற கேள்வி எழுகிறது. பாசிஸ்ட்டுகள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் பலருக்கும், அது பற்றிய போதிய விளக்கம் இல்லை.

மாறாக பாசிசம் மற்றும் பாசிஸ்ட்டுகள் என்ற வார்த்தை இத்தாலிய பாசிசம் மற்றும் ஜெர்மனியில் நடந்த நாசிசத்தை ஒப்பிடும் வகையிலேயே அமைந்துள்ளன.

“பாசிசம் ஒரு மிகச் சிறிய அறிமுகம்” (Fascism: A Very Short Introduction) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று அறிஞரான கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) பாசிசம், நாசிசம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துச் செல்பவை அல்ல என்கிறார்.

இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை.

ஆகவே ஒரு விடுதலை இயக்கத்தின் செயலில் இனவெறி இருப்பதால் மட்டும் அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்த முடியாது என்று இவர் விளக்குகிறார்.

இத்தாலியில் இருந்த பாசிசத்தில் (Cooperativism) கோர்ப்பரேட்டிசம் எனப்படும் கூட்டுப் பிழைப்புவாதம்,  அரசியல் ரீதியாக கலந்தே இருந்தது என்றும் வாதிடுகிறார். மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் ஒரு தலைமையின் கீழ் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது எனவும் கெவின் பாஸ்மோர் மேலும் கற்பிதம் செய்கிறார்.

ஆகவே இந்தப் புரிதல் இல்லாத ஒரு பின்னணியில் விடுதலை இயக்கங்கள் மீதான கண்டனத்தை வெளியிட வசதியான வார்த்தையாகப் பெரும்பாலும் “பாசிஸ்ட்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனப் பொருள்கொள்ள முடியும்.

இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். போன்ற சில அரசியல் கட்சிகள் பாசிசத்தில் உள்ள பல கருத்துகளோடு ஒத்துப்போகும் சூழலிலும், தங்களைப் பாசிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால், பாசிசத்திற்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் பாசிசத்தை நாசிசத்துடன் ஒப்பிட்டே வாதிடுகின்றனர்.

இதற்கான துல்லியமான விளக்கம் என்ன என்பது பற்றி உலகில் இன்னும் விவாதம் தொடர்கிறது. ஆகவே மாற்றுக் கருத்தாளர்கள் மீதான கொலைகளை மாத்திரம் மதிப்பீடு செய்து பாசிஸ்ட் என்ற முடிவுக்கும் வர முடியாது. அப்படியானால் தற்கால நவீன அரச கட்டமைப்புகளுக்குள்ளும் பாசிஸ்ட் இருப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும்.

2009 இன் பின்னரான கடந்த பதினான்கு வருடங்களில் எந்த ஒரு அரசியல் தீர்வும் இல்லாமல் இருப்பதையும் பறிகொடுத்து வரும் சூழலில், “புலிகள் பாசிஸ்ட்டுகள்” என்று கூறி யாருடைய குரலாக இந்த மாற்றுக் கருத்தாளர்கள் செயற்படுகிறர்கள் என்பதில் பலந்த சந்தேகங்கள் உண்டு.

 

http://www.samakalam.com/புலிகள்-பாசிசவாதிகளா-இல/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர் போராட்டமும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்

–புலிகள் ”பாசிஸ்ட்” என்று பதினான்கு வருடங்களின் பின்னர் மீளவும் புதுப்பித்துக்கொண்டு வரும் ஆங்கிலம் தெரிந்த சில தமிழ் மாற்றுக் கருத்தாளர்கள் 2010 இல் நிறுத்தப்பட்ட UTHR எனப்படும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நீட்சியாக வேறொரு தளத்தில் வருகிறார்களா அல்லது வேறு ஏதேனும் அரசியல் பின்புலம் உள்ளதா? 2009 இன் பின்னரான தமிழ் இன ஒடுககுமுறை பற்றி வெளிப்படுத்தாமல்  2010 UTHR நிறுத்தப்பட்டது ஏன்? 2010 வரையும் UTHR  யாருக்குச் சேவகம் செய்தது? யாருடை மனித உரிமை பாதுகாக்கப்பட்டது?

அ.நிக்ஸன்

இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என அழைக்கப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியடைந்து ராஜீவ் காந்தி பதவியிழந்த பின்னர் பிரதமராகப் பதவியேற்ற பி.வி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் 1989 செப்ரெம்பர் மாதம் இருபதாம் திகதியன்று இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டிருந்தது.

