Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது நிஜம் எது நிழல்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எது நிஜம் எது நிழல்-பா.உதயன் 

விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் சர்ச்சையில் எது நிஜம் எது நிழல் என்பது என்று படித்தவனும் அறிந்தவனும் ஆளுமையுள்ளவனும் சரியாக பொய் சொல்லத் தெரிவதும் ஒரு வகை இராஜதந்திரம் என்பது தெரிந்து கொண்டு கடந்து போய் விடுவான். சிங்கள இனவாதம் வேண்டுமானால் இதை தூக்கிப் பிடித்து கன கதைகளை சித்தரிக்கலாம். இதைத் பெரிதாக பெருப்பித்து எழுதுவதும் பேசுவதும் சித்தரிப்பதுவும் நகைசுவை செய்வதுவும் அதை சிலர் ஆதரிப்பதையும் எழுதுவதையும் பார்க்க துவராகாவை கொண்டு வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை போல் தெரிகிறது. 

இவர்களின் பார்வை எல்லாம் புலிகளை வைத்து அரசியல் செய்வதும் அத்தோடு தாங்கள் புத்திஜீவிகள் போல் காட்டிக் கொள்வதும் தங்கள் சுய நலத்தோடு தாங்கள் எல்லாம் தெரிந்தவர் போல் போலியான ஒரு முகத்தை சமூகத்துக்கு காட்டிக் கொள்வதற்காக மட்டும் இன்றி வேறோன்றும் இல்லை. சிலரது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பார்க்கும் போது ஒன்றும் தெரிவதில்லை இவர்கள் உயரம் மட்மே தெரிகிறது. எதிரிக‌ளை விட‌ துரோகிகளே ஆபத்தான‌வ‌ர்க‌ள்.

 என்ன தான் வேறுபாடுகள் இருப்பினும் சரி பிழைகள் கடந்து தன் சொந்த இனத்தின் வலியும் துயரமும் தெரியாமல் இருப்பவனிடம் மனிதாபிமானம் இருக்கப் போவதில்லை. இவன் தனக்காக மட்டுமே வாழ நினைப்பவன். எந்த ஒரு தேசத்தவனாக இருந்தாலும் அவன் நோர்வேஜியனாகவோ பிருத்தானியனாகவோ பிரான்ஸ்காரனாகவோ அல்லது இத்தாலியனாகவோ ஏன் ஆபிரிக்க எந்த தேசத்தவனாக இருந்தாலும் தங்கள் இனம் சார்ந்து பெருமையாக தான் பேசிக் கொள்வான். ஆனால் தமிழர்கள் ஆகிய நாங்கள் மட்டும் இது எமது முதலாம் தலைமுறையில் இருந்து இரண்டாம் தலைமுறை வரையும் நம் இனத்தை எதுகுமே தெரியாதவர்கள் போல் குறைத்து பேசிக்கொள்கிறோம். எங்கள் சமுதாயக் கட்டமைப்பிலும் பிழைகள் இல்லமால் இல்ல. மாற்றம் ஒன்று தானே மாறாதது எதுகும் எல்லாம் ஒரு நாள் மாறித் தானே ஆக வேண்டும்.

அமெரிக்க கறுப்பு இன புத்தியீவியும் அந்த இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்த வருமாகிய Malcolm X ஆணித்தரமான கருத்தை தன் சொந்த இனமான அமெரிக்க கறுப்பு இன மக்களை பார்த்து சொன்னார். Who taught you to hate your own kind? Who taught you to hate the race that you belong to, so much so that you don't want to be around each other ... உங்கள் சொந்த இனத்தை வெறுக்க உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது நீங்கள் ஒருவரையொருவர் சுற்றி இருக்க விரும்பாத அளவுக்கு, நீங்கள் சேர்ந்த இனத்தை வெறுக்க உங்களுக்கு யார் எந்தப் பாடசாலை கற்றுக் கொடுத்தது ... இதே போல் ஈழத் தமிழர்கள் தன் இனத்தை தானே குறைவாகவும் வெறுக்கும் அளவுக்கும் ஒற்றுமை இல்லாமல்  வாழும் அளவுக்கும் இவர்களுக்கு யார் எந்தப் பாடசாலையில் கற்றுக் கொடுத்தார்களோ தெரியாது. 

எல்லா சமூகங்களில் நல்லதுக்கு கெட்டதும் இருக்கும் இது தனியவே தமிழ் இனத்துக்கு மட்டும் இல்லை. தூய்மையான போராட்டம் என்று எதுகும் இல்லை பயங்கரவாதி யார் என்பதையும் விடுதலை போராளிகள் யார் என்பதையும் தமது தேசிய நலனுக்கு ஏற்றதால் போல் இந்த உலகின் பலம் வாய்ந்த ஆதிக்க சக்திகளே தீர்மானிக்கின்றன. Thomas Hobbes என்ற அரசியல் தத்துவாசிரியர் ஆரம்பகால மனித வாழ்வு சுய நலன் மிக்கதும் வன்முறை மற்றும் கொடூரமானது என்றார் அது இப்போதும் தொடருவதை பார்க்கிறோம். இந்த உலக வரலாறு வன்முறையால் தான் கட்டப் பட்டுள்ளது. இந்த வரலாறு இன்னும் தொடர்கிறது காசாவில் ஐயாயிரம் குழந்தைகளுக்கு மேல் இறந்தும் இந்த உலகம் அமைதியாக தான் இருக்கிறது. எது எப்படி இருப்பினும் உங்கள் இனத்தினதும் அதோ போல் அடுத்தவர்களின் வலியிலும் துன்பத்திலும் மனிதாபிமானம் மிக்க மனிதராய் நடந்து கொள்ளுங்கள் மனிதர்களை மதிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் அன்பு தான் கடவுள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் இது தான் உண்மையான மனிதனின் அறமும் அன்பும் தர்மமும் என்று விளங்கிக் கொள்ளுங்கள். சரியானவைகளை இனம் கண்டு தேடிக் கொள்ளுங்கள் Be at peace and humanity with a pain and suffering of your own and others.

பா.உதயன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.