Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

பட மூலாதாரம்,IMD

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மதுரையில் வீடு ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. ஈரோட்டில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஈரோட்டிலும், கன்னியாகுமரியிலும் 12 செ.மீ மழை

மாநிலம் முழுவதும் பெய்துவரும் மழையின் காரணமாக, கட்டடங்கள் இடிந்து விழுவது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக மேல கடையநல்லூரில் நேற்று முன்தினம் இரவு ஒரு பழைய வீட்டின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனமழையால் கட்டடங்கள் சேதம்

அதே மாவட்டத்தில் மலையடிக்குறிச்சியில் மழையின் காரணமாக கிராம நிர்வாக அலுவலகம் கூரை தொடர்மழையால் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

குற்றாலம் அருகே கீழபாட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் நெற் பயிர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று பெய்த பலத்த மழையில் சேதமடைந்தன.

வடகிழக்குப் பருவமழைக் காலம் துவங்கியதிலிருந்தே ஈரோட்டிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவில் அந்த மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தாளவாடி ஓடையின் குறுக்கே உள்ள பாலம் நீரில் மூழ்கியுள்ளது. ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி அருகில் உள்ள மல்லி நகர், அன்னை சத்யா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மல்லி நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பிச்சைக்காரன் பள்ளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும், குடியிருப்பு பகுதியில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை நகரில் பல நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை நகரில் உள்ள காக்காத் தோப்புப் பகுதியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று நேற்று இரவில் இடிந்து விழுந்தது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதால், அந்த வீட்டில் யாரும் இல்லை. இதனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

அணைகளில் உயரும் நீர்மட்டம்

தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைகள் நிரம்பிவருகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியைத் தாண்டியவுடன் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 69 அடியை நெருங்கியிருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2310 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சிற்றாறு அணைகள், பேச்சிப் பாறை அணை போன்றவை நிறையும் நிலையில் உள்ளன. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 72.13 அடியாக உள்ளது.

 
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணையின் நீர்மட்டம் நேற்று 2 அடியும், ராமநதி அணை, கருப்பாநதி அணை ஆகியவற்றின் நீர்மட்டம் தலா 3 அடியும் உயர்ந்தன. குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று சற்று குறைவாக நீர் விழுந்தாலும் குளிப்பதற்கான தடை நீடிக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீருக்கு மட்டும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை

பட மூலாதாரம்,IMD

புயல் உருவாகிறதா?

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பவானியிலும் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்திலும் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 95 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரையில் 85 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சியானது மேற்கு வட மேற்கு திசையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும், அதன் காரணமாக நாளை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று ராயல சீமா மற்றும் கடலோர கர்நாடகா பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இன்று முதல் வருகிற நவம்பர் 9ஆம் தேதி வரை கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c3g2xpl05j2o



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்.  எப்படியும்… மலையகத்திற்கு ஒரு தமிழ்  அமைச்சர் பதவி கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.
    • பாராளுமன்ற தெர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களை,  (பின் கதவு)  தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் தெரிவு செய்யப் படுவதை தடுக்க புதிய சட்டம் ஒன்று அவசரமாக நிறைவேற்றப் பட வேண்டும். மக்களால்… செருப்படி கொடுத்து நிராகரிக்கப் பட்டவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் அனுமதிப்பது… மக்களை அவமதிப்பது போன்ற செயல். 
    • சரோஜா என்ற பெண் அமைச்சர் ஆகலாம்    அல்லது மற்றைய இரண்டில் ஒருவர் வருவார்    
    • 348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்ட மஹிந்தானந்த : அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே 348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்டதையடுத்து, தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.  கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட மகிந்தானந்த அலுத்கமகேயை விட 348 வாக்குகளை அதிகமாக பெற்று அனுராத ஜயரத்ன பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார். இத்தோல்வியை அடுத்து மஹிந்தானந்த அலுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று சனிக்கிழமை (16) தமது கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். நாவலப்பிட்டிய தொகுதியில் இருந்து மத்திய மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் என்பவற்றுக்கு பல முறை தெரிவான இவர் மாகாண சபை அமைச்சராகவும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் பல முறையும் தெரிவான ஒருவர். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் அலுத்கமகே குடும்பம் நீண்டகால அரசியல் செய்ததாகவும் தற்போது பொதுமக்கள் தம்மை நிராகரித்துள்ளதால் தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் விவசாய அமைச்சராக இருந்து பாரிய அளவில் பேசப்பட்டவரும் விமர்சிக்கப்பட்டவருமான மஹிந்தானந்த அலுத்கமகே இரசாயனப் பசளை தடை தொடர்பாக அதிகளவு உருவப் பொம்மை எரிக்கப்பட்ட ஒருவராகவும் பேசப்பட்டவர் ஆவார். மேலும், கடந்த காலத்தில் இரண்டு முறை பாராளுமன்றம் சென்ற வேலுகுமாரின் வாக்கு வங்கி 7539ஆக வீழ்ச்சியடைந்து அவரும் தோல்வியடைந்தார். அதேவேளை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் ஹாஜியாருக்கு 3442 விருப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்து அவரும் தோல்வியடைந்தார். https://www.virakesari.lk/article/198967
    • ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு, மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார். வடமராட்சி  பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில்  என்றுமில்லாதவாறு  தங்களிற்க்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும். எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்த இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/198954
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.