அதற்கு அடுத்த நாள் இருபத்தோராம் திகதி மனித உரிமைச் செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழக உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ராஜினி திராணகம (Rajani Thiranagama) இனம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டார். ரஜினி திரணகம ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டுப் பின்னர் விலகியிருந்தார்.

1980 களில் வடக்குக் கிழக்கில் செயற்பட்ட போராளிகள் மற்றும் சில தமிழ் ஆயுதக் குழுக்களின் மனித உரிமை மீறல்களை இவர் வெளிப்படுத்தியிமிருந்தார்.

யாழ் நகரில் உள்ள இவருடைய வீடு இந்திய இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டுப் பல ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளிவந்த தினமுரசு பத்திரிகையில் அற்புதன் எழுதியிருந்தார்.

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” என்ற தொடரில் 176,186 ஆம் பத்திகளில் அற்புதன் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். ராஜினி திராணகமவின் “முறிந்த பனை” (The Broken Palmyra) என்ற நூல் இந்திய இராணுவம், இலங்கை அரசபடைகள், புலிகள் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களின் கொலை,கொள்ளை, ஆட்கடத்தல், மற்றும் நீதிக்கு மாறான செயற்பாடுகள் பற்றி பகிரங்கமாக எடுத்துரைத்திருந்தது.

புலிகளை மாத்திரம் முறிந்த பனை என்ற நூல் விமர்சிக்கவில்லை.

இதனால் ராஜினி திராணகமவின் படுகொலைக்கு யார் காரணம் என்பதில் இதுவரை சந்தேகம் நிலவியபோதும் விடுதலைப் புலிகளே இக் கொலையைச் செய்தனர் என்று அவரது குடும்பம் உள்ளிட்ட பலரும் நம்புகின்றனர். இதுவரையும் கொலைக்கு எவரும் பொறுப்புக்கூறவில்லை.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) சங்கம் (University Teachers for Human Rights (Jaffna) அல்லது (UTHR-J) 1988 இல் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற தேசிய அமைப்பின் ஒரு பகுதியாகச் செயற்படுவதே இச் சங்கத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

ராஜினி திராணகமவின் மரணத்தின் பின்னர் இந்த அமைப்பு பேராசிரியர் ராஜன் கூல் மற்றும் கோபாலரட்ணம் சிறிதரன் ஆகியோரால் தொடர்ந்தும் இயக்கப்பட்டது. ஆனால் எங்கிருந்து செயற்படுகிறார்கள் என்று தெரியாமலேயே இச் சங்கத்தின் அறிக்கைகள் அன்று வெளி வந்து கொண்டிருந்தன.

பேராசிரியர்களான ராஜன்கூல், தயா சோமசுந்தரம் மற்றும் கோ. சிறிதரன் ஆகியோர் இணைந்து ரஜினி திராணகமவின் “முறிந்த பனை” என்ற நூலை எழுதியிருந்தனர்.

ராஜினியின் மறைவுக்குப் பின்னர் தயா சோமசுந்தரம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் மருத்துவப் பேராசிரியராகக் கடமையாற்றியிருந்தார். 2013 இல் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலும் பங்குபற்றியிருந்தார். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் சிகிச்சைகளை தயா சோமசுந்திரம் வழங்கியிருந்தார்.

ஆனால் ராஜன்கூல், சிறிதரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போதே இடம்பெயர்ந்துவிட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் 2010 இல் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இயங்கியதாகத் தெரியவில்லை. தேடலுக்கான இணைத்தளங்களிலும் அது பற்றிய விபரங்கள் இல்லை.

“சிறுபான்மையினரின் எதிர்காலத்திற்கான சில அடிப்படைக் கேள்விகள் மற்றும் ஜனநாயகத்தை அழித்தல்” (Some Fundamental Questions for the future of Minorities and the Erasure of Democracy) என்ற தலைப்பில் இச் சங்கம் தனது uthr.org என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் யூன் பதினொராம் தினதி 2010 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது.

spacer.png

மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற பெயரில் அன்று இயங்கிய கோ. சிறிதரன், ராஜன் ஹூலுடன்  யாழ் பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை வழி நடத்துவதில் முன்னின்றவர்.

இருவரின் செயற்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை பற்றிய தவறான பார்வைக்கு இட்டுச் சென்றது என்ற விமர்சனங்களே அன்று அதிகமாக எழுந்தன. ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் ஐக்கிய இலங்கைக்குள் நிறைவேற்றப்படலாம் என்ற கருத்தையும் இருவரும் முதன்மைப்படுத்தினர்.

இச் சங்கம் இருபத்து ஏழாம் திகதி மே மாதம் 1998 ஆம் ஆண்டு மனித உரிமை மீறல்கள் பற்றி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் நடந்த கொலைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் பற்றிய அந்த அறிக்கையில் புலிகள் மீதுதான் அதிகளவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது போன்று தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களால் நல்ல வரவேற்பைப் பெற்றன.

2001 இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா, இந்த ஆசிரியர் சங்கம் பற்றிய சாதகமான அதாவது இலங்கைத்தீவின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் என்ற ஒப்புதல் ஒன்றை வழங்கியிருந்தார்.

இப் பின்னணியில் யூன் இருபத்து ஏழாம் திகதி 2006 அன்று archive.pov.org என்ற ஆங்கில இணையத் தளத்தில் ராஜன் கூல் மற்றும் சிறிதரன் ஆகியோர் வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகள் 2002 சமாதானப் பேச்சின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தனர்.

தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாற்றுக் கருத்தாளர்களை புலிகள் அனுமதிக்கவில்லை என்றும் சமாதானப் பணியில் ஈடுபட்ட நேர்வே கூட புலிகளைக் கண்டிக்கவில்லை எனவும் இருவரும் கூட்டாகக் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இப் பின்புலத்திலேயே 2007 ஆம் ஆண்டு ராஜன் ஹூல் மற்றும் சிறிதரன், ஆகியோர் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான மார்ட்டின் என்னல்ஸ் (Martin Ennals) விருதைப் பெற்றனர் என்று தெளிவாகிறது.

(1993 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரித்தானிய விருது மனித உரிமைப் பாதுகாப்புக்கான நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகின்றது)

அதேநேரம் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலையை நியாயப்படுத்தி எழுதி வரும் நெதர்லாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சுவீடன் உப்சலா பல்கலைக்கழக (Sweden  Upsala university) பேராசிரியர் பீற்றர் ஷாக் (Peter Schalk) மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முற்று முழுதாக புலிகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை ஒற்றை ஆட்சி அரசை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

ராஜனி திராணகமவின் “முறிந்த பனை மரம்” என்ற நூல் பற்றிக் கருத்துரை எழுதிய அவுஸ்திரேலியாவில் வாழும் சிங்கள மூத்த சட்டத்தரணியான பிரையன் செனவிரட்ன (Brian Senewiratne) இந்தச் சங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே மாறிவிட்டதாக கவலை வெளியிட்டிருந்தார்.

பேராசிரியர் ராஜன்கூல், சிறிதரன் ஆகியோர் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசியர் சங்கம் என்ற பெயரில் வெளியிடும் அறிக்கைகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிராகவும் பயன்படுத்தி வருவதாகவும் இவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் படுகொலைகளை குறிப்பாக இராணுவத்தின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை இச் சங்கம் பாராட்டுவதாக அமைந்துள்ளது எனவும் பிரையன் செனவிரட்ன குற்றம் சுமத்தியிருந்தார்.

வெறுமனே விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என்று குற்றம் சுமத்துவதாகவும் எந்த கோட்பாட்டு அடிப்படையும் இல்லாத “உணர்வுவாத குணாதிசயங்கள்” (Sensationalist Characterization) என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது பற்றிய விரிவான விளக்கம் பிரயன் செனவிரட்ன பற்றிய இணையத்தில் உள்ளது.

எனவே பிரயன் செனவிரட்ன பேராசிரியர் பீற்றர் ஷரக் ஆகியோரின் வாதத்தின் படி புலிகளை பாசிச அமைப்பு என்று கூறுவது அறிவார்ந்த விமர்சனம் அல்ல என்று தெரிகிறது.

குறிப்பாக, ஒருபுறம் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கை இராணுவத்தையும் அதன் உயர் அதிகாரிகளையும் பாராட்டிக் கொண்டு மறுபுறும் அரசியல் விடுதலைக்காகப் போராடும் புலிகளை பாசிசவாதிகள் என்று கூறுவதும் அறிவார்ந்த விமர்சனம் அல்ல.

இந்த நிலையில் கோட்பாட்டு ரீதியான கருத்தியல்களை ஆராயாமல் எடுத்த எடுப்பில் இளம் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் புலிகளை பாசிஸ்ட் என்று  பொதுவெளியில் கூறுவதற்குப் பின்னால் “துரோக அரசியல்” (Treacherous politics) மீண்டும் துளிர் விடுவது போல் தென்படுகிறது.

spacer.png

யாழ் பல்கலைக்கத்தில் இவரை உரையாற்ற அனுமதித்துப் பின்னர் கருத்துரையில் உரிய நியாங்களை மாணவர்கள் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால் அது தடுக்கப்பட்டதால்  இப்போது அரசியல் விவகாரமாகியுள்ளது.

ஆனாலும் புலிகள் பாசிஸ்ட் என்றால் முதலில் பதிலளிக்க வேண்டியவர்கள் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள்தான். தற்போது இவர்கள் ஜனநாய அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் புளொட் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் 2002 இல் வன்னிக்குச் சென்று புலிகளைச் சந்தித்திருந்தன.

ஆகவே புலிகள் பாசிஸ்ட்டா? இல்லையா? என்று அவர்கள்தான் முதலில் பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில் 1986 இல் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளுக்குப் பின்னர் முதற் தடவையாக இந்த இயக்கங்கள் விடுதலைப் புலிகளோடு முரண்பாட்டில் உடன்பாடாக 2002 பெப்ரவரியில் இருந்து ஒன்றிணைந்து செயற்பட்டு வந்தன.

2009 இற்கு பின்னரான சூழலிலும் தமிழ்த்தேசியம் வேறு புலிகள் வேறு என்று பிரிக்க முடியாத அளவுக்கு தமிழ்த்தேசியக் கொள்கை மக்களிடம் வியாபித்திருக்கிறது.

ஆகவே தமிழ்த் தேசிய அரசியலில் புலிகள் பிரிக்க முடியாத “ஆழப் பதிந்த குறியீடு” (Deep Symbolism in Tamil Politics) இதனைத் தவிர்த்து விட்டுத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அரசியல் செய்ய முடியாத பின்னணியும் உருவாகியிருக்கிறது.

ஆகவே ஜனநாயக சோசலிசம் என்று கூறிக் கொள்ளும் ஒரு அரசின் இன அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போராளிகளைக் கண்டிப்பதற்காக பாசிஸ்ட் என்று அரசுகள் கூறுவதாக பேராசிரியர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) வாதிடுவதாக இப் பத்தியில் கடந்தவாரம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

1988 இல் உருவாக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன ஒடுக்கல் செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் 2010 இல் தன்னுடைய பணியை நிறுத்திக் கொண்டதன் மூலம் விடுதலைப் புலிகளை மாத்திரம் மலினப்படுத்தும் நோக்கிலும் அதற்காகத் தமிழர்களின் மனித உரிமை விவகாரத்தைக் கைலெடுத்து அறிக்கைகள் வெளியிட்டிக்கின்றன என்பதும் இங்கே பட்டவர்த்தனமாகிறது.

ஆகவே  கெவின் பாஸ்மோர் கருத்தின் உட்கிடக்கையாக ஒரு இனத்தின் அரசியல் விடுதலையை ஒடுக்குமுறை செய்யும் அரசுகளிடம் மனித உரிமைச் செயற்பாடுகள் என்ற போர்வையில் அடகுவைக்கும் சங்கங்களையும் பாசிஸ்ட்டுகள் என்று வரையறை செய்யலாமா என்ற கேள்வி எழுகின்றது.

புலிகள் பாசிஸ்ட்டுகள் என்று கடந்த பதினான்கு வருடங்களின் பின்னர் மீளவும் புதுப்பித்துக்கொண்டு வரும் ஆங்கிலம் தெரிந்த சில தமிழ் மாற்றுக் கருத்தாளர்கள் 2010 இல் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நீட்சியாக வேறொரு தளத்தில் வருகிறார்களா அல்லது வேறு ஏதேனும் அரசியல் பின்புலம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

சுவஸ்திகாவின் உரை தடுக்கப்பட்டதால் யாழ் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் கண்டித்து வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டம் சுமுகமாக முடிவுற்றுள்ளது.

அறிக்கை வாபஸ் பெறப்பட்டுப் “புலிகள் பாசிஸ்ட்” என சுவஸ்திகா கூறிய கருத்தை ஏற்க முடியாதெனவும் சங்கம் மீள வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே தனிப்பட்ட நபர்களின் கருத்துச் சுதந்திரத்தில் மாத்திரம் கவனம் எடுக்காமல் பல்கலைக்கழகத்திற்குள் இடம்பெறும் வேறு சில மறுப்பு அல்லது தேவையற்ற இராணுவ விசாரணை விவகாரங்களிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கவனம் எடுத்திருந்தால் இந்த அறிக்கை வாபஸ்பெறும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதைச் சங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக முன்னாள் அசிரியர் சங்கத்தின் செயற்பாடுகளைப் போன்று இயங்கக் கூடாது என்பதற்கு அறிக்கை வாபஸ் பெறப்பட்டமை நல்ல படிப்பனை. அதேநேரம் மாணவர்களும் உணர்வு ரீதியாக மாத்திரமல்லாது அறிவுபூர்வமாகவும் செயற்பட வேண்டும் என்பதற்கும் இது நல்ல எடுத்துக்காட்டு.

 

 

 

 

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
    • 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட  திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13)  நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை.  எனவே அரசாங்க நிதிநிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.  எனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது. மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ்  மாவட்ட செயலகம் ,யாழ்ப்பாண பிரதேச செயலகம் யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த கால அரசாங்கத்திற்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தால் மனிதனால் செய்யப்பட்ட. அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.  இவ்வாறான திட்டங்கள் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு  உருவாக்கி முன்னோக்கி செல்ல வேண்டும். கடற்றொழில் அமைச்சராக உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும்”  என்றார். https://www.virakesari.lk/article/201229
    • 14 DEC, 2024 | 09:55 AM (எம்.நியூட்டன்) “என்னையோ உத்தியோகத்தர்களையோ அச்சறுத்தி அடாவடித்தனம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியா் தங்கமுத்து சத்தியமூர்த்தி. “ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கோபம் ஊட்டும் வகையில் கேள்வி கேட்பவர்களை குழப்புபவர்களை அடுத்த கூட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டாம்” என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இக் கோரிக்கையை முன்வைத்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ் போதனா வைத்தியசாலை எத்தகைய நோய் என்றாலும் சிகிச்சை வழங்கக்கூடிய சகல வசதிகளும் இருக்கின்றன. தற்போதைய நோய் நிலைமை தொடர்பில் பொது மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.  அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பிரதிநிதிகள் யாராவது வந்தால் அது யாராக இருந்தாலும் மாலை போட்டு வரவேற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இந்த வைத்தியசாலை என்ற ரீதியில் நானும் எனக்குக் கீழ் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி இவ்வாறான சபையிலும் பயம் பதற்றம் இல்லாமல் நடத்துகின்ற இயல்பு என்னிடம் உள்ளது. போதனா வைத்தியசாலைக்கு 15 நுழைவாயில்கள் இருக்கின்றது. நோயாளிகளுக்கு மாத்திரமல்ல பல உயர் அதிகாரிகள் அன்போடும் பண்போடும் உத்தியோகத்தரிடம் அனுகினால் சேவைகளை பெறுவதும் நோயாளர்களை பார்வையிட வருவதற்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொடர்பாடல் ஏற்படுத்தப்படுகின்றது .  ஆனாலும் எம்மைப் பயப்படுத்தி உத்தியோகத்தர்களை பயப்படுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்வதற்கு கடவுளாக இருந்தாலும் அனுமதி இல்லை.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்ற போது ஒரு சிலர் பல அரச உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஊட்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்கக்கூடாது.  இங்கு பல உயர் நிலை உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் அரசு இயந்திரத்தை எடுத்து நடத்துவது கடினம். மேலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.  பிரதிப் பணிப்பாளர் ஐம்பது பேர் உள்வாங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் 200 உள்வாங்க பட்டார்கள்.  தொடர்ச்சியாக அவர்கள் வேதனம் இன்றி கடமையாற்றிமையினால் வேலை வாய்ப்பு வருகின்றபோது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமக்கு நியமனம் தருமாறும் கேட்டிருந்தார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூலம் சிறு தொகைப் பணத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் வேலைவாய்புக்கு செல்லும் போது அவர்கள் தொடர்து வேலை செய்தமைக்கான சிபாரிசுக் கடிதம் வழங்கமுடியும். வேலைவாப்பு வழங்குவது பணிப்பாளரின் கடமையல்ல. இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் பல தடவைகள் கடிதம் அனுப்பியுள்ளேன். தொண்டர்களுக்கான வேலை வாய்ப்பு ஆளணி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். https://www.virakesari.lk/article/201230
    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.